இலக்கியம்

டிரோன் மூலம் டெலிவரி

அண்ணாகண்ணன் அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும். ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவதை விட, விமானத்திலிருந்து டிரோன்கள் பறந்து பயனாளிகள் கையில் சேர்ப்பது போல் செய்தால் இன்னும் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கும். டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த ...

Read More »

மகன் தந்தைக்கு ஆற்றுக்கும் உதவி……..? (சிறுகதை)

வளவ. துரையன் காத்தவராயன் நேற்றிரவு காலமானார். எந்தக் காத்தவராயன் என்று கேட்பீர்கள்? நீங்கள் கேட்பதும் ஒருவகையில் நியாயம்தான். அற்பிசம்பாளையத்தில் மூன்று காத்தவராயன்கள் இருந்தனர். முதலாமவர் கால்நொண்டிக் காத்தவராயன். இவரைச் சிலபேர் இவர் காதில் விழாமல் களவாணிக் காத்தவராயன் என்றும் சொல்வர். எந்த வீட்டில் மாங்காய்கள் காய்த்திருக்கின்றன? எங்குத் தேங்காய்கள் பறிக்கலாம்?. எந்த வீட்டுத் தோட்டத்தில் எலுமிச்சை காய்த்துக் குலுங்குகிறது? என்பதெல்லாம் தெரிந்து யாரும் அறியாவண்ணம் திருடுவதில் வல்லவர். அப்படித் தென்னை மரம் ஏறும்போதுதான் வீட்டுச் சொந்தக்காரர் வந்துவிட அவசரத்தில்  இறங்கக் கீழே விழுந்து கால் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப. நி.), முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகப்பாடல்களில் முதுசெம் பெண்டிர், முதுவாய்ப் பெண்டிர் என இருதிறத்துப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முதுபெண்டிர் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது. இல்லறப் பெண்டிர் முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ (நற்.- 288) எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ (அகம்.- 86) எனவும் அழைக்கப்படுன்றனர். இது கற்பு நெறியில் வழுவாமல் நிற்பவர் என்னும் பொருள்படுகிறது. கற்பின் அடையாளம்  ஆகிய அருந்ததியைச் செம்மீன் என ...

Read More »

சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

சேசாத்திரி ஸ்ரீதரன் பண்டு கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக, ஆடல் இசைக் கலைக் கூடங்களாக மட்டுமே இருக்கவில்லை அவை இலவச உண்டு உறையும் வேதக் கல்வி நடுவமாகவும் ஆயுர்வேத மருத்துவச் சாலையாகவும் விளங்கின. அத்தோடு நூலகங்களும் கோவில்களைச் சார்ந்து இயங்கின. வேதக் கல்வியொடு நில்லாமல் இலக்கியக் காவியம், தொன்மமாம் புராணம், வரலாறு, இலக்கணம், தெய்வியல் கூறும் மீமாம்சம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன. இவை அல்லாமல் ஆயுர் வேத மருத்துவம், சோதிடம் போன்ற சிறப்பு புலக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. இதனால் இவற்றுக்கான நூல் தேவை இயல்பாகவே எழுந்தது. மேலும் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(328)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(328) கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து. – திருக்குறள் – 130 (அடக்கமுடைமை) புதுக் கவிதையில்... கற்கவேண்டியவற்றைக் கற்று மனதினில் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் உடையவனை அடைந்திடும் காலம்பார்த்து அறக்கடவுளும் அவன் வழியில் நுழைந்து அவனுக்காகக் காத்திருக்கும்…! குறும்பாவில்... கல்வி கற்று சினம்காத்து அடக்கமுடன் வாழ்வபனிடம் சென்றடைய அறம் அவன்வழியில் காத்திருக்கும்…! மரபுக் கவிதையில்... கல்வியைக் கற்றுத் தேர்ச்சிபெற்றே கடுஞ்சினம் நெஞ்சில் வந்திடாமல் நல்வழி அடக்கம் தனைப்பேணி நலமுடன் வாழும் வகைதெரிந்த ...

Read More »

சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா  வேலினைக் கையில் ஏந்தி வெற்றியைத் தந்த கந்தன் மூலமாய் நின்ற மூர்த்தி பொறியிலே வந்த கந்தன் கார்த்திகைப் பெண்கள் ஏந்த கந்தனாய் ஆன தெய்வம் கலியுகம் காக்க என்றும் கருணையாய் நிற்கும் தெய்வம்! ஆணவம் அழித்த கந்தன் அகவிருள் அகற்றும் கந்தன் பேணிடும் அடியார்க் கெல்லாம் பேரருள் ஈயும் கந்தன் நாமெலாம் விரும்பி நிற்கும் நல்லையில் உறையும் கந்தன் சேவடி தொழுது நின்றால் தெரிசனம் தருவான் கந்தன்! சூரரை வதைத்த கந்தன் சூழ்ச்சியை அறுக்கும் கந்தன் மாயிருள் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 285

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ...

Read More »

இழப்பு (சிறுகதை)

வசுராஜ் நான் தான் ஜானகி. இந்தத்  திண்ணையில் உட்கார்ந்து இரண்டு மாமாங்கம் ஆறது. இது  திருச்சி பக்கத்திலுள்ள அழகான கிராமம்.  கல்யாணமானதிலிருந்து  30  வருஷம் இங்கு தானிருந்தேன். அப்புறம் பிள்ளைகளோடும் பெண்களோடும் இப்ப வரை இருந்துண்டிருக்கேன். ரொம்ப நாட்களுக்கப்புறம் குடும்பத்தோடு  சொந்தக்காரா  கல்யாணத்துக்கு இங்க வந்திருக்கோம். இரட்டை வரிசை வீடுகளும் கம்பீரமான  கோபுரமும் மனதுக்கு இதமாய் இருக்கு. எல்லார் வீட்டு வாசலிலும் பெரிது பெரிதாய்க் கோலம். புள்ளி வைத்த கோலம்,  தாமரை இதழ்கள் விரியும் இழைக் கோலம், மணைக்கோலம் எனப் பார்க்கப் பார்க்கப் பரவசமாய் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி சுடர்விடும் சோடிக் குத்துவிளக்குகளை அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ் ஒளிப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 284க்கு  வழங்கப்பட்டிருக்கின்றது. அழகொளிரும் படம்தந்த ஒளிப்பட வல்லுநர்க்கு என் நன்றி! ”இருளகற்றும் சோதி விளக்குகளைப் போலநம் மருளகற்றும் கல்வி ஒளி!” சுடர்விடும் இந்தக் குத்துவிளக்குகள் குறித்து முத்தாகக் கவிசொல்லக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்! ***** ”மனிதனின் மன இருட்டை விரட்ட உண்மையே விளக்கு” என்ற நற்கருத்தை நவிலும் திரு. செண்பக ஜெகதீசன், ஏற்றிவைத்த குத்துவிளக்குக்கு ...

Read More »

உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubiansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 19

-மேகலா இராமமூர்த்தி இராவணன் மனத்தில் சூர்ப்பனகையால் விதைக்கப்பட்ட சீதை மீதான காம விதை விறுவிறுவென வளர்ந்து விருட்சமானது. அதன்பின்னர் அரியணையில் அமர்ந்திருக்கவோ அமைச்சர்களோடு அளவளாவவோ அவனால் இயலவில்லை. விருட்டென ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் உளக் குறிப்புணர்ந்த ஏனையோரும் அவையினின்று வெளியேறினர். பிறன்மனை நயத்தலைப் பாவமென்று எண்ணாத இராவணன், சீதையைக் காணும் ஆசையால் மனம் நைந்தான். சோலையின் நடுவே அமைந்திருந்த தன் மாளிகைக்குச் சென்று அமளியில் வீழ்ந்தான். ”பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடீ கோலக் கிளிமொழியும் செவியில் குத்தல் எடுத்ததடீ” என்று மகாகவி படைத்த ...

Read More »

அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

அண்ணாகண்ணன் தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகஇலக்கியத்தில் ஊர்ப்பெண்டிர், சீறூர்ப் பெண்டிர், அயலில் பெண்டிர், சேரிப்பெண்டிர், முதுபெண்டிர், முதுவாய்ப் பெண்டிர், நல்கூர் பெண்டிர்,  அரியல் பெண்டிர், கெடுமகப் பெண்டிர், ஆளில் பெண்டிர், மறுகிற் பெண்டிர் என பலதரப்பட்ட பெண்டிர் இடம் பெற்றுள்ளனர். சேரிப் பெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெற்றமை பற்றி முன்னர்க் கண்டோம். இக்கட்டுரையில் மறுகிற் பெண்டிர் பற்றிக் காண்போம். தெருப்பெண்டிர் மறுகு என்பது தெருவைக் குறிக்கிறது. தலைவி வசிக்கும் தெருவில் தாமும் ...

Read More »

வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாவளி!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா வண்ண வண்ண மத்தாப்பு வகை வகையாய்ப் பட்டாசு எண்ண வெண்ண நாவூறும் இனிப்பு நிறை பட்சணங்கள் கண் எதிரே உறவினர்கள் கலகலப்பைக் கொண்டுவர மண்மகிழ மனம் மகிழ மலர்ந்து வா தீபாவளி  ! பெருநோயின் தாக்கத்தால் பெருந்தாக்கம் விளைந்திருக்கு தெருவெல்லாம் களையிழந்து உருவுடைந்து நிற்கிறது வருங்காலம் தனையெண்ணி மக்கள் மனம் தவிக்கிறது வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாவளி  ! புத்தாடை மனம் இருக்கு புதுத்தெம்பு வரவேண்டும் சொத்தான சுற்றமெலாம் சுகங்காணும் நிலை வேண்டும் நித்தியமாய் வாழ்நாளில் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(327)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(327) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத் தகுதியான் வென்று விடல். – திருக்குறள் – 158 (பொறையுடைமை) புதுக் கவிதையில்... செல்வம் கல்வி இவற்றின் பெருக்கால் வந்த செருக்கால் தீங்கு தமக்குச் செய்வோரை, அவர் போல் தீங்கு ஏதும் செய்யாமல் தம் பொறுமை என்னும் தகுதியால் வென்று விடுக…! குறும்பாவில்... இறுமாந்து தீங்கு செய்தோரை எதிர்த்துத் தீங்கு செய்யாமல் பொறுமையெனும் தகுதியால் வென்றிடுக…! மரபுக் கவிதையில்... பெருகிடும் செல்வம் கல்வியினால் பெற்றிடும் செருக்கால் இறுமாந்தே தருவர் நமக்குத் தீங்கதுவே, தக்க ...

Read More »