Tag Archives: எம். ஜெயராம சர்மா

ஆண்டாண்டு போற்றிடுவோம்!

    -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்     இலக்கியத்தை இலக்கணத்தை     இங்கிதத்தை நானறிய     நிலைத்தவொரு அறிஞரென     நின்றிருந்தார் ’முவ’வே !     தலைக்கனமும் இல்லாமல்     தனதுநிலை பிறழாமல்     எடுத்தபணி செய்தனரே     எங்களது ’முவ’வும்!     தனித்தமிழால் கதைகள் சொன்னார்     தரமுடைய நாவல் தந்தார்     பொறுப்புடனே தமிழ் படித்தார்     பொறுமைநிறை ’முவ’வும்!     மொழிநூலை நான்கற்க ...

Read More »

காணவேணும் இந்தியாவை!

–எம். ஜெயராம சர்மா – மெல்பேண்                   அறமதனைக் கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்துப் பிறர்நலமே பேணிநிதம் பெரும்பணிகள் ஆற்றிநின்றார்! குறைகள் பலவந்தாலும் குனியாமல் நின்றுஅவர் பணிகள்பல செய்தமையால் பார்போற்ற நிற்கின்றார்! கீதைதனைப் படித்துக் கீழ்க்குணத்தை விட்டெறிந்தார் பாதைதனைத் தெரிந்து பக்குவமாய் வாழ்ந்துநின்றார்! போதை  தனைஊட்டும் பொருளையெலாம் ஒழிக்கவேண்டி நீதிதனை உணர்த்துதற்கு நீண்டயுத்தம் செய்தாரே! காந்திமகான் தன்வாழ்வில் கடவுளிடம் வேண்டிநின்றார் கருணையுள்ளம் கொண்டவராய்க் காலமெல்லாம் இருப்பதற்கு! இந்திய மக்களிடம் ஏற்றத்தாழ்வு காணாது எல்லோரும் இந்தியரே ...

Read More »

இரக்கமுடன் அருள்புரிவாய்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் கல்வியின் தெய்வமே நீ கண்திறந்து பார்க்க வேணும் கல்விக்குள் காசை வைத்துக் கற்பவரை முடக்கு கின்றாரே செல்வம் இல்லா நிலையிலுள்ளார்          சீராகக் கல்வி பெற எல்லை இல்லா நாயகியே இரக்க முடன் அருள்புரிவாய்! கல்வியைக் காசாக்கிக் கடைத்தெருவில் விற்கின்றார் காமராசர் பிறந்தமண்ணில் கல்வியிப்போக் காசாச்சு!! இலவசமாய்க் கல்விதரின் எல்லோரும் படித்துநிற்பார் இந்தநிலை வருவதற்கு எங்களம்மா அருளிவிடு! காந்தீயம் பிறந்த நாட்டில் காசுகையில் இல்லை என்றால் கல்வி தனை நாடிடுவார் கனவில்தான் கற்க வேணும்! காசில்லாக் குடும்ப மதில் ...

Read More »

அகிலத்தில் அமைதி காப்போம்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் சமயத்தின் பெயரால் சண்டை சாதியின் பெயரால் சண்டை குமைகின்ற உள்ளங் கொண்டார்                      குழப்பமே செய்வார் நாளும்! அமைதியை எண்ணிப் பாரார் ஆரையும் மனதில் கொள்ளார் அழித்தலை மட்டும் நாடி அனைத்தையும் ஆற்ற வந்தார்! வெறி தனைக் கொண்டதாலே நெறி தனை மறந்தேவிட்டார் அறி வெலாம் மங்கிப்போக அரக்கராய் மாறி விட்டார்! தூய்மையாம் சமயம் தன்னைத் தூய்மையாய்ப் பார்க்கா நின்று பேயென உருவம் கொண்டு பிணக்காடாய் மாற்று கின்றார்! கடவுளின் பெயரைச் சொல்லிக் கருணையை வெட்டி வீழ்த்தித் தெருவெலாம் ...

Read More »

அரவணைக்க வருவாரா?

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்               காஞ்சியிலே பிறந்த அண்ணா கண்ணியத்தைக் காத்தமையால் வாஞ்சையுடன் அவரைமக்கள் மனத்தினிலே இருத்திவிட்டார்! வாமன உருவுடையார் மனங்களை வெற்றிகண்டார் தூய்மையாய் ஆட்சிசெய்ய துணிவுடன் அண்ணாவந்தார்! இன்பத் தமிழுடனே இங்கிதமாய் ஆங்கிலத்தைப் பங்கமின்றிப் பேசிப் பலபேரும் மெச்சநின்றார்! சங்கத் தமிழறிவார் சபையறிந்தும் பேசவல்லார் எங்கும் அவர்முழக்கம் ஈடின்றி ஒலித்ததுவே! எதிரிகளைக் கூடஅவர் இன்முகமாய்ப் பார்த்தாரே சதிகாரக் கும்பலையும் தலைவணங்க வைத்தாரே! நட்புக்கு இலக்கணமாய் நம்அண்ணா இருந்தாரே நாடெல்லாம்  அவர்புகழை நாளுமே ...

Read More »

திரும்பி நீ வரவேண்டும்!

-எம். ஜெயராம சர்மா –மெல்பேண்                   முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும் பண்டாரமா  யிருந்து பலகவிதை தந்தாயே தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே! பாரதத்தின் குரலாக பாட்டெல்லாம் ஒலித்தனவே பாரதியுன் குரல்கேட்டுப் பாரெல்லாம் அதிர்ந்ததுவே சீரான சிந்தனைகள் சீற்றமொடு சொன்னாயே சிம்மக் குரலோனே திரும்பிநீ வரவேண்டும்!! அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி ...

Read More »

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் இறைவனிடம் கையேந்துங்கள் – அவன் இல்லையென்று சொல்லுவதில்லை கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்           காட்சிதர மறுப்பதுமில்லை! ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன் அரவணைக்கக் கரத்தைநீட்டுவான் நாணயமாய் நடந்துபாருங்கள் – அவன் நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்! உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன் உள்ளமதில் வந்துநின்றிடுவான் தெளிவுடனே தினமும்தேடுங்கள்  – அவன் சீக்கிரமாய் உதவவந்திடுவான்! ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன் எங்களுடன் இணைந்துநின்றிடுவான் தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன் துயர்துடைக்க வந்துநின்றுடுவான்! கண்மணியே என்றுபாடுங்கள் – அவன் கருணைமழை பொழிந்துநின்றிடுவான் கண்ணீரால் ...

Read More »

அப்பாவை அணைத்திடுவோம்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் தேரிலே சாமி வந்தால் தோளிலே தூக்கி வைத்துப் பாரடா என்று காட்டும் பாங்கினை மறக்க மாட்டேன்!                         ஊரிலே உள்ளார் எல்லாம் உன்மகன் உதவானென்று நேரிலே வந்து சொன்னால் நிமிர்ந்தொரு பார்வை பார்ப்பார்! கவலைகள் படவும் மாட்டார் கண்டதை உண்ண மாட்டார் தெருவிலே சண்டை வந்தால் திரும்பியே பார்க்க மாட்டார்! அடிதடி வெறுத்து நிற்பார் ஆரையும் தூற்ற மாட்டார் உரிமையாய் உதவி நிற்பார் ஊரிலே எங்கள் அப்பா! பொய் அவர்க்குப் பிடிக்காது புளுகுவதை வெறுத்திடுவார் மெய்பேசி நின்று விட்டால் ...

Read More »

கவிதைகள் கேட்கவேண்டும்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் தமிழிலே கவிதை தந்த தரமுடைக் கவிஞரே நீர் உரமுடைக் கவிதை தந்து உள்ளத்தில் இருந்து விட்டீர்!                        தெளிவொடு கவிதை சொன்னீர் சிந்தைக்கு மருந்தும் சொன்னீர் அழிவிலாக் கவிதை தந்தீர் ஆதலால் உயர்ந்தே விட்டீர்! புனிதராம் புத்தர் வாழ்க்கை புவிதனில் உள்ளார் காணச் செவிதனில் நுழையும் வண்ணம் சீர்மிகு கவிதை தந்தீர்! ஆசிய ஜோதி என்று அதற்கு நீர் பெயரைச்சூட்டி மேதகு உண்மை யாவும் விரித்துமே சொல்லி நின்றீர்! சாதியைச் சாடி நின்றீர் சமத்துவம் காட்டி நின்றீர் பூமியில் ...

Read More »

வாழ்வெல்லாம் நினைத்திருப்போம்!

     -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்       நீறு கொண்ட நெற்றியுடன்       நிமிர்ந்த நெடுந் தோற்றத்துடன்                ஆறு படை முருகனையே      அனுதினமும் தொழு தெழுவார்!      சேறு கொண்ட மனமுடையோர்      நீறணிந்து நின்று விடின்      மாறு பட்ட குணமெல்லாம்      மாண்டுவிடும் எனச் சொன்னார்!      தாறுமாறாய்ச் சண்டை செய்த      சராசரி மக்கள் எல்லாம்      வாரியாரின் உரை ...

Read More »

நித்தமுமே குழந்தையப்பா!

  -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்    பாஞ்சாலி துயர்தீர்த்தாய்    பார்த்தனுக்கு உதவிநின்றாய்    பாரதக் கதைதன்னை    பக்குவமாய் முடித்துவைத்தாய்!         பலவேலை நீசெய்தாய்    பாதகமாய்த் தெரிந்தாலும்    பலபேரைத் திருத்துதற்குப்    பக்குவமாய் மருந்தாச்சு!    மாமருந்தாம் கீதைதனை    மாதவனே தந்தாயே    மாநிலத்தார் கீதையினால்    மயக்கநிலை தெளிந்தாரே!    சோதிவடி வானவனே    சுந்தரமாய் இருப்பவனே    ஆதியே அரும்பொருளே    அனைத்துமே நீயன்றோ!    குழந்தையாய் வந்திடுவாய்    குதூகலமும் தந்திடுவாய் ...

Read More »

ஒரு செய்தி!

-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண் கண்ணன் வீடு ஒரே தடபுடலாக இருந்ததது. எல்லோருக்கும் சந்தோஷம் என்றால் சொல்லவே முடியாதபடி இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் தரையிலே கால்படாதபடி பறந்துதான் திரிந்தனர் எனும் அளவுக்கு அவர்களின் அந்த ஆனந்தமும் அவசரமும் காணப்பட்டது. கண்ணனின் தங்கை கலாவுக்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. ஆனால்   எந்தக் கல்யாணங்களும் சரிவராமல் போய்க்கொண்டே வந்தது. வடிவான பிள்ளை ஆனால் கால்தான் சற்று ஊனமாக இருந்தது. பல்கலைக்கழகத்தில்   பட்டம் பெற்றிருந்தாள். அதுமட்டுமல்ல கொம்யூட்டரிலும் சரியான கெட்டிக்காரி. ஆங்கிலம் எழுதினால் அது அத்தனை சுவையாக ...

Read More »

மாமருந்துமானார்!

-எம். ஜெயராமசர்மா- மெல்பேண் முன்னம் அவருடைய நாமம் கேட்டேன் முழுதுமாய் அவர்பணியை மனதில் கொண்டேன் பின்னை அவருடை ஆரூர் கேட்டேன் பிரமித்தேன் பிரமித்தேன் பிரமித் தேனே! அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை அவராவார் அனைவர்க்கும் தொண்டுசெய அவதரித்த அன்னை! சொல்லியவர் பணியாற்ற வந்து விடவில்லை தூயமனம் கொண்டு அவர் தொண்டாற்றிநின்றார்! எள்ளளவும் இரக்கமின்றி எச்சில்  உமிழ்ந்தார்கள் இன்முறுவல் கொண்டுமவர் ஏந்தியதைப் பெற்றார் கள்ளமிலா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே காறி உமிழ்ந்தவரே கைநிறையக் கொடுத்தார்! தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார் தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார் மனக்குறையைப் ...

Read More »

தாள்பணிந்து நிற்போமே!

-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்       தனிமையை நாடிநாளும்       தன்னிலை இழந்துநின்று       பெரியனாய் உயர்ந்துநின்றார்                   பெருமகன் ராமகிருஷ்ணர்!       மனைவியைக் கண்டபோதும்       மனதினை விட்டிடாமல்       துணிவுடன் துறவையேற்றார்       தூயவர் ராமகிருஷ்ணர்!       அன்னை பராசக்தியாக       அவர்கண்டார் தம்மனையை       ஆதலினால் பரமஹம்சர்       ...

Read More »

விடுதலை

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் பகலவன் வந்துநின்றால் பாரினுக்கு விடுதலை பசித்தவர்க்கு உணவுஅளித்தால் பசிக்கெலாம் விடுதலை உழைத்துமே நிற்பார்க்குஎலாம்                   ஓய்வுநல் விடுதலை ஒன்றுமே செய்யாவிட்டால் உமக்குமேன் விடுதலை கார்முகில் கண்ணன்பார்க்கக் கர்ணனுக்கு விடுதலை போர்முனை வந்தகீதை புவிக்கெலாம் விடுதலை தாயொடு பிள்ளைசேரின் தனிமைக்கே விடுதலை வாய்தனைக் காப்போமாயின் வம்புக்கே விடுதலை கண்டதைப் பார்க்காவிட்டால் கண்ணுக்கு விடுதலை காதினைக் காத்துவிட்டால் கயமைக்கே விடுதலை சிண்டுகள் முடிக்காவிட்டால் சிக்கலுக்கே விடுதலை சின்னத்தனம் காப்போமாயின் சிதைந்திடுமே விடுதலை ஸ்ரீராமன் வந்துநின்றான் சீதைக்கு விடுதலை கார்நிறத்தான் கால்பட்டுக் கல்லுக்கே ...

Read More »