Archive for the ‘பத்திகள்’ Category

Page 1 of 14212345...102030...Last »

எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்]

எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்]
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++ அங்கம் -1 பாகம் -3 அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை! அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை! வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை! வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்! ஜான் டிரைடென் “வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த ... Full story

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++   28] முதிய கயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும். ஒன்று மட்டும் உறுதி, ஓடுகிறது வாழ்க்கை மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே ஒருமுறை உதிர்ந்த பூ நிரந்தரச் சருகு ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (44)

நலம் .. நலமறிய ஆவல் - (44)
நிர்மலா ராகவன் கோபம் பொல்லாத வியாதி கோபம் மனித இயற்கை. சிறு குழந்தைகூட பசி வரும்போது, அழுது, தன் தேவையை வெளிப்படுத்தும். உடனே பால் கிடைக்காவிட்டால், கோபம் அதிகரிக்க, அழுகையும் பலக்கும். `நான் கோபக்காரன். அதற்கு என்ன செய்வது? கோபம் இயற்கைதானே!’ என்று, கோபத்தை அடக்கத் தெரியாது, வன்முறையில் இறங்குபவர்களும் உண்டு. இது எந்த விதத்தில் சரி? கோபம் ஆத்திரமாக மாறும்போது, ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 66

கற்றல் ஒரு ஆற்றல் 66
க. பாலசுப்பிரமணியன் வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள் பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், ... Full story

இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 36

இலக்கியச்சித்திரம் - இனிய பிள்ளைத்தமிழ் - 36
மீனாட்சி பாலகணேஷ்   அடியவரின் ஆவலான கேள்விகள்! குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா -2

எழிலரசி கிளியோபாத்ரா -2
எழிலரசி கிளியோபாத்ரா மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++ வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள் எழில். வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு! அவளது உடல் வனப்பை விளக்கப் போனால், எவரும் சொல்லால் வர்ணிக்க இயாலாது ! தோரணம் தொங்கும் அலங்காரப் ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (43)

நலம் .. நலமறிய ஆவல் - (43)
நிர்மலா ராகவன் வாழ்க்கை வாழ்வதற்கே  இருபத்து ஐந்து வயதில் `வாழ்க்கை கடினமானது! (Life is hard!)’. ஏதோ மந்திரம்போல் இந்த வாக்கியத்தை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த சில மாணவ மாணவிகள். மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்கும் எந்த வயதில்தான் கஷ்டமில்லை? அதை எப்படிச் சமாளிப்பது என்று ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 65

கற்றல் ஒரு ஆற்றல் 65
க. பாலசுப்பிரமணியன் மழலையர்களின் கற்றல் நிலைகள் மழலைப் பருவத்தில் கற்றல் என்பது ஒரு தொடரான செயல்; ஆனால் அது நேரடியாக மட்டும் நடக்கும் செயலல்ல. கற்றலின் 95 விழுக்காடுகள் மறைமுகமாகவோ அல்லது கோர்வையின்றியோ நடக்கக் கூடிய செயல். ஐம்புலன்களாலும் கற்றலுக்கான உள்ளீடுகள் கிடைக்கின்றன. அவைகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைத்தோ மூளை ஒரு கருத்தாக உருவாக்குகின்றது. பொதுவாக கற்றலின் உள்ளீட்டுப் பரிமாணங்களை கீழ்கண்டவாறு பிரிக்கின்றனர்.... Full story

குறளின் கதிர்களாய்…(155)

-செண்பக ஜெகதீசன் நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங் கெடுநீரார் காமக் கலன். (திருக்குறள் -605: மடியின்மை)  புதுக் கவிதையில்… காலங் கடத்தலுடன் மறதி சோம்பல் தூக்கம், இவை நான்கும் வாழ்வில் கெட்டழிவோர் விரும்பியேறும் மரக்கலங்களாம்…!  குறும்பாவில்… மறதி காலங்கடத்தல் சோம்பல் தூக்கமிவை மரக்கலங்கள் வாழ்க்கைக் கடலில், விரும்பி ஏறுவர் கெட்டழிவோர்…!  மரபுக் கவிதையில்…... Full story

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -8

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -8
  பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++ மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு. மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும், பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (42)

நலம் .. நலமறிய ஆவல் - (42)
நிர்மலா ராகவன் நிகழ்காலத்தில் வாழ்வது எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுபவர்கள் முன்னுக்கு வரத் துடிக்கும் நடிகைகளும், அரசியல்வாதிகளும் மட்டுமில்லை. `வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது நம் கையில்தான் இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொண்டவர்களும்தான். இவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்றால், இவர்கள் கடந்த காலத்தைப் பெரிது பண்ணுவதில்லை. நான் கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவிற்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்தபோது, குறிப்பாக விவாகரத்து செய்த பெண்களுடன் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -64

கற்றல் ஒரு ஆற்றல் -64
க. பாலசுப்பிரமணியன் மழலையர்களும் கற்றலும் மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் - 1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது. சுற்றுச்சூழலின் பல்முனை ... Full story

குறளின் கதிர்களாய்…(154)

-செண்பக ஜெகதீசன் அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்  பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள் -659:வினைத் தூய்மை)  புதுக் கவிதையில்… அடுத்தவரை ஒருவன் அழவைத்து சேர்த்த செல்வமெல்லாம், அழிந்திடும் அவனை அழவிட்டே...  நற்செயலால் பெற்ற பொருளை இழப்பினும், பின்னர் நற்பயனே கிட்டும்…!  குறும்பாவில்… பிறரைத் துன்புறுத்தி பெற்றசெல்வம் போய்விடும் அவனை அழவிட்டு, இழப்பிலும் நல்வழிச்செல்வம் நன்மையே தரும்…!  மரபுக் கவிதையில்… பிறரை ஒருவன் அழவைத்துப்   பொருளைச் சேர்த்தால் போகுமது துறந்தே யவனை அழவிட்டே   துயரில் அவனை விழவிட்டே, சிறந்த வழியில் வந்தபொருள்   சென்றா லதுவும் இழப்பில்லை, அறத்தால் வந்திடும் நற்பயனை   அதுவே கொண்டு சேர்த்திடுமே…!  லிமரைக்கூ... பிறரழச் செல்வமதைச் சேர்க்காதே, போய்விடுமுனை அழவிட்டே, ... Full story

வரலாறுகளின் வேர் – 6

வரலாறுகளின் வேர் - 6
அண்ணாமலை சுகுமாரன் 1898 ஆம் ஆண்டில் INDIAN ANTIQUITIES - BY THE LATE BISHOP CALDWELL என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதிய கால்டுவெல் அதை பரதகண்ட புராதனம் என்ற பெயரில் தானே வெளியிட்டார் . நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் , இதன் முதல் பாகம் சதுர்வேதங்களைப்பற்றியது , இரண்டாம் பாகம் இராமாயணத்தைப் பற்றியது , மூன்றாம் பாகம் மகா பாரதத்தைப் பற்றியது , நான்காம் பாகம் மற்றைய ... Full story

நலம் .. நலமறிய ஆவல் – (41)

நலம் .. நலமறிய ஆவல் - (41)
நிர்மலா ராகவன் தற்காப்புக் கலைகள் அந்தப் பையன் ஒரே படுத்தல்! இவ்வளவு மோசமாகவா வளர்ப்பார்கள்!’ `பெண்ணா இது! ரொம்ப முரடு! எவன் மாட்டிக்கொண்டு திண்டாடப்போகிறானோ!’ ஐந்தே வயதான குழந்தைகளுக்குக் கிடைத்த (வேண்டாத) விமர்சனங்கள் மேலே குறிப்பிட்டவை. குழந்தைகளும் பெரியவர்கள்போல் நடக்க வேண்டும் என்ற எதிர்ப்புதான் பிறரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. `நல்லதற்குத்தானே சொல்கிறோம்!’ என்று அவர்கள் திருப்தி பட்டுக்கொண்டாலும், இத்தகைய ஓயாத கண்டனத்தால் குழந்தைகளை பலவீனர்களாக ... Full story
Page 1 of 14212345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.