திருத்தணி முருகா.. தென்னவர் தலைவா..
–காவிரிமைந்தன்.
சந்தக் கவிதை அருணகிரியாருக்கு வந்தகவியாவும் வழங்கியவன் கந்தநாதன்! சிந்தையில் நிறைந்தபடி கந்தனை நினைத்தாலே முத்தமிழால் உள்ளம் துள்ளும்! எத்தனைப் பாடல்கள் எழுதினாலும் இன்பத்தேன் சிந்திடும்! அத் தமிழ்க் கடவுள் அவனாலே கற்பனை வளங்கள் பெருகும்! சக்தியின் மைந்தன்.. கருணையில் வள்ளல்! சிவகுருபாலன்!.. நமைக் காக்கும் தெய்வம்!
மலையரசி தாயால் மகிமை பெற்ற நம் கண்ணதாசன் – உள்ளம் உருகியே இயற்றிய பலத் திரைப்பாடல்கள் பக்திக்கு பல்லக்குத் தூக்கும்! உருகாதோர் உள்ளமிங்கே ஒன்றிரண்டும் கிடையாது என்றே சொல்லும்! கந்தன் கருணை முதல் திருவருள் முதலாக தமிழ்த் ‘தெய்வம்’ பற்றிய அவனது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்!
‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கா கவியரசு கண்ணதாசன் இயற்றிய பைந்தமிழ்ப் பாசுரம்.. கர்நாடக இசையிலும் வில்லிசைதன்னிலும் தேர்ச்சி பெற்று திரைக்கு இசையமைக்க முன்வந்த மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் தூய இசைக் கோர்வையில் முருகக்கடவுள் புகழ்பாடவே இப்பூமிக்கு வந்து அவதரித்த சூலமங்கலம் சூலமங்கலம் ராஜலட்சுமி – பி.சுசீலாவுடன் இணைந்து வழங்கிய குரல்களில் தெய்வீக மணம் கமழும் தெள்ளமுதம் இதோ..
காணொளி : http://youtu.be/O3HbgyxHcW4
பாடல்: கவியரசு கண்ணதாசன்
படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
இசை: மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி
தாம் தித் தாம் – தை தித் தை
தாம் தித் தாம் – தை தித் தைதிருத்தணி முருகா தென்னவர் தலைவா
சேவலும் மயிலும் காவலில் வருமா
(திருத்தணி)தென் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் – கண்ணில் எங்கும் – கண்டாள் உந்தன் தேவை
(திருத்தணி)கந்த வேலை எந்த வேலும்
வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு
சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம்
அண்டுவதில்லை!மலையும் நீயே, கடலும் நீயே
வானும் நீயே, நிலமும் நீயேபஞ்ச பூதம் – ஒன்று கூடும் மன்றம்
வந்த பேர்க்கு – வாழ்வு நல்கும் குன்றம்
மங்கல குங்குமம் – கிண்கிணி மங்கலம்
ஓம் எனும் மந்திரம் – யாவையும் சங்கமம்ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
அலைகள் கலகலென
இலைகள் சலசலென
மலைகள் மடமடென
உலகம் இசை பொழியவரு முருகா! ஒரு முருகா! திரு முருகா