Tag: செய்திகள்

  • பயிலரங்கு – அழைப்பிதழ்

    அன்புடையீர் வணக்கம்

    கூத்துப்பள்ளிக்கு நிதி திரட்டவும் , வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் , விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும் களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு ஒன்றினை தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் வட்டம் , மூங்கில் கோம்பை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வனப்பண்ணையில் நிகழ்த்தவிருக்கிறது .அது சமயம் கலை ஆர்வலர்கள் பங்கு பற்றி பலன் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறேன் .

    இவண்

    மு ஹரிகிருஷ்ணன்

    குறிப்பு;

    பயிற்சிக்கட்டணம்- ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மாத்திரம்

    முன்பதிவு செய்ய கடைசி நாள் 30-9-2013

    நிகழ்ச்சி நிரல்

    நாள் – 4-10-2013

    இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    காலை – 9 மணிக்கு

    பயிலரங்கு துவக்கி வைப்பவர் – முனைவர் – சே . ராமானுஜம்

    அமர்வு -1 -காலை -10 மணி

    தமிழ் தொல்கலைகள் – ஓர் அறிமுகம்

    முனைவர் – மு . இராமசாமி

    முனைவர் -நா -ராமச்சந்திரன்

    முனைவர் -தனஞ்செயன்

    எழுத்தாளர் – தவசிக்கருப்புசாமி

    நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

    அமர்வு -2- மாலை – 3- மணிக்கு

    தொல்கலைகள் – பயில்வதின் அவசியமும் தேவையும் .

    முனைவர் -செ .இரவீந்திரன்

    அமர்வு -3- மாலை – 4- மணிக்கு

    நவீனத் தமிழ் இலக்கியமும்- நாட்டார் கலைகளும் – ஓர் ஓட்டுறவை வேண்டி- உரையாடல்

    எழுத்தாளர் – நாஞ்சில் நாடன்

    எழுத்தாளர் -பெருமாள் முருகன்

    எழுத்தாளர் -இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

    எழுத்தாளர் -கரிகாலன்

    எழுத்தாளர் -தமிழ் செல்வி

    எழுத்தாளர் -சக்தி அருளானந்தம்

    அமர்வு -4- மாலை -6 மணிக்கு கொங்கு மண்டல கூத்திசை

    வழங்குபவர் – அம்மாப்பேட்டை செல்லப்பன்

    அமர்வு -5-இரவு 7 – மணிக்கு

    நல்லதங்காள் -கட்டப்பொம்மலாட்டம்

    கொங்குப்பட்டி கோவிந்தராஜா குழுவினர்

    நாள் – 5-10-2013

    நாள் – 5-10-2013

    இடம் – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    அமர்வு -1-காலை – 10 மணிக்கு

    பாவை உருவாக்கம் ( மரப்பாவை )

    துவக்கி வைப்பவர் – ஹேமநாதன் – உதவி இயக்குனர் -கலை பண்பாட்டுத்துறை -சேலம்

    சிற்பி மாணிக்கம்

    நிகழ்த்துமுறை – கட்டப்பொம்மலாட்டம்

    கொங்குப்பட்டி கோவிந்தராஜா

    நண்பகல் 1-மணிக்கு – உணவு இடைவேளை

    அமர்வு -2-மாலை – 3 மணிக்கு

    பாவை உருவாக்கம் & நிகழ்த்துமுறை -( தோற்பாவை )

    அம்மாபேட்டை கணேசன்

    அமர்வு -3 – இரவு 7 மணி

    லங்காதகனம் – தோற்பாவை கூத்து

    அம்மாபேட்டை கணேசன் – களரி

    6-10-2013

    அமர்வு -1 -காலை – 10 மணி

    நிகழ்த்து கலைஞர்களுடன் ஓர் சந்திப்பு

    துவக்கிவைப்பவர் -பியுஷ் மானுஷ் – சுற்றுசூழல் செயற்பாட்டாளர் மற்றும் நிர்வாகி – கூட்டுறவு வனப்பண்ணை-மூங்கில் கோம்பை

    கூலிப்பட்டி சுப்பிரமணி

    எகாபுரம் சுப்ரு

    மாணிககம்பட்டி கணேசன்

    வடிவேல்

    அம்மாபேட்டை கணேசன்

    பகல் 12 மணி

    பயிலரங்கு நிறைவு

    தொடர்புக்கு – ர .தனபால் -09677520060- 09894605371

    Share
  • Roja Muthiah Research Library

     

    Roja Muthiah Research Library

    invites you for 

     

     Madras Week Celebrations 

    ———————

     

     

    Programme

    ——————–

     

    18th August 2013

     

     

    5.00 p.m. | Inauguration of exhibition of Mr. C. L. D. Gupta’s “Line drawings of Madras, Queen of the Coromandel”

            

    Inauguration: Mr. P. Chellapan, Director, Palaniappa Brothers, Chennai

    Public Lecture: Mr. K. R. A. Narasiah, Writer

     

    (Exhibition will be open on all days from the time of inauguration till 24th August 2013)

     

     

    22nd August 2013

     

    5. 00 p.m. | Screening of documentary on Sekkizhar Adi-p-Podi T. N. Ramachandran

    by Ravi Subramaniam

     

    23rd August 2013

     

    5.00 p.m. | Public Lecture

     

    Re-inscribing religion as nation: Naveena Caiva (Modern Saivites), Tamil nationalism and the Dravidian movement

    Prof. Ravi Vaitheeswaran, Manitoba University, Canada

     

    24th August 2013

     

    5.00 p.m. | Public Lecture

     

    Thiru. Vi. Ka’s Chennai

    Prof. A. R. Venkatachalapathy, Madras Institute of Development Studies, Chennai

    Venue: 
    Roja Muthiah Research Library

    3rd Cross Road, Central Polytechnic Campus
    Taramani, Chennai 600 113
    Telephone: 2254 2551 / 2254 2552
    Share
  • ‘குருகுலம்’

    செல்வரகு

    (திங்கள் முதல்  வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு)

    நம் பாரம்பரியமான வாழ்க்கை முறை மற்றும் புராணம், ஸ்தோத்திரம், வேத 
    மந்திரங்கள் குறித்த அறிவை வளர்த்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ‘குருகுலம்’ என்ற நிகழ்ச்சி சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

    ஸ்ரீமத் பகவத்கீதை, அம்பாளின் திவ்ய நாமங்களை கொண்ட லலிதா ஸஹஸ்ரநாமம் போன்றவற்றை மாணவர்கள் உரையாடல் மூலம் கற்றுக்கொள்ளும்  விதத்தில் அமைக்கப்பட்ட அம்ருத பிந்து என்ற நிகழ்ச்சி  வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதை போன்ற நிகழ்ச்சியின்  தேவை குறித்து அறிந்து கொண்ட  சங்கரா டிவி “குருகுலம்” என்ற நிகழ்ச்சியை வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5pm மணிக்கு ஒளிபரப்புகிறது.

    கிராம மக்கள் உட்பட,இந்தியா  முழுவதும் இருந்து பலர் இதை போன்ற நிகழ்ச்சி  தேவை என்றுவலியுறுத்தியதை  தொடர்ந்து குருகுலம் தொடங்கப்பட்டது.
    நம் தேசத்தில், சிறுவர்களும், சிறுமிகளும் தேவதா ஸ்தோத்திரங்கள்,மந்திரங்கள் போன்றவற்றை கற்று வருவது குறைந்து வருவதற்கான காரணம், தகுதிவாய்ந்த ஒரு குரு மூலம் இவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமையாததே ஆகும். சிறுவர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் எளிமையான ஸ்லோகங்களில் தொடங்கி படிப்படியாக சற்று சிரமமான ஸ்லோகங்களை கற்று தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாகும். வேத பண்டிட் கே. எல். ஸ்ரீநிவாசன் மூலம் கற்றுத்தரப்படும் இந்நிகழ்ச்சி குறித்து பல தரப்பட்டமக்கள் தங்களின் சந்தோஷத்தையும்,
    திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

    Share
  • “திரையும் கறையும்”

    செல்வரகு

    (சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு)

     

    சத்தியம் தொலைக்காட்சியில் சனிகிழமை தோறும்  இரவு 9 மணிக்கு “திரையும் கறையும்” என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திரைப்படங்களின்  சீர் கேடுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது .

    வெற்றி பெற்ற திரைப்படங்களில்  கூட இருக்கும் எதிர்மறை சமாச்சாரங்களைக் கண்டு  விமர்ச்சிக்கும் பொறுப்பாக  “திரையும் கறையும்” வெளிவந்து  கொண்டிருக்கிறது .

    காட்சிகளிலும் வசனங்களிலும் ஆடை அலங்காரங்களிலும் இருக்கின்ற உருத்தல்களையும் – முரண்பாடுகளையும் கண்டிக்கும் இந்நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள் .

    Share
  • “பகல் மின்னல்கள்”

    செல்வரகு

    “பகல் மின்னல்கள்”

    (தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை)

    சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை “பகல் மின்னல்கள்” என்ற நேரடி செய்தித் தொகுப்பு சிறப்புப் பார்வையாக ஒளிபரப்பாகி வருகிறது .

    அன்றாடம் நடக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் திறமையான செய்தியாளர்களின் நேரடித் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றன.

    சட்டம் – ஒழுங்கு – அரசியல் – பொருளாதாரம் என்று, நடப்பு நாள் தகவல்களின் சரியான புள்ளி விவரங்களை இந்தப் பகல் மின்னல்கள் பதிவாக்கி வருகின்றன.

    செய்தியறையிலிருந்து அன்றைக்குரிய செய்திகள் மக்கள் குரலாக எடுத்து வரப்பட்டு , ஒளிபரப்பாகி வரும் பகல் மின்னல்களைக் காணத்தவறாதீர்கள் .

    Share
  • Inauguration of the “International year of water cooperation – 2013”

     

    RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING

          Nemili, Sriperumbudur – 602 105

     

     

     

    The Management, Principal, Staff and Students cordially invite for

     

    Inauguration of the “International year of water cooperation – 20 on 22nd April 2013

     

    CHIEF GUEST

    Dr. Sultan Ismail

     

    Managing Director

    Ecoscience Research Foundation, Chennai.

     

    Have kindly consented to facilitate the function at 9.00 am at Seminar hall.

     

    Mr.Jacob George      Mr.George Jacob

    General Secretary            CEO

     

     

    Dr.H.Ranganathan        Mrs. G.Anne Josephine

    Principal           Joint Director

    Program Schedule

     

     

    Venue – Seminar hall

     

     

    Time    Event

     

     

    10.30 to 10.35 a.m  Tamil Thai vazthu

    10.35 to 10.40 a.m  Welcome Address

    10.40 to 10.50 a.m  Theme of Celebration by Joint Director    10.50 to 10.55 a.m  Release of Calendar of Events by Chief Guest

    10.55 to 11.05 a.m  Felicitation by Principal

    11.05 to 11.25 a.m  Address by the Chief Guest

    11.25 to 11.35 a.m  Annual report of Communication club

    11.35 to 11.40 a.m  Prize Distribution by Chief Guest

    11.40 to 12.00 p.m  Awareness program on Water Conservation

    12.00 to 12.05 p.m  Vote of Thanks

      12.05 to 12.10 p.m  National Anthem

    12.10 to 12.30 p.m  Workshop on  Save Water save Life

     

     

     

    Share
  • தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

    பத்திரிக்கைச்செய்தி

    21.04.13 ஞாயிற்றுக்கிழமை  தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்

    தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 90 சதவீதத்தினர் பருத்தி நூலை வைத்துதான் நெசவு செயது வருகிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் விசைத்தறித் துறை பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.  அதன்மூலமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஜவுளித் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாகக் கொண்டுவர வேண்டுமென்று அதன் தலைவர் எம்.எஸ். மதிவாணன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

    சமீபகாலங்களில் பல இன்னல்களை விசைத்தறி தொழிலாளர்களும் அதை சார்ந்த மற்ற தொழிலாளா;களும் சந்தித்த போதிலும் அவ்வப்போது ஜவுளித் துறை செயலர் மற்றும் அமைச்சரை அணுகி எங்களது குறைகளை கோரிக்கையாக சமர்ப்பித்து இருந்தோம்.  ஆனால், குறிப்பாக ஆறு மாதங்களாக  அமுல்படுத்தப்படாமல் இருந்த 11 ரக ஒதுக்கீட:டுச் சட்டத்தை காரணம் காட்டி விசைத்தறித் தொழிலாளர்களை அதிகாரிகள் அச்சுறுத்தியும் கைது செய்து விடுவோம் என்று கூறி வருவதனால் விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்ய முடியாமல் மிகவும் பயந்து உள்ளார்கள்.  இந்த பதினோரு ரக சட்டத்தில் வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற முக்கிய ரகங்கள் இடம் பெற்று உள்ளது.  விசைத்தறியில் இந்த ரகங்கள் எல்லாம்  அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.  ரகங்களின் உற்பத்தியை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்றால் அதை ஈடு செய்வதற்கு கைத்தறியினால் முடியாதது மட்டுமல்லாமல் கைத்தறியில் செய்தால் அதனுடைய விலை மிகவும் அதிகமாகிவிடும்.  தேவைக்கேற்றாற்போல் துணிகள் கிடைக்காது. இதனை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதை தாமதித்து வந்தது.  ஆனால் சில இடங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிக் கூடங்களுக்குச் ;சென்று சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று சொல்லி அச்சுறுத்தி வருகிறார்கள்.  மேலும் காட் சட்டத்தின்படி உற்பத்தி செய்வதற்கு தடை இல்லை என்று இருக்கிறது.  வெளிநாட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட ரகங்களை இறக்குமதி செய்யலாம் என்றும் அரசு சட்டத்திலும், ஒப்பந்தத்திலும் கூறப்படுகிறது.  அப்படியிருக்கும்போது இந்திய நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் உபயோகப்படுத்தப்டும் ரகங்களை நெய்யக்கூடாது  இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

    அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு இயற்றியது.  அதன்மூலம் விசைத்தறியில் சாதாரண மக்கள் அணியும் துணிகளான வேஸ்டி, சேலை, துண்டு, சர்டிங் போன்ற ரகங்களை நெய்தால் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கைக எடுக்கப்பட்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது.  இதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடுத்து இந்த சட்டத்தை தடை செய்தோம்.   பின்பு உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த சட்டத்தை எந்த ஒரு தொழிலும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இதற்கு ஒரு ஆலோசனைக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கூறியது.  ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் விசைத்தறியாளர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.  அவர்களுடைய பாதிப்பை மத்திய அரசு சிறிதும் கவனம் கொள்ள வில்லை.  எங்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

    ..2..
    எந்த மாநிலத்திலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை.  ஆனால், தற்போது கோவை, திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சில அதிகாரிகள் விசைத்தறிப் பட்டறைக்கு வந்து விசைத்தறியாளர்களை மிரட்டி அச்சுறுத்தி வழக்கு தொடுத்து வருகிறார்கள்.  இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் தமிழ்நாட்டிலுள்ள 3 இலட்சம் தறிகளினுடைய உற்பத்தி நிறுத்தப்பட்டு விடும்.  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.  பெருமளவில் உற்பத்தி குறையும்.

    ஆகையினால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் ஜவுளித்துறை அமைச்சர், செயலர் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் எங்களது கோரிக்கையினை பரிசீலிக்குமாறும மனுவினை சமர்ப்பித்து உள்ளோம் என்று தமிழ் நாடு விசைத்தறி சம்மேளத்தின் தலைவா; எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

    இருப்பினும் மென்மேலும் விசைத்தறி நெசவாளர்கள் அச்சுறுத்தப்படுவதினால் நமது கோரிக்கையினை அரசாங்கத்திற்கு தெரிவிப்பது மட்டுமின்றி விசைத்தறி தொழிலுக்கு நல்ல திட்டங்களை வழங்கி காப்பாற்றுமாறும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எங்களது கோரிக்கையினை தெரிவிக்க உள்ளோம்.  இதன் தொடர்ச்சியாக வருகின்ற 21.04.13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சோமனூரில் அமைந்துள்ள லட்சுமி மகால் கல்யாண மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் மகாசபைக் கூட்டத்தினைக் கூட்ட உள்ளோம்.  இதுசமயம் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், விசைத்தறி நெசவாளர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளார்கள் என்றும் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தெரிவித்தார்..

     

    Share