கட்டுரைகள்

யாராத்தா குட்டை

சேஷாத்ரி பாஸ்கர் நாகேஸ்வர ராவ் பூங்கா அதன் பெயரை பெறுவதற்கு முன் உள்ளூர் மக்கள் அதற்கு வைத்த பெயர் யாராத்தா குட்டை. இன்று அப்படி சொன்னால் அது கெட்ட பேச்சு என்பார்கள். அங்கு எப்படி குட்டை உருவானது என தெரியவில்லை. ஒரு வேளை இரண்டு வருடங்கள் முன்பு இங்கு பெய்தது போல அம்பது வருடங்கள் முன்பு மழை வந்திருக்கலாம். ஒரே குட்டை பிரதேசம். காட்டு வெளி நிலம். எதிரே உள்ள தேவாலயம் அப்போது காட்டு கோயில் என அழைக்கப்பட்டது. ஆறு மணிக்கே வெளியே போக ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 1

-மேகலா இராமமூர்த்தி தமிழில் இயற்றப்பட்ட ஒப்பற்ற பெருங்காப்பியமாகவும் பேரிலக்கியமாகவும் திகழ்வது கம்பராமாயணம். “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை” என்று மகாகவி பாரதியால் போற்றிக் கொண்டாடப்பட்ட புலவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த கம்பரால் எழுதப்பட்ட காப்பியம் இது. கம்பராமாயணம் ஒரு முதனூலன்று; வடமொழியில் இயற்றப்பட்ட, ஆதி காவியம் என்று அழைக்கப்படுகின்ற, வால்மீகி இராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட ஒரு வழிநூலாகும். தேவபாடையின் இக் கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் ...

Read More »

சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையில் மூவர் அமரும் நீதிமன்றங்கள் அமைவது மிகக் குறைவு. ஆங்கிலத்தில் Trial-at-Bar எனச் சொல்வார்கள். சங்கிலி மன்னனின் கடைசிக் காலங்களை 1976ஆம் ஆண்டு கொழும்பில் மூவர் நீதிமன்றத்தின் முன் பேசினர். சூடானில் நடந்தவை, சிம்பாப்வேயில் நடந்தவை, அவற்றுக்கும் சங்கிலி மன்னனுக்கும் என்ன தொடர்பு?ஆனாலும் நீதிமன்றத்தில் பேசினர். குலேந்திரன், மகேந்திரன் அல்லது குலோதரன், மகோதரன் என்ற யாழ்ப்பாண (நாகநாடு) மன்னர்களை மகாவமிசம் கூறும். முதலாம் கயவாகுவை மணம் முடித்தவள் யாழ்ப்பாண மன்னர் மகள் என மகாவமிசம் கூறும். பூம்புகார்ச் சோழ மன்னன் ...

Read More »

தொல்தமிழகத்து விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு

ச.கண்மணி கணேசன் (ஓய்வு), முதல்வர்& தமிழ்த்துறைத்  தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. [email protected] முன்னுரை பண்டைத்தமிழர் உணவுமுறை பற்றிக் கட்டுரைகள் உள; எனினும் விருந்துணவில் முதன்மை பெற்ற இனிப்பு பற்றி ஆழமாகவும் முழுமையாகவும் கூர்ந்து நோக்கி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். அகநானூறு – 86ம் & ஐங்குறுநூறு – 211ம்; இவ்இனிப்புப் பண்டம் பற்றித் தெளிவாகவே பேசுகின்றன. புறநானூறு-381 அதே இனிப்பைக்  குறிப்பாகச் சுட்டுகிறது. இனிப்பு எது? திருமண விருந்தை விவரிக்கும் அகப்பாடலில் உழுந்தங்களி இடம்பெறுகிறது. அது நல்லாவூர் கிழாரின்; “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி ...

Read More »

எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

அவ்வைமகள் பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்   தலைமுடியைப் பற்றிய அறியாமை, அறிவியல் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் மிகுந்திருப்பது வருத்தமே! இன்று பெண்கள், மாபெரும் வணிகப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேசப்பொருட்கள் வர்த்தகம் பெண்களின் புத்தியை மழுக்கி, அவர்கள் அவசர முடிவு எடுக்குமாறு வணிகக் கவர்ச்சிகள் காட்டி, வெகு வசமாய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று, கேசப்பொருள் வணிகம் பில்லியன் டாலர் வணிகமாகக் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பெண்களே மூல காரணம். பெண்களின் ஆதரவினால் மட்டுமே இந்த ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

அவ்வைமகள் 21. ஞானோதயக் காலம்  இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் ...

Read More »

அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் 

-மேகலா இராமமூர்த்தி கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (Prince Edward Island) ஜான் போப் (John Pope), காத்ரீன் அக்ளோ (Catherine Uglow) இணையருக்கு மகனாக 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தவர் ஜார்ஜ் அக்ளோ போப் (George Uglow Pope) என்ற இயற்பெயர் கொண்ட ஜி.யூ.போப். அவர் குழந்தையாக இருந்தபோதே அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள ஹாக்ஸ்டன் (Hoxton) கல்லூரியில் பயின்ற பிறகு, 1839-ஆவது ஆண்டு தமது 19ஆவது வயதில் கிறித்தவ மதபோதகராகத் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள சாயர்புரத்துக்கு வந்தார் போப். ...

Read More »

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர் ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு. [email protected] உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ரா என்று அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

அவ்வைமகள் 20. இந்து சமயம் எனும் சிகரம்   பிரெஞ்சு நேசம் பற்றி நாம் பேசிக்கொண்டுவரும் வேளையில், அன்றைய காலனி ஆதிக்க நாளில், காலனி ஆதிக்க நாயகர்களுக்கு இடையே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, தீவிரமான காலனி வெறியின்றியும் , மதத் திணிப்பு – மதமாற்ற  நோக்கமின்றியும் நடந்து கொண்டதோடு, அவர்கள் இந்தியருடன் நட்பு பாராட்டி உதவிகள் செய்தத் தருணங்களை நாம்  நினைவு கூர்ந்து வருகிறோம். இந்திய மக்கள் பால் அவர்கள் காட்டிய இந்த நேசமும் உதவியும், பற்பல  நெருக்கடிகளுக்கிடையே நெஞ்சார்ந்து வழங்கப்பட்ட உதவிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் ...

Read More »

தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்

கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னணி மலையக மக்கள் தலைவரும் என் நண்பருமான மாண்புமிகு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தனது 56ஆவது பிறந்த தினத்துக்கு மூன்றே மூன்று நாட்களின் முன்னம் எதிர்பாராத மரணத்தைத் தழுவிய சேதி, அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த கவலையுடன் அஞ்சலி செய்கிறேன், நண்பருக்குக் கண்ணீரும் அஞ்சலிகளும் ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களதும் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களதும் கனவான மலையக மக்களுக்குச் சம்பள உயர்வு, வீடு, நிலம், கிராமிய வாழ்வு என்கிற அடிப்படை உரிமைகள் கிட்ட, மலையகத் தமிழர் கட்சிகள் அனைத்தும் ...

Read More »

ஆசைபற்றி அறையலுற்றேன்

ச. சுப்பிரமணியன் முன்னுரை ‘வல்லமையில்’ பல கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. கடந்த இரண்டு திங்களில் வல்லமை மின்னிதழில் அதற்குமுன் வெளிவந்த பெரும்பாலும் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்த நிலையில் இந்தக் கட்டுரையை எழுதியே ஆக வேண்டும என்ற நிலை எனக்கு வந்தது. இந்தக்  கட்டுரையில் காணும் கருத்துகளை அருள்கூர்ந்து அறிவுரையாகக் கருதாமல், வழிகாட்டுதலாகக் கொண்டால் எனக்கு நிறைவு. எதிர்கால ஆய்வு சிறக்கவும் கூடும். அந்த வகையில் தமிழியல் ஆய்வுலகத்தின் இரங்கத்தக்க நிலையினைக் கருத்திற்கொண்டு ஆய்வு நெறிபற்றிய சில கருத்துகளைப் பணிவுடன்  முன்வைக்கிறேன். ...

Read More »

அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்  சிவ சேனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம். தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார். 1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார். சென்னைக்கு ...

Read More »

சிக்கல் எங்கே? தீர்வு அங்கே!

அண்ணாகண்ணன் வேலையிழப்பும் வருவாய் இழப்பும் பொது முடக்கமும் தொழில் முடக்கமும் உலகில் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளன. கவலைப்படுவதால் சிக்கல் சிறிதளவும் குறையாது. சீரிய செயலே நம்மைக் காக்கும். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செலவிடுங்கள். இதர அனைத்துச் செலவுகளையும் அடியோடு நிறுத்துங்கள். அக்கம் பக்கம், சொந்த பந்தங்கள் குறித்து யோசிக்க வேண்டாம். வசதிக்குப் பழகிவிட்டேன் என உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அது ஒரு மனநிலை. மனநிலையை மாற்றிக்கொண்டால், புதிய பழக்க வழக்கம் உருவாகும். இன்னொரு வகையில் பார்த்தால், இது நன்மையே. வீட்டை விட்டுத் தேவையில்லாமல் ...

Read More »

இத்தாலிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர்!

-மேகலா இராமமூர்த்தி ஆஸ்திரியா, பிரான்ஸ் என்று பல ஐரோப்பிய நாடுகளின் பிடியில் சிக்கி, தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்டு நின்ற இத்தாலியின் விடுதலைக்குப் பாடுபட்டோர் மூவர். ஒருவர் மாஜினி (Giuseppe Mazzini); அடுத்தவர் கரிபால்டி (Giuseppe Garibaldi); மற்றொருவர் காவுர் (Cavour). இவர்களில் இத்தாலியின் ஆயுதமாகக் கரிபால்டியும், அறிவாகக் காவூரும், ஆன்மாவாக மாஜினியும் திகழ்ந்தனர் என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரிடித் (George Meredith).   இந்தியாவுக்கு மகாத்மா காந்தி எப்படியோ, ரஷ்யாவுக்கு லெனின் எப்படியோ அப்படியே இத்தாலிக்கு மாஜினி. இவர்களை நாம் ஒரே தராசில் ...

Read More »

இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

அவ்வைமகள் 19.  நெப்போலியனுக்குப் பிறகு  சமயப் புரட்சி    பிரெஞ்சுப் புரட்சியின் பிரபலமும் தாக்கமும் உலகெங்கும் பரவியது நிதர்சனமான உண்மையே. பிரெஞ்சுப்புரட்சியின் தன்னேரில்லாத தலைவனான, நெப்போலியன் போனப்பார்ட்டின், வீரம், தைரியம், சாதுரியம், அச்சமின்மை , உள்ளிட்ட அபார குணாதிசயங்கள் எல்லாம் அன்று உலகின் ஒவ்வொவொரு மூலையிலும் ஆராதிக்கப்பட்டன – இன்னமும் ஆராதிக்கப் படுகின்றன. “வீரன் என்றால் இவனன்றோ வீரன்!” என்று நெப்போலியனின் பகைவர்கள் கூட வாய்விட்டுப் புகழ்ந்தனர் – இன்றும் புகழ்ந்தவண்ணமே இருக்கின்றனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஒரு புது உத்வேகம் மக்களிடையே பிறந்தது – தனக்குப் ...

Read More »