தொடர்கள்

திருவள்ளுவர் யார்? – 4

புதுக்கோட்டை பத்மநாபன் திருவள்ளுவர் கூறும் ஒழுக்கம் என்பது, அவரவரின் வர்ணத்திற்குரிய ஒழுக்கம்தான். “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” இந்தக் குறட்பா, ஓர் அந்தணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓதல் முதலிய ஆறு தொழில்களே அந்தணருக்கு உரியவை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்களில் சிலர் தங்களது அறுதொழிலை விட்டுவிட்டு, அத்தொழில்களுக்கு அடிப்படையான வேதத்தையும் மறந்துவிட்டு, வேறு தொழில்களை நாடிச் சென்றிருக்கின்றனர். வேள்வி முதலிய வைதிக கர்மங்களை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை ‘வேளாப் பார்ப்பான்’ என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகச் ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-38

தி. இரா. மீனா ஹடப்பத ரேச்சண்ணா தாம்பூலப் பெட்டி சுமக்கும் காயகம் இவருடையது. கல்யாண் புரட்சியின் போது சரணரின் கூட்டத்தோடு உளுவி வரை சென்றவர். ’நிக்களங்க கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும். “பக்தன் மும்மலங்களில் மனம் வைப்பானோ? துறவி இந்திரியத்தில் ஈடுபட்டு மீண்டும் துறவியாவானோ? இவ்விரண்டின் எண்ணம் உறுதிப்படுமானால் மலரின் மணம்போல் ,கண்ணாடியின் பிம்பம் போல் எரியும் கற்பூரத்தின் நிலை போலாம் நிக்களங்க கூடலசென்ன சங்கம தேவனான அடியான்.“ ஹாதரகாயகத மாரய்யனின் புண்ணியஸ்திரி கங்கம்மா  மாரய்யனின் மனைவி இவர். ’கங்கேஸ்வரா’ இவரது முத்திரையாகும். ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 94

திருச்சி புலவர் இராமமூர்த்தி சேதிநன்   னாட்டி   னீடு   திருக்கோவ   லூரின்  மன்னி மாதொரு  பாக  ரன்பின்   வழிவரு  மலாடர்   கோமான் வேதநன்  னெறியின்  வாய்மை  விளங்கிட   மேன்மை  பூண்டு காதலா   லீசர்க்   கன்பர்   கருத்தறிந்   தேவல்  செய்வார்; பொருள்: இனி, அடுத்த புராணமாகிய  மெய்ப்பொருள்  நாயனார் வரலாற்றைக் குறித்து சேக்கிழார் பாடும்பாடல்களின் நயங்களைக் காண்போம் நன்மை பொருந்திய சேதி நாட்டிலே திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வாழ்ந்த காலத்தில் உமாதேவியாரை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானிடத்தில் வைத்த அன்பிலே வழிவழியாக வருகின்ற மலாடர் கோமானாகிய ...

Read More »

திருவள்ளுவர் யார்? – 3

புதுக்கோட்டை பத்மநாபன் திருவள்ளுவர் வர்ணாஶ்ரம தர்மங்களுக்கு எதிரானவர் என்றும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை முன் வைப்பவர்கள், தங்கள் கருத்துக்கு ஆதாரமாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” என்ற குறட்பாவை மேற்கோள் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டும் இந்தக் குறட்பாவில் பிறப்பால் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு உண்டு என்றுதான் திருவள்ளுவர் கூறுகிறார். எப்படியென்று பார்ப்போம். இக்குறட்பாவின் உட்பொருளைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ...

Read More »

பரிமேலழகர் உரைத் திறன் – 6

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006.  மின்னஞ்சல் முகவரி –  [email protected] இடைச்சொல் ‘உரைச்சொல்’ ஆன கதை! முன்னுரை ‘அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டதால் ‘கூறியது கூறலும் குன்றக் கூறலும்’ திருக்குறளில் அமைந்திருப்பதாகக் கூறுவாரும் உளர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ (314) எனக் கூறிய பிறகும் ‘இன்னாச் செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’ (987) எனக் கூறுவானேன்? என்பாரும், ...

Read More »

கதை வடிவில் பழமொழி நானூறு – 15

நாங்குநேரி வாசஸ்ரீ பாடல் 31 ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயனின்றே; ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும் ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’. பழமொழி – ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’ இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியல. ஞாயிற்றுக்கிழமை நிதானமா வேலையத் தொடங்கி ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இன்னிக்குனு பாத்து இப்படி ஒரு சோதனை. இப்ப அந்த அம்மா சொன்ன எல்லாத்தையும் உடனே செஞ்சாகணும். மொதல்ல போலீஸ் ஸ்டேஷன் அப்புறம் பாங்க். உலகமே தலைகீழா ஆனாலும் இந்த வயிறு அடங்க மாட்டேங்குது. ...

Read More »

திருவள்ளுவர் யார்? – 2

புதுக்கோட்டை பத்மநாபன் திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து. “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்” “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.” “அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால், ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் தங்களது வேதத்தை மறந்து விடுவார்கள். பசுமாட்டில் பால் குறைந்துவிடும். அந்தணர்களின் வேதமும் அவர்களின் வேத தர்மமும் அரசனின் செங்கோலைப் பற்றியே நிற்கின்றன” என்பது தான் இந்த இரண்டு குறட்பாக்களின் பொருள். ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 30

நிர்மலா ராகவன் (செயலும் விளைவும்) ஒரு செயல் எண்ணத்திலிருந்து பிறக்கிறது. எண்ணமோ உணர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. அண்மையில் சீனாவில் நடந்தது இது. பெற்றோர் இணங்காததால், ஃபூவும் (Foo) அவன் காதலியும் பிரிய நேரிட்டது. இருவருமே பெற்றோர் நிச்சயித்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு, ஆளுக்கு ஒரு பிள்ளையும் பெற்றார்கள். பல வருடங்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் சந்திக்க, பழைய காதல் துளிர்த்தது. விவாகரத்து பெற்று, திருமணம் செய்துகொண்டார்கள். முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளை இருவருமே உதறித் தள்ளினார்கள். ஃபூவின் மகள் தாயுடனும், மனைவியின் மகன் தந்தையுடனும் வசிக்க ஏற்பாடு செய்துவிட்டு, ...

Read More »

திருவள்ளுவர் யார்? – 1

புதுக்கோட்டை பத்மநாபன் சில நாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது. திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கிய விஷயம். இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள். திருக்குறளில் உள்ள ஞானச் செழுமை, சொல்லாட்சி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அதை எழுதிய திருவள்ளுவர், ஓர் ஈடு இணையற்ற ஞானி என்று தான் சொல்லவேண்டும். சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய நூல், திருக்குறள். அந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு ...

Read More »

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

தி. இரா. மீனா சொட்டாள பாச்சரசா பிஜ்ஜளன் அரண்மனையில் எழுத்தராக இவரது காயகம். ’சொட்டள’ இவரது முத்திரையாகும். “பக்தன் பக்தனென அறிவின்றி சொல்வீர் பக்தியின் இடம் அனைவருக்கும் எங்குள்ளதோ? கால்காசு ஆசை பணத்தாசை உள்ளவரையில் பக்தனோ? ஐயனே பொருள், உயிர்ப்பற்று, மோகமுள்ளவரை பக்தனோ? பொன், பெண், மண்ணுக்குப் போட்டியிடுபவன் பக்தனோ? பக்தருக்கு நான் சொன்னால் பொல்லாப்பு,கொந்தளிப்பு ஒருமுறை தாங்கள் சொல்வீர், பிரளய காலத்தின் சொட்டாளனே“ சுதந்திர சித்தலிங்கேஸ்வரா ”நிஜகுரு சுதந்திர சித்தலிங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும். 1. “அந்தரத்தில் தூய்மை இல்லாதவரிடத்தில் அத்திப் பழத்தில் புழுக்கள் ...

Read More »

சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)

திருச்சி புலவர் இராமமூர்த்தி “அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி னோடும்  என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன் தானே முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி ஏவல் கேட்ப, வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தான் எவர்க்கு மிக்கான்.” விளக்கம்: “அன்புடையவனே! அன்பர்களது பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உன் மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன் தானே  நும் முன்னர்ப் பெரு நிதிகளை ஏந்தி நும் சொல் வழியே ஏவல் கேட்டு நிற்க, இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய் ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

மீனாட்சி பாலகணேஷ் (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்) பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார். ‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ...

Read More »

பரிமேலழகர் உரைத் திறன் – 5

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  விளார் புறவழிச்சாலை,  தஞ்சை மாவட்டம் – 613006.  மின்னஞ்சல் முகவரி –  egow[email protected] எல்லாம் இருந்தும் என்ன பயன்? முன்னுரை திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, ...

Read More »

கதை வடிவில் பழமொழி நானூறு – 14

நாங்குநேரி வாசஸ்ரீ பாடல் 29 பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால், – வல்லே வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ, ‘குளநெடிது கொண்டது நீர்?’. பழமொழி -. ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’ அல்வர் ராஜஸ்தானின் ஒரு அருமையான நகரம். பழம் பெரும் கோட்டைகள் நிறைந்த நகரம் என்றெல்லாம் சித்தப்பா சொன்னது நினைவிற்கு வரவேதான் நான் நாலு நாள் விடுப்பு எடுத்து இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு அரித்தாலும் என் சித்தப்பா பையன் வெளியில் சுற்ற மறுக்கிறான்.  ப்ளஸ் 2 பாடம் நெறைய ...

Read More »

பழகத் தெரிய வேணும் – 29

நிர்மலா ராகவன் (அன்பா, அதிகாரமா?) தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழியில்தான் பிறரும் நடக்க முனைகிறார்கள். ஜனநாயகமாக ஆரம்பித்த அரசியல் கட்சிகள்கூட மெல்ல மெல்ல, தலைவர்கர் ஒரு சிலரின் கைகளுக்குப் போய்விடுகிறது. அவர்களுடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலையில், பெயரளவில்தான் மக்களுக்கான அரசியல். அதிகாரத்தால் எது வேண்டுமானால் செய்யலாம் என்பது நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் அலுவலகத்திலும்கூட, தலைவர்கர் பலருடைய கொள்கை. அலுவலகத்தில் சர்வாதிகாரிகள் ‘பெண்தானே!’ என்று, வீட்டில் இரண்டாந்தர அங்கமாக நடத்தப்படுபவர்களே பெரும்பாலும் பிறரைக் கேவலமாக நடத்த முற்படுகிறார்கள். படித்து, ...

Read More »