Tag Archives: தி.இரா.மீனா

எட்டுக் கோணல் பண்டிதன் – 15

தி. இரா. மீனா              அத்தியாயம் பத்தொன்பது ஜனகர் தன் அனுபவ ஞானத்தால் விகற்ப நினைவனைத்தையும் நீக்கி, சுயமஹிமையில் நிலைத்துள்ள தனக்கு அதைத் தவிர வேறெதுவும் எண்ணத்தில் இல்லை  என சுவானுபவம் உரைத்தல் இவ்வத்தியாய மாகும். 1. தத்துவ ஞான அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு மனதிலிருந்து பலவகையான ஆலோசனைகளாகிய முட்களை வெளியே எடுத்தேன். 2. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு அறம், பொருள், இன்பங்களேது? துவைதமேது? அத்வைதமேது? 3. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு இறந்த, நிகழ் எதிர் காலங்களேது? ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 14

தி. இரா. மீனா              அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி 71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது? 72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது ? 73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான். 74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற  மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 13

தி. இரா. மீனா              அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி 41. தனக்குள் அமைதி அடைகிற தீரனுக்கு உண்மை ஒடுக்கம் என்றும் இயல்பாக இருக்கும். கட்டுப்பாடற்றவருக்கு அது இயல்பாகாது. 42. இருப்பை ஒருவன் நினைக்கிறான். மற்றொருவன் ஒன்றுமில்லையெனக் கருதுகிறான். இன்னொருவன் இரு பாவனைகளுமில்லாமல் கலக்கமின்றி இருக்கிறான். 43. மதிகெட்டவர்கள் மயக்கத்தால் இரண்டில்லாத தூய ஆத்மாவை மனதால் உணராமல் செயல்படுவதால் ஆயுள் முழுவதும் அவர்களுக்கு அமைதியில்லை. 44. மனிதர்களின் புத்தி பிடிப்பற்றிருப்பதில்லை. முக்தனது புத்தி எக்காலத்திலும் சிறிதும் பிடிப்பில்லாமல் ஆசைகளற்று ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 12

தி. இரா. மீனா             அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி 11. விகற்பமில்லாத தன்னிலை உடையவனுக்கு அரசாட்சியிலும்,பிச்சை எடுப்பதிலும்,லாப நஷ்டங்களிலும், மக்கள் கூட்டத்திலும், காட்டிலும் விஷேஷமென்று எதுவுமில்லை. 12. இதைச் செய்தோம், இதைச் செய்யவில்லை என்னும் இரட்டையிலிருந்து விடுபட்ட யோகிக்கு அறம், பொருள், இன்பங்கள் எங்கேயுள்ளன! 13. ஜீவன் முக்தராகிய யோகிக்குக் கடமையேதுமில்லை. மனதில் பற்றுதல் இல்லை. இயல்பாக இருப்பதே அவர் தொழிலாகும். 14. நினைப்பனைத்தின் முடிவிலே இளைப்பாறுகின்றவருக்கு மோக மெங்கே, உலகமெங்கே, தியானமும், விடுதலையும் எங்கே? 15. ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 11

தி. இரா. மீனா                  அத்தியாயம் பதினேழு ஆனந்த நிலையையும் ,உயிரியல்பையும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இந்த அத்தியாயமாகும். 1. மனநிறைவும், இந்திரிய அமைதியும் பெற்று தனிமையில் எவன் என்றும் இன்பமடைவானோ அவனே ஞானப் பயனையும், யோகப் பயிற்சியின் பயனையும் அடைந்தவனாவான். 2. தன்னிடமே பிரமாண்டத் தொடரெல்லாம் நிறைந்துள்ளபடியால், உண்மை உணர்ந்தவன் இவ்வுலகில் எந்தக் காலத்திலும் துன்பமடைய மாட்டான். 3. ஈச்சம் குருத்தை உண்டு இன்பமடையும் யானையை வேப்பிலை மகிழ் விப்பதில்லை. அது போலத் ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 10

தி. இரா. மீனா                  அத்தியாயம் பதினைந்து ஞானமயப் பரம்பொருள் நீ; எல்லாம் நீயொருவனே. விகற்பமும் ,நினைப்பும் இல்லாமல் சுகமாக இரு என்று  அஷ்டவக்கிரர் ஜனகருக்கு உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும். 1. ஸத்வபுத்தி உண்மை உபதேசத்தால் கிருதார்த்தனாகிறான். மற்றவன் ஆயுள் முழுவதும் தேடி மயங்குகிறான். 2. விஷயச் சுவையறுதலே வீடு; விஷயச் சுவையே பந்தம்; ஞானம் இவ்வளவே. இஷ்டப்படி செய்து  கொள். 3. இந்த உண்மையறிவு வாய் ஜாலமுடையவனும், மேதாவியும், முயற்சி மிகுந்தவனுமான ஒருவனை ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 9

தி. இரா. மீனா                  அத்தியாயம் பன்னிரண்டு உடல், வாக்கு, உள்ளச் செயல்களில் முற்றிலும் பற்றற்று, தன்னிலை நிற்றலை ஜனகர் அஷ்டவக்கிரருக்குக் கூறுவது இந்த அத்தியாயமாகும். 1. முதலில் உடல் செயல்களிலும், பின்பு வாக்கை வளர்ப்பதிலும், அதன்பின் நினைப்பிலும் வெறுப்புற்றதனால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன். 2. சப்தாதி விஷயங்களில் மகிழ்ச்சியில்லாததாலும், ஆத்மாவின் காண முடியாத தன்மையாலும் மகிழ்வும் துயரமுமின்றி   இவ்வாறே நான் நிலைத்துள்ளேன். 3. விபரீதத் தோற்றம் முதலியவற்றால் மனம் சிதறும் போது சமாதி ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

தி. இரா. மீனா நிக்களங்க சென்னசோமேஸ்வரா “வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண் பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ? இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம் சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால் அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால் அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன் நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “ நிஜமுக்தி இராமேஸ்வரா “மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர் பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 8

தி. இரா. மீனா இரட்டைகளை விடுவதால் பரஞானம் உண்டாகும் என்றும், ஸம்ஸ்கார நாசமே ஸம்சார நாசமென்றும், அதுவே உண்மை நிலை என்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் போதிப்பதே இந்த அத்தியாயமாகும்.                  அத்தியாயம் ஒன்பது 1. செய்ததும், செய்யாததும் பிற இரட்டைகளும் எப்பொழுது எவருக்கு ஓய்ந்தது என்றிங்கே அறிந்து உதாசீனமுற்று சங்கல்பமற்று தியாகமே சிறந்ததென்றிருப்பாய். 2. அன்பனே! யாரோ ஒரு புண்ணியவான் உலகியலை உணர்ந்து வாழ்க்கை வேட்கையும், போகவிருப்பும், அறிதல் வெறுப்பும் அடங்கப் பெறுகிறான். 3. ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

தி. இரா. மீனா இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர். ஆனந்த சித்தேஸ்வரா “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை அர்ப்பணிப்பை மீறக்கூடாது அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை அமுதமானாலும் பரவாயில்லை ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை, படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி, அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை ஊரும் ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 7

தி. இரா. மீனா                   அத்தியாயம் ஐந்து உலகமும், உலக அனுபவங்களும் கற்பனையென்று உணர்ந்து அனைத்திலும் சமத்துவமுற்று சொரூபத்தில் கரைந்து போ என்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும். 1.எதனோடும் பற்றும் உனக்கில்லை; தூயவனாகிய நீ துறக்க விரும்புவதேன்? அனைத்துணர்வுகளையும்  கரைத்து நீ அவ்வாறே கரைந்து போ. 2. கடலிலிருந்து எழும் குமிழிகள் போல உலகம் உன்னிலிருந்து உதிப்பதில்லை. ஒன்றாகிய ஆத்மாவை உணர்ந்து நீ அவ்வாறே கரைந்து போ. 3. கயிற்றிலரவு போல ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

தி. இரா. மீனா அக்கம்மா கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும். 1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ? அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ? கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ? தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன் இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர் அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது. சரணரின் மாட்டுக் கொட்டகையாம் ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“ 2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில் பின்பற்ற முடியாது. இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின் வழிபட முடியாது. ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப் பின்பற்றவில்லையாயின் சேர இயலாது. ஆசாரமே ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 6

தி. இரா. மீனா                      அத்தியாயம் மூன்று இந்த அத்தியாயத்தில் அஷ்டவக்கிரர் அகப்பற்றையும், புறப் பற்றையும் நிந்தித்து ஞானியின் இயல்பை ஜனகருக்கு விளக்குகிறார். அழிவில்லாத ஒன்றாகிய ஆத்மாவை உண்மையில் உணர்ந்த ஆத்ம ஞானியும் தீரனுமாகிய உனக்குப் பொருள் தேடுவதில் எப்படி மகிழ்ச்சி உண்டாக முடியும் ? கிளிஞ்சல் என்று அறியாததால் வெளித் தோற்றத்தில் ஆசை ஏற்படுவது போல, ஆத்மாவை உணராத போது மோகத்தால் காணும் விஷயங்களில் விருப்பமுண்டாகும். கடலில் அலைகள் போல ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

தி. இரா. மீனா ஹெண்டத மாரய்யா கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும். “மண்ணெனும் குடத்தின்  நடுவே பொன்னெனும் கள் உற்பத்தியானது பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது. இந்த போதையில் மூழ்கியவர்களை எப்படி மிக உயர்ந்தவர்களென்பது? பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“ ஹொடே ஹூல்ல பங்கண்ணா புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும். 1. “கட்டையை நெருப்பில் வைக்க ’நான் இருக்கிறேன், வேண்டாமென’ உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ? ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 5

தி. இரா. மீனா                அத்தியாயம் – 2 தன்னை ’உணர்தல் ’ ‘இதுவரை மாயையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நான் இப்போது அதிலிருந்து விடுபட்டு குறைபாடுகளற்று, அமைதியானேன்’ என ஜனக மன்னர் தத்துவத்தின நுட்பமுணர்ந்து வியப்புடன் சுவானுபவம் உணர்த்தல் இரண்டாவது அத்தியாயமாகும். இதில் இருபத்தைந்து வசனங்கள் உள்ளன. படைப்பிற்கப்பால் குற்றமற்ற அமைதிமயமான அறிவே நானாகயிருக்க இத்தனை காலம் மயக்கத்தில் நான் ஏமாறினேனே. நானொருவன் இந்த உடலை ஒளிர்விப்பது போல உலகத்தையும் ஒளிர்விக்கிறேன். ஆதலால் உலகமனைத்தும் என்னுடையது ...

Read More »