Author Archives: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

சேக்கிழார் பாடல் நயம் – 127 (வெண்ணீறு)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு போர்க்களம்  புகுந்த  அதிசூரன் ஏனாதி  நாத்தனாரின்  வாள்வீச்சின்  வலயத்தில் சிக்கினான். எவ்வாறோ  மறைந்து  வெளியேறித் தப்பித்தான். அன்று  இரவெல்லாம் சிந்தித்து ‘’நாம்  நம் நாட்டு வீரர்களைக் கொல்லும் வகையில் திரண்டு போர் புரியாமல், தனிஇடத்தில் சந்தித்து வாட்போர் புரியலாம்‘’ என்று செய்தி அனுப்பினான்.ஏனாதிநாதரும்‘’ அவ்வாறே  ஓரிடத்தில்  வாளுடன் போர் புரிவது  நல்லது‘’ என்றார்.  தம்முடன் இருந்த சுற்றத்தார்  அறியாவகையில் அந்த  இடத்தில் வாழும் கேடயமும் ஏந்தி ஏனாதி நாதர்  காத்து நின்றார்.  திருநீறு பூசிய அடியாரை, நாயனார் எவ்விடத்திலும் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 126 (தலைப்பட்டார்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு படைப்  பயிற்சியில்  சிறந்தவன்  அதிசூரன். அவன் ஏனாதி நாதரின்  தாயத்து உறவினன். தம் படைக்கலத்  திறத்தை  மற்றவர்க்கும்பயிற்றினான். அதனால் அவனுக்குத்  தற்பெருமை அதிகரித்தது. தம்மை வியந்து கொண்ட அதிசூரன் அரசர்  ஏனாதி நாதர் மேல் பகைமை கொண்டான். அதனால் அரசனை எதிர்த்துப்  போர் புரிய நினைத்தான். தாயத்து  உரிமையை வலியவரே  பெறவேண்டும் என்று சிலருடன் கூடி ஆலோசித்தான். ஆகவே சிறுநரி  சிங்கத்தை எதிர்ப்பது போல், ஏனாதி நாதர் மேல் போர் தொடுக்க எண்ணிப் போருக்கு அழைத்தான். ஏனாதி நாதரும் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 125 (நள்ளார்களும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி நள்ளார் களும்போற்றும்  நன்மைத் துறையின்கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகுநாள் தள்ளாத தங்கள்  தொழிலுரிமைத் தாயத்தின் உள்ளான்  அதிசூரன்  என்பான்  உளன் ஆனான்.    5 பொருள் பகைவர்களும் பாராட்டும் படியான நன்மைத் துறையிலே எவ்வகையானும் இகழப்படாத செய்கையில் இயல்பிலே இவர் ஒழுகுகின்ற காலத்தில் விடுபடாதபடி பிணைந்துள்ள தமது தொழில் உரிமைத் தாயத்தில் உள்ளானாய் அதிசூரன் எனப்படுவான்  ஒருவன்  இருந்தான். விளக்கம் ‘நள்ளார்களும் போற்றும் நன்மைத்துறை’   இத்தொடர் நன்மைத் துறை யாதலின் பகைவர்களும் போற்றினார்கள். பகைவராலும் பாராட்டப்படத் தக்கவாறு இவரது நன்மைநிலை ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 124 (வேழ)

திருச்சி புலவர் இராமமூர்த்தி திருத்தொண்டர்  புராணம் 10. ஏனாதி நாதர்புராணம் வரலாறு அடுத்து ‘ஏனாதி நாதர்’   என்று போற்றப்பெற்ற சிவனடியார்  வரலாற்றைச்  சேக்கிழார்  எழுதிய  பாடல்கள் வழியே காண்போம். குளிர்ச்சி மிக்க  வெண்கொற்றக்  குடையால் உலகிற்கே  தண்ணளி வழங்கிய  வளவன் ஆளும் சோழ நாட்டில் இயற்கை அரண் கொண்ட வயல்கள் சூழ்ந்த   மூதூர் எயினனூர் ஆகும். அவ்வூரில் வாழ்ந்த ஏனாதி நாதர் என்னும் அடியாரின் வரலாறு பெரிய புராணத்தின் பத்தாம் பகுதியாகும்.  முதலில் அடியாரை ஊரைச் சேக்கிழார்  அறிமுகம் செய்கிறார். பாடல் வேழக் கரும்பினொடு ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 123 (ஆளுடை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு எறிபத்தர்  வரலாற்றின்  நிறைவுப்  பகுதி இது. யானை, பாகருடன் கொல்லப் பட்டுக்  கிடந்ததையும் எறிபத்த  நாயனார்  சினம்பொங்க நின்றதையும்  கண்ட அரசர்,  அவர்முன் சென்று இவ்வாறு வெட்டிக் கொன்றது எதனால்? எனக்  கேட்டார்.  உடனே  எறிபத்தர் தேவர்களின் தேவராகிய ஈசரின் அன்பர் சிவகாமியாண்டார் இறைவனுக்குச்  சாத்தக் கொண்டுவந்த மாலையை, இந்த யானை தும்பிக்கையால்,பாகர் தடுத்தும் சிதற வீழ்த்தியது. அதைக்கண்டு  சினந்து நானே இதனையும் பாகரையும் வெட்டிவீழ்த்தினேன். என்றார். அதுகேட்டமன்னன் அஞ்சியபடி  அடியாரைப்பணிந்தான்.இவ்வாறு சிவாபராதம் புரிந்த யானையின் உரிமையாளனாகிய என்னையும் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல்: புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும் வரலாறு: இவ்வளவு  பெரிய  யானைமுன்னே இந்த உண்மைத்   தவமுடைய அடியார் சென்றபோது  நடந்ததை அறியாத மன்னன் யானையும்   பாகரும்  மாளும்   வண்ணம்  வெட்டியதே போதுமோ? எனக்கேட்டார். அது  கேட்ட  எறிபத்தர், ‘’அரசே, இறைவனுக்குச்  சாத்த சிவகாமி ஆண்டார் எடுத்து ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

திருச்சி புலவர் இராமமூர்த்தி ‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்’’ வரலாறு தாம் ஏந்தி வந்த பூக்கூடையைப்  பட்டத்து யானை தட்டிச்  சிதைத்தது கண்ட சிவகாமியாண்டார், அந்த  யானையைத் தொடர்ந்து ஓட  இயலாமல் கீழே விழுது கதறினார். இதனை எறிபத்தர் முன் பாகர்கள் கூறினார். அதுகேட்டு ‘’பெருமான் அந்தணர் அனுப்பிய ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 120 (அப்பொழுது)

திருச்சி புலவர் இராமமூர்த்தி வரலாறு கருவூர்ப் பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் எங்கும் இறைவழிபாட்டுக்கு உரிய நிகழ்வுகள் நடந்தன! அவ்வூர்ச் சிவனடியார் விறன்மிண்டர் என்பவராவார். அவர் தம் பெயருக்கேற்ற விறலும்  மிண்டும் கொண்டவர். இறைவன்பால் அன்பு கொண்ட அவர் இறைவழிபாடு செய்யும்  அடியார்களுக்கு ஆவன செய்வதற்கு உரிய பரசும் மனமும், இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்வாரைத்  தண்டிப்பதற்கு உரிய ஆயுதமாகிய பரசு என்ற மழுவா யுதத்தையும் ஏந்தினார்! சிவகாமியாண்டார் என்னும் அடியவர் ஒருவர், இறைவன்பால் பேரன்பு கொண்டு, அதிகாலையில்எழுந்து இறைவனுக்குச் சாத்துவதற்குரிய மலர்களையும், மாலைகளையும் நிறைத்த  பூக்குடலையையம்  ஏந்திக்கொண்டு ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் -119 (மழை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி எறிபத்தர் என்ற மன்னர் அக்கருவூரில் வாழ்ந்தார். அவ்வூரில் அமைந்த ஆனிலையப்பர் திருக்கோயிலில் சிவபூசை மரபுகளைப் பேணி வளர்த்த தொண்டராக அவர் திகழ்ந்தார். அவரைப்பற்றி இப்பாடல்கூறுகிறது. பாடல்: மழைவள ருலகி லெங்கு மன்னிய சைவ மோங்க வழலவிர் சடையா னன்பர்க் கடாதன வடுத்த போது முழையரி யென்னத் தோன்றி முரண்கெட வெறிந்து தீர்க்கும் பழமறை பரசுந் தூய பரசுமுன் னெடுக்கப்  பெற்றார். பொருள்: நிலைபெற்ற சைவம் மழையினால் வளருந் தன்மையுடைய உலகத்தில் எங்கும் ஓங்கும்படியாக, அழல்போன்ற நிறத்துடன் அவிர்ந்த சடையினை யுடைய ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

திருச்சி புலவர் இராமமூர்த்தி பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று மந்நெறி வழியே   யாக    வயல்வழி   யடைத்த   சோழன் மன்னிய   வநபா    யன்சீர்    மரபின்மா  நகர   மாகுந் தொன்னெடுங்   கருவூ ரென்னுஞ்   சுடர்மணி   வீதி   மூதூர். பொருள்  பழைமையாகிய நெடிய கருவூர் என்று சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய ஊர், வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி ஓங்கி நிற்க, அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி அமைத்த புதிய வழியே வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த, கரிகாற் சோழர் முதல் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி இலைமலிந்தசருக்கம் எறிபத்தநாயனார் திருத்தொண்டர் வரிசையில் ஒன்பதாமவராக வருபவர் எறிபத்தநாயனார். அவருடைய அருள்வரலாறு திருத்தொண்டர்புராணத்தின் மூன்றாம் சருக்கமாகிய  இலைமலிந்தசருக்கம் என்றபகுதியில் அமைகிறது. சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை பதின்மூன்று எண்சீர் விருத்தங்களால் ஆனது. இந்நூலின் முதல்சருக்கம் திருமலைச்சருக்கம் ஆகும். அடுத்து   இரண்டாம் பாடல் தில்லைவாழ் எனத் தொடங்குகிறது. அதனையே சேக்கிழார் பெருமான்  தம் திருத்தொண்டர் புராணத்தின் இரண்டாம்  சருக்கமாகக்  கொண்டு ‘’தில்லைவாழந்தணர்  சருக்க’’த்தில்  அடியார்கள் எண்மரின் வரலாற்றைப் பாடினார். அவ்வாறே பதின்மூன்று சருக்கங்களுடன்  இப்புராணம்  அமைந்தது. இரண்டாம் விருத்தத்தின் முதலடி ‘’இலைமலிந்த சீர்நம்பி’’  ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 116 (நாதர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக் கோதில் அன்பரும்  குடும்பமும்  குறைவறக்   கொடுத்த வாதி   மூர்த்தியா   ருடன்சிவ   புரியினை   யணைந்தார். பொருள் நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர் மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில் வான்பதங் கொடுத்த சிவ மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர். விளக்கம் துலையே விமானமதாகி மேற்செல்ல – ஐயர் தம்முன் தொழுதிருக்கும் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 115 (மண்டு)

திருச்சி புலவர் இராமமூர்த்தி தொடக்கம் – நல்லூர்  அமர்நீதி நாயனார்  தம்மிடம் வேதியர் வைத்துச்சென்ற  கோவணத்தைக் காணாமல் தேடித்  திகைத்தார்!  தாம் வைத்த இடத்தில் அக்கோவணத்தைக் காணவில்லை. உறவினராலும் அப்பொருளைக்  கண்டுபிடிக்க  இயலவில்லை.  மானை  மறைத்துக்  கரத்தில்  தண்டேந்திய வேதியர் அதுகேட்டுத் தீப்போல் வெகுண்டார். அமர்நீதியார் உணர்வு கலங்கி ‘’என் பெரும்பிழையைப்  பொறுத்துக்  கொள்க; உங்களுக்கு ஒன்றுகூறுகிறேன். இக்கோவணம் தவிர யான்உங்களுக்குச் சிறந்த நல்ல பட்டாடைகள், மணிகள் கொண்ட புதிய ஆடையை ஏற்றுக்கொள்க‘’ என்று கூறி மிகவும்  பணிந்து வணங்கினார். அடியார் கூறியதை ஏற்றுக்கொண்ட ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 114 (நல்ல)

திருச்சி புலவர் இராமமூர்த்தி “நல்ல கோவணம்  கொடுப்பனென்று  உலகின்மேல்  நாளும் சொல்லு வித்ததுஎன் கோவணம் கொள்வது துணிந்தோ? ஒல்லை ஈங்குறு வாணிபம்  அழகிதே யுமக்கு!“என்று எல்லை யில்லவன்  எரிதுள்ளி னால்என  வெகுண்டான். நல்லூர்  அமர்நீதியாரிடம்  தம்  கோவணத்தை  வைத்துச்  சென்ற  வேதியர் அக்கோவணத்தை மறைத்துவிட்டு  அதற்குத்  தலைமுழுகினாரோ, சடையில் உள்ள கங்கைநீரில்  நனைந்தாரோ, வானம் பெய்த மழையில் நனைந்து வந்தார். அவரை அறுசுவை உணவுடன் அமர்நீதியார் வரவேற்ற பொழுது, ‘’நான் ஈரத்தை  மாற்ற முன்பு உம்மிடம் தந்த  கோவணத்தை தருக’’  என்றார். அந்தணரின் சூழ்ச்சியை ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 113

திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல் : “ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே யீங்கு   நான்சொல வேண்டுவ தில்லைநீ   ரிதனை வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்கையிற்   கொடுத்தார். பொருள் : (குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே ...

Read More »