Archive for the ‘Featured’ Category

Page 1 of 30712345...102030...Last »

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9
அவ்வை மகள் வேட்கை இருந்தால் மட்டுமே உலகை மாற்ற முடியும் 'People with Passion can change the world for the better’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி. உலகை இன்னும் சிறப்புறடைத்ததாய் மாற்ற வேண்டும் என்கிற வேட்கை ஸ்டீவ் ஜாப்ஸிற்கும் வள்ளலாருக்கு ஒன்று போல் இருந்தது. இவ்வகையில் இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்கவேண்டுமெனில், உலகை மாற்றவேண்டும் என இருவரும் ஏன் வேட்கை கொண்டனர் ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 49

க. பாலசுப்பிரமணியன் அறவழி நில்லாத வாழ்க்கையின் பயனென்ன ? அறம் சார்ந்த வாழ்க்கையை எப்பொழுது தொடங்கவேண்டும்?  உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உலக மாயைகளில் உழன்று குடும்ப வாழ்க்கையில் முழுதான கவனம் செலுத்தி, வருங்காலத்திற்காக சொத்து சேமித்து வைக்கும் நேரத்திலா? அல்லது வாழ்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணி எல்லாம் துறந்த நிலையிலே மனம் இருக்கும் நேரத்திலா? இந்தக் கேள்விக்கு எங்கே சரியான பதில் கிடைக்கும்?... Full story

படக்கவிதைப் போட்டி (149)

படக்கவிதைப் போட்டி (149)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? சாய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (95)

நலம் .. நலமறிய ஆவல் (95)
நிர்மலா ராகவன் நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும். நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, `இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது. கதை முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். ... Full story

பெரியாழ்வார் பாசுரங்களில் சடங்குகள்

  -முனைவா்.பா.பொன்னி இலக்கியம் காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்தும்போது அது தன் காலத்தையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. மனிதா்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் குறிப்பிட்ட சில பண்புகளும், நம்பிக்கைகளும், சடங்குகளும் மாறாதிருப்பது கண்கூடு. பெரியாழ்வார் பாசுரங்களில் சுட்டப்படும் சிலசடங்கு முறைகள் சங்க காலம் தொட்டு இன்று வரையும் நடைமுறையில் இருப்பதனைக் காணமுடிகிறது. பண்பாட்டு மானுடவியல் அடிப்படையில் இச்சடங்குகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. மானுடவியல் மனித இனத்தைப் பற்றி ஆராயும் துறை மானிடவியல் ஆகும்.  Anthropology என்ற சொல்லுக்கு ... Full story

வாழ்ந்து பார்க்கலாமே -8

வாழ்ந்து பார்க்கலாமே -8
க. பாலசுப்பிரமணியன் வாழ்க்கைப் பயணமும் சவால்களும் ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். "இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயர் கொடுக்கின்றாய்? ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியை அறிந்ததில்லையே? என்னுடை உறவினரைப் பார். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். என்னுடைய ... Full story

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு
Posted on February 18, 2018     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?... Full story

சிலம்புக் கனாவில் பெண்ணிய நோக்கும் நாடகப் பாங்கும்

-முனைவர் பா. மனோன்மணி “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”1  என்றார் பாரதி, “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”2 என்றார் கவிமணி. “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”3  என்றார் பாவேந்தர். இவ்வாறு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பவையாகக் கருதப்படும் இவ்வடிகள் யாவும் ஆண் மையக் கருத்தாக்க ஆதரவுக் குரல்கள் அவ்வளவே. ஆனால் இளங்கோவடிகள் கொடுத்தது ஆதரவுக் குரல் அன்று. பெண்மைக்கான குரலை அவளே எழுப்ப வேண்டும் என்ற படி நிலை வளர்ச்சியில் அவளது உயர்வை, அவளுக்கான ஊக்கத்தை அவளிடமிருந்தே வளர்த்துச் செல்ல ... Full story

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 108

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் -  108
கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி என்ன..? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு. ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (261)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வாரம். அடுத்தொரு மடல். அன்புடை வல்லமை வாசகர் மத்தியில் வலம் வரும் வாய்ப்பு. சில வாரங்கள் காணாமல் போயிருந்த என் மடல் மீண்டும் உங்கள் முன்னே துளிர்த்து விழுகிறது. எனது வருடாந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமையே திரும்பவும் லண்டனை வந்தடைந்ததுவே தாமதத்துக்குக் காரணம். மாசிப்பனியோடு கலந்த ஒரு மெல்லிய சூட்டினை அனுபவித்து விட்டு உறைநிலையைத் தாண்டுவதற்கு போராடும் லண்டன் குளிருக்குள் மீண்டும் வந்து சிக்கிக்கொண்ட வேளை.... Full story

பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

நாகேஸ்வரி அண்ணாமலை சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார்.  இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார்.  இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார். 1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் ... Full story

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 107

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 107
கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா முனைவர் சுபாஷிணி கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் ... Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48
க.பாலசுப்பிரமணியன் அறம் சார்ந்த வாழ்க்கை மனத்துணையாகவும் வழித்துணையாகவும் இறைவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயமாகக் கிடைக்கின்றது. ஆனால் புற உலகின் சூழ்நிலைகள், தாக்கங்கள் நம்முடைய ஆசாபாசங்களைத் தூண்டிவிடும் பொழுது மனம் சஞ்சலப் படுகின்றது. மேலும் இக வாழ்விற்கு செல்வத்தைத் தேடி அலைபாய்கின்றது. இதைத் தவிர்ப்பதும் வாழ்வில் முடியாததாக அமைந்துள்ளது. ஆனால் செல்வத்தை மட்டும் சேகரிக்க வெறித்தனமாக மனம் அலையும் ... Full story

படக்கவிதைப் போட்டி (148)

படக்கவிதைப் போட்டி  (148)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, ... Full story

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
Posted on February 10, 2018   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo... Full story
Page 1 of 30712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.