Posts Tagged ‘மீ. விசுவநாதன்’

Page 1 of 1512345...10...Last »

“தேசத்தை நேசி”

  மீ.விசுவநாதன் உதிரத்தைப் பாலாகத் தந்தாள் - தாய் உணர்வோடு தாய்நாடு என்னும் - நல் உயர்வினைச் சிந்தையில் வைத்தாள் ! அதிஞானம் பெற்றாலும் என்றும் - மன அகங்காரம் கொள்ளாத பண்பால் – உள அமைதியைப் போற்றிடு என்றாள் ! அதிராத வார்த்தையைப் பேசி -நீ அன்போடு தேசத்தை நேசி -என அறிவிலே தெளிவினைத் தந்தாள் ! புதிரான புவனத்தில் நித்தம் - புதுப் பூப்போலே ஆனந்த மாக - நீ... Full story

“ஸ்ரீ சிவரமணார்ப்பணம்”

மீ.விசுவநாதன் பிறப்பே இலாத உனக்காக - ஒரு பெரிய விழாவே நடத்துகிறேன்- உன் பேரையும் சொல்லிநா(ன்) ஆடுகிறேன் பிறப்பாய் எடுத்த ரமணரிடம் - உன் பித்தாய் உருகி வணங்குகிறேன் - ஒரு பேச்சுமே இல்லைதான் வாயடைத்தேன் இறப்பும் இனிதாய் இருப்பதற்கு - உன் எளிய ... Full story

சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”

சிவபிரதோஷம் -
மீ.விசுவநாதன் ரவிவர்மா உன்னை விழுந்து வணங்காமல் - வெறும் உதவாக் கரைகளின் கால்களிலே - பெரும் உதவிகள் கேட்டே வணங்குகிறேன். தென்னை மரமாய் உயர்ந்தாலும் - பெரும் திருட்டுத் தனங்களைச் செய்கின்ற - தேசத் திருடரின் முன்னே கிடக்கின்றேன் . என்னே நடிப்பு பணத்திற்காய் - இங்கே இருக்கும் இழிந்தவர் செய்கின்றார் - இதை எப்படி ஈசா ரசிக்கின்றாய் !... Full story

ஒருஆயுள் கைதியின் கோரிக்கை

  மீ.விசுவநாதன் தேவைக்கு மேலொரு காசினைத் தேடினால் நான்குற்ற வாளிதானே! நாவைத்தான் கட்டிடா நானுமோர் நாட்டிலே பொய்கூறும் பிள்ளைதானே ! சேவைக்கு நெஞ்சிலே கொஞ்சமும் சிந்தனை செய்யாத கள்ளனானேன் ! சாவைத்தான் எண்ணிடா மானுடச் சாத்திரம் கூறுமொரு வேடனானேன் ! மாடாக நித்தமும் வேலைசெய் மாந்தரின் கூலியிலே சூடுவைதேன் ! கோடானு கோடியாய்ச் சூதினைக் கொட்டியே நல்லோரை நோகடித்தேன் ! கூடாத நட்பினால் ... Full story

கலைச்செல்வி ஜெயலலிதா

கலைச்செல்வி ஜெயலலிதா
  மீ.விசுவநாதன் கலைச்செல்வி ஜெயலலிதா நல்ல கீர்த்தி கற்பூர புத்தியுடன் துணிவும் கொண்ட தலைவியென தமிழ்நாட்டை ஆண்ட போதும் தரணியே மெச்சுகின்ற அம்மா வானார் ! அலையலையாய்ப் புதுத்திட்டம் போட்டு ஏழை அடிவயிற்றுப் பசிதன்னை போக்கி வந்தார்! நிலையெனவே அவர்புகழ்தான் ஓங்கி மக்கள் நெஞ்சினிலே பல்லாண்டு அம்மா வாழ்வார் ! Full story

காதோடு ஒரு கவிதை

  மீ. விசுவநாதன்   காகிதம் மேலே பறக்கிறது - பணக் காகிதம் போலே தெரிகிறது போகியாய்ப் போன மனிதனுக்கு - உள் புத்தியில் சூடு வலிக்கிறது (காகிதம் .....) இருட்டிலே கொட்ட மடிக்கிறது - ஒளி இருப்பதைப் பொய்மை மறைக்கிறது திருட்டிலே காலம் கடந்தவர்க்கு - இன்று திக்கெலாம் அச்சம் அடைக்கிறது (காகிதம் .....) பதுக்கிய செல்வம் கவலையென - தெருப் பாடகன் பாட்டு ஒலிக்கிறது செதுக்கிய சிற்பம் சிரிப்பதுபோல் - என்... Full story

தீபாவளி

தீபாவளி
  மீ.விசுவநாதன் வெற்றிக் களிப்புதான் தீபா வளியாம் - அக தீப ஒளியில் தெரிவதுவாம் ! நெற்றித் திலகமாய் நின்று நிலைத்து - அது நிறைந்த அன்பைப் பகிர்வதுவாம் ! பிள்ளைக் குணமெனக் கூடி மகிழ்ந்து- அது தினமும் அகிலம் சுற்றுவதாம்! கள்ளம் கபடமே இல்லா உறவாய் - இக் கலியை அழிக்கத் தோன்றுவதாம்! புதுமை பலவெனத் தேடித் பிடித்து - ... Full story

ஜெய் ஸ்ரீராம்

ஜெய் ஸ்ரீராம்
  மீ. விசுவநாதன் தருமத்தின் தோற்றமென இராமனையே காணும் தரணியிலே பிறந்ததற்குப் புண்ணியங்கள் செய்தோம் ! கருமத்தை, பக்தியினை, கருணையின் சார கல்யாண குணமான நட்பினது ஆழ உருவத்தைக் கண்டன்றோ உயிராக எண்ணி ஒவ்வொரு நொடியிலுமே உள்ளொளியைப் பெற்றுக் கருவத்தை அழிக்கின்றோம் ; கவலையையும் இன்பக் கடமையென ஏற்கின்றோம் ஸ்ரீராமன் பேரால் ! (1) மனிதனென ... Full story

அரிய பரிசு

அரிய பரிசு
  மீ. விசுவநாதன் போக்கிடம் காணாத போது புகலிடம் தந்தவரைப் போலே பூக்களைத் தூவியொரு பாதை போட்டவர் பேரென்ன தோழி ! தாக்கிடும் வன்பசியைப் போக்கத் தாய்யெனக் கைக்கொண்டு சேர்த்து ஆக்கிய நல்லுணவு தந்த அன்பினைப் போற்றுகிறேன் வாழி! மூடனாய் ஊர்சுற்றி வந்த முகத்தினை நேசமுடன் பார்த்துச் சூடனாய்க் கல்விதனைக் ... Full story

கலைவாணி

கலைவாணி
  மீ.விசுவநாதன் கற்கும் குணமே கலைவாணி ! கர்வம் துளியும் தலைகாட்டா சொற்ப அறிவும் கலைவாணி ! சுடரும் ஒளியாய் விரிவானாய் நிற்கும் கருணை கலைவாணி ! நிசமோ பொய்யோ உலகத்தில் அற்பப் பொருளின் உயிர்க்குள்ளும் ஆழ்ந்து கிடப்பாள் கலைவாணி ! புத்தம் புதிய மலர்போலே பூமி முழுதும் அவள்மாயை ... Full story

பஞ்ச பூத சக்தி

  மீ.விசுவநாதன் எவ்வுரு வானால் எனக்கென்ன - உனை எளிதினில் உணர்ந்திட முயல்கின்றேன் ஒவ்வொரு பாவாய் "நா"வைத்து - உன் ஒளிமிகு அடிகளில் பயில்கின்றேன் ! சப்தமாய் வாக்கில் வரும்போது - உன் சத்திய ஒலிதனைக் கேட்கின்றேன் கொப்பெலாம் சாயக் காற்றடித்தால் -உன் குரல்தரும் இசையென ரசிக்கின்றேன் ! தீபமாய் நின்று எரிகையிலே - உன் தெளிவுரு அழகினைத் தொழுகின்றேன்! கோபமாய்க் கடலாய்க் குதிக்கையிலே -வன் கொடுமையை எதிர்க்கிற குணங்கண்டேன் !... Full story

திருவோணம்

திருவோணம்
-மீ.விசுவநாதன்     திருவேணும் என்போர்க் கெல்லாம்    -திருமாலின் பார்வை வேணும்! திருவோண நாளில் பெருமாள்    -திருவடியை எண்ண வேணும்! ஒருஅடியால் உலகைத் தொட்டு    -ஒருஅடியை விண்ணில் வைத்து மறுஅடியைத் தலையில் ஆழ்த்தி    -மகாபலிக்கு ஞானம் தந்தான்!  சிறுவனாக வந்து உள்ளச்     -செருக்கினைத் துடைத்த போது மறுபிறவி இல்லா மன்னன்     -மகாபலிக்கு மண்ணில் மீண்டும் வரும்படிக்கு வரமும் தந்தான்!     -வரவேற்று மகிழ்ந்த மக்கள் திரும்பியதம் மன்னன் கண்ட     -திருவோண தினமே வாழி!     Full story

ஊக்க சக்தி

  மீ.விசுவநாதன் தென்பொதிகை மலைத்தொடரில் தெரியும் அந்த தெய்வீக அழகினிலே சொக்கிப் போவேன் ! முன்பார்த்த இடங்கள்தான் என்ற போதும் முகம்சுளிக்கத் தோன்றாது முன்னே நிற்பேன் ! சின்னதானப் பறவையெனப் பறந்து அங்கே சிலநொடிகள் தவமிருந்து மறந்து போவேன் ! முன்னதானப் பிறப்பெல்லாம் முன்னே வந்து முகம்தடவி முத்தமிட மகிழ்ந்தி ருப்பேன் ! பிறப்பென்றும் இறப்பென்றும் இருந்த போதும் பெரியதொரு கவலைகளில் கரைய மாட்டேன் சிறப்பெல்லாம் இயற்கைவளக் ... Full story

ஆனை முகன்

ஆனை முகன்
 மீ.விசுவநாதன்  மஞ்சள் பிடித்து வைத்து மனத்தோடு புல்லைப் போட்டு கொஞ்சம் அமைதி யோடு குணவானே பிள்ளை யாரே தஞ்சம் அடைந்தே னுன்னை தவறிலாத பொழுதைத் தந்து நெஞ்சி லிருப்பாய் என்றால் நினைவெல்லாம் நிறைந்தி ருப்பான் ! வேலை துவங்கி னாலும் வேதாந்தம் கற்கும் போதும் மேலை நாட்டிற் காக... Full story

சந்தோஷச் செய்தி

மீ.விசுவநாதன் எத்தனையோ நல்லவைகள் இங்கே - அந்த இடமெல்லாம் நானிருக்க வேண்டும் சத்தமின்றி செய்கின்ற நன்மை - என் சந்தோஷச் செய்தியாக வேண்டும் ! கல்வியிலே வல்லவர்கள் வாழும் - இடம் கண்டுகண்டு நான்கூட வேண்டும் வல்வினைகள் ஆக்கமுடன் ஓங்கும் - என் வளர்தேசம் நானறிதல் வேண்டும் ! நீர்நிலைகள் பூந்தோட்டம் யாவும் - எந்த நிலையினிலும் தூய்மையாக வேண்டும் ஊர்களுக்கே உபதேச மின்றி - என் உள்ளமிதை உள்வாங்க வேண்டும் ... Full story
Page 1 of 1512345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.