இந்த வார வல்லமையாளர் – 302: மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்
இந்த வார வல்லமையாளர் என மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. 1959-ல் சென்னையில் பிறந்த டாக்டர் சௌமியா, விவசாயத் துறையில் விஞ்ஞானி, பெரிய பொறுப்பில் இருந்த எம். எஸ். சுவாமிநாதனின் மகள் ஆவார். டாக்டர் சௌமியாவின் தாய் மீனாவின் தாய் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) என்னும் பெண் எழுத்தாளர். அகில உலக பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில், சென்னையைச் சார்ந்த தமிழ்ப் பெண் மரு. சௌமியா உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தலைமை விஞ்ஞானையாகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அவரை வாழ்த்தி வரவேற்கிறோம். டாக்டர் சௌமியாவின் ட்விட்டர் பக்கம்: https://twitter.com/doctorsoumya
பெண்கள் இந்தியாவின் அறிவியற் கழகங்களில் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற கொள்கை கொண்ட மரு. சௌமியா காசநோய் (TB), எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் பல்கலைக்கழக மருத்துவமனையில் பட்டங்கள் பெற்றவர். இப்பொழுது மரபணு போன்றவற்றின் மூலம், மலேரியா, டிபி, எய்ட்ஸ், புற்றுநோய், இதயநோய், … போன்றவற்றின் ஆராய்ச்சிகள் மிகுந்துவருகின்றன. ஸ்டெம்செல் ஆய்வு, டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இவற்றுக்கு WHO நிறுவனம் நிதிநல்கையை அதிகப்படுத்தினால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் உடல்நலம் பேணுதற்கு உறுதுணையாக விரைவில் உதவிகள் வரும்.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )