உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே … உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாக முழங்கும் பாடல்… மே தினத்தில் இப்பாடல் கேட்காத மூலை முடுக்கில்லை தமிழகத்தில்… உழைப்பின் மேன்மை… உயர்வு… அதனால் உருவாக்கப்பட்டவை இவை என்று பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே …
உழைப்பதினால் கைகள் செக்கர் வானம் போல சிவந்திருந்தது என்று குறிப்பிடும் வகையில் … புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உள்ளத்தில் பொங்கியிருந்த தமிழ்… கண்ணதாசனிடமும் குடிகொண்டிருந்ததைப் பாரீர்!
ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
உலகை உருவாக்குவதில் உழைக்கும் கைகளுக்கு உள்ள பங்கை ஒவ்வொரு வரியிலும் தக்க உதாரணங்களுடன் வகைப்படுத்த… வேர்வைக்கு இன்னொரு
பெயராக பச்சை ரத்தம் என்று பதித்துள்ள முத்திரை சத்தியமானது.
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளையும் … உழைக்கும் மக்களின் ஒற்றுமை பற்றியும்… அவர்கள் ஜாதி மத பேதமின்றி ஆடிப் பாடுவதையும் தேவைப்பட்டால் நாட்டிற்காக கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம் என்று சொல்லி… வீரத்தை நெஞ்சில் விதைக்கிறார்.
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்…
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்…
தனிப்பிறவி திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி, திரையில் மக்கள் திலகம் தோன்ற திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்… டி எம். சௌந்தரராஜன் குரலில்…
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே …
ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
(உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே)
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே
(உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே)
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி வாழ்கவென்றே ஆடுவோம்…
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்…
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
காணொளி: https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0
https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0