Tag Archives: நெல்லைத் தமிழ்

நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

நாங்குநேரி வாசஸ்ரீ 133. ஊடலுவகை குறள் 1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு அவுககிட்ட எந்த தப்பும் இல்லையின்னாலும் பிணங்கிநிக்கது எம்மேல நேசம் வைக்கச்செய்யும். குறள் 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும் பிணக்குனால எனக்கு ஏற்படுத சின்ன சங்கடத்துக்காவ அவுக காட்டுத அளவத்த நேசம் வாடினாலும் பெருமையத் தரும். குறள் 1323 புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து நிலத்தோட தண்ணி கலந்தாமாரி ஒத்துமையா நேசம் வச்சிருக்க காதலர்கிட்ட ஏற்படுத பிணக்குல ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

நாங்குநேரி வாசஸ்ரீ 132. புலவி நுணுக்கம் குறள் 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு பொம்பளைங்க எல்லாரும் தங்களோட கண்ணால பொதுப்பொருளா நெனச்சி உன் மார்ப நுகருதாங்க. அதனால நான் உன் மார்பச் சேரமாட்டேன். குறள் 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து நான் பிணங்கி இருக்கையில அவுக தும்மினாக, ஆயுசோட நெறைய நாள் வாழணும்னு நான் வாழ்த்துவேனோன்னு நெனைச்சு. குறள் 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று கிளைகள்ல பூத்துக்கெடக்குத ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

நாங்குநேரி வாசஸ்ரீ 131. புலவி குறள் 1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது பிணங்குத நேரம் அவுக அடையுத சங்கடத்த காணுததுக்காவ அவுகளத் தழுவாம செத்த பிணங்கி நில்லு. குறள் 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் பிணங்கி நிக்கதுக்கும் சேந்து சந்தோசப்படுததுக்கும் இடையில இருக்க நேரம் சாப்பாட்டுல சரிஉப்பு சேத்துக்கிடது கணக்கா ஆவும். அந்த நேரம் சாஸ்தி ஆவுதது உப்புகரிச்ச சாப்பாடு கணக்காதான். குறள் 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

நாங்குநேரி வாசஸ்ரீ  130. நெஞ்சோடு புலத்தல் குறள் 1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது ஏ நெஞ்சே! அவுகளோட நெஞ்சம் அவுகளுக்கு தொணையா நிக்குதப்போ நீ மட்டும் எனக்குத் தொணையாகாம அவுகள நெனச்சு உருகுதது ஏன்? குறள் 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு நெஞ்சே நம்ம மேல நேசம் வைக்காதவர்னு தெரிஞ்ச பொறவும் வெறுக்க மாட்டாகனு நம்பி அவுக பொறத்தால போவுதுயே. குறள் 1293 கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

நாங்குநேரி வாசஸ்ரீ  129. புணர்ச்சி விதும்பல் குறள் 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு மனசால நெனக்கையில கெடைக்க சந்தோசமும், ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிடுதப்போ கெடைக்க சந்தோசமும் சாராயம் குடிக்கவங்களுக்கு கெடைக்காது. காதலிக்கவங்களுக்கு உண்டு. குறள் 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின் பனையளவு காதல் பெருகிவருதப்போ தினையளவு கூட பிணக்கு வச்சிக்கிடக்கூடாது. குறள் 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண் என்னைய அரவணைச்சுப் போவாம தனக்குப் பிடிச்சதையே செஞ்சிக்கிட்டிருந்தாலும் என் கண்ணுங்க ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

நாங்குநேரி வாசஸ்ரீ 128. குறிப்பறிவுறுத்தல் குறள் 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு நீ சொல்லாம மறைச்சாலும் உன்னையக் கடந்து உன்னோட கண்ணுங்க எனக்கு சொல்லுத சேதி ஒண்ணு இருக்கு. குறள் 1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்ணுகொள்ளாத அழகும் மூங்கில் கணக்கா இருக்க தோளும் இருக்க என் காதலிக்கு பெண்மைத் தன்மை நெறஞ்சு கெடக்கது இன்னும் அழகு கொடுக்குது. குறள் 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு கோத்து ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-127

நாங்குநேரி வாசஸ்ரீ 127. அவர் வயின் விதும்பல் குறள் 1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் அவுக வருத வழிய எதிர்பாத்து என் கண்ணுங்க ஒளி மங்கிப் போச்சுது. பிரிஞ்சுபோன நாட்கள சுவத்துல குறிச்சுவச்சு எண்ணினதுல விரல்கள் தேஞ்சுபோச்சுது. குறள் 1262 இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து நேசம் வச்சிருக்க அவுகள நான் இன்னிக்கு மறந்தேம்னா என் அழகு கெட்டு தோள் மேல பூட்டியிருக்க வளவி கழண்டு விழுதது நிச்சயம். குறள் 1263 உரன்நசைஇ உள்ளம் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-126

நாங்குநேரி வாசஸ்ரீ 126. நிறையழிதல் குறள் 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு வெக்கம் ங்குத தாப்பாளக் கொண்டிருக்க அடக்கம் ங்குத கதவ காதல்நோய் ங்குத கோடாலி பொளந்து போடுது. குறள் 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் நேசம் ங்குத நோய் இரக்கங்கெட்டது. ஏம்னா அது நடுச்சாமத்துலயும் என் நெஞ்சத்த தண்டிச்சு வேல வாங்குது. குறள் 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் என் நேசத்த நான் ஒளிச்சுக்கிட நெனப்பேன். ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

நாங்குநேரி வாசஸ்ரீ 125. நெஞ்சோடு கிளத்தல் குறள் 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து மனசே! நேசத்தால வளந்த இந்த நோயப் போக்குத மருந்து எதையாச்சும் ரோசன பண்ணி சொல்ல மாட்டியோ? குறள் 1242 காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு அவுக நம்ம நேசத்த மதிச்சு வராதப்போ மனசே! நீ மட்டும் அவுகள நெனச்சு சங்கடப்படுதது உன் புத்திகெட்டதனம். குறள் 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் பிரிஞ்சிபோயி இரக்கமில்லாம இருக்க ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-124

நாங்குநேரி வாசஸ்ரீ 124. உறுப்புநலன் அழிதல் குறள் 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் இங்ஙன நம்மள உட்டுப்போட்டு தூரதொலைவு போயிட்டாகளேன்னு நேசம் வச்சவர நெனச்சி அழுதவளோட கண்ணு அழகுகெட்டு பூக்களுக்கு முன்ன வெக்கப்பட்டு கெடக்கதுங்க. குறள் 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் பசல படந்து கண்ணீரு உட்டு இருக்க கண்ணுங்க நேசம்வச்சவரு எங்கிட்ட பாசமா இல்லங்கத சொல்லிக்காட்டிப் போடும். குறள் 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் கூடி ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-123

நாங்குநேரி வாசஸ்ரீ 123. பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது பொழுதே! நீ சாயங்காலமா (மாலைப்பொழுது)  இல்ல. நேசம் வச்சிருக்க பொம்பளப்பிள்ளைங்க உசிரக்குடிக்குத அந்திக் காலமா இருக்க. குறள் 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை மயங்கி நிக்க சாயங்காலமே (மாலைப் பொழுதே). நீயும் என்னயப் போல சங்கடப்படுதியோ. உன் தொணையும் என்னைய நேசிக்கவரு கணக்கா ஈவுஇரக்கங்கெட்டதோ. குறள் 1223 பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும் மொத(முன்பு) ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-122

நாங்குநேரி வாசஸ்ரீ 122. கனவுநிலை உரைத்தல் குறள் 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து சங்கடத்தோட ஒறங்கையில என்மேல நேசம் வச்சவரு அனுப்பிவச்ச தூதா எங்கிட்ட வந்த கனவுக்கு நான் என்னமாரி விருந்துவச்சி அனுப்புவேன்? குறள் 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் என்பேச்சக் கேட்டு என்கண்ணு ஒறங்கிச்சின்னா அப்பம் கனவுல வருத காதலர்கிட்ட நான் உசிரு தப்பிப் பொழைச்சு இருக்கதச் சொல்லுவேன். குறள் 1213 நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-121

நாங்குநேரி வாசஸ்ரீ 121. நினைந்தவர் புலம்பல் குறள் 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது குடிக்குத நேரம் மட்டும் போத தருத கள்ள விட நெஞ்சுக்குள்ளார நெனைக்க நேரமெல்லாம் போத தருத காதல் சந்தோசமானது. குறள் 1202 எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் பிரிஞ்சி இருக்க நேரம் நேசிக்கவர நெனச்சுப்பாத்தா அந்த சங்கடம் உருத்தெரியாமப் போவுததால எப்டிபாத்தாலும் நேசம் எப்பமும் இனிம தான். குறள் 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

நாங்குநேரி வாசஸ்ரீ   120. தனிப்படர் மிகுதி குறள் 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி தான் நேசிக்கவரே தன்னைய நேசிக்குத பேறு பெத்தவுக தான் காதல் வாழ்க்கயோட பயன் ங்குத விதையில்லாத பழத்த அடைஞ்சவுக. குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி நேசிக்குத ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அன்பா இருக்கது வானம் தேவைப்படுத நேரம் மழையப் பெய்ய வச்சி உசிருகளக் காப்பாத்துததுக்கு சமானம். குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

நாங்குநேரி வாசஸ்ரீ 119. பசப்புறு பருவரல் குறள் 1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற என்னைய நேசிச்சவரு பிரிஞ்சி போவுததுக்கு சம்மதிச்சிட்டேன். இப்பம் தாங்கமாட்டாம எம் மேனி பசலை படந்து கெடக்கத யார் கிட்ட போய் சொல்லுவேன்? குறள் 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு நேசிச்சவரு உண்டாக்கி உட்டதுங்குத தலகனத்துல பசலை வண்ணம்  எம் மேனி முழுக்க ஊர்ந்து பரவுது. குறள் 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து நேசங்குத ...

Read More »