வாய்ப்பு
-ஆ. செந்தில் குமார்
இது
திறமைகள் பளிச்சிட
உதவிடும் திறவுகோல்!
இது
அவசரத்திற்கும் தாமதத்திற்கும் இடையில் இருக்கும் மணித்துளி!
இது
நோக்கமற்றோர்க்கு என்றுமே எட்டாக்கனி!
நோக்கமுள்ளோர்க்கு உதவிடும் காரணி!
இது
ஆண்டியைக்கூட அரசனாக
மாற்றிடும் வல்லமையுள்ளது!
இதை
துணிந்தவன் உருவாக்குவான்!
இதற்காக
அஞ்சுபவன் காத்திருப்பான்!
இதை
உணர்த்திடும்
உறுதி கொண்ட எண்ணமும்!
உற்று நோக்கும் திண்ணமும்!
இதைப்
பற்றிக் கொண்டவன்
வெற்றி கொண்டவனாவான்!
இதைப்
பறிகொடுத்தவன் நூலறுந்து
சுற்றும் காற்றாடியாவான்!
Superb