கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(316)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(316) விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா வாக்கம் பலவுந் தரும். -திருக்குறள் – 522 (சுற்றந்தழால்) புதுக் கவிதையில்... அன்பு அகலாத சுற்றம் ஒருவன் அடைவது பெருஞ்சிறப்பு.. அவ்வாறு கிடைப்பது, அவனுக்கு அதிகமாய் வளர்தல் நீங்காத அளவற்ற செல்வங்கள் பலவற்றை அள்ளிக் கொடுக்கும்…! குறும்பாவில்... அன்பு நீங்காச் சுற்றமதை அடைந்திடும் ஒருவனுக்கு வளர்தல் நீங்காப் , பலசெல்வம் வந்து சேரும்…! மரபுக் கவிதையில்... அகில வாழ்வி லொருவனுக்கு அன்ப தகலாச் சுற்றமது மகிழ்ச்சி யளிக்கும் பெரும்பேறாய் மனதில் தருமே இன்பமதை, ...

Read More »

ஹாப்பி மெட்ராஸ் டே

பாஸ்கர் சேஷாத்ரி மல்லில்லாம் மொழம் பத்து உருளை வெண்டை இருபது நாலாம் நம்பர் டேபுளுக்கு மசாலா கஸ்மாலம் சிக்னல் தாண்டி நிப்பியா கோல மா கோல மா ஆஆஆஆஆ தே புட் போர்ட்ல நிக்காத சில்ற இல்லாம ஏன் ஏறின ? தோ பாரு போன் பேசிண்டே வண்டிஓட்றத நீ பேசாம வாடி – அவன் கிடக்கான் ஐயரம்மா – மாங்கா இஞ்சி வாங்கல பாரேன் கை போடாம லெப்ட்ல ஓடைக்கிறான் பாத்திர கடைக்கு சைனா டீ ஸ்வாமின் என்னிக்கு அமாவாசை… அவன் கடைல ...

Read More »

பாடவா இசைநிலவே

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே பாடல்தர விரைவாக வந்திடுவாய் பாலுவே ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கு அழகான சிரிப்புடனே பாடவா இசைநிலவே உன்னிசை கேட்பதற்கு உலகமே காத்திருக்கு உணர்வுடனே உந்தனிசை ஒட்டியே இருக்குதையா செந்தமிழை உச்சரித்துச் சிறப்பாகப் பாடிடுவாய் வந்திருந்து பாடுதற்கு வாபாலு விரைவாக இளையராஜா இசைபெருக என்றுமே துணையானாய் ஏஆர் ரகுமானின் இசைக் கோலம் உட்புகுந்தாய் விஸ்வநாதன் இசையினிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய் விரைவாக ஓடிவா வெள்ளித்திரை காத்திருக்கு டிஎம்எஸ் பின்னாலே யார்வருவருவார் பாடவென காத்திருக்க ...

Read More »

குறளின் கதிர்களாய்…(315)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(315) பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். – திருக்குறள் – 580 (கண்ணோட்டம்) புதுக் கவிதையில்... யாவரும் விரும்பும் நாகரிகமான கண்ணோட்டமாம் இரக்கத்தை விரும்பிக் கைக்கொள்பவர், தம்முடன் பழகியோர் நஞ்சிடக் கண்டும் மறுக்காதே அதையுண்டு அமைவர்…! குறும்பாவில்... நம்பிடும் நண்பர் உணவாய் நஞ்சு கொடுப்பினும் விருப்புடனதை உண்பார், நாகரிகமாம் கண்ணோட்டம் கொண்டவர்…! மரபுக் கவிதையில்... எவரும் விரும்பும் நாகரிகம் ஏற்றம் மிக்கக் கண்ணோட்டம், உவந்தே யதனை விரும்புபவர் உயர்ந்த குணத்தைக் கொண்டவரே, சுவைக்கும் உணவில் நண்பன்தான் ...

Read More »

யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா  நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும் எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார் அல்லலினை அகற்றென்றே அடியார்கள் வேண்டிடுவார் நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார்! தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும் யார்யாரோ வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார் ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம்! காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும் காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார் குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும் கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே! வாய்கட்டு கைகட்டு வயிற்றையும் கட்டென்றார் வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(314)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(314) ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை. – திருக்குறள் -594 (ஊக்கமுடைமை) புதுக் கவிதையில்... இடர்கள் போன்றவற்றால் தளர்வுறாது சோர்வு இல்லா ஊக்கம் உடையானிடம், அதன் பயனாகிய செல்வம் வழி கேட்டு வலியப் போய்ச் சேரும்…! குறும்பாவில்... சோர்வது ஏதுமில்லா ஊக்கம் உடையவனைச் செல்வம் வழிகேட்டுத் தேடிச்சென்று சேரும்…! மரபுக் கவிதையில்... வாழ்வில் வந்திடும் துன்பங்களால் வருத்தங் கொண்டு சோர்வுறாமல் தாழ்விலா ஊக்கமாம் நற்குணத்தைத் தன்னிடம் கொண்டவன் ஒருவனையே, பாழ்படாப் பெருநிதிச் செல்வமது பாதை கேட்டே ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 271

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு ...

Read More »

பாயும் குயில் | Diving Cuckoo

அண்ணாகண்ணன் களிவளர் குயிலே – மின்னும் கவினெழு சுடரே குளிரிளந் திருவே – வண்ணக் குழலிசை அமுதே ஒளிமுகிழ் கனவே – பண்ணில் உயிர்வளர் ஒயிலே வெளியிது உனக்கே – நன்கு விரித்திடு சிறகே குயில், விண்ணில் பாயும் அழகைப் பாருங்கள் பாயும் குயில் – 1 | Diving Cuckoo – 1 விண்ணுக்கும் மண்ணுக்கும் இந்தக் குயில் பாயும் அழகு, அந்தரத்தில் ஆடும் ஓர் எழில் நாட்டியம். பாயும் குயில் – 2 | Diving Cuckoo – 2 இந்தக் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(313)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(313) மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும். – திருக்குறள் – 608 (மடியின்மை) புதுக் கவிதையில்... குடிப்பிறப்பில் உயர்ந்த அரசனிடம் மடியெனும் சோம்பல் விலகாமல் குடியிருந்தால், அது அவனைக் கொடிய பகைவர்க்கு அடிமையாகும் நிலைக்கே ஆளாக்கிவிடும்…! குறும்பாவில்... உயர்குடிப் பிறந்த அரசனிடமும் சோம்பல் நிலைபெற்றால் அது அவனைப் பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்…! மரபுக் கவிதையில்... உயர்குடி தன்னில் பிறந்தேதான் உயர்நிலை யுடைய மன்னனிடம் அயர்வாம் சோம்பல் மிகவாகி அதுவே அவனிடம் நிலைபெற்றால், உயர்வு வாழ்வில் வாராதே உறுதி ...

Read More »

இராமாவதாரம்

ஆ. கிஷோர் குமார்  அயோத்தி  அணி நகரமாய் விளங்கிய ஒரு மணி நகரம்.. குறையே இல்லாத ஒரு தனி நகரம். செழிப்பிலும் களைப்பிலும் நிறை நகரம்.. அறுபதாயிரம் ஆண்டுகளாய் அலுக்காமல் ஆண்டு கொற்றக்குடையை விரித்து வீரத்தில் ஆரமாய் வீற்றிருக்கும் தசரதன் பெயர் கொண்ட மன்னன் அதன் காரணம்.. தயரதனின்  ஆளுகையில் அயோத்தியே மின்னியது. அரண்மனையை அந்த  ஒளிச்சிதறல் பின்னியது… அரசனின் அலங்கரிக்கப்பட்ட அரண்மனையில் ஆயிரமாயிரம் நெய் விளக்குகள்.. அவற்றில் மூன்று தசரதனின் முத்து விளக்குகள்.. கோசலை கைகேயி சுமித்திரை என்ற பெயர் பூண்டு ஒளிர்ந்த தசரதனின் ஒளி  விளக்குகள்.. ...

Read More »

உய்

அண்ணாகண்ணன் எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் – மெய்யமுது உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து! ============================== Pic courtesy: https://www.maxpixel.net

Read More »

குறளின் கதிர்களாய்…(312)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(312) பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. -திருக்குறள்  – 633 (அமைச்சு) புதுக் கவிதையில்... பகைவருடன் சேர்ந்து உறவு கொண்டோரை அங்கிருந்து பிரிப்பதும், தம்முடன் இருப்பவரைப் பேணிக் காப்பதும், முன்பு தம்மிடமிருந்து பிரிந்து சென்றவரை மீண்டும் சேர்த்துக் கொளவதுமாகிய செயல்களில் வல்லவனே நல்ல அமைச்சனாவான்…! குறும்பாவில்... பகைவருடன் சேர்ந்தோரைப் பிரித்து உடனிருப்போரைப் பாதுகாத்து முன்பு பிரிந்தோரைச் சேர்த்துக்கொள்ளும் ஆற்றலுள்ளவனே அமைச்சன்…! மரபுக் கவிதையில்... பகைவர் தம்முடன் சேர்ந்தோரைப் பாதகம் செயுமுன் பிரித்தெடுத்தும், வகையாய் உதவி செய்தேதான் ...

Read More »

சீக்கிரம் அருள்வாய் கந்தா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண், ஆஸ்திரேலியா கருவிலே கருணை வேண்டும் கல்வியில் உயர்வு வேண்டும் தெருவெலாம் அலையா வண்ணம் தினமெனைக் காக்க வேண்டும் ஒருமனம் கொண்டு உன்னை உவப்புடன் வணங்க வேண்டும் பெருமனம் கொண்டு என்னை பேணுவாய் கந்த வேளே கருணைகூர் முகங்கள் ஆறும் காத்திட வேண்டும் ஐயா வறுமையில் வாடி நாளும் வதங்கிடா திருக்க வேண்டும் தரமுடை மனத்தைப் பெற்று தரணியில் வாழ வேண்டும் சிரமதில் அகந்தை போக சீக்கிரம் அருள்வாய் கந்தா நரை திரை வந்திடாமல் நலமுடன் வாழ வேண்டும் நாளுமுன் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(311)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(311) பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு. – திருக்குறள் -773 (படைச்செருக்கு) புதுக் கவிதையில்... பகைவரிடம் இரக்கம் காட்டாமல் வீரத்துடன் எதிர்த்து நிற்பது பேராண்மையாகும்.. அந்தப் பகைவர்க்குத் தாழ்வொன்று வருகையில் இரக்கம் கொண்டு அவருக்கு உதவிடுதல், பேராண்மைக்குச் சிறப்பு சேர்க்கும் கூர்மையாகும்…! குறும்பாவில்... பகைவரை எதிர்த்தல் பேராண்மை, பகைவரின் தாழ்வில் இரக்கமுடன் உதவிடுதல் பேராண்மைக்குச் சிறப்புதரும் கருவி…! மரபுக் கவிதையில்... பகைவர் தம்மோ டிரங்காமல் பலத்தைக் காட்டல் பேராண்மை, பகைவர் தமக்கோர் தாழ்வுவரின் பகையை மறந்தே ...

Read More »

அருமருந்தே மாரியம்மா!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா பல்லவி எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது மாரியம்மா மண்ணிலே நல்லவண்ணம் வாழவைக்கும் தெய்வமம்மா                                                                                           ...

Read More »