அகல்யா
கல்லகலிகைக்கு காலடி மோக்ஷம்
புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்ஷம்
அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம்
வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்….!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’….அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’…..!)
”கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு,
கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம்
அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு
சிவராம க்ருஷ்ணா சரண்’’….கிரேசி மோகன்…!
. விசாரிக்காமல் சபித்து விட்டீரே என்ற அகலிகையின் வார்த்தை கவுதம முனியை சாபமாக வாட்ட….அதற்கு விமோசனமாக தில்லை சென்று ”சிவதாண்டவ தரிசனம்” செய்தாராம்….!பசவான் ஸ்ரீ ரமண வசனாம்ருதம்…..!
”ஆண்டவன் ஈசன் அழகுமை யாளோடு,
தாண்டவக் கோலம் தரிசிக்க, -வேண்டிவந்தார்,
கல்ல கலிகைக் கணவர் கவுதமர்,
தில்லைக்குப் போய்சாபத் தீர்வு”….கிரேசி மோகன்.