Tag Archives: எம். ஜெயராம சர்மா

கண்கண்ட தெய்வங்கள்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரனோ ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து! குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது. இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது ...

Read More »

தனித்திருப்போம் விழித்திருப்போம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண், ஆஸ்திரேலியா நிலைபெறுமா றெண்ணிநிற்க நீள்புவியில் விரும்பிடுவோம் அலைபாயும் மனமதனை அடக்குதற்குத் துணிந்திடுவோம் நிலையில்லாப் பொருளையெலாம் நினைப்பினின்று அகற்றிடுவோம் நெஞ்சமதில் இறைநினைப்பை நிரந்தரமாய் இருத்திடுவோம்! ஏகாந்தம் இனிதென்று  எப்போதோ இயம்பியதை வாழ்நாளில் கடைப்பிடிக்க  வாய்க்கும்நிலை வந்திருக்கு தனித்திருப்போம் விழித்திருப்போம் தலையிடிகள் ஓடிவிடும் நாமெடுக்கும் எச்சரிக்கை நாட்டையுமே காத்திடுமே! சுத்தமே சோறிடும் என்பதனை மனமிருத்தி நித்தமுமே சுத்தமதை நிரந்தரமாய் ஆக்கிடுவோம் பயங்கொள்ளல் ஆகாது எனச்சொன்ன பாரதியை உளங்கொண்டு செயற்பட்டால் கலங்கல்நிலை தெளிவாகும் ! மஞ்சளது முக்கியத்தை மனமமிப்போ உணர்கிறது வேப்பிலையின் மகத்துவமும் விரிவடைந்து போகிறது துளசியிலை ...

Read More »

அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா கட்டி அணைத்தோம் கைகுலுக்கி மகிழ்வடைந்தோம் இட்டமுடன் உணவுகளை எடுத்துண்டு இன்புற்றோம் கட்டி அணைத்தவரை கைகுலுக்கி நின்றவரை எட்டவே நில்லென்று எச்சரிக்கை செய்கின்றோம்! கைதந்தால் ஓடுகிறோம் கால்பட்டால் பதறுகிறோம் முன்னின்று மூச்சுவிட்டால் பின்னோக்கி ஓடுகிறோம் தும்மல்வந்து விட்டாலே துடிதுடித்து நிற்கின்றோம் கொரனோவின் வில்லத்தனம் அளவின்றிப் போகிறதே! கொரனோவின் பரவலினால் கொள்கலங்கள் தடையாச்சு கடையெல்லாம் சனக்கூட்டம் பொருள்தேடி அலைகிறது கல்விகற்கும் மாணவர்கள் கதிகலங்கி நிற்கின்றார் மெள்ளமெள்ள கொரனோவும் பள்ளிநோக்கிப் பார்க்கிறது! வெளிநாட்டுப் பிரயாணம் அத்தனைக்கும் வேட்டுவைத்து உள்நாட்டு விழாவனைத்தும் ஓரங்கட்டும் நிலையாச்சு ...

Read More »

மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா. “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி ...

Read More »

போகியின் அர்த்தம்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா பழையன கழிதல் வேண்டும் புதியன புகுதல் வேண்டும் போகியின் அர்த்தம் என்று போதனை இருக்கு நன்றாய் வேண்டாத பொருளை எல்லாம் தீயிலே போட்டு விட்டு வெற்றியாய்ச் சிரித்து நிற்றல் போகியின் நோக்கம் இல்லை! வீட்டிலே உள்ள குப்பை வெளியிலே போட்டு விட்டோம் காட்டாத குப்பை எல்லாம் மனக் கூட்டிலே நிறைந்திருக்கே அகமதன் அழுக்கைப் போக்கல் போகியின் அர்த்தம் என்று அனைவரும் உணரும் வேளை போகியே புகழ்ந்து நிற்கும்!

Read More »

வரந் தருவாய் முருகா!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா மெல்பெண், ஆஸ்திரேலியா வரந் தருவாய் முருகா – வாழ்வில் நிரந் தரமாய் உன்னை நினைந்துமே நான் வாழ வரந் தருவாய் முருகா சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில் மரமாக இருப்பதையும் ஒழித்திடுவாய் உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும் உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   (வரந்தருவாய் முருகா) குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில் கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய் திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும் மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா) மாறுபடு சூரரினை திருத்தியவா – ...

Read More »

புதுமை காட்டும் புத்தாண்டு!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா    வெடித்துச் சிதறும் பட்டாசு விடியல் காட்டும் குறியல்ல இடக்கு முடக்கு வாதங்கள் எதற்கும் தீர்வு வழியல்ல நினைப்பில் மெய்ம்மைப் பொறியதனை எழுப்பி நின்று பார்த்திடுவோம் பிறக்கும் வருடம் யாவருக்கும் சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்!   அறத்தைச் சூது கவ்வுமெனும் நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம் உளத்தில் உறுதி எனுமுரத்தை இருத்தி வைக்க எண்ணிடுவோம் சிறுமை தொலைந்து போகட்டும் வெறுக்கும் எண்ணம் மடியட்டும் புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும்!

Read More »

ஏக்கம் மட்டும் போகவில்லை!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணின் நலந்திகழும் நினைவுகளை மறந்துவிட  முடியவில்லை உளமகிழப் பொங்கிநின்றோம் உவகையுடன் நாமிருந்தோம் வளமிழந்தோம் வாழ்விழந்தோம் புலம்பெயரும் நிலையானோம்! பண்பாடு  கலாசாரம் விட்டுநாம் அகலவில்லை பக்குவத்தை விட்டெறிந்து பறந்துமே திரியவில்லை கோயில்பல கட்டினோம் குலதெய்வம் நிறுவினோம் காலைமாலை தவறாமல் கடவுளிடம் முறையிட்டோம்! சாதிபற்றி எழுஞ்சண்டை சலசலத்துப் போனது சரிசமனாய் வாழுதற்கு உரியநிலம் ஆனது பேதமெனும் மனப்பேயும் பேதலித்துப் போனது என்றாலும் பிறந்தமண்ணின் ஏக்கம்மட்டும் போகவில்லை!

Read More »

ஆஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் – ஒரு நோக்கு

மகாதேவஐயர்  ஜெயராமசர்மா  B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , Dip . in . com , M.Phil Edu ,SLEAS மேனாள் தமிழ் மொழி கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பல இடங்களிலிருந்தும் தமிழர்கள் புலம்பெயர்ந்து கங்காரு நாடு என்று சிறப்பித்து அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் வருகை எப்படி அமைந்தது என்பதை அறிந்து கொண்டால்த்தான் தமிழர்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் எந்தவகையில் தங்களின் அக்கறையைச் செலுத்தினார்கள் என்று ...

Read More »

கழல் தொழுதல் முறையல்லவா !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், அவுஸ்திரேலியா உண வூட்டும் கையதனை உதறி நிற்கும் உள்ளங்களே மன முடைந்து நிற்கின்ற நிலை யுமக்குத் தெரியலையா தின மும்மை கண்விழித்து, கண நேரம் பிரியாமல் பிணி யனைத்தும் தான்சுமந்த சுமை தாங்கி நினைவிலையா! அணி மணிகள் கண்டாலோ துணி வகைகள் பார்த்தாலோ வகை வகையாய் வாங்கிவந்து வடி வாக்கும் மனமல்லவா இரவு பகல் தெரியாது எதையும் தனக் காக்காது நில வுலகில் உமைமட்டும் நினைத்த மனம் கலங்கலாமா! கண் இருந்து நீர்வடிந்தால் புண் ணாகிப் போம்மனது தண் ...

Read More »

ஆழ்துளைக்குள் அவலம்!

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா ஆழ்துளைக்குள் அழுகையொலி அனைவரையும் உலுக்கியதே! வாழவெண்ணி வந்தவுயிர் ஆழத்துள் அடங்கியதே! ஓலமிட்டு அழுதவர்கள் ஓடியோடி அலைந்தவர்கள் நாளைவரும் எனநினைத்தார் ஆழ்துளையோ விடவிலையே! தண்ணீரைத் தேடினோர்க்குக் கண்ணீரே மிச்சமெனப் பிஞ்சுக் குழந்தையொன்று பேதலிக்க வைத்ததுவே! கெஞ்சினார் கிண்டினார் கேட்கவில்லை இறைவனுக்கு பிஞ்சுக் குழந்தை உயிர் பிரியும்நிலை ஆனதே! பெற்றாரின் தவறா? பேணி நிற்கும் பேரரசின் தவறா? கற்றாரின் தவறா? கடவுளின் தவறா? யார்தவறோ அறியோம்! பிஞ்சின் அழுகை மட்டும் நெஞ்சலாம் ஒலிக்கிறதே!!

Read More »

மனம் திருந்த அருளிவிடு

–மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…… மெல்பேண் … ஆஸ்திரேலியா நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல இயற்கையினைப் பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின் நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ? ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை பரந்துநிற்கும் கடல்கூடப் பாரபட்சம் பார்ப்பதில்லை பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன்? பூமிதனைக் குடைந்து புதையல்பல எடுக்கின்றார் காடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார் நாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார் கேடெல்லாம் செய்துவிட்டுக் கீதைபற்றிப் பேசுகிறார்! ஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின் நாடெல்லாம் நலன்விளையும் ...

Read More »

விழியாக விளங்குகிறாய் பாரதியே

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா வறுமையிலே உழன்றாலும் பெறுமதியாய்க் கவிபடைத்தாய் அறிவுறுத்தும் ஆவேசம் அதுவேயுன் கவியாச்சே துணிவுடனே கருத்துரைத்தாய் துவண்டுவிடா உளங்கொண்டாய் புவிமீது வந்ததனால் பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் ! பலமொழிகள் நீகற்றாய் பற்றுதலோ தமிழின்பால் தேமதுரத் தமிழென்று தீர்க்கமாய் நீமொழிந்தாய் காதலுடன் தமிழணைத்தாய் கற்கண்டாய்க் கவிதைதந்தாய் ஆதலால் பாரதியே அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் ! பாப்பாக்குப் பாட்டுரைத்தாய் படிப்பினைகள் அதில்நுழைத்தாய் சாப்பாடு தனைமறந்தாய் சந்தமொடு சிந்துதந்தாய் ஏய்ப்பாரை எண்ணியெண்ணி எறிகணையாய் கவிசொன்னாய் ஆர்த்தெழுந்த உன்பாட்டால் அனைவருமே விழித்தெழுந்தார் ! பாஞ்சாலி சபதத்தால் ...

Read More »

யோகம் தரும் யோகா!

எம். ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும். ஆனால் அதற்காக நாம் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவதில்லை. நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளை எழுதித் தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார். அந்தப் பரிசோதனை, இந்தப் பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிப் படாத பாடு படுத்திவிடுவார். பணமும் செலவழிந்து, நோயும் மாறாத நிலையில், என்ன செய்வது என்று அறியாமல், புரியாமல், ...

Read More »

குரல் கொடுப்போம் வாருங்கள்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா வெடி குண்டு வென்று வெறியினை ஊட்டி நிற்பார் பறி போகும் உயிர்பற்றி பார்த்து விட மறுக்கின்றார் நெறி முறைகள் பற்றியவர் நெஞ்ச மதில் கொள்ளாமல் பொறி புலனை எல்லாமே அழியும் வழி ஆக்குகிறார் ! அறம் அவர்கள் சிந்தையிலே அமர்ந்து விட மறுக்கிறது அழி என்னும் தத்துவமே ஆணி வேராய் அமர்கிறது அரக்கர் எலாம் இருந்திருந்தார் என்று கதை படித்திருப்போம் அரக்கரை நாம் காண்பதற்கு அடையாளம் இவர் அன்றோ ! மதம் என்னும் பெயராலே ...

Read More »