Archive for the ‘சிறுகதைகள்’ Category

Page 1 of 4912345...102030...Last »

என் மனத்தோழி

-நாங்குநேரி வாசஸ்ரீ  மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. “மதன், மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க.” “என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு.” இது மதன். எரிச்சலாக வந்தது எனக்கு. “இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ... Full story

பிரதி பிம்பங்களின் நேரம்

மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்   ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள். “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?”  அவள் கேட்டாள்.                 அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் பீரோவிற்கு முன்பாகச் சிதறிக் கிடந்தன.                  “மா……..ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்? வை டோன்யு ஸ்பீக்”ரெஷ்மி மறுபடியும் கேட்டாள்.                 அகிலா ஒரு விளக்கத்திற்கும் தயாரில்லை. பீரோவிலிருந்து ரெஷ்மியின் சில ஆடைகளையும் எடுத்துப் பெட்டியில் வைத்தாள். பிறகு ... Full story

ஏக்கங்கள்

ஏக்கங்கள்
-விஜய் ப்ரகாஷ் பெரியகுளம் பேருந்து நிலையம்... மணி ஒன்பது அடித்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது. கைப்பையுடன் சேகரும், இரண்டரை வயது குழந்தையுடன் அவன் மனைவி காயத்ரியும் நின்றிருந்தார்கள். “அழாத செல்லம், அப்பா ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று அழும் குழந்தையைத் தேற்றிக் கொண்டிருந்தான் சேகர். “ஏம்பா போற?” என்று மழலை அழுது கொண்டே ததும்பும் குரலில் இந்து குட்டி கேட்டாள். “இண்டெர்வியூவுக்கு மா” “அப்டீன்னா?”... Full story

வாத்தியார்

வாத்தியார்
பேராசிரியர் ம. பரிமளா தேவி ஒப்பதவாடி ஒன்றியத்துல இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்சர் வாங்கிட்டு வரும்போது அவ்ளோ சந்தோசம் ஜானகி டீச்சருக்கு. எவ்ளோ பெரிய வேலையிலிருந்தாலும் உள்ளூருல வேலைப்பாத்தா மரியாதை இல்லைன்னு சொல்வாங்க.  ஆனா பல வருச கனவு தான் படித்த பள்ளியில வேலைப்பாக்கனும்னு. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியது. வண்டியில போனா பத்து நிமிச்சத்துல போயிரலாம். அப்படி போகாம நடந்து போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. சின்ன வயசுல தான் நடந்து போகும்போது அவ்ளோ ... Full story

மகனின் பிம்பம் – சிறுகதை

-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் ... Full story

சாப்பாடு இலவசம் !!

க. பாலசுப்ரமணியன் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தின் வாயிலில் இருந்த ஒரு பலகையில் "சாப்பாடு இலவசம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே சாப்பாட்டு நேரம் மதியம் 1 மணி முதல் 2.30 வரை' என்றும் எழுதப்பட்டிருந்தது. பக்கத்தில் போவோர் வருவோர் தங்கள் கடிகாரங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். "இன்னும் சற்று நேரம் கழித்து வரலாமே' என்று சொல்லிக்கொண்டே ஒருவர் அங்கிருந்து நகர்ந்தார்.பகல் ஒரு மணிக்கு அந்தக் கட்டிடத்தின் வெளிவாயில் மூடப்பட்டு அருகே உள்ளே ஒரு சிறிய வாயில் ... Full story

வாலாட்டிச் சென்ற கருங்குருவி

-முனைவர் ஆ. சந்திரன் கருங்குருவியின் வால் மேலும் கீழும் அசைந்துகொண்டிருப்பதை வறட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தாடிக்காரன். அவனுக்குப் பித்து பிடித்திருப்பதாக அவ்வூர் மக்கள் திடமாக நம்பினார்கள். அதனால் அவனுக்கு அப்பெயரே நிலைத்துப் போனது; பித்தன். ஆனால் அவனுடைய பெயர் மாணிக்கம். பெயருக்கு ஏற்பத்தான் அவனும் இருந்தான் என்பது தனிக்கதை. ஊர்மக்களால் பித்தன் என்றும் பிச்சைக்காரன் என்று அழைக்கப்பட்ட மாணிக்கம் பாழடைந்த அந்த இரும்புக் கேட்டின் மேல் மெல்ல அடியெடுத்து வைத்து பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்த கருங்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். கீச்… கீச்… என்ற ... Full story

சார்ஜ் தீர்ந்து விட்டது

முனைவர் ஆ.சந்திரன் உதவிப்பேராசிரியர் தமிழ்த் துறை தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர் வேலூர் முகத்தில் தெளித்த இளநீரைச் சுவைத்தவாறே கண்விழித்த இளைஞன் தங்கரதத்தில் சாய்ந்து கிடப்பதை உணரத் தவறினான். எதிரில் இருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் மீண்டும் அவன் மயங்கிப் போனான். யார் அவன்? ஏன் மயங்கினான் என்பதை அறிய நாம் அவனுடைய இறந்த காலத்திற்குப் போகத்தான் வேண்டும். வேறு வழி ஏது? அரபிக்கடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய சூரியனின் ஒளி ... Full story

மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

மரணத்தைத் தடுத்த மனித நேயம்!
-முனைவா். இரா. மூர்த்தி  புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம். டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது. “தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். ... Full story

ஒரு நாள் கூத்து!

-பேரா. ம. பரிமளா தேவி உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள். என்னங்க ... Full story

தனியாக எரிகிறது

விஜயகுமார் வேல்முருகன்   இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு.. வாசல் முழுதும் எக்கச்சக்க பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகைப்போல.. தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங்கூட வந்திருந்தார்கள்.. இரண்டு தகன மேடைகளும் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்க.. அவரவர் உறவினர்கள் அருகருகே.. தாத்தா வேர்வை மழையில் நனைந்திருந்தார்.. தகன மேடைக்கு சற்றுத்தள்ளி.. அடுத்தடுத்த இரண்டு குழிகள்.. தாத்தாவின் மகன் ஒரு குழியிலும், பேரன் ஒரு குழியிலும் 'சாங்கியங்களை' முடித்துக்கொண்டிருந்தனர்.. வியப்பாக இருந்த குமாரின் முகத்தை பார்த்து, வியர்வையை துடைத்தப்படி தாத்தா சிறு புன்னகை மட்டும் ... Full story

உயிரின் விலை!

-புனிதா குளிர்ந்த காடுகள், பல்வேறு மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை  எங்கும் பச்சை அருவி அமுதம் போல் பாயும் என்றவுடன் எங்கள் சிவகாசியை மலைப் பிரதேசம் என்று நினைத்து விடாதீர்கள். பலருக்கு வாழ்வு தரும் கற்பகத் தரு உள்ள நகரம். அதன் முக்கியத் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, சுண்ணாம்புக் கல் எடுத்தல் போன்றவை. இங்கே ஆடம்பர வாழ்க்கை இல்லை. சாதாரண நிலையிலும் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுத் தொழில்தான் படிக்காதவர்களின் வாழ்வாதாரம். அப்படிப்பட்டவர்தான் கருப்பசாமி. அவர் வயது 22. துடிப்பானவர். இள ... Full story

புள்ளக்குட்டிக்காரி!

-முனைவர் பா. ஜெய்கணேஷ் “இது எத்தனாவது” “ஏழு மா” “உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்” “லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க” “அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு. “என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேள அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”. “என்னமோ போங்க ... Full story

அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

-முனைவர் ஆ. சந்திரன்  விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான். ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது ... Full story

எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

-முனைவர் ஆ. சந்திரன் “ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது ... Full story
Page 1 of 4912345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.