தேர்தல் நேரப் பட்சிகள்

ஆ. கிஷோர் குமார்

எத்துணை கூட்டம்
எத்துணை கட்சிகள்
அத்துணை கட்சிகளும்
தேர்தல் நேரப் பட்சிகள்..

தவறியும் வருந்துவதில்லை
தவறுக்குத் துணிந்த மனிதன்..

மறந்தும் மண்ணில் விழாத நெடுவானம் போல…
கட்சிகளே காகங்களாய் மாறி ..
சில இரையும்
சில கரையும்
சில நம் இருப்பிடம் சுற்றியே உறையும்..

ஓட்டு எனும் இரை கொத்தச் சில,
சுற்றிச் சுற்றி வட்டமிடும்..
மூளைச் சலவையைச் சில
நெற்றிப்பொட்டு தொட்டே செய்ய முனையும்…

இன்று நம்மிடம் முதலீடு செய்பவன்
நாளை மொத்தத்தையும் வட்டியுடன் உறிவான்..
சற்றே விழித்திருப்போம்

அழுத்தும் ஆள்காட்டி விரல்
அன்றொரு நாள்
நல்லவனுக்காக மட்டுமே நீளட்டும்..
நல்லோனே நாட்டை ஆளட்டும்…

About admin

2 comments

  1. Really super

  2. அருமையான பதிவு

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க