கரிகால் பெருவளத்தான்
முனைவர் மு.புஷ்பரெஜினா,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.
கயவர்க்கு எதிர்க்கும் கரியாவான்
எதிர்க்கும் பகைக்கு காலனாவான்
குயவனைப் போல் அறம் ஆக்கிடுவான்
குற்றமெல்லாம் அறவே போக்கிடுவான்
மைவரை கானகத்தே மயங்கிடுவான்
மையலாரை கானத்தால் மயக்கிடுவான்
தைபோல் நல்வழிதான் காட்டிடுவான்
தையலாரைத் தன்வழிதான் கூட்டிடுவான்
கண்ணனினும் தேர்ப்பாகன் கண்டதுண்டோ
கரிகாலனினும் தேர்ப்புகழான் ஆண்டதுண்டோ
கன்னலிலும் தேனொத்த தினிமையுண்டோ
கண்ணினுள் சிறுதுரும்பு காப்பதுண்டோ
காவிரிதான் கரைதாண்டி புரண்டிடலாமோ
காவிரிதாய் காத்திடாது அழிக்கலாமோ
காலனவன் கைவிரித்திடாது கவர்ந்திடலாமோ
கரிகாலனவன் கல்லணையிடாது காத்திடலாமோ
அயலாரைத் துரத்தியடிக்கும் வெறியானதே
கரிகாலன் தாள்கள்தான் கரியானதே
ஆக்கிடும் வேள்விகள்தான் சரியானதே
ஆக்கினைக்கு நல் அறம்தான் அரியானதே!