என்னதான் நடக்கும் நடக்கட்டுமே …

1

— நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

ennathaan nadakkumகவியரசர் கண்ணதாசன் எழுதிய “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே“ என்றும் அழியாத புகழ்பெற்ற திரைப்படப் பாடல். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த ‘பணத்தோட்டம்’ திரைப்படத்திற்காக எழுதினார். மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி இசை அமைத்தார்கள். கவியரசர் கண்ணதாசன் வார்த்தைகளின் ஒரே ஒரு எழுத்தை மாற்றி, எதுகை மோனைகள் துணையுடன்,  வார்த்தை ஜாலங்கள் செய்து விளையாடுவதில் வல்லவர். கீழ்கண்ட வார்த்தைகளில் என்னமாய் விளையாடியிருக்கிறார். தயங்காதே, மயங்காதே, அடிச்சுவடு, அவன் வீடு, விளையாடு, போராடு, திருடர்கள், குருடர்கள், பயந்துவிடு, கலந்துவிடு, வாழ்ந்துவிடு, பார்த்துவிடு. அன்றே “ஒரு” தலைவன் இருக்கிறான் என்று கூறியிருக்கிறார். தன்னம்பிக்கைக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

இதோ, கவியரசர் கண்ணதாசன் எழுதிய “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே”

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே நீ போராடு
[என்னதான் நடக்கும் நடக்கட்டுமே]

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
மனம் கலங்காதே, மதிமயங்காதே
[என்னதான் நடக்கும் நடக்கட்டுமே]

மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
[என்னதான் நடக்கும் நடக்கட்டுமே]

காணொளி: https://youtu.be/ReWYXRdf848

 

____________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே …

  1. காணொளி காட்சியை ஏற்படுத்தி கொடுத்த வல்லமை நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *