— கவிஞர் காவிரிமைந்தன்.

pesumdeivam

 

காலமெல்லாம் கவிதை மலர் தோட்டத்திலே கற்பனையால் உச்சங்களை எட்டி … எட்டி … நம்மைக் களிப்பினிலே ஆழ்த்திய தொழிலைச் செய்த கவிஞர் அன்றோ வாலி எனும் புலவர் பெருமகன்!

ஆழிசூழ் உலகமிதில் அவதரிக்கும் இவர் போன்ற கவியரசர் ஒரு சிலரே!

பைந்தமிழில் இவர் புனையும் பாடல்களெல்லாம் பாமரன் வரை முணுமுணுக்கும் மந்திரங்களென்பேன்…

சொல்லமுதச் செல்வம்தனை சுமந்து வந்த தெள்ளமுதப் பாவலன்தான் கவிஞர் வாலி!

பொன்மனச் செம்மலுக்குப் புகழேணி சமைத்துத் தந்த நல்மனச் செல்வன் இவன் என்று நாடே போற்றும்!
கலைமகளின் அருளதனால் இவன் தினம் எழுதிய பாடல்கள் எல்லாம் திகட்டாத அமுதமன்றோ?

குமரனவன் திருவருளே தனது உயர்விற்கெல்லாம் காரணமாம் என்ற உணர்வுடனே வணங்கிய உள்ளத்தார்!

அவ்வண்ணமே, ‘வாலி’ எனும் மாகவிஞன் புகழதனை வெளியிட்டப் பதிப்பகமும் ‘ குமரன்’ என்பது இனிய பொருத்தமே!

பேசும் தெய்வம் திரைப்படத்திற்காகக் கவிஞர் வாலி வரைந்த வரிகள் …

வாழ்த்துதற்கு ஏற்றவை என்பதால் இன்று அவரை வாழ்த்துதற்கும் … போற்றுதற்கும் இவ்விடம் ஏற்றுகின்றேன்….

வாழும் தமிழே வாலி என்றே! நூறாண்டு காலம் வாழ்க …

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க… நீ வாழ்க…

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க…. நீ வாழ்க…

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

படம் : பேசும் தெய்வம்
வரிகள்: கவிஞர் வாலி
இசை : கே. வி. மகாதேவன்
பாடியவர் : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
காணொளி: https://youtu.be/0DaHSI5JbEI

https://youtu.be/0DaHSI5JbEI

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *