கிரேசி மொழிகள்

’’குமார சம்பவம்’’….!

கிரேசி மோகன் ———————————   ”தேவர்கள் பிரம்மனைத் துதித்தல்’’….! ————————————————————————- காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு) அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)…. விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும் தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து) அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக் குயவன் களிமண் கரம்….(73) யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும் தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர் தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர் நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74) வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில் சுரஸ்துதியின் ...

Read More »

’’குமாரசம்பவம்’’….!

கிரேசி மோகன் ———————————————– பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய் விந்தை புரிந்தாய் வகுத்து….(66) ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ் ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு வாழி விரிஞ்சன் விறல்….(67) காரணனே பாருக்கு, காரணம் பாராத பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும் தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய் இல்லை உமக்கிங்கே ஈடு….(68) தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக ஓயா(து) ...

Read More »

பெருமாள் திருப் புகழ்….!

கிரேசி மோகன் ————————————————- தந்த தத்த தானதா னனா தந்த தத்த தானதா னனா தந்த தத்த தானதா னனா-தனதான பொது ——— “எங்கு துச்சம் தூய்மையா குதோ எங்கு மிச்சம் பூர்ணமா குதோ எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்; எங்கு சுத்தம் சோறுபோ டுதோ எங்கு பித்தம் ஆலவா யனார் நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே எங்கு சித்தம் ஏகமா குதோ எங்கு சத்தம் கீதையா குதோ எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட பொங்கு வெற்பு சோணைமீ திலே ...

Read More »

கிருஷ்ணகாளி

  கிரேசி மோகன் ———————- “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள் யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல் கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்…. Kannamma! Kali and Krishna are one and the same. Both names mean “Black”… Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple stands on a cremation ground associated with ...

Read More »

கண்ணன்

’’அய்யங்காரர்களுக்கு இன்று ஸ்ரீஜயந்தி….வைஷ்ணவ ஜனதோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’….! “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது…. கண்ணன் திருப் புகழ் ————————– “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”…. ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’ பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் எழுதியது…. ‘’ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….! ————————————————- ...

Read More »

’’கண்ணன் பிறந்தான் நம்ம கண்ணன் பிறந்தான்’’….!

கண்ணன் பிறந்தது வெண்ணை உண்ணவா….அல்ல!….கம்சனைக் கொல்லவா….அல்ல!….ராதையைக் காதலிக்கவா….அல்ல!…..பாரதம் செய்யவா….அல்ல!….கீதை உபதேசிக்கவா….அல்ல!….பின்….!தனக்கு முந்தி வந்த ராமரைப் போல் பெற்றோருக்காக…..70துகளில் ர.மோகனாய் இருந்த அடியேன் ரவிவர்மாவைப் பார்த்து வரைந்தது(இணைத்துள்ளேன்)….கிருஷ்ண, பலராமர்கள் முதல் காரியமாய் செய்தது ‘’வசுதேவர், தேவகியை’’ சிறையிலிருந்து விடுவித்தது….!

Read More »

’’குமார சம்பவம்’’….!

கிரேசி மோகன் ————————————— சர்கம் -2 ————- அந்த சமயம், அசுரனாம் தாரகனால் நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர் முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும் கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60) சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு போததி காலை புலப்படும் -ஆதவன்போல் வாடிய வானவர்முன் கூடிய வாசலில் பாடிடும் நூலோன் பிறப்பு….(61) நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில் தூவினர் சொற்பூ தொழுது….(62) (OR) வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த ...

Read More »

’’குமார சம்பவம்’’

கிரேசி மோகன் ————————————– சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய் பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே பார்விதி என்றார் பலத்து….(49)…. தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும் தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும் வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)…. வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால் தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன் கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும் பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)…. அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான் ...

Read More »

‘’குமார சம்பவம்’’….

கிரேசி மோகன்   தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய் சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய் யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல அவ்வனப்பே ஆரா அழகு…(31) பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில் கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில் விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32) அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள் கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன் தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33) ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன் செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக் கையிருப்பு ...

Read More »

”குமார சம்பவம்’’

–கிரேசி மோகன்  நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை தேகநீர் ராஜனுக்குத் தோழனும், – போகரெக்கை வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன் மேனாள் வயிற்று மகன்…(19) தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்த் துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) – அக்கினியில் முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள் அன்பு இமவான் அகம்….(20) உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும் நற்சாதி செல்வ நிகழ்வேபோல் – அச்சாக மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி சங்கரியாய் வந்தாள் சதி….(அல்லது) திங்களெனத் தோன்றினாள்ச தி….(21) தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய் ஒளிந்த அமரர் ஒலியாய் ...

Read More »

”குமார சம்பவம்’’

கிரேசி மோகன்   ”குமார சம்பவம்’’ —————————————– நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன் மேனாள் வயிற்று மகன்….(19) தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய் துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில் முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள் அன்பு இமவான் அகம்….(20) உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும் நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி சங்கரியாய் வந்தாள் சதி….(OR) திங்களெனத் தோன்றினாள்ச தி….(21) தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய் ஒளிந்த அமரர் ...

Read More »

‘’குமார சம்பவம்….!”

–கிரேசி மோகன்       கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு வானின் வளர்மதி வெண்கவரி – மானின்வால் ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை ஆக இருத்தல் அழகு….(13) கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில் ஆச்சரியம் கொள்வாள்அதைப்பார்த்து – மூச்சிறைக்க மேகம் குகைவாசல் போகும் திரையாக மோகத் துணைபோகும் மஞ்சு….(14) தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம் மேவுமயிற் தோகை மிருதுவும் – தாவிவரும் காற்றில் கலந்திருக்கக் காட்டில் களைத்தவேடர் ஏற்றடைவர் ஏகாந்த மே….(15) ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை வாழும் கமலங்கள், வெற்படியில் – சூழும் கதிரோனின் ...

Read More »

’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’

————————————————————– “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின் வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(1) “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய் கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(2) “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள் கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக் காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு வேலை திருவினையாள் வாகு”….(3)

Read More »

”வரலஷ்மி விரதம்’’….

குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள் அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின் வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள் கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”…. “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் ) ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும் மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

Read More »

’’குமார சம்பவம்’’….!

கிரேசி மோகன் ’’காளிதாசர் உலா’’ நடப்பதில் மகிழ்ச்சி….!’’மேக சந்தேசமும்’’, ‘’குமார சம்பவமும் ‘’ லிஃப்கோ சமஸ்கிருத பதிப்பை வைத்து வெண்பாவாக்கம் எல்லா ச்லோகங்களையும் 2010துகளில் செய்தேன்….குறிப்பாக ‘’குமார சம்பவம்’’….உட்கார்ந்த இடத்தில் உலகையே பார்த்த ‘’காளிதாசர்’’ விஞ்ஞானிக்கு மேற்பட்ட மெய்ஞானி….400 ஸ்லோகங்கள் மொழி பெயர்த்தேன்….ஏனோ நிரு விட்டது….இந்த பகிர்வை சாக்காக வைத்து முழுதும் முடித்து விட நப்பாசை….முதலில் ‘’காப்பு செய்யுள்கள்’’ ஆறைப் பதிவு செய்கிறேன்….இருக்கவே இருக்கு ‘’ஈஸ்வரோ ரக்‌ஷது’’…. குமார சம்பவம் —————————— காப்பு ———————- சிவபார்வதி —————- சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய் கல்லும் ...

Read More »