சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிசை வரிசையாய், படிப் படியாய், திரும்பும் திசையெங்கும் பொம்மைகள், நேர்த்தியான கலை வடிவங்கள். பழைமையும் புதுமையும் கைகோக்கும் தருணங்கள். மண்பொம்மைகள் உயிர்த்தெழுந்து, ஒயில்சிறந்து நிற்கும் கோலம் கண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு இணங்க, இந்தக் கொலுவை உங்கள் முன் படைக்கிறேன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.