Tag Archives: தாரமங்கலம் வளவன்

காக்கைகள் மட்டும் கரைகின்றன…!

-தாரமங்கலம் வளவன் தங்கள் மௌன மொழியைக் கலைக்க காற்சலங்கைகள் காத்திருக்கின்றன         வீணைக் கம்பிகள் விரல்களின் ஸ்பரிசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றன! வேகமாய்ப் படியும் தூசி புல்லாங்குழலின் அனைத்துத் துளைகளையும் அடைத்துக் கொள்ள, காக்கைகள் மட்டும் தங்கள் அகன்ற வாயுடன் கரைந்து கொண்டே இருக்கின்றன!  

Read More »

சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்…

-தாரமங்கலம் வளவன் சுடுமணலில் என் வெற்றுக் கால்கள் தவித்தபோது ஓங்கி வளர்ந்த ஆலமர நிழலாய் நீ நின்றாய் ஓடி வந்து உன் நிழலில் இளைப்பாறினேன்! சொட்டு நீர் கிடைக்குமா என்று தாகத்தில் என் நாக்கு வறண்ட போது பொங்கி வரும் நீரூற்றாய் நீ என் தாகம் தணித்தாய்! நான் சரிந்த போது என்னைத் தாங்கிப் பிடித்தாய் துவண்ட போது தோள் கொடுத்தாய் உன் அரவணைப்பை உதறித்தள்ளி ஓடியபோதும் என் பின்னால் ஓடி வந்தாய்! இன்று… நான் ஓடியது வெற்று ஓட்டம் என்பது புரிந்து விட்டது! ...

Read More »

உளிகளின் மேல் கோபமில்லை

–தாரமங்கலம் வளவன் என் குளம்புகளில் லாடம் அடித்த சுத்தியல் மீது எனக்குக் கோபமில்லை என் மண்டையில் குட்டிய கைகளுடன் எனக்குக் கோபமில்லை என்னைச் செதுக்கிய உளிகளின் மேல் எனக்குக் கோபமில்லை!

Read More »

மழைத்துளிகள்!

– தாரமங்கலம் வளவன் மனிதன் மமதையில் ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்                      என்கிறான் ’ பூமியிலிருக்கும் மனிதன் வானத்தைத் தொட்டுவிட நினைக்க, நீ பூமியைத் தொட்டுவிட ஓடி வருகிறாய்…! வந்து பார்த்து, மனிதனும், பூமியும் பிடிக்கவில்லை என்று பூமிக்கு வருவதை மட்டும் நிறுத்தி விடாதே…! நீ வருவதை நிறுத்தி விட்டால், மனிதக் கூட்டம் ஒட்டு மொத்தமாய் உன் இருப்பிடத்திற்கு ஆமாம்- வானத்திற்கு வந்து விடுவார்கள்!

Read More »

தப்பி ஓடிய கைதி!

-தாரமங்கலம் வளவன் கான்ஸ்டபிள் செங்கோடனால் முடிவு எடுக்க முடியவில்லை. ஏற்கனவே சுகுணாவின் அப்பா அம்மாவைப் பார்த்து,  வெள்ளிக்கிழமை அதாவது நாளை தன் அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவதாகச் சொல்லி அவர்களிடம் சம்மதம் வாங்கி இருந்தான். சுகுணாவும் லீவு போடுவதாகச் சொல்லி இருந்தாள். அதற்குள் இப்படி ஆகி விட்டது. அவளிடம் தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ளதைச் சொல்லி, நாளைக்கு பெண் பார்க்க வருவதாக இருந்ததை நிறுத்தி விடலாமா என்று யோசித்தான். தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ள விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்லி, ...

Read More »

சலனத்தைச் சகித்துக்கொள்!

-தாரமங்கலம் வளவன் வாழ்கையின் வசதிகள் அல்ல, அதன் அவலங்களே மனிதனை உருவாக்குகின்றன! வாழ்க்கையின் அமைதி அல்ல, அதன் சலனமே வாழ்க்கைப் படகை ஓட்டுகிறது! சலனமற்ற வாழ்க்கை ஒரு எதிர்பார்ப்புதான்… நிஜத்தில் சலனமே வாழ்க்கை என்றாகும் போது சலனத்தைச் சகித்துக் கொள்!

Read More »

ரேவதிக்கு நாய்க் குட்டி வேணுமாம்…

–தாரமங்கலம் வளவன். பங்களாவின் கேட் அருகே நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை, மீனாட்சி ஏற்கனவே பார்த்திருக்கிறாள். தங்கள் அரிசி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்யும் சதாசிவத்தின் பெண் தான் அவள்.   பத்து வயது இருக்கும் என்று தோன்றியது. தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து, “ உள்ளே வா… தெறந்து தான் இருக்குது..” என்றாள் மீனாட்சி. வந்த பெண்ணைப் பார்த்து, “ நீ சதாசிவத்தின் பொண்ணு தானே.. பேரு என்னா…” மீனாட்சி கேட்டாள். “ ரேவதி..”  என்றாள் அந்த பெண். அந்த ...

Read More »

உன் புன்னகை மறையாது…

  தாரமங்கலம் வளவன்     இன்றைய நான் நீ சிந்திய வியர்வையினால் வந்தது..   எனக்காக நீ இழந்ததை எல்லாம் என்னால் திருப்பி தர இயலாது…   நீ பட்ட அவமானங்கள் நீ அமைதியாய் ஏற்றுக் கொண்ட வசவுகள் நீ தொலைத்த இளமை என்று நீ எனக்காக இழந்தவை எதையும் என்னால் திருப்பித்தர இயலாது..   ஆனால் இன்று நீ பெற்ற இந்த புன்னகையை நீ இழக்காமல் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்..   உன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல்- இன்று நிமிர்ந்த ...

Read More »