Archive for the ‘கட்டுரைகள்’ Category

Page 1 of 15312345...102030...Last »

“வல்லமை தாராயோ” – மாணவர் மாணவியர் கவிதைப் போட்டி

“வல்லமை தாராயோ” - மாணவர் மாணவியர் கவிதைப் போட்டி
பவள சங்கரி சென்ற வாரம் 11.09.2017 - திங்கள் கிழமையன்று மாலை பாரதி நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீராம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நம் வல்லமை இணைய இதழ், லீட் மனிதவள மேம்பாட்டு பயிலரங்கு இணைந்து நடத்திய பாரதி விழா சிறப்பாக நடந்தது. நம் வல்லமை சார்பில் “வல்லமை தாராயோ” என்ற தலைப்பில் மாணவர் மாணவியர் கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பான ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 3

குறுந்தொகை நறுந்தேன் – 3
-மேகலா இராமமூர்த்தி  ”ஆ…! தலைவியுடனேயே இணைபிரியாத் துணையாய் நிற்கும் தோழியை மறந்தேனே! அவளை  இரந்துநின்றால் மனமிரங்காமலா போய்விடுவாள்?” என்ற எண்ணம் தலைவனின்  மனத்தில்  தோன்றவும் புதிய நம்பிக்கையொன்று அவனுள் தளிர்விட்டது.  தலைவியைச் சந்திக்க அடுத்தநாள் மீண்டும் அருவிச்சாரலுக்கு ஆசையோடு சென்றான் தலைவன். அவ்வமயம் தலைவியும் தோழியும் காட்டாற்றில் புணையோட்டி (தெப்பம்) விளையாடிக்கொண்டிருந்தனர். காட்டாற்றின் கரையோரம் வளர்ந்திருந்த வேங்கைமர ஓரமாய் மறைந்துநின்றபடி அக்காட்சியைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த தலைவன், ”என்ன இது விந்தை! தளிர்புரை மேனியும் குளிர்விழிகளும் ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 27

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 27
க. பாலசுப்பிரமணியன் திருமந்திரத்தில் ஒரு மந்திரம் திருமந்திரம் நமக்குக் கிடைத்த ஒரு உன்னதமான  நூல். இதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகளின் சிந்தனையும் பயிற்சியும் தேவை. இருப்பினும் அதில் மேலோங்கி நிற்கும் சில கருத்துக்கள் நம்முடைய தற்போதைய சிந்தனைக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன்றய சமுதாயத்தில் மனிதர்களின் தன்னிச்சையான போக்கும் சுயநலத்தை மட்டும் வளர்க்கும் சிந்தனைகளும் ... Full story

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]
இன்னம்பூரான் செப்டம்பர் 19, 2017 வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (73)

நலம் .. நலமறிய ஆவல்  (73)
நிர்மலா ராகவன் பிறர் போற்ற தனது முதல் குழந்தையை முதன்முதலாகப் பார்க்கும் தாய், `இவனுக்காக உயிரையே கொடுப்பேன்!’ என்று எண்ணக்கூடும். பார்ப்பவர்கள் அனைவரும் தன் குழந்தையை மெச்சவேண்டும் என்ற ஆவல் பிறக்கும். ஆனால், பிறருக்கு அதுவே தொல்லையாகிவிடும். `எப்போதும் அந்தக் குழந்தையையே பாக்கணும் என்பார்கள்!’ என்று ஒருவரும், `எத்தனையோ குழந்தைகளைப் பாத்தாச்சு, போ!’ என்று அலுத்துக்கொண்ட பெண்மணிகளையும் கண்டிருக்கிறேன். அந்தமாதிரி ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 95

கற்றல் ஒரு ஆற்றல் 95
க. பாலசுப்பிரமணியன் காட்சி-வெளிசார்ந்த நுண்ணறிவு (Visual-Spatial Intelligence) பல்வகை நுண்ணறிவுகளில் இந்த நுண்ணறிவுக்கு ஒரு மதிப்பான இடம் அளிக்கப்படுகின்றது. இந்த நுண்ணறிவில் சிறப்புப் பெற்றோர் காட்சிகள், (visuals) கற்பனைகள், (Imageries) இட மதிப்பீடுகள் (Spatial assessments), மற்றும் இடத்துக்கும் அதன் அமைப்புக்களுக்கும் தகுந்தவாறு செயல் திறன்களைப் படைப்பதில் திறனுள்ளவர்களாக இருப்பார்கள். பொதுவாக இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக விளங்குபவர்கள் :... Full story

ஒரு ஊர்+ கொக்குகள்( Kokokan-Herons)= மறு பிறப்பு???

ஒரு ஊர்+ கொக்குகள்( Kokokan-Herons)= மறு பிறப்பு???
சர்குணா பாக்கியராஜ் “பெட்டுலு” (Petulu), என்னும் ஒரு சிறு கிராமம். இது பாலி( Bali) தீவிலுள்ள “உபுட்” (Ubud) என்ற நகரிலிருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணியளவில், சுமார் இருபதாயிரம் வெண் கொக்குகள் முக்கியமாக மாட்டுக் கொக்குகள் (Cattle Egrets) சின்னக் கொக்குகள் (Little Egrets Egrets), ஜாவன் குளக் ... Full story

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் -  98
உடைந்த உறவுகள் - அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா முனைவர் சுபாஷிணி காதல்.. காதல்.. காதல்.. பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா? வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர். தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ... Full story

எமது வாழ்வில் கோவில் – பகுதி IV

மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                 (எமது வாழ்வில் கோவில் – பகுதி I) (எமது வாழ்வில் கோவில் – பகுதி II) (எமது வாழ்வில் கோவில் – பகுதி III)   எங்கும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். அப்படியிருக்க கோவில்கள் எதற்கு? அங்கு விக்கிரகங்கள் எதற்கு ? என்று கேட்கின்ற நிலையினையும் பார்க்கின்றோம். பசுவின் உடலெங்கும் ... Full story

கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I

கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I
“ஈழத்து இலக்கியப் பரப்பு” ********************************* கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I  (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982)  *********************** இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆவார். இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 26

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 26
க. பாலசுப்பிரமணியன் உள்ளத்தின் உள்ளே ஒளியாய் … உள்ளத்தில் ஒளியாய் அவன் உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் போதும் நாம் ஏன் அவனை அறிந்துகொள்வதில்லை? அவன் காட்டும் பாதையில் ஏன் செல்வதில்லை? அதற்குக் காரணமே அவன் உள்ளிருந்தும் அவனை நாம் அறியாமல் வெளியே அவனைத் தேடும் மாயையால்தானே? அவனை உணர்வு பூர்வமாக, அனுபவ பூர்வமாக மட்டுமின்றி வேறெப்படி அறிந்து கொள்ளமுடியும்? இந்தக் கருத்தை ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 2

-மேகலா இராமமூர்த்தி மானுட சமூகத்தையும் மாந்தக் கூட்டத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருப்பது முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழும் காதல்! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாகும் விந்தை நம் சிந்தை தொடுவது. இதோ…எடுத்ததை முடிக்கும் திறனும் உரனுங்கொண்ட கட்டழகுக் காளையொருவன், கானவேட்டையில் கலைமானொன்றைத் துரத்தி வரக் காண்கிறோம்.  அம்மானோ ஆண்தகைக்கு அகப்படாது நாலுகால் பாய்ச்சலில் சென்றுவிட, அதனைத் தேடிக்கொண்டு மலையருவிப் பக்கம் வந்தவன், ... Full story

”வேர்களும் விழுதுகளும்”

-சிறீ சிறீஸ்கந்தராஜா  ஞானசேகரன் சிறுகதைகள் -      தி. ஞானசேகரன் அணிந்துரை: பேராசிரியர் க. அருணாசலம் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) 1 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ்இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது பல உண்மைகள் புலப்படும். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம். காலத்தால் மிக முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன்றி அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கும் மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன என்னும் உண்மையைப் பலரும் ... Full story

எமது வாழ்வில் கோவில் – பகுதி III

        மகாதேவஐயர் ஜெயராமசர்மா               B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS                 முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்               சமயம் தேவையா தேவையில்லையா என்பதற்கு அப்பால் சமயம் என்றால் என்ன என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுதலே முக்கியமாகும். சமயம் என்பது நல்லதொரு வாய்ப்பு என்று ஏன் கருதக்கூடாது ? நல்ல வாய்ப்புக்களை நமக்கெல்லாம் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 94

கற்றல் ஒரு ஆற்றல் 94
க. பாலசுப்பிரமணியன் இயக்கம் (தசை) சார்ந்த நுண்ணறிவு (Bodily- Kinesthetic Intelligence) "உங்க பையன் ஓரிடத்தில் அஞ்சு நிமிடம் உட்கார மாட்டேன் என்கிறான்" "அவனை ஓரிடத்தில் கட்டுப்படுத்த முடியாது" “அவனுக்கு எப்போதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருக்கணும்:ஒரு சாமானை உடைத்துப் போடுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்" “அவனுக்கு படிப்பிலே கவனமே இல்லை, எப்பப்பாருங்க விளையாட்டு, அது அவனுக்கு ... Full story
Page 1 of 15312345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.