இலக்கியம்கவிதைகள்

குருச்சேத்திரப் போரில் ! 

image.png

சி. ஜெயபாரதன், கனடா

செக்கு மாடுகளை வாங்கித்  
தேரில் மாட்டினேன்! 
திக்குத் தெரியாமல்
வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி
வந்தது என் தேர்
கொடை ராட்டினம் போல்! 
தலை சுற்றி வீழ்ந்தேன்!

கீதையை உபதேசிக்க
தேரோட்டி கிடைக்க வில்லை!
திணறித் தேடினேன் 
மனமுடைந்து!
சினமுற்று விரட்டிய எனது
செக்கு மாடுகளை
எண்ணிக்
கண்ணீர் விடுகிறேன்!

இப்போது செக்கு மாடுகளைப்
பயிற்றுவிக்க
குப்பை வண்டிக் காரனை
நியமித்தேன்!
போருக்குப் போகையில்
துடித்தேன்!
நேராகப் போனது
தேரானது,  
நின்று நின்று!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க