காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய துறை. முனைவர் அரிமளம் பத்மநாபன் (இசைவாணர்) அவர்கள் கம்பனில் இசைத்தமிழ் என்ற பொருளில் இசை உரை ஆற்ற உள்ளார்கள் . இசையோடு இயலும் நாடகமும் ஆகப் பொழியும் இப்பொழிவிற்கு அனைவரும் வருக.
நாள் – 6-2-16 சனிக்கிழமை
இடம்-கிருஷ்ணா திருமணமண்டபம் காரைக்குடி .
நேரம் சரியாக மாலை ஆறுமணி
வரவேற்புரை- திரு கம்பன்அடிசூடி, பழ.பழனியப்பன்
தொடக்கவுரை- தகைமிகு சி.நா.மீ உபயதுல்லா
இசையுரை- கம்பனில் இசைத்தமிழ்
முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
நன்றி-சொ.சேதுபதி
இரவு சிற்றுண்டி
அனைவரும் வருக
கம்பன் புகழ்பாடிக்கன்னித்தமிழ் வளர்ப்போம்
அழைப்பு இதனுடன் உள்ளது