காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்….ஆ…
‘கற்பகம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் இயற்றி வெற்றியின் விலாசம் அறிந்த வித்தகக் கவிஞர் வாலி அவர்கள் – காலங்கள் பல கடந்தல்ல… பல வென்று களைத்துப் போகாத இளைஞரிவர் என்பதற்கு ‘காதலர் தினம்’ திரைப்பாடல்கள் முற்றிலும் சாட்சி சொல்லும். இவரின் பெயரில் ‘வாலி’ என்று அமைந்ததாலோ என்னவோ வாலிபக் கவிதைகளைத் தொடர்ந்து வாரி வழங்கி வந்தார். திரையுலகப் பிரவேசத்திற்கு முன்பாக இவர் தடம் பதித்த நாடகத் துறையில் பெற்றிட்ட பயிற்சி இசைக் கோர்வைக்கு வார்த்தைகள் வழங்கும் ரகசியத்தை இவருக்கு வசமாக்கிவிட… – எதிர்காலத்தில் வாழ்க்கை முழுவதும் வெற்றிக்கான அடித்தளமாக அதுவே அமையும் என்றே அவரே எண்ணியிருக்க வாய்ப்பில்லை! பொதுவாகவே, வாலியின் பாடல்கள் வெற்றியைத் தொடுவது வழக்கம்தான்… அப்படி அவரின் பெயர் சொல்லும் படங்களில் முன்னணியில்… அன்பே வா, படகோட்டி, நம் நாடு, கண்ணன் என் காதலன், காவல்காரன், ரிக்க்ஷாக்காரன், கலங்கரை விளக்கம், அரச கட்டளை, தாய் மேல் ஆணை என்று பட்டியல் நீளும்.
ஒரு முறை கண்ணீர் பூக்கள் தந்த கவிஞர் மு. மேத்தா அவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாற்றை புதுக்கவிதை வடிவில் புத்தக ஆக்கம் தந்து அதன் பிரதியை கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கிட… அன்று நள்ளிரவில் அப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி… விடிவதற்குள் படித்து முடித்தார் என்றால் அந்த அளவு அந்நூல் கவிஞர் வாலி அவர்களை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி… அது இன்னொரு துவக்கத்திற்கு தூண்டு கோலாகவும் அமைந்தது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். சரியாக சொல்லப் போனால், கவிஞருக்குள் இருந்த இன்னொரு பரிணாமத்தின் துவக்கமாய்… – நம் காவியக் கவிஞர் வாலி பிறந்தார். இந்து மதத்தின் இதிகாசப் புருஷன் இராமனைப் பற்றியும்… ராமாயணத்தையும் இது போல் புதுக்கவிதை வடிவில் தான் வடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ‘ஆனந்த விகடன்’ திரு. பாலசுப்ரமணியன் அவர்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அந்த வாரமே … கவிஞர் வாலி எழுதிய ‘அவதார புருஷன்’ என்கிற இராம காதலி, காகுத்தன் காதை என்கிற அற்புதப் படைப்பு ஆரம்பமானது. செய்யுள் வடிவில் இருந்த இராமயணத்தை உரைதேடி பொருள் கொண்டு, அனைவரும் படித்தறியும் விதமாக ஆக்கியப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்! அடுத்து, பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம், கிருஷ்ணா விஜயம் போன்ற மாபெரும் நூல்கள் வெளிவந்தன.
இந்தக் கவி விடிவில்… கவிஞர் வாலி பெற்ற பரிணாமம் … கடவுளின் அருளை அவருக்கு மேலும் வழங்கியிருக்க வேண்டும்… அந்த நேரத்தில் வெளியான 1999 ‘காதலர் தினம்’ திரைப் பாடல்கள் அனைத்தும் இவரின் காவியப் படைப்புகளின் பாணி கலந்திருந்ததை கவனிக்க வேண்டும். அது புதிய சுவையைத் தந்தது… இன்பம் இன்பம் என்றது… இயக்குனர் கதிர் அவர்களின் இயக்கத்தில் மறக்க முடியாத படம்… எல்லாப் பாடல்களும் எங்கள் வாலி என்று நாம் போற்றத்தக்க திரையிசை ஏ ஆர் ரகுமான்.
காகுத்தன் வரலாற்றை புதுக்கவிதை வடிவில் தந்த கரங்களுக்கு நன்றி… ஒரு தீபத்தைத் தூண்டிய பெருமைக்கு உரியவராகத் திகழும் மு.மேத்தா அவர்களுக்கும் நன்றி… காதலர் தினப் பாடல்களை கவி நயமிக்கதாக மட்டுமின்றி… புதுவித வடிவம் தந்து இசையில் நம்மை மூழ்க வைத்த ஏ ஆர் ரகுமான் மற்றும் இன்பத்தமிழை ஏட்டில் பதித்த வித்தகர் வாலியையும் நாம் என்றென்றும் போற்றலாமே!
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
ஆ…
—
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை வளை என ஏங்காதோ
இது கண்ணங்களா இல்லை தென்னங்கள்ளா
இந்தக் கண்ணமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
—
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
—
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்
என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
ம்….ஆ…
—
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
படம்: காதலர்தினம் (1999)
பாடல்: வாலி
இசை: ஏ. ஆர். ரகுமான்
குரல்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
காணொளி: https://youtu.be/JDEScBfyboc
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””