தொடர்கள்

பழகத் தெரிய வேணும் – 51

நிர்மலா ராகவன் புகழ்ச்சிக்கு மயங்கினால்… கலைவிமர்சராக ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். புகழ்பெற்ற அக்கலைஞர் எனக்குத் தெரிந்தவர் என்றதால், மறுநாள் காலை அவரை அழைத்து, எந்தெந்த அம்சங்கள் சிறப்பாக இருந்தன என்று விவரிக்க ஆரம்பித்தேன். அவர் உடனே என்னைத் தடுத்து, “எந்த இடம் சரியாக இல்லை என்று மட்டும் கூறுங்கள்,” என்றார்! அவர் முன்னேற்றம் அடைந்ததன் காரணம் புரிந்ததா? குறையை ஏற்காதவர்கள் `நான் தவறே செய்யமாட்டேன். என்னைக் குறை கூறுகிறவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தெரியுமோ?’ என்பதுபோல்தான் பலரும் பேசுகிறார்கள். இத்தகையினர் ஓரளவு உயர்ந்தபின், கர்வத்தால் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 113

திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல் : “ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே யீங்கு   நான்சொல வேண்டுவ தில்லைநீ   ரிதனை வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்கையிற்   கொடுத்தார். பொருள் : (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 50

நிர்மலா ராகவன் ஊக்கமும் உந்துதலும் உனக்குள்ளே “பலர் எழுதுவதும் அரைத்த மாவையே அரைப்பதுபோல் — ஒரே மாதிரி — இருக்கிறது. நீங்கள் எப்படி வித்தியாசமாக எழுதுகிறீர்கள்?” இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் என்மேல் தொடுக்கப்பட்ட கேள்வி இது. “எதையும், `இப்படித்தான் இருக்கவேண்டும்,’ என்று பிறர் சொல்வதை ஏற்காதீர்கள். அது குழந்தைகளுக்குத்தான் சரி. `ஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்று சிந்தித்துப்பாருங்கள்,” என்றேன். அதன்பின், என்னைத் தனிமையில் சந்தித்த ஒரு பெண்மணி, “நானும் உங்களைமாதிரிதான் — எல்லாவற்றையும் வித்தியாசமாக யோசிப்பேன். எழுதவேண்டும் என்று மிகவும் ஆசை,” என்றுவிட்டு, “ஆனால், ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி  பாடல் பேணும்  அன்பரை  நோக்கி’’நீர்   பெருகிய  அடியார்க்கு ஊணும்   மேன்மையில்   ஊட்டிநற்   கந்தை  கீளுடைகள் யாணர்   வெண்கிழிக்  கோவணம்  ஈதல்கேட்   டும்மைக் காண   வந்தனம் ‘’  என்றனன்  கண்ணுதல்  கரந்தோன். பொருள் : இவ்வாறு   வழிபடும்  அன்பரை  நோக்கி, ‘’ நீர் (அன்பினால்) பெருகிய அடியவர்களுக்கு மேன்மை மிக்க  உணவும்  ஊட்டிக் கந்தை,  கீள், உடை  ஆகியவற்றையும்  புதிய வெண்மையான  உயர்ந்த  கோவணங்களையும் கொடுத்தல்  கேட்டு  உம்மைக்  காண வந்தோம் ‘’ என்று  நெற்றிக்கண்ணை  மறைத்து  வந்த இறைவர்  சொன்னார். ...

Read More »

பரிமேலழகர் உரைத்திறன் – 25

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, விளார் புறவழிச்சாலை, தஞ்சை மாவட்டம் – 613006. மின்னஞ்சல் முகவரி –  [email protected] பரிமேலழகரின் உவமத் திறன் முன்னுரை சொல்லவரும் கருத்து, கற்பாருக்கு மயக்கமின்றிப் புலப்பட வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவதே உவமம் ஆகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலோ சொல்லதிகாரத்திலோ இலக்கண விளக்கத்திற்காகத் தொல்காப்பியர் உவமத்தைக் கையாளவில்லை. ஆனால் பொருளதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் பதின்மூன்று உவமங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இது தனித்த ஆய்வுக்கு உரியது. உவமத்தைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 49

நிர்மலா ராகவன் நல்லவரை இனங்காண்பது “என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப் பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள். கதை பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப் படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன் உட்கார்ந்து, ...

Read More »

கதை வடிவில் பழமொழி நானூறு – 34

நாங்குநேரி வாசஸ்ரீ பாடல் 69 மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் – அஃதேபோல் பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ‘ஈடில் லதற்கில்லை பாடு’. பழமொழி – ‘ஈடில் லதற்கில்லை பாடு’. எங்கடா கூட்டிண்டு போற. ஏதோ முக்கியமான இடத்த காண்பிக்கப் போறதா சொல்லிட்டு நிக்காம ஒரு மணிநேரம் கார ஓட்டிண்டே இருக்கியே. வழியில எவ்வளவு அழகான பூங்காக்களெல்லாம் இருந்தது. பச்சைப்பசேல்னு. அதவிடவா பெரிய இடம். அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாள். பாட்டி டோன்ட் வொரி. இப்போ நாம உங்களுக்குப் பிடிச்ச பழைய ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல் பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு  நல்லூர்க் கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி நிறைத்த வன்புடைத் தொண்டர்க்கு நீடருள்  கொடுப்பான் மறைக்கு லத்தொரு பிரம  சாரியின் படிவாகி, அருஞ்சொற்பொருள் பிறைத்தளிர் – இளம்பிறையாகிய தளிர், கறைக்களம் = நஞ்சுண்ட கண்டம், கோவணம் = கீளுடை, மறைக்குலம் = வேதியர் சாதி, படிவாகி  = வடிவம் கொண்டு பொருள் பிறையாகிய தளிரைச் சூடிய சடையினையுடைய பெருந்தகையாகிய பெருந்திருநல்லூரில் எழுந்தருளிய திருநீலகண்டராகிய, இறைவனார், தமது கோவணத்தின் பெருமையை முன்காட்டி, அதன் மூலம், ...

Read More »

பரிமேலழகர் உரைத்திறன் – 24

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006.  மின்னஞ்சல் முகவரி –  [email protected] பரிமேலழகரும் புறநானூறும் முன்னுரை பரிமேலழகர் தாம் எழுதிய திருக்குறள் உரையில் தாம் கற்றறிந்த பல நூல்களைப் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிந்த எல்லா நூல்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திய நூல்களிலிருந்தும் ஒரே எண்ணிக்கையில் எடுத்துக்காட்டுக்களைத் தரவில்லை. தந்த எடுத்துக்காட்டுக்களையும் ஒரே தன்மையை விளக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறட்பாவுக்குத் தாம் சரியென்று கருதிய கருத்தியலை முன்வைத்து உரையெழுதும் ...

Read More »

புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

மீனாட்சி பாலகணேஷ் வளையல் அணிதல்    (பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் கண்டு ரசிக்கப்போகும் அடுத்த நிகழ்வு கைநிறைய விதம்விதமாக வளையல்களை அணிந்துகொண்டு மகிழும் பருவத்திலிருக்கும் ஐந்து முதல் பத்து வயதினரான சின்னஞ்சிறு பெண்குழந்தைகளைத்தான். வளையல்கள் பெண்களின் அழகு சாதனங்கள். மங்கலச்சின்னங்கள். கலகலவென ஆர்க்கும் பலநிறங்களிலான கண்ணாடிவளை முதல் இரத்தினம், முத்து, மரகதம் என நவரத்தினங்களையும் வைத்திழைத்த பொன்வளைகளும் கங்கணங்களும் கூடப் பெண்களின் விருப்பத்திற்கானவைதாம்! பண்டிகை நாட்களாகட்டும், ஊர்க்கோவிலில் திருவிழாவாகட்டும், பிறந்தநாள் ஆகட்டும்; புதுவளைகள் அணிவதில் பெண்களுக்குண்டான ஆசை அளவிட முடியாதது. இதற்குச் ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 48

நிர்மலா ராகவன் நேர்மறைச் சிந்தனை `என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது. கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை. முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை — “பேசுவதாக இருந்தால், அப்பால் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

திருச்சி புலவர்  இராமமூர்த்தி பாடல் : சிந்தை  செய்வது  சிவன்கழ   லல்லதொன்   றில்லார் அந்தி   வண்ணர்தம்   மடியவர்க்   கமுதுசெய்  வித்துக் கந்தை   கீளுடை   கோவணம் கருத்தறிந் துதவி வந்த   செல்வத்தின்   வளத்தினால்  வரும்பயன்  கொள்வார், அருஞ்சொற்பொருள்: சிந்தை = மனத்தால்நினைப்பது, அல்லது = அன்றிவேறொன்று, அந்தி வண்ணர் = செவ்வான நிறம்படைத்தசிவன், கந்தை = கிழிந்தஆடை, கீளுடை = கோவணம். வரும்பயன் = நற்பயன். பொருள்: அமர்நீதி நாயனார், தமது மனத்தினுள் எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்றையும்  எண்ணாதவர்; அந்தி மாலையின் ...

Read More »

பரிமேலழகர் உரைத்திறன் – 23

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006.  மின்னஞ்சல் முகவரி –  [email protected] ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!’ முன்னுரை ‘வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்’ என்பது உலக வழக்கு. ‘உரைவழக்கிற்கும்’ இது பொருந்தும். பொதுவாக நூல் ஒன்றிற்கு உரையெழுதுவார் பிற இலக்கிய இலக்கணங்களைத் தாம் கொள்கிற பொருளமைதிக்கும் கருத்துக்கும் வலிமை சேர்ப்பதற்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஒரு சிலர் எந்த நூலுக்கு உரையெழுதுகிறார்களோ அந்த நூலிலிருந்தே எடுத்துக்காட்டுக்களையும் சான்றுகளையும் பெற்று எழுதுவர். ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 47

நிர்மலா ராகவன் எனக்கு மட்டுமே சொந்தம் என் உறவினரின் மூன்று வயது மகளைச் சிறிது காலம் என் பொறுப்பில் விட்டிருந்தார்கள், அவளுடைய தாய் பூரணி கர்ப்பமாக இருந்தபோது. விவரம் புரியாது, `அம்மா’ என்று என்னை அழைத்துக்கொண்டிருந்தாள் குழந்தை. வெளியூரிலிருந்த வந்த பூரணி குழந்தையைப் பார்த்தவுடனே செய்த முதல் காரியம்: மிகுந்த பிரயாசையுடன் நான் அழகாக அலங்கரித்திருந்த தலைமயிரைக் கலைத்ததுதான்! ஏதோ செய்யக் கூடாததைச் செய்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்கு. `இது என் குழந்தை. நீ கை வைக்காதே!’ என்று அந்தத் தாய் சூசகமாக உணர்த்தி ...

Read More »

கதை வடிவில் பழமொழி நானூறு – 33

நாங்குநேரி வாசஸ்ரீ பாடல் 67 ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா பெருவரை நாட! சிறிதேனும் ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’.  பழமொழி- ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’. இன்னிக்கு நடந்த கூட்டத்துல ஏதாவது முடிவு எடுத்தாங்களா. அப்பொழுதுதான் தில்லியின் பெயர்பெற்ற  சரோஜினி நகர் மார்க்கெட்டிலிருந்து கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உட்காருகிறாள் என் தோழி. அவள் கேட்ட கேள்வியில் என் கவனம் செல்ல மறுக்கிறது. எப்போதுமே அழகா செலக்ட் பண்ற அவள் இன்னிக்கு என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காளோ? பேசாம ...

Read More »