மீ.விசுவநாதன்
சிவனே சிவனே உனைத்தேடி – நான்
சிவலோகம் வரலாமா?
மகனே மகனே வரவேண்டாம் – உன்
மனம்தானே சிவலோகம் !
அரனே அரனே உன்மேனி – எழில்
அரவாய்நான் வரலாமா?
அசடே அசடே வரவேண்டாம் -“நா”
அசைவுதானே அரவுருவம் !
அருவும் உருவும் இல்லானே – உனை
அறிந்திடவே முடியாதா ?
இருளில் இருந்து வெளியேவா – என்
இருப்பைத்தான் அறிவாய்நீ !
பஞ்ச பூத வடிவோனே – உன்
பயனென்ன உரைப்பாயா ?
கொஞ்சம் வயது போகட்டும் – உன்
குணநலனால் தெளிவாய்நீ !
(இன்று பிரதோஷ தினம் : 31.07.2016)


Leave a Reply