Tag: நாகினி

  • நூலென்னும் வித்து..

    நாகினி

     

    படிக்க வாங்கும் நூல்களிலே
    மடிக்க இயலா கருத்துண்டேல்
    எடுத்த நூலைத் தரையதுவே
    உடுத்த கீழே வைப்போமோ!

    கருத்து உரைக்கும் புத்தகமே
    பருத்து இருந்தால் பெருமையோ
    எழுத்தால் கண்ணைத் திறந்திடவே
    இழுத்தால் நலமாம் எழுதுகோல்!

    எண்ணக் கனவு நினைவாக
    வண்ணக் கதைகள் உருவாக்கும்
    கண்ணாய் விளங்கும் நூலெங்கும்
    பண்ணாய் கருத்து உயிராக்கிடுக!

    உதித்த கருத்து மெய்யுடனே
    பதித்த சொல்லால் உரமேற்றி
    நடித்த பொய்மை கதையெல்லாம்
    கடித்த நூலதுவே உரமன்றோ!

    கொடுக்கும் அறிவு அனுபவமும்
    எடுக்கும் நூலில் இருந்தால்தான்
    பனுவல் நல்ல வித்தாகும்
    அனுபவக் கல்வி சொத்தாகும்!

    .. நாகினி

    Share
  • உடையது!

    உடையது!

    உடையது உடையது
    பெண்ணுக்கு ஆர்வம் உடையது
    கட்டுக் கட்டாய்
    அடுக்கி ௮டுக்கி வைத்தும் தீராது
    உடையது மீதே கண் உடையது!

    தடையது இல்லை
    உடையது மீதே
    கடையது சென்றால் பார்வை
    உடையது உடையது வேண்டுமென உடையது!

    அள்ளி வாங்கி வந்த
    உடையது போதாமல் உடையது வேறு
    பெண் அணிந்த உடையது மீதே
    உடையது உடையது போல்
    தனக்கில்லையென்ற ஏக்கம்
    உடையது மீதே பெண்பார்வை உடையது!

    அளவுக்கு மீறியதாக ஆசை
    உடையது தனக்கு உடையது
    சிறப்பு உடையது இல்லை என்றே
    மற்றோர் உடையது நோக்கி
    நடனம் புரியும் ஆசை
    உடையது உடையது பெண்ணுக்கே
    உடையது மனதிலென்றும் உடையது!

    உடையது தீரா ஆவல்
    உடையது மீதில் இருப்பதை உடை யது
    உடையது வேளைக்கொருரக உடையே பெருமை
    உடையது என்றெண்ணத்தை உடை யது
    உடையது பெண்ணுக்குப் பெருமை உடை அது!

    … நாகினி

    Share
  • விரும்பும் நல்லறம்!

    நாகினி

     

    சூடும் மல்லி பூவும் வாசம்
    ..சேரும் மணநாளில்
    பாடும் பாட்டு வாராய் தோழி
    .. பாகாய் இசைந்தோடக்
    காட்டும் நாணச் சிவப்பு பெண்ணின்
    .. கன்னம் தொடுமதுவே
    ஏடும் சொல்லித் தாரா இன்பம்
    .. எழுதும் இல்லறமே!

    இல்லம் இனிக்க வந்த மழலை
    .. இன்ப ஊற்றாகும்
    சொல்லும் செயலும் ஒன்றாய் நடக்க
    .. சோர்வு ஈற்றாகும்
    வெல்லம் நிகர்த்த மொழியே வாழ்வில்
    .. வேண்டும் நாற்றாகும்
    வல்லம் பொறுமை இல்லம் வாய்த்தால்
    .. வளமை நூற்றாகும்!

    நூற்று ஆண்டு கடந்தும் ஒருமை
    .. நுகரும் மனையறமே
    காற்று புகாது மாசில் லாமல் நகரும்
    .. கடமை எழில்வரமே
    நாற்று வயலில் ஆண்பெண் சேர்ந்து
    .. நடக்கும் உழவதுபோல்
    வேற்று மையே இல்லா இல்லம்
    .. வேட்கை நல்லறமே!

    … நாகினி

    Share
  • விடியும்!

    நாகினி

     

    வந்த எதுவும்
    விரும்பிய வரமல்ல
    சென்ற யாவையும்
    செதுக்கி பதித்தவையல்ல!

    வந்ததை விரும்பி
    வெந்ததைத் தின்று
    விதி வந்து மாள
    வெட்கித் தலைகுனிவதென்ன!

    எழுதிய எழுத்ததை
    ஏளனம் செய்து நொந்திட்டால்
    கையில் அகப்பட்ட வாழ்வு
    கடைச்சரக்கு ஆகிடுமோ!

    விதிக்கப்பட்ட விதியை
    வாழ்வின் நிலை யென்று
    விருப்புடன் ஏற்று முன்னேற
    வாய்ப்பு வாசல் திறந்து
    விடியும் பொற்காலம்!

    .. நாகினி

    Share
  • பெண் பாவின் வெண்பா

    எடுத்த செயலை எளிதாய் முடித்து
    அடுத்த பயணத்தை அன்றே – தொடுத்திட
    வாழவழி ஆக்கும் வழக்கத்தின் தூணாகும்
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    படிக்கும் அறிவினால் பண்பை வளர்க்க
    படியும் சினமாம் பகையை- கடிதினிலே
    கூழாக்கிப் பேராசைக் கூட்டையும் வேரறுக்கும்
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    பிறப்பாம் படைப்பு பிறவி பயனாம்
    மறக்க இயலா மழலை – உறவதன்
    தாழம்பூ வாசமொத்த தாளின் அழகன்றோ
    வேழமுகன் தம்பிக்கை வேல்!

    … நாகினி

    Share
  • குடும்ப வண்டி..

    நாகினி

     

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி

    அண்ணன் தம்பி கைகலந்து
    செல்லச் சண்டைகள் பூத்திடும்
    அரட்டை நிறைந்த வாழ்க்கை வண்டி
    செயலிழப்பு சோர்வு தொடும்நேரம்
    அன்பு கதைகளும் சளசள பேச்சாகி
    செவிக்கு இம்சை ஆனாலும்
    அரவணைக்கும் தாய்மை மனமோ-மழலைச்
    செல்வங்களுடன் பொழுதைச் சுகமாய் கழித்திடும்
    அழகு ஆனந்தம் விளையாடும் குடும்ப வண்டி

    எத்தனை கோடி பொருட்செல்வம் கொட்டியும்
    அழுது தொழுதாலும் கிடைக்காத பெருஞ்செல்வம்
    என்றென்றும் இனிமை சேர்க்கும்
    அமுதக்கலசம் மழலை துள்ளும் வாழ்க்கைவண்டி
    எக்காலத்தும் உறவுக் கிளைபரப்பி
    அலைந்து ஆர்ப்பரிக்கும் மனதை நேர்வழிப்படுத்தி
    அகிலம் காத்திடும் மழலை நிறைந்த குடும்ப வண்டி

    வீட்டுக்கொரு பிள்ளை போதுமென்று
    நீட்டி முழக்கலாமோ ஆணவத்தில்
    வீழும் உறவுகளை இழுத்துப் பிடித்து
    நீங்கா இல்லற பந்தத்தை
    நீட்சி உறவென மலரச்செய்யும் – மழலை தவழும்
    வீடு செல்வம் நிறைந்த வாழ்க்கைவண்டி
    நீட்டும் கைகளில் அன்பு
    வீற்றிருக்கும் இல்லற நலமதில் பூத்திருக்கும் மழலை
    நீயென மடியில் தாங்கி வளர்க்க சிரமமென
    வீணே இல்லம் தேடிவரும் பெருஞ்செல்வத்தை அழித்து
    நீங்கா பழிதேடும் வீணர்களின்
    வீண்வாதத்திற்குள் அடங்காத மழலை வரம்பெற்ற குடும்ப வண்டி

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி!

    … நாகினி

    Share
  • மனித இயல்பு!

    நாகினி

     

    சென்ற காலத்து துயரம் நினைந்து
    வருங்காலத்து விளைவின் பயம் கொண்டு
    நிகழ் காலத்து இன்பங்களைச்
    சோக இருளாக்குதல் மனித இயல்பு…

    நிகழ்கால நிகழ்வை ரசித்து இன்பமாய்
    வாழ்வை மாற்றிக் கொள்வதும்
    நொந்து வாழ்வைத் தூற்றிக் கொல்வதும்
    உலகியலில் விரும்பி நடக்கும் மனித இயல்பு…

    இரட்டை வேடதாரி மனிதன்
    சோக இருளிலும் நகைப்பான்
    மகிழ் இன்பத்திலும் அழுவான்
    நேரத்திற்கேற்ப மாறும்மனமே மனித இயல்பு…

    மாறும் மனத்தால் துயர் கழித்து
    சமூகநலனின் ஏற்றம் பெருக்கி
    பிறரை வழிநடத்தும் நேர்மை பண்பைக்
    கடைபிடித்தல் மாமனித இயல்பு…

    மாமனிதனாய் உயர்ந்து
    மனத் துயர்களை உடைக்கும்
    மனிதன் …மனிதன்…
    இவனே மாமனிதன் என்றே மதிக்கும்
    நிலைத்த நேர்வாழ்வு நடைபோடுதலே
    தெய்வப் பிறவியாக உயரும் மனித(த்தின்) இயல்பு!

    — நாகினி

    Share
  • புரட்சி கண்டும் புரட்சி

    நாகினி

     

    பசுமை புரட்சி கண்டும்
    பகடை ஆகி பகடி ஆடி
    பசுமை இயற்கை சுவாசம்
    பகல் கனவாய் எதிர் சந்ததி கையேந்த
    பசுமை மகவைக் காவு கொடுக்கின்றோம்…

    நிற்கும் இயற்கை காலை
    வெட்டி எடுத்து செயற்கை
    அடுக்கு மனை பந்தல் கட்டி
    சுதந்திரமாய் ஓடி ஆடி விளையாட
    ஒரு சிறு இடமும் இன்றி
    பிஞ்சு மக்களை இயந்திர மலர்களாய்
    ஒரு சிறு கூட்டுக்குள் கணினியே கதியென
    நிறுத்திடத் தானோ இயற்கையைச் சிதைக்கின்றோம்…

    இயற்கை சிதைவைத் தடுத்து
    நம்மோடு எதிர் சந்ததிக்கும்
    இயற்கை சுவாசம் பசுமையாய் நிறைய
    ஒற்றுமை எழுச்சிக் கரங்கள் உயர்த்தி
    இயற்கை அமைதிப்புரட்சி கண் நோக்குவோம்!

     

    Share
  • இமை..

    நாகினி

     

    சிறு துரும்பு நுழைவை
    படபடவென அடித்து மூடி
    விழி காக்கும் இமைகள்
    உன் மொத்த உருவம்
    உள்நுழைந்தும் இமைக்க
    மறந்ததென்ன மாயமோ!

    குழல் கானமன்ன நின்
    குரல் மொழியோ!
    நுரை கடலன்ன எழில்
    கரை காணா உடலழகோ!

    மயக்கும்விழி அசைவோ!
    மருண்டு நோக்கும் பார்வையோ!
    இழுத்ததென் மனதை
    பழுத்ததென் காதல் உணர்வு..

    குலம் கோத்திரம் அறியேன்
    மதம் சாதி விருப்பங்கள் அறியேன்
    பேசும் மொழி அறியேன்
    உறவு அறிமுகமும் அறியேன்..

    பேசாது பேசும் விழியசைவன்றி
    வேறொன்றும் அறியா தருணம்
    நொடிப்பொழுதில் உள் நுழைந்து
    இதயவீட்டில் குடியேறியவனை..

    தூசியென கண்கள் கசக்கிடவோ
    பழுதென அறிவு துரத்திடவோ
    இடம்தான் கொடுத்திட மனமின்மையால்…
    இதயவீணையுனை மீட்டும் விரல்களாம்
    கற்பனை எண்ணத்திற்கு வலுவூட்டுகிறது
    இமைக்க மறந்த இமைகள்!!

    .. நாகினி

    Share
  • எரியும் வேதனை..

    நாகினி

     

    அரசுப்பள்ளி மாணவரும் ஆங்கிலம்
    நுனி நாக்கில் பேசுகிறார்…
    வீட்டுக்கொருவர் படிப்பாளர் என
    கல்வி நிலைப் பல்கித் தான் வருகிறது…
    அடுப்படியே கதிஎனும் நிலை பெண்களும்
    விமானம் ஓட்டி விண்ணையே எட்டுகிறார்…
    கிராமத்தின் மண் சாலைகளும்
    பளபள சிமெண்ட் பூச்சாகியது…
    ஓலைக் குடிசையிலும் ஒளிவிளக்கோடு
    டிவி,மிக்சி,மின்விசிறி என அறிவியல்
    சாதனங்கள் சாதாரணப் புழக்கமாகியது…
    தொன்னையில் டீ தருமளவிற்கு
    சாதியால் ஒதுக்கப் பட்ட நிலையும்
    சற்று ஒதுங்கித்தான் போய் விட்டது….
    ஆம்…நினைக்கவே பிரமிப்பாக!

    சமூகத்தின் நற்பிம்பக் காட்சியைக்
    காலக் கண்ணாடி காட்டினாலும்..
    வாழ்க்கை வானில்
    நீங்கா வறுமைக் கோடுகள்..
    பெண்சிசுக் கொலை…
    பாலியல் வன்கொடுமை…
    சாதிமதக் கலவரமென
    இன்றளவும் மறையாத நிரந்தர
    வன்முறைக் கேடுகள்
    உலவுவதை உற்று நோக்குங்கால்…
    மன மூலையில் இனம்புரியா
    வேதனை வலி தீயாய்
    எரியத் தான் செய்கிறது!!

    — நாகினி

    Share
  • நினைவாஞ்சலி- ஜெயகாந்தன் அவர்களுக்கு

    நாகினி

    jayakanthan5

    இலக்கியப் பசியுள்ளவர்க்குப்
    புசிக்க ‘ஒரு பிடி சோறு’ தந்து
    ‘இனிப்பும் கரிப்பும்’ நிறைந்த
    புவி வாழ்வினில் ‘தேவன் வருவாரா’ யென
    ஏங்கும் ‘மாலை மயக்கம்’ உள்ள மாந்தருக்கு
    நொடிதோறும் வாசிக்கும் ‘யுகசந்திப்பு’ டன்
    சமூக அவலமெனும் ‘உண்மை சுடும்’ என
    ‘புதிய வார்ப்பு’களாய் இலக்கியமொழி பகர்ந்து
    ‘சுய தரிசனம் ‘ தந்தீரே ஐயா!

    ‘இறந்தகாலங்களி’ல் நடந்ததை மறக்க
    ஆசானாய் ‘குருபூடம்’ ஏறி
    வாழ்வியலில் துயர் ‘சக்கரம் நிற்பதில்லை’யென்றாலும்
    பொறாமை பகையாம் ‘புகை நடுவினிலே’
    ‘சுமை தாங்கி’யாய் வாழ்ந்திட உரைத்தி ன்று
    காலன் விளையாட உயிர்க்கூடு விட்டு
    ‘பொம்மை’ஆகி விண்ணுலகு சென்றதேனோ ஐயா!

    அடைப்புக் குறியிலுள்ளவை அனைத்தும் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதை தொகுப்புகள்..

    .. நாகினி

    Share
  • கவிதாஞ்சலி.. நாகூர் ஹனீபா அவர்களுக்கு

    நாகினி

     

    சிம்ம இசை முரசுக்கேன் உறக்கமின்று
    சிந்திய வெங்கல மணியோசை நின்று
    சிந்தாமல் சிதறாமல் இசைமுரசு
    சிகரத்தின் மூச்சைக் காலன் கவர்ந்தானா!

    இஸ்லாத்தின் புகழ் பாடினீரோ
    இயக்கத்தின் வழி நின்றீரோ
    இயங்கா இதயம் கொண்டி ன்று
    இன்ஸா அல்லாவுடன் கலந்தீரோ!

    இறைவனிடம் கையேந்துகின்றோம்
    இசை சிங்கத்தைத் தந்திடென்று
    இரக்கத் துடன் உயிர்ப்பிச்சை கேட்டும்
    இறைவன் எடுத்தவுயுர் தருவதற்கிலை என்றானே!

    இறைஞ்சும் பிள்ளைகளைத் தவிக்க விட்டேதான்
    இவ்வுலகு விட்டு விண்ணு லகில்
    இசை அரங்கேற்ற நாள் குறித்த
    இறையோன் கைபிடித்துச் சென்றீரே!

    சீக்கிரம் விண்ணுலகு விட்டு
    சிம்மக்குரல் மீண்டும் பிறப்பெடுப்பதற்கு
    சிந்தையில் ஒன்றுபட்டு மத பேதமற்ற
    சிவந்த கண்ணீரால் வணங்குகின்றோம்! வாரும் ஐயா!

    … நாகினி

    Share
  • அவ்வளவுதான் விளக்கம்!

    நாகினி

     

    மனமது புரியவில்லை
    உண்மை மனிதமெது விளங்கவில்லை
    வெற்று வாய் வார்த்தை
    வெறுமை துயரதை துடைப்பதில்லை

    தன் நிலை புரியவில்லை
    குழம்பும் மனமது தெளியவில்லை
    மதியில் தெளிவு இருந்தும்
    விளம்பும் பொய்யதை கழற்றவில்லை

    தினம் தேடியும் கிடைக்கவில்லை
    பால்வெண்மை மனதினோர் உயிர்க்கவில்லை
    முகம் பார்த்து பேசிடுவோர்
    அகம் காண விழையவில்லை

    வானளக்கும் வாயோரத்திலில்லை
    அகங்குளிரும் அன்யோன்யம் எனுமுணர்வில்லை
    போலி முகமணியா மனிதமெது
    விளக்கம் தெளியும் விளக்கமில்லை!!

    … நாகினி

    Share
  • அண்ணா!

    நாகினி

    images

    நடுத்தர குடும்பத்து நெசவாளர்
    நடராஜன் பங்காருஅம்மை பெற்ற மகவாளர்

    காஞ்சி தந்த பேச்சாளர்
    அண்ணா! திராவிட இயக்க மூச்சாளர்

    தமிழ் ஆங்கில எழுத்தாளர்
    மேடை நாடகப் புகழாளர்

    ராணி மங்கை மணவாளர்
    அண்ணா! அரசியல் வாழ்க்கைப் பயணாளர்..

    விடுதலை குடியரசு இதழாசிரியப் பொறுப்பாளர்
    திராவிட நாடு இதழ் தொடங்கிய மேலாளர்

    சுபப்பெலோஷிப் விருதுடன் யேல் பல்கலைக்கழகப் போற்றாளர்
    அண்ணா! மதராஸை தமிழ்நாடு ஆக்கிய பேற்றாளர்

    இறுதி ஊர்வலத்திலும் கின்னஸ் சாதனையாளர்
    அண்ணாசதுக்கத்தில் அஞ்சலிக்காகத் துயிலாளர்..

    அரசியல் இலக்கியம் இரு கண்ணாளர்
    அண்ணா! அடுக்குமொழி மேடைப்பேச்சின் மூச்சாளர்

    கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் வித்தாளர்
    இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய விந்தையாளர்

    அண்ணாநூற்றாண்டு நூலகம் உருவாக்கப் பெயராளர்
    அண்ணா! பல்நூற்றாண்டிற்கும் மறையாத புகழாளர்..!!

    .. நாகினி

    Share
  • வாழ்க்கை

    நாகினி

    pon3

    நேர்படப் பேசி
    நேர்படச் செயலாற்றி
    நேர்பட நடந்தால்
    நேர்படமாகும் நித்தியவாழ்க்கை

    கூர் புத்தியைக்
    கூர் நல்நூலால்
    கூர் ஆழ்படிப்பால்
    கூர் வழிநடத்தலே உயர்வாழ்க்கை

    பார் விளக்கும் பண்பை
    பார் போற்றும் தெம்பை
    பார் வணங்கும் நல்லோரைப்
    பார் தொழப்பற்றுதலே அருள்வாழ்க்கை

    நாள் கோள் தாள் ஒன்றும் குறைதரா
    கோள் மூட்டும் தீப்பண்பே
    நாள் முழுதும் துயர்தரும்
    தாள் எனவுணர்தலே சத்தியவாழ்க்கை..!!

    … நாகினி

    Share