தலையங்கம்

என்ன கொடுமை இது?

பவள சங்கரி

 

1 உரூபாய் முதல் 25 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் தமிழ் நாடு கடைசியிடத்தில்தான் உள்ளது. அதாவது மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த அளவான 1 கோடி உரூபாய் மட்டும்தான் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ரிசர்வ் வங்கியிலிருந்து அறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் வருடத்திற்கு 4,000 கோடி வரை கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது. 2014 லிலிருந்து கணக்குப் பார்க்கும்போது இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளிலேயே பஞ்சாப் தேசிய வங்கி மிக அதிகமாகக் கடன் அளித்து வசூல் செய்யாமல் உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் வங்கித் துறையும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன. இது அவ்வளவும் பொது மக்களின் இரத்தமும், வேர்வையும் என்று நினைத்துப் பார்க்கிறார்களா என்றும் தெரியவில்லை? மக்களுக்கு மென்மேலும் வெறுப்பேற்றும் செயல்களாகவே இது உள்ளது.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க