Tag: நாகினி

  • புகைப்படம்… குறுங்கவிகள்..

    நாகினி

     

    புகைப்படம்.. குறுங்கவிகள்…

    புகைந்த உறவு
    புதைந்து போனது
    புகைந்த புகைப்படத்துடன்..
    ***
    நினைவலைகளை
    இனிமையாக மீட்டி வந்தனர்
    புகைப்படத்தில் பள்ளித்தோழர்கள்..
    ***
    நவீன அறிவியல் குல்பி
    மற்றவரைத் தேடாமல் தனக்குத் தானே
    புகைப்படம் எடுப்பது ‘செல்பி’!
    ***
    தன்கையே தனக்குதவி
    பழமையின் நவீனம்
    புகைப்படக்கலையில் செல்பி..
    ***
    கண்ணீர் மாலை
    சூடிக் கொடுத்தான்
    புகைப்படத்தில் கணவன்..
    ***
    கண்ணில் படவில்லை
    மழலை பருவம் கண்படு மென
    புகைப்படம் எடுக்கவில்லை!
    ***
    புன்னகை மாற்றமாகி
    புகைப்படத்தில் முகம்
    புதுமையாய்த் தெரிகிறது..
    ***
    முதுமையை இளமையாக மாற்றும்
    புகைப்படக் கலை நுட்பம் நம்பிக்கை
    முகத்தில் மண்அள்ளி தூற்றும் !!

    .. நாகினி

    Share
  • பயணம்

    [download id=”கசடதபற”]பயணம்

    உடல் நலத்திற்குக் கேடெனும்
    அறிவிப்பு வேகத்தடையிருந்தும்
    வாடிக்கையாளரை ஏற்றிச் சுமந்து
    விற்பனையில் வேகமாக பயணிக்கும்
    போதை விட(ஷ)ப் பொருள்கள்..

    தலை வெடித்துச் சிதறும்
    மரணத்தூது வருமென அறிந்தும்
    தலைக்கவசம் அணியாது
    சாலையில் சுய ஓட்டுநராய்
    வண்டி பறக்க பயணிக்கும்
    இளைய மட மனங்கள்..

    சட்டம் வகுத்து தரும்
    நெறிகளைச் சட்டைசெய்யாமல்
    அசட்டையாய் சாலையில்
    பேசியும் இசை நுகர்ந்தும்
    கைபேசியுடன் உறவாடியபடி
    பயணிக்கும் பாதசாரி
    பகுத்தறிவு ஜட உயிர்கள்..

    ஒன்றும் அறியாத
    குழந்தைகளா
    நினைவிழப்பு நோயின்
    வயது முதிர்வா
    பகுத்தறியத் தெரியாத
    இயற்கை சதிசெய்த
    பிறவிப் பைத்தியங்களாயென
    அறிந்துகொள்ள இயலாதவாறு
    மூடர்களாய் மூடப்பழக்கவழக்கத்தில்
    இணைந்து பயணிக்கும்
    கூடயிருந்தே குழிபறிக்கும்
    கபட உறவுகள்..

    பொய் முகம் கழற்றி
    பொலிவான பகுத்தறிவு தலைக்கவசமிட்டு
    பொங்கும் அன்போடு நிலைக்கும்
    பொறுமை பண்பு வண்டியை
    பொறுப்பாய் இயக்கினால்
    பொன்னாகும் வாழ்க்கைப் பயணம்..!!

    … நாகினி

    Share
  • எதிர்காலத் தூண்கள்..

    எதிர்காலத் தூண்கள்..

    இந்தியா வல்லரசாகும்
    சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காத ஏர்கூலர்
    தேசியவிருதுடன் பள்ளி மாணவர்..
    ***
    பொதுநலத் தொண்டில் பள்ளிச்சிறுவர்
    மாற்ற தொழிலாளியாகிறார்
    பிச்சைக்காரர்..
    ***
    செல்போன் திருடினால்
    கண்டுபிடிக்கும் இளைஞர் கண்டுபிடித்த
    செல் ஸ்லீப்பர் சாப்டுவேர்..
    ***
    இழப்புகள் அதிகம்
    குறையவில்லை வீரம்
    வளரும் ஜல்லிக்கட்டு..

    … நாகினி

    Share
  • கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு..

    கடக்கட்டும் மெட்டு மலரட்டும் மொட்டு..

    நாளுக்கு நாள் மாற்றமாய்
    குரு இடம் பெயர்கிறான்
    ராசி பலனும் பிறழ்கிறது
    மனிதமனம் மாற மறுக்கிறது…

    புது வருடம் ஒளியாய் பிறக்கிறது
    பழம் பஞ்சாங்கம் ஒழிய மறுக்கிறது…மனமேடை
    பழங் காலத்துப் பலாபலன் தெரிந்தும் நடிக்கிறது
    புது வருடத்து ராசிபலன் அறியவும் துடிக்கிறது

    எதிர்கால பாதைக்கு
    தீட்டும் திட்டம் என்றும் தவறில்லை
    புதிர்ராகுகால பூஜைக்கு
    நாட்டும் நாட்டம் இன்றும் தவறவில்லை

    பழம் வருடத்து புதிர்ராகுகால பூஜை
    புது வருடத்து எதிர்கால பாதைக்குப்
    பாலமாகி இழப்பற்ற செழுமைவெள்ளம்
    பாய்ந்ததா? என எண்ணத் தோன்றவில்லை
    பக்குவப்பட்ட மனவானாய் மனிதன்
    பகுத்தறிவுத் தேர்வில் தேறவில்லை…

    கழிந்தவை யாவும் கழிந்தவையாய்
    கசப்பாய் இழப்புகள் தொலைந்தவையாய்
    கடுகாய் பாவங்கள் சுருங்கியவையாய
    கடக்கட்டும் கடக்கட்டும் நடப்பாண்டு மெட்டு…

    கருத்தாய் ஆக்கம் நிறைந்தவராய்
    கற்ற கல்வி வழி நடப்பவராய்
    கடமை நடைகண்ணியம் கொண்டவராய்
    கட்டுப்பாடு கொடைபுண்ணியம் மதிப்பவராய்
    கலங்கா இதயம் கொண்டவராய்
    காவலாகா பஞ்சாங்க ராகுராசி பலனை உடைப்பவராய்
    காலத்திற்கும் வாழ எண்ணுகவே இக்கணம் தொட்டு
    காப்பரணாய் மலரட்டும் புத்தாண்டு மொட்டு…!!

    … நாகினி[download id=”098765″]

    Share
  • தேவன் துதிப்பாடல்..

    நாகினி

    G6

    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்

    மரியன்னை வயிற்றில் உதித்து
    மாட்டுத் தொழுவத்தில் பிறந்த
    கருணை நிறைந்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    பாவங்களை ரட்சிக்கும் மேய்ப்பரவர்
    மாசு மன இருள் அகற்றும் தூயவரவர்
    பாதம் சரணடைந்து அருள் ஒளி பெறவே
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    அன்பெனும் விளக்காகி
    பண்பின் வழிநடக்க பாதையாகி
    கிருபைகள் நாளும் வழங்கி
    புவி கிரகத்தில் வழிநடத்தும் தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    முள் முடி தரித்து
    சிலுவை சுமக்க வைத்த
    இருள் மனபாவிகளின் பாவங்களை
    அருள் தோளில் சுமந்து
    சிலுவையில் மரித்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்..

    வன்ம இரும்பாணிகள் உயிரைக் குடித்தாலும்
    திண்ம நம்பிக்கை ஒளிவடிவாய்
    வன்மங்களைத் துண்டாட
    தரணியில் உயிர்த்தெழுந்த தேவனை
    போற்றுவோம் தேவனைப் போற்றுவோம்…!!

    … நாகினி

     

    Share
  • மார்கழி துளிப்பா..

    நாகினி

    பஜனைப் பாடலை
    இழுத்துப் போர்த்திக்கொண்டது
    மார்கழி குளிர்..
    ***
    வரவேற்கும் புலர்பொழுதை
    வாசல் அடைத்து நிற்கும்
    வண்ணக் கோலம்..
    ***
    தெருவடைக்க சுண்ணக்கோலம்
    வண்ணம் காட்டியும்
    எறும்பு பசியாறவில்லை..
    ***
    தட்டி எழுப்பியது
    புலராத சூரியனை மார்கழி
    பஜனைப்பாடல்..
    ***
    கல்யாண மேடை கோலம்
    தெருவை அலங்கரிக்கப் போட்டாள்
    முதிர்கன்னி..

    … நாகினி

    Share
  • வன்கொடுமை மூச்சடக்க…

    வன்கொடுமை மூச்சடக்க..

    உலக விளையாட்டு அரங்கு
    நிறையும் வக்கிர செயல்பாடுகளில்
    சிக்கித் திணறி நசுங்கும்
    புனித மனிதம் காக்கத் தவறும்
    வேடிக்கை மனிதர்கள்..

    மனிதர்கள் உருவில் உலவும்
    மிருகமனம் நடத்தும்
    காமவெறி நாடகத்தில் பலியாடாய்
    கள்ளமில்லா சிறுமிகளும்
    அறுபட்டு உருக்குலையும் பலாத்கார
    ஆட்டத்திற்கு மூடுவிழா காணாத
    வேடிக்கை மனிதர் நிறைந்த
    உலக விளையாட்டு ஆட்சிக்களம்..

    களம் நிறைந்த வெள்ளமென
    பெருகும் மக்கள் கூடி களிக்கும்
    நல்லுறவு மனப்பாங்கு நட்பிலிருந்தாலும்
    பெற்று வளர்த்து சீராட்டிய
    சொந்த பந்த உறவுகளை
    சொத்துக்காக
    பிணந்தின்ன வட்டமிடும் கழுகென
    கூடயிருந்தே குழி பறித்து
    தரையில் தள்ளி மிதித்து நசுக்கும்
    வாடிக்கை விளையாட்டு எந்தவீட்டில்
    எப்பொழுது அரங்கேறுமென காத்துக்கிடக்கும்
    வேடிக்கை மனிதர்களால் நிறைந்த
    உலக விளையாட்டு உறவுமேடை..

    மேடையேறும் இலக்கிய விரலால்
    நசுக்கப்பட்ட சமூக கொடுமைகளில்
    நசங்கியும் நசுங்காத அரக்கனாய்
    உயிர்த்தெழும் சாதிமத பிரிவினைகள்
    உள்ளிட்ட வன்கொடுமை மூச்சடக்க
    நன்நடத்தை விரல் நே(கூ)ராக்கிய
    கல்வி எழுத்தாணி கொண்டு
    வேடிக்கை மனிதர்களைப் பந்தாடட்டும்
    உலக விளையாட்டு அரங்கு..!!

    … நாகினி

    [download id=”அஆஇஈஉஊ”]

    Share
  • நிமிரும்..

    நாகினி

     

    மன்னன் தோள் சேரும்
    மணித்துளி இலாது காலம்
    மலையளவு கடந்தாச்சு
    மணமாலை வேறாச்சு..

    காலமே கதையாகி
    கானலாகிய வாழ்வில்
    கண்ணீரும் வற்றிடலாச்சு
    கவலைகள் விடாது சுற்றிடலாச்சு..

    வரும் வரும் நிம்மதியென்று
    தினம் தினம் எட்டுவைக்கும்
    மனம் மனம் நிமிரும் வரம்
    தரும் தரும் புதிர் காலம்..!!

    .. நாகினி

    Share
  • தெம்பு..

    நாகினி

     

    வாழ்த்தும் பண்பு
    வானுயர்வு தரும் தெம்பு
    வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
    வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..

    கருத்தாய் எழுதும் நடையிலே
    கனிவுடன் வீரப்பாலூட்டும் செறிவிலே
    கண்ணியம் மாறா கடமையிலே
    கட்டுப்பட்டு வாழும் பொறுமையிலே..

    உயர்வும் வளமும் பெறலாமே
    உலகை என்றும் வெல்லலாமே
    உவப்பாய் வாழ்வை இரசிக்கலாமே
    உயர்ந்த மனிதனாய் உலவலாமே..

    எழுதலாம் கலைநயத்துடன் புத்தகமே
    விமர்சனமும் தரமான இலக்கியமே
    தரணியை மாற்றும் வித்தகமே
    எழுச்சியின் வரலாற்றுப் பெட்டகமே..

    வாழ்த்தும் பண்பு
    வானுயர்வு தரும் தெம்பு
    வாய்க்கும் எழுத்தர்களுக்கு நல்லன்பு
    வாசகர்கள் கொட்டும் கருத்தம்பு..!!

    … நாகினி

    Share
  • மலர்ச்சி

    நாகினி

    உயிர் வளர்ந்து உதைத்து
    விளையாடும் நிறைவான
    கருவறைக் கூடு கண்ணுற்று
    தாய்மையைப் போற்றி மகிழ்ந்து
    கருவறை உயிர்க்கு
    அன்புமொழி வார்த்தை
    உதிர்க்கும் தலைவனவன்
    உயர் காதற்பண்பில்
    உள்ளம் குளிர்ந்து மலரும்
    தாய்மை கொண்ட
    பெண் அகமுகம்..!!

    — நாகினி

    Share
  • காதலின் தினம்

    நாகினி

     

    இல்லத்தின் மணமகளாய்
    வர தட்சணை வேண்டாம் என
    ஓசை படாமல் ஓங்கி குரல் கொடுத்து
    மனைவி எனும் புனிதம் தந்தாய்!

    நீரலை கடல் ஆழமென
    நீங்காத அன்பு தந்து
    நித்திரையில் இருந்த என் அறிவை
    நித்தமும் ஒளிரச் செய்தாய் செய்தி
    நிறை கணினி இயக்கும் மேதையாய்!

    பக்குவமாய் சமைத்தேனோ என்னவோ
    பண்புடன் விரும்பி உண்டு
    பாங்குடன் நிறை குறை சொல்லி
    பாசமுடன் உருவாக்கினாய் உலகின்
    புது மழலை மெச்சும் சமையல் கலைஞியாய்!

    அறிவு தெளிவாகி நான் எனும்
    ஆணவம் அடங்கி நாம் என
    ஆதரவுடன் திகழ்ந்து அன்பாய்
    அளவுடன் மழலைச் செல்வம் பெற்று
    ஆண்டாண்டு தோறும் ஊர் உலகம் சுற்றி
    ஆயிரம் அலுவல் துயரில் வீட்டின் கடமையையும்
    அக்கறையாய் அரவணைக்கும் தலைவனே!

    நாம் இருவரும் இணைந்தே பக்குவமாய்
    உண்மை ஒளியாய் உலகிற்குச் சொல்வோம்….
    தினம் தினம் சண்டையிட்டாலும்
    விலகா மனம் கொண்ட
    இருமன இணைவு எனும் இல்லறமே
    நாள்தோறும் காணும் உண்மைக்
    காதலின் தினம் என்று!!!

    — நாகினி

    Share
  • இறைவன்..

    [download id=”4g5ZPGf4Pdc7″]இறைவன்…

    அன்பு எனும் மனம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஆக்கம் எனும் மனவலி(மை)
    கொண்ட கண்களே
    இறைவன்!

    இரக்கம் எனும் இதயம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஈரம் எனும் உள்ஈர்ப்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    உண்மை எனும் ஊக்கப்பண்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    எளிமை எனும் ஏற்றம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
    கொண்ட கண்களே
    இறைவன்!!

    — நாகினி

    Share
  • கவித்துளிகள்…

    -நாகினி

    பழக்கூழ் குளியலில்
    படைத்தவன்
    பசிக்கு இரையானான் ஏழை..!

    ***

    பசித்தவனுக்கு
    எச்சில் இலையில் பசியாற்றுகிறது
    குப்பைத் தொட்டி..!

    ***

    உன் தேவைகள் பூர்த்தியாகிவிட்டதே
    இனி நான் ஏன் உனக்கு பாரமாக…
    கறிவேப்பிலை…!

    ***

    பட்டினி வறுமைத் துயரிலும்
    நடக்கும் நேர்வழி
    தலை காக்கும்..!

    ***

    எச்சில் கையால் விரட்டியும்
    தன்மானச் சிறகு விரிக்காத
    காகம் ஏழை…!

    ***

    எச்சில்கையால் ஈ ஓட்டாதவன்
    படைக்கிறான் அமாவாசையில்
    காக்கைக்குச் சோறு..!

    ***

    தனிமனிதன் சேமிக்கும்
    துளிநீரும் கடலளவு
    மக்கள்சமுத்திரம் சேரும்…!

    ***

    ஆடம்பர நாகரீகக் குழாம் பெருகி
    நாள்தினமும் தேக்கமின்றி
    வீணாகும் நீர்… பணம்!

    Share
  • நீங்கவேண்டிய மனவடிவம்…?

    -நாகினி

    ஒளியாய் வளியாய்
    விண்ணாய்  மண்ணாய்
    செடியாய் கொடியாய்                                  nature
    ஓங்கிய விருட்சமாய்
    மலையாய் அலையாய்
    விளங்குவோன் என
    இயற்கை வடிவாய்
    ‘உன்னை’ப்
    போற்றித் துதித்த
    கரம் கொண்டே
    இயற்கையைச் சிதைக்கும்
    வன்முறைச் செயலுக்கும்
    காரணியாய் விளங்குவோன்
    ‘நீ’யே எனப்
    பழி சுமத்தி
    நேரத்திற்கொரு நிறம்
    மாறும் பச்சோந்தி
    மன வடிவு நீங்கி
    உள்ளொன்று வைத்துப்
    புறமொன்று பேசாத
    உண்மைப் பகுத்தறிவு குறையா
    மனித(ம்) வடிவாய்ப் பாரில்
    உலவிட உரமாகும்
    எங்கும் நிறை ‘இறை’யே போற்றி!

     

    Share
  • நாளைய தமிழர்…!

    -நாகினி

    மேலை நாட்டு மோகத்தில்
    உண்ணும் உணவில்
    ஆடம்பரம் கலந்து
    ஆரோக்கியம் கெட்டபின்னே                Tamil_Culture
    மதியில் சற்றுத் தெளிவு பிறந்து
    தன்னோடு நாளைய தமிழரும்
    நலமாய் வாழத்
    தானிய உணவுகளாலான
    தாயக பதார்த்தங்களின்
    மகத்துவம் உணர்த்துகிறார்
    இன்றைய சில இளைஞர்…

    உலக அளவு கல்விக்கடலை
    சிறு குண்டத்தில் அடைத்து
    முற்றும் கற்ற மாமேதையெனப்
    பகட்டும் போதையில்
    தாய்மொழி தவிர்த்துப்
    பிறமொழிப் பேச்சும் பல்மொழி
    கலந்த தாய்மொழி வீச்சும்
    நடைபோடும் சமூகத்தில்
    நாளைய தமிழர் தனித்தமிழாளராய்த்
    தரணியில் வீறுநடை நடக்கத்
    தனித்துவத் தாய்மொழி பேசும்
    மகோன்னத அமுதைப்
    பரப்பவும் செய்கின்றார்
    இன்றைய சில இளைஞர்…

    மனிதத்தின் உயிர்மூச்சாம்
    உணவு உடை மொழியென
    அனைத்திலும் பாரம்பரியப் பண்பாடே
    தலைசிறப்பெனப் பரப்பும்
    இன்றைய சில இளைஞர் அறிவுரையை
    அடிமனதில் உள்வாங்கி
    நேற்றைய மூதாதையர்
    வாழ்வினில் முற்றிலும்
    ஒன்றி இணைந்திடுவார்
    நாளைய தமிழர்!!
     

    Share