இந்த வார வல்லமையாளர்!
ஜனவரி 25, 2016
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்கள்
வல்லமையின் இவ்வார வல்லமையாளர்; ஹாலிவுட் திரைத்துறை சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார்விருதுகளில், இந்த ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப பங்களிப்பிற்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருதைப் பெறுபவர்களில் ஒருவரான கோவைத் தமிழர் திரு. கோட்டலாங்கோ லியோன் (Cottalango Leon) அவர்கள். இவரும், இவர்தம் வழிநடத்தலில் இவரது குழுவினரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் (Sony Pictures Imageworks) நிறுவனத்திற்காக உருவாக்கிய “ஐடிவியூ” (itview) என்ற மென்பொருள்*, உருவாகி வரும் திரைப்படத்தின் பகுதிகளை திரைக் கலைஞர்கள் மீண்டும் பார்த்து ஆய்வுசெய்து செப்பனிடும் முறையை எளிமையாக்குவதற்காக உருவாக்கப் பட்டது. உருவாகி வரும் படத்தின் பல நிலைகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் திரைப்படம் தயாரிப்பதில் பெரிதும் உதவுகிறது.
தொழில்நுட்பத்திற்காக “வடிவமைப்பு, பொறியியல் பங்களிப்பு, தொடர் மேம்பாடு” ( ‘Scientific and Technical Achievements’ category for the design, engineering and continuous development) என்ற பிரிவில் விருதினைப் பெரும் திரு. கோட்டலாங்கோ லியோன் விருது கிடைத்ததைப் பற்றிய தனது செய்தியை அவரது ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சாதாரணமான நாளொன்றைத் துவக்கிய எனக்கு ஆஸ்கார் விருது பற்றிய செய்தி இன்ப அதிர்ச்சியைத் தந்தது.திரைப்படங்களை உருவாக்குவதில், இன்றியமையாத வகையில் பின்புலத்தில், திரைப்பட தொழில்நுட்பத்தில் உதவிகள்செய்யும் 30 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்குபவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கும் போட்டிகள் அதிகம், இதற்காகப் பலநேர்காணல்களில் கலந்து கொள்ளவும், தொழில்நுட்பம் பற்றியவிளக்கங்களும் தரவேண்டியிருக்கும். இருபதாண்டுகளுக்கு முன்னர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் பணியில் என்முதல் நிரலி வரியை எழுதிய பொழுது நான் பின்னாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்கவில்லை.
எங்கள் தொழில் நுட்பப் பணியில் உடன் பணியாற்றிய ராபர்ட் ரே, சாம் ரிச்சர்ட்ஸ், மற்றும் ராப் ப்ரேடோ (Robert Ray, Sam Richards and Rob Bredow) ஆகிய குழுவினருக்கும், எனது முன்னேற்றத்திற்கு உதவிய என் நண்பர்களுக்கும், நான்பணிபுரியும் ‘சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ்‘ நிறுவனம் என்னிடம் இதுநாள் வரை காட்டிய அன்பிற்கும், கடினஉழைப்பின் மதிப்பை அறிவுறுத்தி எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற உறுதுணையாக இருந்த எனதுபெற்றோர்களுக்கும், பொறுமையுடன் எனக்கு ஆதரவளித்த எனது மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதி ஆகியோருக்கும்நன்றி,” எனத் தனது ஃபேஸ்புக் செய்தியில் (https://www.facebook.com/cottalango) குறிப்பிட்டுள்ளார்.
திரு. கோட்டலாங்கோ லியோன் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து கோவையில் வளர்ந்தவர். பணி ஓய்வு பெற்ற இவரது தாய் திருமதி எல். இராஜம் அம்மையாரும், மறைந்துவிட்ட இவரது தந்தையும் ஆசிரியப்பணி புரிந்தவர்கள். கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் உள்ள கல்வர் சிட்டி என்ற இடத்தில் வசிக்கும், 44 வயதாகும் திரு. கோட்டலாங்கோ லியோன், கோவை பி எஸ் ஜி தொழில் நுட்பக் கல்லூரி (PSG College of Technology) பொறியியல் பட்டப்படிப்பிற்குப் பிறகு அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) மேற்படிப்பைத் தொடர்ந்தவர். தற்பொழுது 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் நிறுவனத்தில் மேல்நிலை கணினி மென்பொருள் பொறியாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘ட்ரீம் வொர்க்ஸ் இன்டெர்ஆக்டிவ்‘ (Dreamworks Interactive) நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். இந்த ஆண்டின் ஆஸ்கார் தொழில்நுட்ப விருதினைப்பெறும் மற்றொரு இந்தியர் திரு. ராகுல் தாக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ஆஸ்கார் விருதுகளுக்காக வழங்கப்பெறும் ஆஸ்கார் பரிசளிப்பு விழா வரும் பிப்ரவரி 13 அன்றும், பிற விருதுகளை வழங்கும் விழா பிப்ரவரி 28, 2016 அன்றும் நடைபெறவிருக்கிறது.
திரைப்படத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ள திரு. கோட்டலாங்கோ லியோன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
_______________________________________________________
* The Academy Awards for scientific and technical achievements –
TECHNICAL ACHIEVEMENT AWARDS (ACADEMY CERTIFICATES)
To J Robert Ray, Cottalango Leon and Sam Richards for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks Itview.
With an extensive plugin API and comprehensive facility integration including editorial functions, Itview provides an intuitive and flexible creative review environment that can be deployed globally for highly efficient collaboration.
_______________________________________________________
வல்லமையாளரைத் தொடர்புகொள்ள:
https://www.linkedin.com/in/loorthu
https://www.facebook.com/cottalango
https://www.youtube.com/user/loorthu1
தகவல் பெற்ற தளங்கள்:
ஆஸ்கார் தொழில்நுட்ப விருது பெறும் கோவை பொறியாளர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1439250
http://www.dinamalar.com/news_detail.asp?id=1439546
Academy to Honor 11 Sci-Tech Achievements
Oscars: Sci-Tech Winners Unveiled by Academy
http://www.hollywoodreporter.com/behind-screen/oscars-sci-tech-winners-unveiled-853503
Indian-Origin Technician Cottalango Leon Wins Oscar
http://www.ndtv.com/indians-abroad/indian-origin-technician-cottalango-leon-wins-oscar-1269117
Cottalango Leon, another Indian-origin technician, wins Oscar
http://timesofindia.indiatimes.com/entertainment/english/hollywood/news/Cottalango-Leon-another-Indian-origin-technician-wins-Oscar/articleshow/50681522.cms
படம் உதவி:
http://www.ndtv.com/
_______________________________________________________