முனைவர் அண்ணாகண்ணன்
அண்ணாகண்ணன்
தமிழில் மின்னாளுகை (e-Governance in Tamil) என்ற தலைப்பில், என் முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு, 2011 ஜூன் 28 அன்று, சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.கந்தசாமி, தமிழ்த் துறைத் தலைவர் ப.அனுராதா, ஆய்வு நெறியாளர் முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், புறத் தேர்வாளர் முனைவர் ப.டேவிட் பிரபாகர் ஆகியோர் மேடையில் வீற்றிருந்தனர்.
என் ஆய்வு குறித்து முதலில் காட்சி உரை நிகழ்த்தினேன். அதைத் தொடர்ந்து அவையோர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தேன். இவற்றைத் தொடர்ந்து, புறத் தேர்வாளர் முனைவர் ப.டேவிட் பிரபாகர் அவர்கள், ஆய்வு நெறியாளருடன் இணைந்து, எனக்கு மிக நலனுடைத்து (Highly Commended) என்ற அடிப்படையில் முனைவர் பட்டம் வழங்கலாம் எனச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரைத்தார்.
நிகழ்வில், அமுதசுரபி பதிப்பாளரும் ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் உப தலைவருமான ஏ.வி.எஸ்.ராஜா, ’காந்தளகம்’ மறவன்புலவு க. சச்சிதானந்தன், பேரா.ந.தெய்வசுந்தரம், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) கானவன் (பாலசுப்பிரமணியன்), தமிழறிஞரும் கலைச் சொல்லாக்க வல்லுநருமான இராமகி, மாநிலக் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியர் சீனிவாசன், காயிதே மில்லத் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.ஹாஜா கனி, எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கீதா, எழுச்சிக் கவிஞர் முனைவர் எழில்வேந்தன், கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், எஸ்.ஆர்.எம். பல்கலையிலிருந்து இல.சுந்தரம்.
பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வில்லாளன், கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்பிரமணியன், கவிஞர் குமரி எஸ். நீலகண்டன், சிரிப்பு யோகா பயிற்றுநர் சிரிப்பானந்தா, கலைச்செல்வன், கவனகர் கலை.செழியன், என் பெற்றோர் சீ.குப்புசாமி – செளந்திரவல்லி, குடும்பத்தினர், பச்சையப்பன் கல்லூரியின் பல்வேறு துறைப் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், சகோதர ஆய்வாளர்கள் உள்பட 80க்கும் அதிகமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்த நாளிலிருந்து முனைவர் என அழைக்கப்பெறுவதற்கு நான், தகுதி பெறுகிறேன்.
எனக்கு உற்சாகமும் ஒத்துழைப்பும் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
அண்ணாகண்ணன்
புறத் தேர்வாளர் முனைவர் ப.டேவிட் பிரபாகர், ஆய்வு நெறியாளர் முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.கந்தசாமி, தமிழ்த் துறைத் தலைவர் ப.அனுராதா
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இணை இயக்குநர் (ஓய்வு) கானவன் (பாலசுப்பிரமணியன்)
அண்ணாகண்ணன், பெற்றோர் சீ.குப்புசாமி – செளந்திரவல்லி
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் முனைவர் அண்ணா கண்ணன்! மிக நேர்த்தியாகவும் நிகழ்வைப் பதிவு செய்துள்ளீர்கள். பல துறை நல்லறிஞர், தமிழறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் முன்னே இத்தனைச் சிறப்பாக நடந்தது அறிந்து மெத்த மகிழ்ச்சி! வாழ்க!
அன்புடன் செல்வா
வாழ்த்துகள் டாக்டர். அண்ணா கண்ணன்
தேவ்
எங்கள் இனிய நண்பர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்களுக்கு பேரானந்தத்துடன் எங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்கள். பல நாட்களாக இது குறித்து தங்களிடம் துடர்பு கொள்ள ஆர்வமிருந்தும், இன்று இப்பொழுதுதான் தங்கள் வல்லமை தளத்திலிருந்து தெரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி. கால தாமதத்துடன் வாழ்த்தியதை தயவு செய்து பிழையாக எண்ணவேண்டாம். தங்கள் வல்லமையான சிற்ப்புகள் உலகளவில் நிரம்பி,, வளமும் நலமும் வானளவு பெருகிட உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராமஸ்வாமி மற்றும் குடும்பத்தினர்