Archive for the ‘போட்டிகளின் வெற்றியாளர்கள்’ Category

Page 1 of 2212345...1020...Last »

படக்கவிதைப் போட்டி 138-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 138-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி திரு. பார்கவ் கேசவனின் இருளும் ஒளியும் உறவாடும் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! நிழலோவியமாய்ப் பெண்; அவளருகே அழலுருவாய் ஓர் ஒளிவட்டம். இருளும் ஒளியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதைச் சொல்லாமல் சொல்கிறதோ இந்த நிழற்படம்? ஒளிகண்டு உவக்கும் மனித மனம் இருள்கண்டு மருள்கின்றது. ... Full story

படக்கவிதைப் போட்டி 137-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 137-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி மரத்தின் கிளையில் சாய்ந்துபடுத்து அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருக்கும் இளைஞனைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து, அதனைப் படக்கவிதைப் போட்டிக்கு நல்கியிருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கு என் நன்றி! ”எல்லாப்பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளை அன்றைய புலவோர் புகழ்ந்தது இன்றைய அலைபேசிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகின்றது. நம் உள்ளங்கைக்குள் உலகையே விரித்துக்காட்டி, மாயக்காரனாய் நம்மை  மலைக்கவைக்கின்றது இந்த அலைபேசி! பயன்பாடுகளைப் பொறுத்து நன்மையொடு தீமையும் ... Full story

படக்கவிதைப் போட்டி (138)

படக்கவிதைப் போட்டி (138)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பார்கவ் கேசவன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் ... Full story

படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கந்தக வெடிகளைச் சுற்றிக்கொண்டிருந்தாலும் மந்தகாசப் புன்னகையைக் குறைவின்றி அள்ளி வழங்கும் வனிதையரைப் படத்தில் காண்கிறோம். திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் படம்பிடித்து வந்திருக்கும் இவ்வண்ணப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர். ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்றார் குமரகுருபரர். இவர்கள் இன்முகத்தில் பூத்திருக்கும் கள்ளமிலா வெண்முறுவல் இவர்களின் ... Full story

படக்கவிதைப் போட்டி 135-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 135-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கூட்டமாகக் குந்தியிருக்கும் மந்திகளும் அதன் பறழ்களும் (குட்டிகள்) நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன. இந்தக் காட்சியைத் தன் படப்பெட்டியில் பதிவுசெய்து தந்திருக்கும் திரு(மிகு?). சத்யாவுக்கும், படக்கவிதைப் போட்டிக்கு இந்த அழகிய படத்தைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரியது. படத்தில் காணும் கவிகளைப் (குரங்குகள்) பாட, வல்லமைமிகு நம் கவிகள்  (கவிஞர்கள்) அணிவகுத்து ... Full story

படக்கவிதைப் போட்டி 134-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 134-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி காலங்காட்டும் கடிகார முள்ளும், காலைப் பதம் பார்க்கும் கடிதான முள்ளும் நெருங்கியமர்ந்து தாமாற்றும் பணிகள்பற்றி உரையாற்றிக் கொள்கின்றனவோ? இருவேறு பணிசெய்யும் முட்களை ’வித்தியாசமான இரசனையோடு’ அணிசேர்த்துப் படமெடுத்திருக்கும் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி! ”ஏற்ற காலமும் இடமும் அறிந்து முயற்சிகளைத் தொடங்கினால் ஞாலமும் ... Full story

படக்கவிதைப் போட்டி 133-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 133-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   ”நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்” என்றார் அறிவிற்சிறந்த அவ்வை மூதாட்டி. அவர் வாக்கிற்கு வாழும் சான்றாய்த் திகழும் சுட்டிப் பையனையும், அவன் கையில் ஆட்டுக்குக் கொடுப்பதற்காக நீண்டிருக்கும் தழைகளையும் பார்க்கையில் மனம் பரவசத்தின் வசப்படுகின்றது. திரு. ஆய்மன் பின் முபாரக் எடுத்துத் தந்திருக்கும் இந்த அற்புதமான புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ... Full story

படக்கவிதைப் போட்டி 132-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 132-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கண்ணைக் கவரும் வண்ணப் பசுமைக்குமுன் காண்போர் எண்ணம் கவரும் வன்ன மழலையர் மாநாடு நடத்த, அதனைக் கைகோத்து வேடிக்கை பார்க்கிறார் இளம்பெண்ணொருவர்! ஆர்வத்தைத் தூண்டும் இந்த இனிய காட்சியைத் தன் படப்பிடிப்புக் கருவியில் அள்ளிவந்திருப்பவர் திரு. கோகுல்நாத். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!... Full story

படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி வெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! இயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில்  மயங்கிநிற்கும் வேளையிலே,... Full story

படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி தளிர்க்கர மழலைக்குத் தகவோடு வளையலிடும் பெரியவரையும், அணிஅணியாய்க் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் கச்சிதமாய்ப் புகைப்படமெடுத்து வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், கவினான இந்தக் காட்சியைக் கவிதைப் போட்டிக்குத் தேர்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்! பெண்களின் எழிலைப் பேரெழிலாக மாற்றும் மந்திரவித்தை கற்றவை  வளையல்கள். விலையுயர்ந்த பொன் வளையல்களைவிட விலைமலிவான கண்ணாடி வளையல்களும் இரப்பர் வளையல்களும் கூடுதல் பொலிவைக் கரங்களுக்குத் ... Full story

படக்கவிதைப் போட்டி (131)

படக்கவிதைப் போட்டி (131)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? முத்துகுமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல ... Full story

படக்கவிதைப் போட்டி (130)

படக்கவிதைப் போட்டி (130)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக ... Full story

படக்கவிதைப் போட்டி 129-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 129-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   காளையும் காளையரும் ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் வேளையில் எடுத்த படம் இதுவென நினைக்கிறேன். புகைப்படம் எடுத்த திரு. யெஸ்ஸெம்கேவுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரித்தாகின்றது. பகட்டோடு (காளை) தமிழர்க்குள்ள உறவு தலைமுறைகள் பலகடந்தும் தெவிட்டாது தொடர்ந்துவருவது. உழவுக்குடிகளாய் நம் மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டுக்கொரு பசுவும் காளையுமேனும் இருந்துவந்தன. அவர்களின் மாடாய் (செல்வம்) ... Full story

படக்கவிதைப் போட்டி (129)

படக்கவிதைப் போட்டி (129)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? யெஸ்ஸெம்கே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே ... Full story

படக்கவிதைப் போட்டி 128-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 128-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி நீரில் ஓடுமீனைக் கவ்வி உண்பதற்குச் செவ்வி பார்த்திருக்கும் கொக்கைத் தன் ஒளிப்படப்பெட்டியில் களிப்போடு பதிவுசெய்து வந்திருப்பவர் திரு. வெங்கட்ராமன். நீரில் ஒயிலாக நின்றிருக்கும் பறவையைப் படக்கவிதைப் போட்டிக்கானப் பாடுபொருளாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து (490) என்று காலம் பார்த்திருக்கும் ... Full story
Page 1 of 2212345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.