வருகைக்குப் பின் விசா – சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பு
வருகைக்குப் பின் விசா வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 1,234 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி-2011 முதல் ஏப்ரல் முடிய 4,139 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முடிய உள்ள நான்கு மாத காலத்தில் தில்லி விமான நிலையத்தில் 2,228 பேருக்கும், மும்பையில் 1,009 பேருக்கும், கொல்கத்தாவில் 218 பேருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் வருகைக்குப் பின் விசா வழங்கும் திட்டம் முதலில் பின்லாந்து, ஜப்பான், லக்சம்பர்க், நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டது. ஜனவரி 2011 முதல் கம்போடியா, இந்தோனேஷியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
=====================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை