திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்
கவிஞர் பூவை செங்குட்டுவன்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..
திரையுலகம் எத்தனையோ கவிஞர்களைக் கண்டிருக்கிறது. கண்டுகொண்டிருக்கிறது. காணப்போகிறது. இந்த வரிசையில் நாத்திகக் கருத்துக்களில் நாட்டமும் அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்களில் ஈடுபாடும் கொண்ட ஒரு கவிஞர் தன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றதெல்லாம் பக்திப் பாடல்களில்தான் என்கிற செய்தி புருவங்களை விரியவைக்கும்!
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் –
வேல் போல் இருக்குதடி என்கிற சிந்தனையைப் பதித்தவர்!
பக்தியில் உருகிநிற்கும் உள்ளத்திலும்கூட தோன்றாத சிந்தனைகள் இவர் உள்ளத்தில் உற்பத்தியானதை என்னவென்று சொல்வது?
காலத்தின் கருணை என்று சொல்வதா? கந்தனின் கருணை என்று சொல்வதா?
ஆம்! கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலும் அதன் பின்னணியும் இவரை முன்னுக்கு கொண்டுவந்தன என்றே சொல்லலாம்!
கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் கந்தன் கருணை திரைப்பாடல்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது..குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக் காட்சிக்கு கவிஞர் பாடல் எழுத முற்பட்டபோது, பக்திப் பாடல்கள் வரிசையில் வெளியாகியிருந்த ஒலிநாடாவில் தான் கேட்ட ஒரு பாடல் இந்தக் காட்சிக்கு முற்றிலும் பொருத்தமாய் இருக்கும் என்று கண்ணதாசன் எண்ணம் கொள்ள, அதை இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல.. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில் உருவாகியிருந்த அப்பாடலை.. எழுதிய இளைஞர் பூவை செங்குட்டுவன் என்றறிந்து அவருக்கு வாகனம் அனுப்பி வரவழைக்க.. அவரின் பாடலை இப்படத்தில் இடம்பெறச் செய்தார் கண்ணதாசன்!
திருப்பரங்குன்றத்தில்நீசிரித்தால்முருகா
திருத்தணிமலைமீதுஎதிரொலிக்கும்
திருச்செந்தூரிலேவேலாடும்
திருப்புகழ்பாடியேகடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)
பழநியிலேஇருக்கும்கந்தப்பழம் – நீ
பார்வையிலேகொடுக்கும்அன்புப்பழம்
பழமுதிர்ச்சோலையில்முதிர்ந்தபழம் –
பக்திப்பசியோடுவருவோர்க்குஞானப்பழம்
(திருப்பரங்குன்றத்தில்)
சென்னையிலும்கந்தகோட்டம்உண்டு – உன்
சிங்காரமயிலாடத்தோட்டம்உண்டு
உனக்கானமனக்கோயில்கொஞ்சமில்லை – அங்கு
உருவாகும்அன்புக்கோர்பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்)
இளம்கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவமானது. மேலும் பாடலில் ஒரே ஒரு வார்த்தையை கவிஞர் கண்ணதாசன் மாற்றிக் கொள்ளலாமா என்று பூவை செங்குட்டுவனிடம் அனுமதி கேட்டார். என்ன தெரியுமா? சென்னையிலே கந்த கோட்டமுண்டு .. என்கிற வரியை சிறப்புடனே கந்த கோட்டமுண்டு என்று மாற்றியமைத்தார். கவிஞர் பூவை செங்குட்டுவன் இதுபற்றி நினைவுகூரும்போதெல்லாம் கவியரசர் தனது பாடலுக்கு சிறப்பு சேர்த்தார் என்பார்.
சிறப்புடனேகந்தகோட்டம்உண்டு – உன்
சிங்காரமயிலாடத்தோட்டம் உண்டு
ஒரு கவிஞர் தான் எழுதவேண்டிய பாடலை மற்றொரு கவிஞருக்கு தந்திட எத்தகைய பெருந்தன்மை வேண்டும்? அதனால் தான்
இன்றைய கவிஞர்களுக்கெல்லாம் அரசராக – கவியரசாக.. இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
http://www.youtube.com/watch?v=d9mhH4naphg