கவிஞர் காவிரிமைந்தன்.

 

பொன்னான வாழ்வுபொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா …

தமிழ்த்திரையுலகில் பாட்டு சாம்ராஜ்ஜியத்தை தனக்கென படைத்துக் காட்டிய கவியரசு கண்ணதாசன் அவர்கள் காட்சிகள், திரைக்கதை, இவற்றின் ஓட்டம்எதிர்மறையாய் அமையும் போதிலும் நேர்மறை வார்த்தைகளை இட்டுநிரப்பிய பாடல்களால் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்!

ஆம், அன்றைய காலக்கட்டத்தில் சோகக் காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்று பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா… உலகம் இதுதானா…    அருமையான பாடல்! ஆழ்ந்த சோகத்தை பிரதிபலிக்கும் இனிமையான இசை! இவற்றை நம் இதயங்களில் கொண்டு சேர்க்கும் குரல்! இவற்றின் கூட்டுக்கலவையில் கவிஞர் கா.மு.ஷெரீப்.

இந்த எதிர்மறை வார்த்தைகளை மாற்றி தன் பாணியில் இதே போன்றசூழலுக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ என்று ஆனந்த ஜோதியில் எழுதி வைத்தார் கண்ணதாசன்!

அவரது பாணியைப் பின்பற்றி கவிஞர் வாலி, ‘உறவு என்றொருசொல்லிருந்தால்’ என்று அதே சூழ்நிலைக்கு பாடல் எழுதி தன் பங்கினைஅளித்தார். இந்தச் செய்தியை அண்மையில் மறைந்த கவிஞர் வாலி என்னுடன் பகிர்ந்தது இன்னும் மனதில் பசுமையாக!!

இன்னும் சுவையாக சொன்னதெல்லாம், அட … இந்தப் பாடலைவெள்ளிக்கிழமைகளில் விவிதபாரதியில் காலையில போட்டால், யாரும்மாஅது… அந்த ரேடியோவை சப்தம் குறைச்சு வைம்மா… வெள்ளிக்கிழமையும் அதுவுமா… என்று குரல் வரும்.

அதே நேரத்தில் நினைக்கத்தெரிந்த மனமே… உறவு என்றொருசொல்லிருந்தால்… போன்ற பாடல்கள் ஒலிபரப்பானால், கொஞ்சம் சப்தம்கூட்டிவைங்களேன் என்று அந்தக் குரல் எழும் என்றார்.  என்றாலும் இந்தப் பாடல் காலத்தை வென்று நிற்கிற பாடல்களின்வரிசையில் நமக்கு மிக நெருக்கமான தோழிபோல நெஞ்சிற்கு அருகில்நிற்கிறது!!

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

பண்போடு முன்னாளில் அன்பாக
என்னோடு வாழ்ந்தாரே
பண்போடு முன்னாளில் அன்பாக
என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
என்றெண்ணி விடுத்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
என்றெண்ணி விடுத்தாரே
என்னன்பை மறந்தாரே …

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

பண்பாடு இல்லாமல் மண்மீது
பாழாகி நொந்தேனே
பண்பாடு இல்லாமல் மண்மீது
பாழாகி நொந்தேனே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
நிம்மதி இழந்தாச்சு
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
நிம்மதி இழந்தாச்சு
தீராத பழியாச்சு …

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
என் மீது பழி சொல்வார்
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
என் மீது பழி சொல்வார்
உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே
ஊராரும் அறிவாரோ?
உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே
ஊராரும் அறிவாரோ?
என் வாழ்வை அழிப்பாரோ?

பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

படம்: டவுன் பஸ்
பாடலாசிரியர்: கவி கா.மு.ஷெரீப்
இசை : கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: எம். எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
காணொளி: https://www.youtube.com/watch?v=Yn6uMEOg-sk

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *