Author Archives: அவ்வை மகள்

எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

அவ்வைமகள் பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்   தலைமுடியைப் பற்றிய அறியாமை, அறிவியல் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் மிகுந்திருப்பது வருத்தமே! இன்று பெண்கள், மாபெரும் வணிகப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேசப்பொருட்கள் வர்த்தகம் பெண்களின் புத்தியை மழுக்கி, அவர்கள் அவசர முடிவு எடுக்குமாறு வணிகக் கவர்ச்சிகள் காட்டி, வெகு வசமாய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று, கேசப்பொருள் வணிகம் பில்லியன் டாலர் வணிகமாகக் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பெண்களே மூல காரணம். பெண்களின் ஆதரவினால் மட்டுமே இந்த ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

அவ்வைமகள் 21. ஞானோதயக் காலம்  இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

அவ்வைமகள் 20. இந்து சமயம் எனும் சிகரம்   பிரெஞ்சு நேசம் பற்றி நாம் பேசிக்கொண்டுவரும் வேளையில், அன்றைய காலனி ஆதிக்க நாளில், காலனி ஆதிக்க நாயகர்களுக்கு இடையே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, தீவிரமான காலனி வெறியின்றியும் , மதத் திணிப்பு – மதமாற்ற  நோக்கமின்றியும் நடந்து கொண்டதோடு, அவர்கள் இந்தியருடன் நட்பு பாராட்டி உதவிகள் செய்தத் தருணங்களை நாம்  நினைவு கூர்ந்து வருகிறோம். இந்திய மக்கள் பால் அவர்கள் காட்டிய இந்த நேசமும் உதவியும், பற்பல  நெருக்கடிகளுக்கிடையே நெஞ்சார்ந்து வழங்கப்பட்ட உதவிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

அவ்வைமகள் 19.  நெப்போலியனுக்குப் பிறகு  சமயப் புரட்சி    பிரெஞ்சுப் புரட்சியின் பிரபலமும் தாக்கமும் உலகெங்கும் பரவியது நிதர்சனமான உண்மையே. பிரெஞ்சுப்புரட்சியின் தன்னேரில்லாத தலைவனான, நெப்போலியன் போனப்பார்ட்டின், வீரம், தைரியம், சாதுரியம், அச்சமின்மை , உள்ளிட்ட அபார குணாதிசயங்கள் எல்லாம் அன்று உலகின் ஒவ்வொவொரு மூலையிலும் ஆராதிக்கப்பட்டன – இன்னமும் ஆராதிக்கப் படுகின்றன. “வீரன் என்றால் இவனன்றோ வீரன்!” என்று நெப்போலியனின் பகைவர்கள் கூட வாய்விட்டுப் புகழ்ந்தனர் – இன்றும் புகழ்ந்தவண்ணமே இருக்கின்றனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஒரு புது உத்வேகம் மக்களிடையே பிறந்தது – தனக்குப் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

அவ்வைமகள் 18. மொழியும் உடையும், கொடியும்   புரட்சியாளர்கள் பொதுவாக, மூன்று விஷயங்களில் தம் புரட்சியை போதிக்கின்றனர்; ஒன்று: மொழி, இரண்டு: உடை, மூன்று: கொடி. புரட்சியியலில், மொழியும், உடையும், கொடியும் புரட்சியின் கருவிகள்  என்று கூறப்படுவது வழக்கம் [1]. மொழியும்,  உடையும், கொடியும்  மனித சமூகத்தின்  மிகப்பெரும் அடையாளங்கள் – எனவே இவை மூன்றும், புரட்சிக்கு முக்கிய அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுவது புரட்சியாளர்களின் வழக்கமெனவே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுப் புரட்சியை (மே 5, 1789 – நவம்பர் 9, 1799) எடுத்துக் கொள்வோம். பிரெஞ்சு மொழியில் அதுகாறும் து (tu) என்பது (vous) ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 16

அவ்வைமகள்  தலைமுடியைப் பற்றிய அறியாமையும் அறிவுப்பிழையும்    சீப்பு பற்றி நாம் பேசிவருகிற வேளையில், அமெரிக்கர்களுக்கு தலைமுடி பற்றிய கவலையும் கரிசனமும் இப்போதுள்ளபோல முற்காலங்களில் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் என்றார் அந்த இராணுவ அதிகாரி. ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் விளக்கினார்: 200 ஆண்டுகளுக்கு முன்புவரையில், தலைக்குக் குளிப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களாகத்தான் அமெரிக்கர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், குளிப்பது என்ற பழக்கம் கூட அவர்களுக்கு இல்லாமல் தான் இருந்திருக்கிறது. வாஷிங்க்டன் டீ.சி. யில் உள்ள புராதன வரலாற்று அருங்காட்சியகமான ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

அவ்வைமகள் 17. நேர்படப் பேசி எளிவந்து வெகுண்டு ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதத்தை எழுதிய ஐசக்சன், ஜாப்ஸை, நேர்காணல் கண்டே ஒவ்வொன்றையும் உண்மையாக எழுதினார் என்பது அனைவரும் அறிந்த சேதி. இவ்வாறன நேர்காணல்களில், ஐசக்சன் பற்பல கேள்விகளை ஜாப்ஸிடம் கேட்பதுண்டு. ஒருசமயம், ஐசக்சன் கேட்கிறார்: “நீங்கள் உங்கள் தொழில்நுட்பப் பணியில், உங்களிடம் பணிபுரிபவர்களிடம், கராறாகவும் தயவு தாட்சணியம் பார்க்காமலும், அழுத்தமாகப் பேசுவது ஏன்?” இனிமையாகப் பேசினால் இன்னமும் கூட வெற்றி கிடைத்திருக்குமோ என்ற ஆதங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வியாகவே, ஐசக்சனின் இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது. இக்கேள்விக்கு ஜாப்ஸ் அளித்த பதிலைக் காண்போம்: ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

அவ்வைமகள்  16. தோழமையின் பரிசுத்தம் மனித உறவுகள் பலப்பல – அவற்றுள் நட்பு – தோழமை என்னும் உறவு இன்றியமையாத ஒன்று. தனிமனிதர்கள், சமுதாயம் என்னும் தோப்பை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நட்பே நிலமாக, வித்தாக, நீராக, எருவாக, களைநீக்கியாக, வேலியாக, எல்லாமுமாக அமைகிறது என்பதைத் தெற்றென விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்குரிய யாவுள காப்பு என்று நட்பியலைத் துவங்கும் வள்ளுவர் நட்பின் கூறுகள் ஒவ்வொன்றையும் தனது குறட்பாக்களில் விண்டு விண்டு வைத்து வாக்கியச் சாட்டையால் விளாசித் தீர்க்கிறார். ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 15

அவ்வைமகள்  சீப்பு எனும் உடல்நலக் கருவி   பெண்களின் உடல் நலம் என்கிற வகையில், தலைமுடி  பற்றி, நானும்  அந்த இராணுவ அதிகாரியும்  பேசிக்கொண்டு வரும் இத்தருணத்தில், அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: பெண்களின் உடல் நலத்தில், தலை வாருவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளுக்கு  ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் பொதுவாக வெவ்வேறு விதமான சீப்புகளைப் பயன்படுத்துகிறார்களே அதனால் தான் கேட்கிறேன் என்றார். “ஆம்! சீப்புகளுக்குத் தலைமுடிப் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும், ஏன் ஒட்டுமொத்த, தலை ஆரோக்கியத்திலும் கூட முக்கியப் பங்கு உள்ளது!” இந்த முக்கியத்துவத்தை முதலில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு சீப்பு ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

அவ்வைமகள்    15. எளிமையே வலிமையாய் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு மிகவும் பிடித்தவர் – பணியில் ஒரு ஆத்ம நண்பர் போன்றவர் என்றும் கூறப்படுபவர். இவர் ஜாப்ஸின், ஆப்பிள் நிறுவனத்தின் எளிமை விதியைப் பற்றிக் கூறும்போது, எளிமையை அடைய, விடயங்களில் மிக ஆழமாகச் செல்லவேண்டும். எளிமை என்பது குறைத்துக் கொள்ளுவது (minimalist approach) அல்ல. எளிமை என்பது ஒழுங்கீனத்தை (clutter), அகற்றி ஒழுங்குபடுத்துவது அல்ல. எடுத்துக்காட்டாக, நாங்கள் உருவாக்கும் பயன்பாட்டுப் பொருட்களில் மறைகள் (screws), பொத்தான்கள் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

அவ்வைமகள் 14. எளிவந்த எளிமை    உலகத்திலேயே மிகவும் சிக்கலான விடயம் ஒன்று உண்டென்றால் அது தான் எளிமை. ஆம்! “எளிமை” தான் அத்தனைச் சிக்கல் நிறைந்தது. எளிமையாக எழதுவது, எளிமையாகப் பேசுவது, எளிமையான கருவிகளை – பொருட்களை உருவாக்குவது என்பதெல்லாம் எளிமையின் முத்தாய்ப்பான வெளிப்பாடுகள். இவ்வாறாக எளிவந்து எளிமை படைப்போர்கள் உலகத்தில் எப்போதோ அபூர்வமாய் உதிக்கிறார்கள். வள்ளுவனுக்குப் பிறகு ஒன்றே முக்கால் வரியில் ஒரு இலக்கியத்தை, அவன் போல் எளிவந்து எழுதிப்போந்த ஒருவனை இவ்வுலகம் இதுகாறும் காணவில்லை. அவ்வையின், இரண்டே இரண்டு சொற்களைக் ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 14

அவ்வைமகள் தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம் அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார். அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் ...

Read More »

***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

அவ்வைமகள் இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை. இப்போது சுகாதாரத் தூய்மைப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எங்கும் கிடைக்காத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், தொற்று நம்மைத் தீண்டாத வகையில் தனிமனிதர்கள் தமது சுகாதாரத்தை –எப்படிப்  பாதுகாத்துக்கொள்வது அதுவும் வீட்டில் இருந்தபடியே, ஒவ்வொரு குடும்பமாக, சுகாதார நிலைப்பாட்டோடு – பாதுகாப்பாக இந்தக் காலக்கட்டத்தை எப்படிக் கடத்துவது என்பதே நம் நோக்கு. இங்குப் பேசப்படுவது தற்போது எங்கள் இருப்பிடத்தில் நாங்கள் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

அவ்வைமகள் 13. ஆயத்தச் சிந்தையும் புரட்சிப் பிரசவமும் புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் சிந்தித்து வரும் இத்தருணத்தில், புரட்சிக்குண்டான காரணங்கள், சமுதாயத்தில் எல்லோரும் அறியும்படியாக், பொத்தம்பொதுவில் நடக்கிறபோது – ஏன் ஒருவர் – ஒரே ஒருவர் புரட்சியாளனாக ஆகிறார் என்று ஒரு வினா வருகின்றது. புரட்சியும் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றே போன்றவை. புரட்சியைப் போன்றே, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழவேண்டுமேன்றால் அதற்கு, பல்முகக் காரணங்கள் இருக்கவேண்டும் (அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள்); புறத்தே இருந்து வரும் ஊக்குவிப்பான்களும் வேண்டும். இவை அனைத்தும் எல்லாத் ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 13

அவ்வைமகள் தென்னிந்தியத் தலைமுடிக்காய் ஆலாய்ப் பறக்கும் உலகம் பெண்களின் உடல்நலம் குறித்து நானும் அந்த ராணுவ அதிகாரியும் தொடர்ந்து செய்து வரும் உரையாடலில் அடுத்த பகுதியாக அமைவது பெண்களின் தலை முடி. அவர் சொன்னார்: எங்கள் அமெரிக்கப் பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது – அதுதான் தலைமுடிப் பிரச்சினை. முடிப் பராமரிப்புப் பொருட்களுக்காகவும் முடிப் பராமரிப்புச் சேவைக்காகவும் அவர்கள் அதிகப் பணம் செலவிடுகிறார்கள். அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருப்பினும் சரியான தலைமுடி ஆரோக்கியத்தையோ அல்லது உண்மையான பராமரிப்புச் சேவையையோ அவர்கள் அடைந்ததான நிறைவு ...

Read More »