Author Archive

Page 1 of 1412345...10...Last »

ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில்  .  .  .   .

நாகேஸ்வரி அண்ணாமலை   சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம்.  போப்பின் செய்தியை எத்தனை  பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள்.  இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம். மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.   போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் ... Full story

போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்

அழைப்பு புத்தக அறிமுகம் போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் (அடையாளம் வெளியீடு) ஆசிரியர்: நாகேஸ்வரி அண்ணாமலை நிகழ்ச்சித் தலைமை: சமஸ் துணை ஆசிரியர், த இந்து (தமிழ்) நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி இடம்: பனுவல் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041 கைபேசி, வாட்ஸப் 9789009666 பங்கு பெறுக... Full story

எங்கே இருக்கிறது ஜனநாயகம்?

நாகேஸ்வரி அண்ணாமலை   கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது.  எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.  முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா.  இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர்.  ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது.   ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே ... Full story

இப்படியும் ஒரு தாய்!

  நாகேஸ்வரி அண்ணாமலை   அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை.  தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள்.  இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன்.  அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் லேசாகிறது.   இந்தச் சம்பவம் நடந்தது 1997-இல் வட கரோலினா மாநில பிரன்ஸ்விக் மாவட்டத்தில்.  குழந்தை ... Full story

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

  நாகேஸ்வரி அண்ணாமலை   இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது.  தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான்.  புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு.  ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.   எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது ... Full story

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம் நாகேஸ்வரி அண்ணாமலை உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற ... Full story

பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

நாகேஸ்வரி அண்ணாமலை சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார்.  இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார்.  இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார். 1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் ... Full story

கருணையும் சட்டமும்

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க இல்லினாய் மாநில சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான எல்ஜினில் கருணை வடிவான க்ரெக் ஷில்லெர் என்பவர் சென்ற வாரம் கடுமையான குளிர் நிலவியபோது வீடற்ற ஏழைகளைத் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் (basement) தங்குவதற்கு அனுமதித்தார்.  சென்ற வாரமும் இப்போதும் நிலவிவரும் குளிர் சாதாரணமானதல்ல. பல வருடங்களின் ரிக்கார்டை மாற்றியிருக்கும் குளிர்.  உடம்பின் எலும்புகளைக்கூட துளைக்கும் குளிர்.  அமெரிக்காவில் வீடற்றவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.  இந்தியாவில்போல் எப்போதுமே தெருவில் குடியிருப்பவர்கள் அமெரிக்காவில் ... Full story

ஜெருசலேம் யாருக்கு?

நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து அந்த நகருக்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றப் போவதாக டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்திருக்கிறார்.  இவர்தான் பல அமெரிக்க ஜனாதிபதிகள் வாக்களித்து ஆனால் நிறைவேற்றாமலே போன முடிவை நிறைவேற்றிவைக்கப் போகிறாராம்!   இதைப் பார்க்கும்போது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபின்  ‘சரித்திரம் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற சரித்திரம் படைத்தவர்’ என்று ஒருவர் சொன்ன வாசகம் நினைவுக்கு வருகிறது.  ... Full story

தமிழுக்கு எது தேவை?

-நாகேஸ்வரி அண்ணாமலை ‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றார் பாரதி.  ‘தமிழுக்கு அமுதென்று பேர்;  அது எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.  தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.  இது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம்.  அதை எப்படிச் செயலில் காட்டுவது என்பதில்தான் எல்லோரிடையேயும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ரூபாய் - டாலரில் சொல்வதென்றால் 15 ... Full story

பிளாஸ்டிக்கும் ரவாண்டாவும்!

-நாகேஸ்வரி அண்ணாமலை  பிளாஸ்டிக்கின் தீமைகளைப் பற்றி அறியாதார் யாரும் இல்லை.  ஆனால் அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றித்தான் யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அமெரிக்காவில் உள்ள பல பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்று.  இங்கு என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் பூமி மாசுபடுவது பற்றிய் ஆராய்ச்சியும் அடங்கும்.  ஆனால் வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் என்று வரும்போது பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகளைப் பற்றி யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பது இல்லை. பல பார்ட்டிகளில் விருந்திற்குப் பிறகு அத்தனை பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், ... Full story

அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

-நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் பெற்றனர்.  ஆயினும் இன்றுவரை அமெரிக்காவில் கருப்பர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போல்தான் நடத்தப்படுகின்றனர்.  கருப்பர்கள் பலர் காவல்துறை அதிகாரிகளால் எவ்வித முகாந்திரமும் இன்றிச் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  ஒரு வெள்ளை இனப் பெண்மணியைக் காரில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தியிருக்கிறார்.  அந்தப் பெண்மணி பயந்துகொண்டே ... Full story

உரிமைகளைப் பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்

நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ கட்சியைப் பற்றியோ கட்சித் தலைவரைப் பற்றியோ விமர்சிக்க எந்தவித சுதந்திரமும் இல்லை.  கட்சித் தலைவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதையே செயலிலும் காட்டவேண்டும்.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவோ முதுகை வளைத்து அல்லது அவர் காலில் விழுந்து வணங்காமல் இருக்கவோ யாருக்கும் தைரியம் இல்லை.  யாராவது அப்படி ஒரு குறிப்புக் காட்டினால்கூட அவர் பதவி பறிக்கப்படும்; மேலும் கட்சியை விட்டே விலக்கப்படுவார்.  அம்மாதான் அதிமுக, ... Full story

வெட்கக்கேடு

வெட்கக்கேடு
நாகேஸ்வரி அண்ணாமலை கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸைப் பற்றி இரண்டு முறை வல்லமைக்கு 2013, 2014 ஆண்டுகளில் ‘இதுவல்லவோ ஒரு மதத்தலைவருக்கு அழகு’, ‘இவரல்லவோ ஒரு மதத்தலைவர்’ என்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் ‘போப் பிரான்சிஸ் – நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூல் வெளிவரவிருக்கிறது.  (செப்டம்பரில் நடக்கும் மதுரை புத்தகக் ... Full story

போப் பிரான்ஸிஸ் காட்டும் புதிய வழி

நாகேஸ்வரி அண்ணாமலை எல்லா சமூகங்களிலும் ஓரின ஈர்ப்பு உள்ளவர்களை ஒரு காலத்தில் மன்னிக்க முடியாத குற்றம் புரிபவர்கள் என்று ஒதுக்கிவைத்தார்கள், பழித்தார்கள், சில சமூகங்களில் மரணதண்டனையே கொடுத்தார்கள்.  இப்போது பல சமூகங்களில் அந்த நிலை மாறிவருகிறது.  இஸ்லாம் மதத்தில் இவர்கள் இன்னும் (இந்து மதத்தில் இவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.  இந்தியாவில் ஓரின ஈர்ப்பு உள்ளவர்கள் அதிகமில்லையே என்று அமெரிக்கர்களிடம் நான் கூறினால் அந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லையாதலால் நிறையப் பேர் தாங்கள் ஓரின ... Full story
Page 1 of 1412345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.