Archive for the ‘தொடர்கதை’ Category

Page 1 of 1812345...10...Last »

இனி என்னைப் புதிய உயிராக்கி- 10

மீனாட்சி பாலகணேஷ் மறுபகிர்வு: தாரகை இணைய இதழ் குழந்தையே ஆடு மரக்கிளையின் உச்சியில் காற்றடிக்கும் போது தொட்டில் நன்றாக ஆடும் மரக்கிளை உடைந்தால் தொட்டில் விழுந்து விடும் தொட்டிலும் குழந்தையும் எல்லாமும் கீழே வந்து விடும்- (நர்ஸரி ரைம்!) ^^^^^^^^^^^^^^^^^ குழந்தை கீதா தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் அமர்ந்து தான் படிக்கும் நாவலில் ஒரு கண்ணும், குழந்தை மேல் ஒரு கண்ணுமாக இருந்த ஷீலாவின் காதில் கீதாவுக்காகப் பாடிக் கொண்டு இருந்த காஸட்டில் இருந்து மேற்கண்ட ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி – 9

இனி என்னைப் புதிய உயிராக்கி - 9
-மீனாட்சி பாலகணேஷ் காவேரி ஓரம் கவிசொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா உள்ளம் அலை மோதும் நிலை கூறவா-அந்தக் கனிவான பாடல் முடிவாகு முன்னே கனவான கதை கூறவா பொங்கும் விழி நீரை அணை போடவா?                                        ******************* "அம்மா, நான் போயிட்டு வரேன்.  சாயங்காலம் வர நாழியாகும். எங்க காலேஜ் ஜெனடிக்ஸ் கிளப்பில புரஃபஸர் சூரியநாராயணனோட லெக்சர் இருக்கு.  கிளப் காரியதரிசியான நானே போகலேன்னா மத்த எல்லாரும் கிழிச்சுப்பிடுவா," என்றபடி புத்தகங்களை மார்போடணைத்தவாறு கிளம்பினாள் சைலஜா. வெங்கடேசன் குடும்பம் சென்னை வந்து சில வருடங்களாகி ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி- 8

இனி என்னைப் புதிய உயிராக்கி- 8
 -மீனாட்சி பாலகணேஷ் 'மோகத்தைக் கொன்று விடு -அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு தேகத்தைச் சாய்த்து விடு -அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு--' ************************** காரை விட்டிறங்கி மாடியை அண்ணாந்து பார்த்தாள் ஷீலா. அவளுடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றுவது போல பளிங்குக்கல் வாசலும் வராந்தாவும், அகன்ற பால்கனிகளும், அடர்ந்த தோட்டமுமாகக் கம்பீரமாக நின்றது அந்தப் பங்களா. ஆனால் இன்றென்னவோ வெறுமை வழிவதை உணர்ந்தாள் ஷீலா. காரணமும் தெரியும். அருண் வெளியேறி இருப்பான் ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி… 7

இனி என்னைப் புதிய உயிராக்கி... 7
-மீனாட்சி பாலகணேஷ்      நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்                 நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்         திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்                 செம்மை மாதர் திறம்புவதில்லையாம்... ************************************* பொழுது மிக அழகாக இனிமையாக விடிந்து கொண்டிருந்தது. நேரம் கழித்து எழுந்த சில சோம்பேறிச் சேவல்கள் தங்கள் கடமையாக 'கொக்கரக்கோ' என்று கூவிக் கொண்டிருந்தன.  பால்காரர்களின் பாத்திர ஒலிகளும், வாசலில் சாண நீர் தெளிக்கும் ஓசையும் ஒருவித லயத்தோடு ஒலித்தன.  திருச்சி வானொலியின் 'தமிழ் மணத்'தில் "பல்லாண்டு பல்லாண்டு...மணிவண்ணா," என உருகி நெகிழும் குரல் புல்லரிக்க வைத்தது. ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி………6

இனி என்னைப் புதிய உயிராக்கி.........6
                                                     -மீனாட்சி பாலகணேஷ்              திலகாவும் சைலஜாவும் திலகா வீட்டுத் திண்ணையை ஒட்டிய சிறிய அறையில் ரகசியமாக ஏதோ பேசிச் சப்தமிடாமல் சிரித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள். "உங்க அத்தை பையன் பேரென்னடி? ரொம்ப உசரம்னு பாட்டி சொன்னாங்களே, நிஜமாவா?"திலகா கேட்டாள். "ம், இருப்பான் ஆறடி உசரம். ஸ்ரீனிவாசன்னு பேர். சீனுன்னு கூப்பிடுவோம்," ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி…(5)

இனி என்னைப் புதிய உயிராக்கி...(5)
-மீனாட்சி பாலகணேஷ் ஷீலா விருந்தினர்களை எப்படியோ சமாளித்தாள். அவர்கள் விடை பெற்றுப் போனதும் பூகம்பம் வெடித்தது. "அருண், உனக்கு என்ன திமிர் இருந்தால் விருந்தினர்கள் முன்பு இப்படி உளறியிருப்பாய்," வார்த்தைகள் நாகரிகத்துக்கு இடமின்றி இடம் பெயர்ந்தன. தானும் கலையுலகில் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம் என்ற உற்சாகம், பெருமை,  இதன் பொருட்டு ஏற்படும் கர்வம் இவை அளவு மீறியதால், தன் வளர்ச்சிக்கு முழுப்பொறுப்பும் ஷீலாவினுடையது தான், அவளும் தானும் பரஸ்பரம் கொண்ட காதலால் தான் என்பதை அலட்சியம் செய்து விட்டான் ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி………

இனி என்னைப் புதிய உயிராக்கி.........
மீனாட்சி பாலகணேஷ் திலகாவின் தாய் சைலாவின் நீண்ட தலைமுடியை குஞ்சலம் வைத்து வாரிப் பின்னி முல்லை, கனகாம்பரம் வைத்துத் தைத்து அலங்கரித்தாள். பட்டுப்பாயில் உட்கார்த்தி, பாட்டுப்பாடி, ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தாள். வெட்கம், பயம், கூச்சம், கொஞ்சம் கோபம் எல்லாமாக வாய் திறவாது, உதடுகள் துடிக்க, அவற்றை அழுந்தக் கடித்துக் கொண்டு, மையிட்ட பெரிய கண்கள் அலைபாய, அவற்றைக் கஷ்டப்பட்டுத் தரை நோக்கித் தாழ்த்திக் கொண்டு, கைவிரல்கள் புதிதாக அணிந்து கொண்ட ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி…

இனி என்னைப் புதிய உயிராக்கி...
 மீனாட்சி பாலகணேஷ் 3 'கூடிப் பிரியாமலே ஓரிராவெலாம் கொஞ்சிக் குலாவியங்கே.... பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடீ....' ****************** திலகாவும் சைலஜாவும் உற்சாகத்தின் எல்லையில் நின்று கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பள்ளி ஆண்டு விழாவில் ராஜராஜ சோழன் நாடகம் போடப் போகிறார்கள். சைலஜா தான் இளவரசி குந்தவை. குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் எல்லாப் பெண் குழந்தைகளும் தங்களை அரசிளங்குமரியென்று பாவித்துக் கனவு காண்பார்கள். சைலஜா போன்ற ... Full story

 இனி என்னைப் புதிய உயிராக்கி… (2)

 இனி என்னைப் புதிய உயிராக்கி... (2)
- மீனாட்சி பாலகணேஷ் நீரில் மிதக்கும் அன்னப்பறவையெனத் தரையில் வழுக்கியபடி வந்து நின்றது ஒரு வெள்ளை நிற 'மெர்ஸிடிஸ்' கார். டிரைவர் மாத்யூ தன் சீட்டை விட்டிறங்கி ஓடிவந்து பின் கதவைத் திறந்து பிடித்தார். ஓரு அழகிய ஃபாஷன் மாடலினுடையதைப் போன்ற கால்கள் தென்பட்டன. சணலினால் அழகாகப் பின்னிய வார்கள் கொண்ட குதிகால் உயர்ந்த இத்தாலியன் காலணிகள் வெண்புறா போன்ற பாதங்களைக் கவ்வியிருந்தன. அந்தப் பாதங்களின் அழகு நன்கு தெரிய வேண்டுமென்பதற்காகவே கணுக்கால் மட்டுமே வரும் ஒருவிதமான பான்ட்டை அணிந்திருந்தாள் அக்கால்களுக்குரிய ... Full story

இனி என்னைப் புதிய உயிராக்கி……….. (1)

 மீனாட்சி பாலகணேஷ்                    'காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்'....           சாலையின் இருமருங்கிலும் கொன்றை மரங்கள் சரமாரியாகப் பூத்துச் சொரிந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும் போது கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள் போல அவை காட்சியளித்தன. நீண்ட அச்சாலையின் முடிவில் வானளாவ உயர்ந்து நின்றது கோவில் கோபுரம்.  புலர்ந்து கொண்டிருந்த காலை நேரத்தில் புள்ளினங்களின் இனிமையான ஒலியும், உடலை இதமாகத் தழுவிச் சென்ற பூங்காற்றும், தொலைவில் ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா

எழிலரசி கிளியோபாத்ரா
எழிலரசி கிளியோபாத்ரா மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ வயது ஏறினும் வதங்காது அவள் மேனி ! வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம் ! வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ......! படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்! கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால்.... Full story

மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதரில் எத்தனை நிறங்கள்
(நாவல் முன்னுரை மற்றும் முதல் நான்கு அத்தியாயங்கள்) அன்பு வாசகர்களுக்கு, வணக்கம். ’மனிதரில் எத்தனை நிறங்கள்’ அச்சுப்பதிப்பில் வரும் எனது ஐந்தாவது நாவல் என்றாலும் நான் எழுதிய வரிசையில் இரண்டாம் நாவல். இந்த நாவலில் வரும் சிவகாமி என்னும் கதாபாத்திரம் அமானுஷ்யனுக்கு முன்பாக வாசகர்களிடம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட கதாபாத்திரம். இரண்டு வருட காலம் நிலாச்சாரலில் தொடராக வெளி வந்த இந்த நாவலின் வாசகர்களுடன் எனக்கு ஏற்பட்ட ... Full story

வளவன் கனவு (27)

வளவன் கனவு  (27)
சு. கோதண்டராமன்  நல்லூர்ப் பெருமணம்   காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே -சம்பந்தர். வயது பதினாறு ஆயிற்று. சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் தந்தை. எல்லோரையும் போல இல்லறத்தில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவா அவர் அவதரித்தார்? இறைவன் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பினான் ... Full story

வளவன் கனவு (26)

வளவன் கனவு  (26)
சு. கோதண்டராமன் வாத சபை சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர் கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே -சம்பந்தர் ஊர் மக்கள் பெரும் திரளாகக் கூடி இருந்தனர். சம்பந்தரின் புகழ் ஏற்கெனவே பரவி இருந்ததால் அவரைக் காண விரும்பினர். அவரைக் கொல்லச் சமணர்கள் முயன்றார்கள் என்ற செய்தி அவர் பால் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.... Full story

வளவன் கனவு (25)

வளவன் கனவு (25)
சு. கோதண்டராமன் வெப்பு நோய் ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே -சம்பந்தர். குலச்சிறையார் ஒற்றர் படையைச் சேர்ந்த நான்கு வீரர்களைத் தனியாகக் கூப்பிட்டு, சம்பந்தரின் இருப்பிடம் அறிந்து போகச் சொன்னார். அவர்கள் தன்னை வெளிப்படுத்திக் ... Full story
Page 1 of 1812345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.