Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • நாசாவின் ராக்கெட் ஆர்டிமிஸ்-1 நிலவை ஆராய ஏவப்பட்டுள்ளது

    நாசாவின் ராக்கெட் ஆர்டிமிஸ்-1 நிலவை ஆராய ஏவப்பட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/

    2022 நவம்பர் 16 ஆம் தேதி பிளாரிடா கென்னடி ஏவு தளத்தில் நாசா & ஈசா விஞ்ஞானிகள் 100 மீடர் [ 322 அடி ] உயரமுள்ள ஆர்டிமிஸ் -1 ராக்கெட், ஓரியன் விண்சிமிழை ஏந்திக் கொண்டு, மீண்டும் நிலவை நோக்கிச் சென்று ஆராய ஏவப்பட்டுள்ளது. அந்த விண்வெளி விண்சிமிழ் ஒரியன், நிலவை நெருங்கி 4000 மைல் தூரத்தில் ஆராய்ச்சிகள் அடுத்து நடத்த தகுதியான ஓரிடத்தைத் தேடுவது, விண்வெளி நிலா நிலையம் ஒன்றை நிறுவி நிரந்தரமாய்ச் சுற்றி வருவது, அந்த நிலையம் விண்வெளிப் பயணிகளுக்கு, விமானிகளுக்கு விடுதியாய் அமைப்பது போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு வசதியாய் இருக்கும்.

    முதல் ஆர்டிமிஸ் ஓரியன் விண்சிமிழ் விமானிகள் இல்லாமல், நிலவை நெருங்கி இரண்டு வாரங்கள் ஆய்வுகள் செய்து, தானாய் பூமிக்கு மீளும்.

    ஆர்ட்மிஸ் 85 mph வேகத்தில் புயல் அடிப்பினும் எதிர்த்துச் செல்லும் ஆற்றல் உள்ளது. ஓரியன் விண்சிமிழ் 450,000 கி.மீடர் [280,000 மைல்] தூரமுள்ள நிலவை நெருங்க 14 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நவம்பர் 16 இல் ஏவப்பட்ட ஓரியன் மின்சிமிழ், ஆய்வுகள் நடத்தி டிசம்பர் 11 தேதி பசிபிக் கடலில் பாராசூட் குடையில் வந்திறங்கும். 50 ஆண்டுகட்கு முன், மனிதர் இயக்கும் அப்பொல்லோ -11 விண்சிமிழ் நிலவைச் சுற்றி அதில் இறங்கியது.

    ஓரியன் பூமிக்கு மீளும் போது 25,000 mph வேகத்தில் 5000 டிகிரி F உஷ்ணச் சூழ்வெளி கடந்து கடலில் வீழும். 2023 இல் ஆர்டிமிஸ் – II விமானிகள் இயக்கும் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். மனிதர் நால்வர் செல்லும் ஆர்டிமிஸ் -III நிலவில் கால்வைக்கும் திட்டம் 2024 இல் நிறைவேறும்.

    நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையம் அமைக்க, ஏவப் போகும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1

    NASA’s Space Launch System rocket with the Orion spacecraft aboard is seen atop a mobile launcher at Launch Pad 39B as preparations for launch continue, Friday, August 26, 2022, at NASA’s Kennedy Space Center in Florida.

    Artemis-1 is a mission like no other—a long-duration trip to the Moon, way past it and back again. The first in an increasingly complex series of missions, Artemis I will test NASA’s new heavy-lift rocket, the Space Launch System (SLS) and Orion spacecraft as an integrated system prior to crewed flights to the Moon.

    2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி நாசா நிலவுக்கு ஏவும் அசுர ராக்கெட் ஆர்டிமிஸ் -1

    50 ஆண்டுகட்குப் பிறகு நாசா புது வலுமிக்க ராக்கெட் ஆர்டிமிஸ்-1 தயார் செய்து, மீண்டும் நிலவுக்குப் பயணம் செய்யப் போகிறது. 1969-1972 ஆண்டு பொறிநுணுக்கமான அப்பொல்லோ -11 ராக்கெட் [Saturn V in 1973. பயன் Orion Capsule] படுத்தப்பட்டு முதன் முதலில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் கருநிலவில் 1969 ஜூலையில் தனது பூதத் தடம் வைத்து வரலாற்று முதன்மை பெற்றார். இரண்டாம் தடவை நிலவுக்குச் செல்லும் நாசா இம்முறை நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கப் போகிறது. அந்த வரலாற்று முக்கிய பயணம் பிலாரிடா கென்னடி ஏவுகணை மையத்தில், 2022 ஆகஸ்டு 28 ஆம் தேதி, காலை 10:30 மணிக்கு, காலநிலைச் சூழ்வெளித் தடைகள் ஏதுமின்றி அனுமதி தந்தால், பச்சைக் கொடி பயணத்துக்கு காட்டப்படும்.

    மனிதர் இயக்காத இந்தப் புதிய திட்டம் ஆர்டிமிஸ் -1 விண்வெளியில் 42 நாட்கள் நீடிக்கும். 322 அடி உயரத்தில் நிற்கும் அசுர ராக்கெட் [ 8.8 million pounds (3.9 million kg) of thrust, SLS is the most powerful rocket ever produced.] முனையில் உள்ள ஓரியன் விண்சிமிழ் [Orion Capsule] நிலவைச் சுற்றி வரும். அந்த ராக்கெட்டை டிசைன் செய்து அமைக்க 20 பில்லியன் டாலர், அதை நிலவுக்கு விண்சிமிழைத் தூக்கிச் செல்ல மேலும் 4.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கு தேவைப்பட்டது. இனி அடுத்து மூவர்/நால்வர் இயக்கும் ஆர்டிமிஸ் -3 விண்சிமிழ் 2024 ஆண்டு தாமதத் தயாரிப்புக்கு 2 பில்லியன் மேலும் செலவு.

    இருமுறை ஏவிடப் பயணம் தயாராக இருந்தும், சில இடையூறுகளால் ஆர்டிமிஸ் -1 திட்டம் நிறைவேறாமல் தடைப்பட்டது.

    *******************************************

    1. https://www.forbes.com/sites/jamiecartereurope/2022/08/24/artemis-1-exactly-when-where-and-how-to-watch-nasa-launch-the-most-powerful-rocket-ever-made/?sh=7504a25590c3
    2. https://tidymails.com/national-geographic/nasas-most-powerful-rocket-ever/341142/
    3. https://www.bbc.com/news/science-environment-62563720
    4. https://appel.nasa.gov/2020/11/23/nasa-publishes-plan-for-lunar-exploration/

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 21

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 21

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    துரை. வசந்தராசனின் ‘கறுப்பு வெளிச்சம்’ – ஓர் ஒளிப்பதிவு

    முன்னுரை

    கவிதை மாதிரி எழுதிக்கொண்டு கவிஞர் என்று அட்டகாசம், செய்பவரிடையே கவிஞராக இருந்து கவிதை எழுதுகிறவர் சிலர். அந்தச் சிலருள் தம்பி வசந்தராசனும் ஒருவர். அவருடைய முகநூல் கவிதைகளை நான் படித்தபோது ஒளிவீச வேண்டிய வைரம் ஒளிந்து கிடப்பது இலக்கிய உலகத்திற்குச் செய்யும் இரண்டகம் என்றே நினைத்தேன். வாழ்வின் அந்திம வேளையில் ஒரு கவிஞனைக் கண்ட திருப்தி எனக்கு. வேதியல் பட்டதாரியான அவர் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். பட்டங்களைப் போட்டுக் கொண்டு பசப்புகிற இயல்பு அவருக்கில்லை. எளிமை, இனிமை அவர்க்கு இயல்பு. குறிப்பிட்ட யாப்புக்களைப் போகிற போக்கில் கையாளும் வன்மை அவருக்குக் கைவந்த கலை. தொடர்ந்து அவருடைய நூல்களை மதிப்பீடு செய்து வருகிறேன். இந்த முறை அவருடைய முப்பதாவது வயதில் எழுதிய ‘கறுப்பு வெளிச்சம்’ என்ற நூல் இடம் பெறுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். தம்பி வசந்தராசனின் விஸ்வரூபம் இன்னும் வெளிப்படவில்லையாயினும் அதற்கான விதை இந்த நூலில் இருக்கிறதா என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    நூல் மதிப்பீடு ஏன்?

    யாரோ எழுதுகிறார்கள். எவரோ அச்சடிக்கிறார்கள். வேறு யாரோ வெளியிடுகிறார்கள். இந்தப் பின்புலத்தில் ஒரு  நூலுக்கு இத்தகைய மதிப்பீடு தேவையா எனச் சிலவர் வினவக் கூடும்.  தமிழ்நாட்டில் ‘’கைகாட்டி’’ என்னும் சொல் பெருவழக்கு. பிறப்பைப் பெருமைப்படுத்துவது அறிவே. அந்த அறிவுக்கு நூலறிவு தலையாயது. வாழ்நாள் குறைவு. வரும் நூல்களோ அதிகம். எந்த நூலைப் படிப்பது? நம்பிக்கையூட்டும் கவிதைகள், நடப்பியல் காட்டி வழிநடத்தும் நாவல்கள், சிறுகதைகள், உண்மை வரலாறு காட்டும் உயர்தரக் கட்டுரைகள், முதலியவற்றைக் கண்டறிவது எப்படி? நல்ல நூல்களை இனங்கண்டு பாராட்டுவதும் அதனைப் படிக்க வேண்டும் என்று வழிகாட்டுவதும் எதிர்காலச் சமுதாயததிற்கானதொரு பணியே! அந்தப் பணியைத்தான் இது போன்ற கட்டுரைகள் செய்து வருகின்றன.

    சமுதாயமும் கவிஞனும்

    எல்லாரையும் போலக் கவிஞனும் மனிதனே! நாம் உயிரோடு இருக்கிறோம்.  அவன் உணர்ச்சியோடும் வாழ்கிறான். நமக்கும் தெரியாமல் நம்மைப் பாதிக்கின்றவைபற்றி அவன் பாடுகிறான். உண்மையில் அவனுக்கு இது வேண்டாத வேலை. நாடு விடுதலையடைந்தால் என்ன? அடையாவிட்டால் என்ன? என்று பாரதி போயிருக்கலாம். பகுத்தறிவு வளர்ந்தால் என்ன? தீய்ந்தால் என்ன என்று பாவேந்தர் கடந்திருக்கலாம். சாதாரண மனிதனாயிருந்தால் கடந்து போயிருப்பான். அவன் கவிஞனல்லவா? சமுதாயத்தைப் பாதிக்கின்ற விஷயங்கள் அவனைப் பாதிக்கின்றன. யாரோ ஒரு விதவையின் வேதனைக் குரலைப் பாவேந்தர் பாட வேண்டிய தேவை என்ன? பாப்பாவுக்கு விளையாட்டு ஆசிரியராகப் பாரதி மாற வேண்டிய அவசியம் என்ன? கூட்டுறவுத் துறைபற்றிப் பாரதிதாசன் பாடுவது எதற்காக? “கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் இந்நாட்டில் மூடிய தொழிற்சாலை முக்கோடி தோழர்களே!” என்று பாடிய பாவேந்தர் எந்தக் கூட்டுறவுப் பண்டகசாலையில் பணியாற்றினார்? இதுதான் கவிஞனுக்கும் சாதாரண மனிதனுக்குமான அடிப்படை வேறுபாடு. மொழிப்புலமை இல்லாதவன் குமுறிச் சாகிறான்.  உள்ளவன் கவிதைகளால்  கனன்று கொதிக்கிறான் .எந்த நேரத்தில் எந்த உணர்ச்சி அவனை ஆட்கொள்ளும் என்பதை யாரும் வரையறுக்க முடியாது. ‘எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’ என்றும் எழுதுவான். “நனைந்த மலர்களுக்குக் குளிரடிக்காதோ? வண்டுகள் பறந்துவந்து தலை துவட்டதோ” என்றும் எழுதுவான். கவிதையின் ஆழம் பாதிப்பின் பங்களிப்பைப் பொருத்தது.  தம்பி வசந்தராசன்  ஒரு கவிஞன்

    தன்னை வெளிப்படுத்தும் தமிழ்க்கவிஞன்

    குறிக்கோளோடு வாழ்ந்தவர்கள் எல்லாம் குறிக்கோள் இல்லாது கெட்டேன் என்றுதான் பாடியிருக்கிறார்கள். கவிஞர்கள் மட்டும் குறிக்கோள் இல்லாது எழுத முடியுமா என்ன? குறிக்கோள் இல்லாமல் எழுதும் கவிதை என்னாகும்? குப்பையாகும். கூலமாகும்.  இன்னுஞ் சில மேதைகள் தமிழகத்தில் உண்டு. ‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்’? என்று வினவினால் ‘நான் எனக்காக எழுதுகிறேன்’ என்று சொல்வார்கள் ஒருவன் தனக்காக எழுதினால் அதனை எதற்காக வெளியிட வேண்டும்? தனது படுக்கையறையிலோ கழிப்பறையிலோ வைத்துப் படித்துக் கொள்ளலாமே? இப்படிச் சொல்வது ஒரு நாகரிகமாகப் போய்விட்டது. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பெரும்பாலோர் எதற்காக வருகிறோம்? என்ன எழுதப்போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் வருகிறார்கள். எழுதுகிறார்கள். நமக்குத் தொழில் கவிதை நாடடிற்குழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல்’ என்பார் பாரதி. அவருக்குப் பின்னாலே தோன்றிய கவிஞர் அனைவரும் தங்கள் குறிக்கோளைத் தாம் எழுதும் கவிதை நூலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவது ஒரு மரபாக பின்பற்றப்படுகிறது.

    “வல்லமை தாராயோ இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே”

    என்பார் பாரதி. அவருடைய நண்பரும் புரடசிக் கவிஞருமான பாரதிதாசனோ

    “ஆன என் தமிழர் ஆட்சியை நிறுவ
    அல்லல்கள் வரின் நான் ஏற்பேன்!
    ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
    உவப்புடன் நான் சேர்ப்பேன் “

    என்று தன் வருகை நோக்கத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறார். தன் கவிதைகளைப் பற்றிச் சொல்லவந்த  மேத்தா

    “எங்கெல்லாம் மானுடம்
    காயப்படுகிறதோ
    அங்கெல்லாம் பூக்கும்
    சகோதர சோகங்களின்
    சர்வதேசியப் பூக்கள்“

    என்பார். அழகிய கற்பனைகளாலும் சொற்சேர்க்கைகளினாலும் தன் படைப்புக்களைச் சிறப்பாக்கும் வடுகப்பட்டி வைரமுத்து

    “ஆகாயத்தில் வானவில்லுக்கு
    அடித்த வர்ணம் காய்ந்துவிட்டதா
    என்று தொட்டுப் பார்க்க
    என் விரல்கள் நீள்வதில்லை!
    ஏழையின் கண்ணீரைத்
    துடைத்துக் காயவைக்கத்தான்
    பத்துவிரல்களும் படபடக்கின்றன

    என்று எழுதுகிறார்  ஐம்பது வயதிலேயே வாழ்ந்தது போதும் என்று மறைந்துபோன கவிஞர் தாராபாரதி

    பூமிப்பந்து என்ன விலை? உன்
    புகழைத் தந்து வாங்கும் விலை!
    நாமிப்பொழுதே புறப்படுவோம்! – வா
    நல்லதை எண்ணிச் செயல்படுவோம்

    என்று தன் கவிப் பயணத்தைத் தொடங்குவார்.. எல்லாரையும் சொல்வதற்கு இடமில்லை. தம்பி வசந்தராசன் எழுதுகிறார்

    “வயல்தாகம் தீர்க்கின்ற நதியாய் பூமி
    வசந்தத்தால் பூப்பெய்ய மூலக் கூறாய்
    அயல்சேர்க்கை நடந்தாலும் நிலையில் மாறா
    அருந்தமிழே! அமிழ்திற்கும் மூலத்தாயே!
    இயல்கின்ற வரையுனக்குச் செய்யும் தொண்டால்
    இருந்ததனைப் பதிவு செய்ய முயலும் இந்தச்
    சுயவிளக்கு வசந்தன்”

    முடிந்தவரை தமிழுக்குத் தொண்டு செய்வதுதான் தன் கவிதைப்பணி என்பதைத் தெளிவு செய்து கொள்கிறார். பார்த்து நடக்கிறார். அதனால் பாதை தெரிகிறது. பாதை தெரிகிறது. அதனால் அவரது பயணம் தொடர்கிறது.

    நம்பிக்கையூட்டும் வரிகள்

    ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ இரணடாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்பிக்கையூட்டிய கவிஞர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு!. ‘மலை சாய்ந்து போனால் சிலையாகலாம். இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்?” என்று ஒப்பாரி பாடும் கவிஞர் பலர் நிரம்பி வழிகிற காலக்கட்டம் இது. பாரதியும் பாரதிதாசனும் பட்டுக்கோட்டையும் எவ்வளவோ நம்பிக்கை வரிகளை எழுதியிருந்தாலும் அவலச்சுவை அனாதையாகிவிக்கூடாதே என்பதற்காக எழுதுபவர்களே இங்கு ஏராளம். அவலத்தை அனாதையாக்கி நம்பிக்கைப் பயிரை நாற்றுநடும் தமிழ்க் கவிஞர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். வசந்தராசனும் இருக்கிறார்.

    “இந்தச சமுதாயம் ஒரு நாளும்
    சகாராவாயப் பிறப்பெடுக்கவில்லை!
    நண்பனே நீ
    நம்பிக்கை நைல்நதியை
    நடத்திக் கெர்ணடு வா
    எந்த ஒரு சபிக்கப்பட்ட நந்தவனத்தின்
    சருகும் அல்ல நீ!
    காலத்தோடு கைகுலுக்க வரும்
    கற்பக விருட்சத்தின்
    கவிதைக கனி  நீ!
    ஒரு பெரிய ஒளி வட்டததையே
    போர்த்திக கொண்டிருக்கும் நீ
    கண்களை மூடிக்கொண்டு காணப்போவது ஏன்ன?
    விழிகளைக் கொஞ்சம் திற!
    வெளிச்சத்தின விலாசம் உன் முகத்தில் அடிக்கும்!”

    சமுதாயம் கவிஞனுக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் கவிஞன்தான் சமுதாயத்திற்குக் கடன் பட்டிருக்கிறான். காரணம் அவனை அங்கீகரிப்பது இந்தச் சமுதாயமே. எனவேதான் சமுதாயச் சிக்கல்களைப் பாடாத ஒருவனைக் கவியுலகம் நாடுகடத்திவிடுகிறது. சிக்கலிலிருந்து தப்பிக்கும் போக்கு அரசியல் வாதிகளுக்கு உரியதே அன்றிக் கவிஞனுக்கு உரியதன்று, அதே நேரத்தில் கோழைகளுக்கு நம்பிக்கையூட்டிப் பயனில்லை. கீழே விழுந்தவனைத் தான் தூக்கிவிட முடியும். வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவனை சென்றுபோய் எழுப்ப முடியாது.

    “கூவத்தில் கூட நீ
    வானைத்தைப் பார்!
    குப்பையைப் பாரத்துக்
    குள்ளமாகிவிடாதே
    நம்பிக்கைக் காண்டீபத்தை நழுவவிட்டு
    இந்தக் குருஷேத்திரத்தில்
    குதித்துவிடாதே!”

    வேர்வைத் துளிகளை மறந்துவிடாதீர்கள்!
    விசுவாமித்திரர்களே!
    ஏனென்றால்
    வயிற்றைக் கீறிடும் வறுமை நகங்களை
    வெட்டி எறிந்திட உன்
    வேர்வைக்கு மட்டுமே
    வீரியம் அதிகம்

    துரோகமும் நம்பிக்கை வறட்சியும் கைகோத்து நடைபோடுகிற ஒரு காலக்கட்டத்தில் நாம் வாழுகிறோம். திசை தெரியாமலேயே பயணம் நீளுகிறது. அவனுக்குத் திசையைக் காட்ட வேண்டிய கடமை கவிஞர்களுக்குரியது. வசந்தராசன் காட்டுகிறார்.

    கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிநதிக்கிறார்கள். வெளிப்பாடுதான் வேறுபடுகிறது. வெளிப்பாட்டின் வேறுபாடுதானே கவித்துவம்?

    “வெறுங்கை என்பது மூடத்தனம்
    விரல்கள பத்தும் மூலதனம்”

    என்று கவிஞர் தாராபாரதி  இருபத்தோறாம் நூற்றாண்டில் பாடியதைத் தம்பி வசந்தராசன் இருபதாம் நூற்றாண்டிலேயே பாடியிருக்கிறார்.

    “கைகள் நமக்கு மூலதனம் வெறுங்
    கனவுகள் எல்லாம் மூடத்தனம்”

    அரசியல் வாதிகள் கூட்டணி அமைத்துக் கொண்டால் அவர்களுக்கு நன்மை. கவிஞர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டால் கவிதைக்குக் கொண்டாட்டம். வசந்தராசனைப் பார்த்துத் தாராபாரதி எழுதவில்லை. ஆனால் இருவரது சிந்தனையும் நம்பிக்கை என்னும் நேர்கோட்டில் சந்திக்கிறது.

    பெண்மை பாடிய கவிஞன்

    இருபதாம் நூற்றாண்டுக் கவிதைப் பாடுபொருளில் பெண்மை இடம்பெறாத கவிதைத் தொகுப்புக்களே கிடையாது. நிலவுக்கும் மலருக்கும் அடுத்தபடியாகப் பாடப்பெற்றது பெண்மையே!. இதனை அழகாகவும் பாடியிருக்கிறார்கள். அசிங்கமாகவும் பாடியிருக்கிறார்கள்.

    அன்னை தெரசா இந்திரா காந்தி
    ஔவை பாடடிவழி நீளுதடி!
    இன்னும் இருக்கிற பெண்மை சொல்லி நாம்
    இமய மலைகளை இடம் பெயர்ப்போம்!

    என ஆற்றலோடு பாடியிருக்கிறார் வசந்தராசன். கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் பாவேந்தர். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் காதல் பெண்களின் கடைக்கண் பார்வையில்’ என்பார் ;மகாகவி. வசந்தன் பாடுகிறார் ‘இமய மலைகளை இடம் பெயர்ப்போம்’ என்று!

    நடப்பியல் சிக்கல்கள்

    இந்தியாவின் முக்கியமான ஆறுகள் பதின்மூன்றில் சிந்து, தபதி, நர்மதை என்னும் ஆறுகளே அரபிக்கடலில் கலக்கின்றன. ஏனைய வங்கக் கடலில் கலக்கின்றன. ஆறுகளால் கடல் நிரம்புகிறது. மக்களுடைய குடங்கள் நிரம்பவில்லை. விடுதலை இந்தியாவில் இன்னும் குடிநீர்ப்பஞ்சம் என்பது நிர்வாகக் கோளாறா? நினைப்பில் கோளாறா என்பதைத தீர்மானிக்க இயலவில்லை. கவிஞர்கள் என்ன செய்வார்கள பாவம்? எழுதி மடிகிறார்கள். நோய்க்கு மருந்துச் சீட்டைத்தான் அவர்கள் தருவார்கள். மருந்தையும் அவர்களா தரமுடியும்? ஆறுகளும் நீர் நிலைகளும் பட்டா நிலங்களாக மாறினால் கங்கை ஓடினால் என்ன? காவிரி பாய்ந்தால் என்ன?

    “காவிரி கங்கை இணைந்திடுமா? நம்
    கைக்குடம் நிரம்பி தளும்பிடுமா?
    காவி நிற்த்தினில் காய்ந்திருக்கும் – பூமி
    தண்ணீருக்காய் தவங்கிடந்தால்  நம்
    தலைமுறை சரித்திரம் தழைத்திடுமா?
    கண்ணீர் உகுத்துப’ பயனில்லை சேரும்
    கைகளில் வானம் தொடும் எல்லை”

    அலை எப்போது ஓய்வது கடல் எப்போது ஆடுவது? அதனைப் போல கங்கையும் காவிரியும் இணைப்பது எப்போது. குடத்தில் தண்ணீர் நிரம்பித் தளும்பது எப்போது? ஆதங்கம் அழகு கவிதையாகிறது. சர்.சி.பி. இராமசாமி அய்யரின் கனவுத் திட்டம் அது.  விடுதலைக்குப் பின்  நாடு பல போர்களைக் கண்டிருக்கிறது. பல ஊழல்களைச் சந்தித்திருக்கிறது. பல பிரதமர்களைக் கண்டிருக்கிறது. பல விபத்துக்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் கங்கையும் காவிரியும் யாருக்கும் பயன்படாமல் தம் வழியில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. நாட்டின் வடபகுதியில் வெள்ளம். தென்பகுதியில் வறட்சி. ஓரே நாடு என்று சொல்லில் வடிப்பதால் காணும் சுகந்தான் என்ன?

    “மங்கை சுமந்த தங்க மண்குடம்
    மண்ணில் சிதறித் தெறிக்கிறது!
    கங்கை காவிரி இணைப்புத் திட்டம்
    கையெழுத்தில்தான் இருக்கிறது”

    என்னும் வைரமுத்தின் வரிகள் எழுதப்படுவதற்கு முன்பாகவே வசந்தராசன் எழுதியிருக்கிறார். மக்கள் வாழ்வியல் சிக்கல்களைச் சந்திக்கிறபோது அவர்களுக்கு ஏற்படும் வேதனையையும் இழப்பையும் கூட நகைச்சுவை கலந்த வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் வசந்தராசன்.

    “கோழிக்கு ஆடு பலியா?

    சுண்டக்காய் கால் பணம் சொமக்கூலி முக்காப் பணம்’ என்பது டெல்டா மாவட்டங்களில் வழங்கப்படும் சொலவடைகளில் ஒன்று. காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்ற ஏழைமக்கள் (படித்தவர்களும் கூட) தங்கள் அறியாமையாலும் அவசரத்தாலும் படுகின்ற இன்னல்கள் அந்தத் தெய்வத்துக்கே அடுக்காது. தன்னைத் தேடி வந்திருப்பவன் தன்னுடைய உதவியை நாடுகிறான் என்பது காவல் துறையால் மறந்துபோன உண்மை. கறவை மாட்டை இழந்தவன் ‘மாடு காணோம்’ என்று புகார் கொடுக்கவந்தால் மாட்டை இழந்தவன், மாட்டிடம் கறந்ததைவிட மாட்டை இழந்தவனிடம் கறக்கப்பட்டதுதான் அதிகம்.

    “கோழி காணவில்லை!
    குற்றவாளி தெரியவில்லை
    காவல் நிலையத்தில்
    குப்பன்
    கைகட்டி வழக்குரைத்தான்!
    அருகிருந்த காவலர்
    அவன் காதில் கிசுகிசுத்தார்!

    “ஆடு ஒன்று பலிகொடுத்தால்
    அந்தக் கோழி கிடைத்துவிடும்”

    இதுதான் இன்றைய நடப்பியல். வழக்குத் தொடுப்பவனின் மாடிவீடு குடிலாவதும் குடிலில் குடியிருக்கின்ற வழக்கறிஞர் பல அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குச் சொந்தமாவதும் இன்றைய நடப்பியல். இந்த நிலை மருத்துவ மனைகளிலும் நீள்கிறது என்பதுதான் மாளாத சோகம். அடிக்காலில் முள் குத்தினால் கூட ‘ஆஞ்சியோ சேவை அவசரத் தேவை’ என்கிறார்களே!

    கலைதவழ் கற்பனை

    பொதுவாகத் திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு வண்ணனை வராது.  பாவேந்தர் முதலிய ஒரு சிலர் விதிவிலக்கு. செய்திகளின் தொகுப்பை யாப்புக்குள் திணித்துவிட்டால் கவிதையாகிவிடும் என்னும் மயக்கம் இன்னும 95 விழுக்காடு கவிஞர்களிடத்தில் (?) நிலைகொண்டிருப்பது வேதனைக்குரியது. அவர்கள் நடப்பியலில் செலுத்துகிற கவனத்தை இயற்கையை ரசிப்பதிலும் தங்களையே இழப்பதிலும் தொடர்ந்து படிப்பதிலும் செலுத்துவதில்லை.  ‘

    “மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
    வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
    மூலைக் கடலினையவ் வான வளையம்
    முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
    நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
    நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
    சாலப் பலபலநற் பகற் கனவில்
    தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.”

    என்னும் பாரதியின் நிலையை எத்தனைத் திராவிட இயக்கக் கவிஞர்கள் உணர்ந்து அனுபவித்திருக்கிறார்கள் என்பது சிநதனைக்குரியது. கவிஞர்களுக்கு மூன்று பண்புகள் இன்றியமையாதன. ஒன்று தனிமையில் இருத்தல். இரண்டு இயற்கையோடு இயைதல் மூன்று பிறர் கவிதைகளைப் படித்தல். இவை மூன்றும் ஒருவனிடம் குறைவின்றி இருக்குமானால் அவன் முதலில் எழுதத் தயங்குவான். காரணம் அவனுடைய பலவீனம் அவனுக்குத் தெரிந்துவிடும். .ஒரே பாடுபொருளைப் பற்’றிய முந்தைய கவிஞன் வென்றிருக்கும் பாங்கினை எந்தச் சொல்லால் தான் வெல்ல முடியும் என்னும் சிந்தனை அவனை அலைக்கழிக்கும். தம்பி வசந்தராசன் அத்தகைய சிநதனை உடையவர். நிலவைப் பற்றிய ஒரு கற்பனை இந்த நூலில் வருகிறது. மிகவும் எளிய கற்பனைதான். ஆனால் இதயத்தை நனைத்துவிடுகிறது.

    “ஆயிரம் மீன்கள வான் வாழும் அங்கு
    அதையொரு நிலவே அரசாளும்!
    ஞாயிறு போலோரு புறப்பாடு! – கொண்டு
    ஞாலம் உய்ய நீ பண்பாடு!“

    என்று அந்தப் பாட்டு அமைகிறது.  அடுத்த பாட்டில் அந்தக் கற்பனையை அதாவது  வானத்தை ஆண்ட நிலவரசி  பகைநாட்டின் மீது படையெடுக்கிறாளாம்.

    “கோடி விண்மீன் படைவீரர் – வானில்
    கூடியழைத்து வணங்கியதால்
    போருக்குப் புறப்பட்ட தளபதியோ? – இராப்
    பொழுதுக்கும் இருளுக்குத் தலைவலியோ?”

    மேலே உள்ள பாட்டில் வாழுவதாகக் கற்பனை செய்த விண்மீன்களை இந்தப் பாட்;டில் ‘படைவீரர்களாகக் கற்பனை செய்கிறார். அரசியே தளபதியாகிறாளாம். கற்பனைச் சுகம் என்பது இதுதான்.

    “பொன்னந்தி மாலையிலும்
    பூமலரும் வேளையிலும்
    விண்மீனைக் காவல் வைத்து
    வெண்ணிலவு தூங்கையிலும்
    கவிதை என்னும் பேய்பிடித்து ஆட்டுதடி என்னை!“

    என்னும் வரிகளில் இந்தக் கற்பனையை வடுகப்பட்டி வைரமுத்து பின்னாளில் தமது ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். வசந்தன் நிலவை அரசனாகக் காண்கிறார். அதனால்  தளபதியாகிறான். வைரமுத்து அரசியாகக் காண்கிறார். அதனால் அந்தப்புரம் செல்கிறாள்.

    அருகிய காதலும் அம்பேத்கர் பாடலும்

    தம்பி வசந்தராசன் தன்னுடைய இளமைக் காலத்தில் எழுதித் தொகுத்த இந்த நூலில் காதற்கவிதைகள் அருகிப்போனது என் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுவரை எழுதப்பட்டிருக்கும் காதல் வரிகளையே தமிழர்களும் தமிழ்க்கவிஞர்களும் இன்னும் படிக்க முன்வராத போது மேலும் மேலும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது ஒருவகையான அரைவேக்காட்டுத்தனம் என்பது என் கருத்து. கருத்துக்கள் மாறுபடலாம். கடலையும் மலையையும் பாடுவதுபோலக் காதலையும் சிலர் பாடுபொருளாக நினைத்துக் கொள்ளும்போதுதான் ‘அழுகையே பரவாயில்லை’ என்று நான் தனிமையைத் தேர்ந்தெடுக்கிறேன். . காதல் பாடுபொருள் அன்று. அது ஓர் உன்னதமான உணர்வு. அதனைப் பொதுக்கட்டுரையாக்கிவிடக் கூடாது.

    “உனக்காக ஒரு மாளிகை கட்ட
    மனக்கணக்குப் போட்டிருந்தேன்
    நிலவிலிருந்து கல்லெடுத்துத்
    தங்கத்தால் தகடடித்து
    வைரத்தால் வழி வைத்துப்
    பிளாட்டினத்தால் பெயரெழுதி
    உனக்காக ஒரு மாளிகை கட்ட
    மனக்கணக்குப் போட்டிருந்தேன்
    உனக்கு முன்னால்
    அதுகூட
    ஒரு மண்குடிசைதான் என்பதறியாமல்!”

    என மென்மையான காதலை மலரினும் மெல்லிய சொற்களால் பதிவு செய்திருக்கும் வசந்தராசன் பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய பாடலில் தன் நெஞ்சத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்திருக்கிறார்.

    “போர்ப்பாட்டுப் பரணியினைப் பாட வந்த
    புதுப்பாட்டுக் காரனிவன்! மக்கட் கூட்டம்
    கூறுபட்டு விற்பனைக்காய் ஆன போது
    கொதித்தெழுந்த பண்பாட்டுக் கோளின் மையம்!
    தேர்ப்பாகக் கூடடத்தைத் தேரில் ஏற்றித்
    தேரேறி வந்தவனைப பாக னாக்கத்
    தீர்ப்பெழுத துணிந்து வந்த செயலின் அச்சு!
    திருந்திவரும் சமுதாயம் இவரின் சொதது!

    வரைபடத்து விடுதலைப்போர் நடுவே மக்கள்
    வாழ்வுக்குச சமுதாய விடுத லையை
    விரைவாக்கி விளையவைத்த கிரியா ஊக்கி!
    விழுமழையைச் சிறைப்பிடித்த சிப்பி! கல்வி
    கரையுடைத்த காட்டாறு! பசிக்கா லத்தே
    கையணைத்தே கனிச்சாறு! மேல் சாதிக்கே
    இரையான இனக்கூட்ட இதய வேரில்
    எரிமலையைக் குடிவைத்த ரத்த நாளம்!”

    உள்ளத்துக்கு இசைந்த ஒருவனைப் பாடுகிறபோது தமிழ் எப்படித் துள்ளிவருகிறது என்பதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. ‘

    “………………………….இனக்கூட்ட இதய வேரில்
    எரிமலையைக் குடிவைத்த ரத்த நாளம்!”

    என்ற வரிகளில் அமைந்திருக்கும் உருவக அழகு உண்மையில் அழகு.

    நெஞ்சுக்கு மராமத்தா?

    தொடர்பில்லாத சொற்களின் சேர்க்கை கவிதையின் பரிமாணத்தைக் கூடுதலாக்கும். இந்தக் கவிதை மரபு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது. மரபு சார்ந்த இந்தக் கொள்கையைத் தற்காலப் புதுக்கவிதைக்காரர்கள் தங்களுடைய் கண்டுபிடிப்பு என்பது போலக் காட்டிக் கொள்வது பச்சைப் பாசாங்கு. ‘தீப்பாயல்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. தீ தெரியும். படுக்கின்ற பாய் தெரியும். தீயினுக்கும் பாயினுக்கும் என்ன தொடர்பு. புலவன் எழுதியிருக்கிறான் ‘தீப்பாயல்’ என்று. இதனைத் ‘தீப்படுக்கை’ எனச் சொலலிப் பாருங்கள் பொருளின் ஆழம் தெரியும். அடர்த்தி தெரியும். கவை என்ற சொல் இரட்டையைக் குறிக்கும். மகவு என்பது குழந்தையைக் குறிக்கும். இரட்டைக் குழந்தை என்பது உலக வழக்கு. இதற்கான இலக்கிய வழக்கு என்ன தெரியுமோ? “கவை மகவு”. ‘கவை’ மரத்தில் இருப்பது ‘மகவு’ தாயின் வயிற்றில் பிறப்பது. இரண்டு சொற்களையும் இயற்பியலால் சேர்த்துப் புதுவகையான வேதியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறான் புலவன். ‘செவி நுகர் கனிகள்’ என்று ஒரு சொல் கம்பராமாயணத்தில் வரும். செவிக்கும் கனிகளுக்கும் என்ன தொடர்பு? கவிதைகள் சொல்லிக் கேட்கப்படுவன. செவி கேட்டற்குரியது. எனவே கவிதைகளைக் ‘கவிதைகள்’ என்னாமல் கனிகள் என்றான். செவி நுகர் கனிகள் என்கிறான் கம்பன். கவிதையில் சொல்லினிமை மிகவும் இன்றியமையாதது என்பது கருத்து. மரபு சார்ந்த இந்தப் போக்கினை ‘நெஞ்சுக்கு மராமத்து’ என்னுந் தொடரால் தம்பி வசந்தராசன் பதிவிடுகிறார். மராமத்து வாய்க்காலுக்கு உண்டு. பழைய கட்டடங்களின் பராமரிப்புக்கு உரியது. நெஞ்சுக்கு எப்படி மராமத்து செய்வது? அபப்டி மராமத்துப் பணியைச் செய்தவர் யார்?

    “திராவிடத்து உணர்வுகளை எழுப்பு தற்குத்
    தீப்பந்தம் ஏந்தியதார்? தமிழர் நெஞ்சை
    மராமத்துச் செய்வதற்கு வந்த தாரோ?
    மாத்தமிழன் அண்ணாவின் பேச்சா? இல்லை
    மரத்துவிட்ட இல்லறதுச் செக்கு மாடா?

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பொதுஒதுக்கீட்டிற்கு விண்ணப்பம் செய்ய உரிமை பெற்ற 10 விழுக்காடு பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்;டியலின மக்களுக்குத் திட்டமிட்டு மறுக்கப்பட்ட அநீதி என்பதை பாதிக்கப்பட்டவர்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லையே! தங்களுக்கான ஒதுக்கீட்டிற்கு ஆபத்து இல்லை என்று உணர்கிறார்களே தவிர, அடுத்த ஊரில் இருக்கின்ற தமது சொத்து பறிபோனதை இந்த மக்கள் உணரவில்லையே! ‘நெஞசை மராமத்து செய்வது’ என்பது இதனைத்தான். மரபில் புதுக்கவிதை கூறு என்பதும் இதுதான்!

    அரசியல் வாதியும் அங்கதமும்

    புதுக்கவிதையின் இலக்கிய தர மதிப்பீட்டிற்குரிய பரிமாணங்களுள் இன்றியமையா இடத்தைப் பெறுவது அங்கதம்.  பலபேர் அதனை விடுகதையாக்கி வீணடிப்பதைக் காணமுடிகிறது. மேளத்திலேயே நையாண்டி பாரத்தவர்கள் நாம்.  கவிதையில் பார்க்க மாட்டோமா என்ன? நோய் வந்த முன்னாள் அமைச்சர் . மருத்துவரிடம் செல்கிறார். அமைச்சரின் தற்காலச் ‘சந்தை மதிப்பு’ குறைவாகப் போனதால் வரவேற்பு அவ்வளவாக இல்லை. அவரை நன்கு சோதித்த மருத்துவர் குறிப்புச் சீட்டில் எழுதுகிறார். ‘மாலை! மாலை! மாலை!’ என்று. முன்னாள் அமைச்சருக்கு வந்திருப்பது ‘மாலை’நோய்! வைரமுத்து காட்டும் அங்கதம் இது. தம்பி வசந்தராசன் அருமையாக அறிவியல் சார்ந்து அங்கதத்தை அரசியல் வாதிக்கே அர்ப்பணிக்கிறார்.

    “எங்கள் நாட்டு எம்.எல்.ஏக்களோ
    டார்வின் தத்துவத்தைத்
    தலைகீழாகப் படித்தவரகள்
    இல்லையென்றால்
    குரங்கிலிருந்து வந்த
    மனிதனே மீண்டும் குரங்காகிக்
    கொடி மரம் தாவுவார்களா?”

    ‘தலைகீழ்’ என்னும் ஒரு சொல்லை வைத்துக் கொண்டு செய்து காடடியிருக்கும் அங்கதம் அறிவியல் உண்மை ஒன்றினைத் தற்கால வேடதாரிகளைத் தோலுரித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கும் சாதுரியம் போற்றத்தக்கதல்லவா? அரசியல்வாதி பற்றிய அங்கதம் அப்படி அமைந்திருக்கிறது என்றால் மருத்துவத்துறை பற்றிய அங்கதம் இப்படி அமைந்திருக்கிறது.

    பிடுங்கியது சொத்தைப்பல்லையா? சொத்தையா?

    ஒரு பல்லில் சொத்தை விழுந்தால் அது தொடரும் என்று கருதி ஒருவர் பல் மருத்துவமனைக்குச் செல்கிறார். முப்பத்திரண்டு பற்களையும் தங்கத்தால் கட்டினால் எவ்வளவு செலவாகுமோ அந்த அளவுக்குச் செலவானதாம்

    “சொத்தைப் பல்பிடுங்கச் சுந்தரானர்
    அருகிருக்கும்
    நத்தை மருத்துவமனையில்  நடந்திருந்தார்
    ………………………………………………………………………………………………………..
    “பிடுங்கியாயிற்றா” எனக்கேட்டேன்!
    ‘ஆயிற்று’ என்றார்!
    அதிசயமாய் நான் பார்க்கச்
    “சொத்தைப் பிடுங்கியாயிற்று”
    பல் மட்டும் அப்ப்டியே!
    எனச்  சொன்னார் சுந்தரனார்
    எழுகின்ற வலியோடு!

    கொஞ்சம் மிகையாக இருக்கலாம். ஆனால் காலில் குத்திய முள்ளுக்கு இதயத்தில் எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிற மருத்துவ உலகின் ‘மனிதநேயச் செயலை’ அங்கதச் சுவையோடு எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

    நிறைவுரை

    “கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது  ஆனால்  அது எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே அதன் கவலையாக இருக்கிறது.” நோக்கமும் ரசனையும் இல்லாத எழுதப்படுகிற கவிதைகளை எப்படி ரசிப்பது? எழுதுகிறவனீன் அறிவின் உயரத்தைவிட அவனுடைய அனுபவப் பகிர்மானத்தையே நல்ல கவிதைகள் எதிர்பார்க்கின்றன. இயற்கையை ரசிக்கவும் அதற்கு வாழ்க்கைப்படவும், வாழவும், ,வாழ்க்கையின் வலியைத் தாங்கவும் புன்னகை புரியவும் புயல்களை எதிர்கொள்ளவும் சகமனிதனை நேசிக்கவுமான திசைநோக்கிக்  கைகாட்ட வேண்டியது கவிதையின் கடமை. அந்தக் கடமையை இந்த நூல் கொஞ்சமாவது செய்ய முயல்கிறதா? என்பதைப் படித்தவர்கள் சொல்ல வேண்டும். சொல்வார்கள் என்றே நான் நம்புகிறேன். .

    (தொடரும்)

    Share
  • திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு

    திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு

    மகாதேவஐயர் ஜெயராமசர்
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    இசையின் முக்கியத்துவம்  

    இசையென்றால் இசைவிப்பது. இசையை விரும்பாதவர்கள் உலகில் இருக்கவே முடியாது. வாழ்க்கையில் விரும்பாத பல விடயங்கள் இருந்தாலும் இசையினை விரும்பாதாவர் இருக்கவே முடியாது எனலாம். இசையானது உலகையே கட்டிப்போட்டுவிட வல்லதேயாகும். “இசையால் வசமாகா இதயமெது” இசைகேட்டால் இறைவனே இறங்கிவருவான் “இசைகேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகத்துவம் குறித்து சொல்லப்படும் வார்த்தைகள் – வார்த்தைகள் மட்டுமல்ல. உண்மையும் கூட என்றுதான் கொள்ள வேண்டும். இசையால் கோபம் தணிகிறது. சாந்தம் பிறக்கிறது. ஆத்திரம் ஓடி விடுகிறது. அவசரம் அயர்ந்து விடுகிறது. பதட்டம் பறந்துவிடுகிறது. பக்குவம் குடிகொள்ளுகிறது. வேதனை மறைகிறது. வெளிச்சம் தெரிகிறது. உணர்ச்சிகள் உயிர்ப்புப் பெறுகின்றன. உள்ளம் அமைதியாகிறது. பக்தி பெருகிறது. அன்பு விரிகிறது. ஆறுதல் கிடைக்கிறது.

    விஞ்ஞான ஆராய்ச்சிகள்  இசையினால் இசைவிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று தெளிவுறுத்தி நிற்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளரும் புலன் கேட்டலாகும். இந்தப் புலனானது மனிதவாழ்வின் இறுதிக்காலம் வரை இருக்கிறதாம். இறுதியாக செயலிழப்பது கேட்டல் புலன் என்று கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர் பார்க்கும் புலனைவிடக் கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று அறியமுடிகிறது.

    தாலாட்டு என்னும் இசையுடன் ஆரம்பிக்கும் வாழ்வானது ஒப்பாரியென்னும் இசையுடன் நிறைவு பெறுகிறது. பிறப்பும் இசையுடன். இறப்பும் இசையுடனே. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலங்களும் இசையுடன்தான் இணைந்து செல்கிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பவற்றின் அத்தி வாரமே இசைதானே! வாழ்வினை வசந்த மாக்க எத்தனையே பண்டிகைகள். எத்தனையே மங்கலநிகழ்வுகள். அத்தனைக்கும் ஆணிவேராக இசைதானே இருக்கிறது. இசையென்பது மனித வாழ்வினை இறுக்கப் பிடித்தே நிற்கிறது எனலாம். நோயைத் தீர்க்கிறது. நோய்க்கு மருந்தாகவே அமைகிறது. களைப்பினைப் போக்கும் அற்புத மருந்தும் இசைதானே. கஷ்டங்கள் அகற்றிடும் காயகல்ப்பமும் இசைதானே. இசையென்பது வாழ்வின் ஜீவநாடியாகும். கலக்கம் போக்கி கஷ்டம் அகற்றி நிம்மதி தரும் வல்லமை இசைக்கே இருக்கிறது. ஆறுதலையும் தேறுதலையும் அகமகிழ்வைவும் அளிக்கும் ஆற்றல் இசைக்கே இருக்கிறது என்பதை யாவரும் நம்புகிறார்கள்.இதனால் இசை என்பது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகவே விளங்கிறது எனலாம்.

    தமிழ் இசை

    பண்பட்ட மொழிகளில் எல்லாம் இசை வாழ்கிறது. ஆனால் தமிழ்மொழி இசைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் ஏனைய மொழிகள் கொடுக்கவில்லை எனலாம். இசைக்கென்று ஒரு நிலையை ஏற்படுத்தி “இசைத்தமிழ்” என்று தனியிடம் வைத்த சிறப்பினை தமிழ்மொழியில் மட்டுமே கண்டுகொள்ளுகிறோம்.

    தமிழ் இசை என்றால் என்ன? இது ஒரு தனியிசையா? முன்னர் இப்படி இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் எண்ணம் எம்மில் பலருக்கு மனத்துள் வினாவாகி இருக்கிறது. அப்படி எண்ணவே வேண்டாம். தமிழிசை ஒன்றும் புதியது அல்ல. தமிழ் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே இந்த இசையும் தோன்றியது என்பதுதான் உண்மை. தொல்காப்பியம் எங்களின் பழந்தமிழ் சொத்தாகும். கிறீஸ்துவுக்கு முன் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியத்திலே மூன்றாவது பாடமான செய்யுள் அதிகாரத்தில் அன்றிருந்த இசை பற்றி ஆசிரியர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெரிய வருகிறது. கர்நாடக சங்கீதம் என்று அழைத்து நிற்பது தமிழ் இசைதான் என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய கருத்தாகும்.

    தென்னிந்தியாவில் பிற பிரதேச அரசர்களின் ஆட்சியின்போது ஏற்பட்ட தவறான பார்வையினால் வந்ததுதான் கர்நாடக சங்கீதம் என்பதாகும். தமிழ் இசை என்பது எவ்வாறு கர்நாடக இசை என்னும் பெயரைப் பெற்றது என்பதற்கு பல கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் இசை வரலாற்றை நோக்கும் பொழுது அவருக்கு அடித்தளம் இட்டதே தமிழ் இசைதான் என்று சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மிகவும் அருமையான பல தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத்தாண்டவர் பிறந்து இருநூறு ஆண்டின் பின்னர்தான் தியாகராஜ சுவாமிகளே பிறக்கின்றார். தியாகராஜ சுவாமிகள் சிறுபிள்ளையாக இருந்த வேளை அவரைத் தூங்கவைப்பதற்கு அவரின் தாயார் சீத்தாம்மா அவர்கள் தியாகராஜ சுவாமிகளுக்கு முன்னர் வாழ்ந்த அருணாசலக் கவிராயரின் ராமநாடக பாடல்களையே பாடித் தூங்க வைத்தார் என்று என்று அறிய முடிகிறது. தியாகராஜ சுவாமிகளின் இசைக்கு அத்திவாரமே தமிழ் இசை என்பதை யாவரும் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய அம்சமெனலாம். தனக்கென்று தனிப்பண்பு தமிழ் இசைக்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. தமிழிசை வரலாற்றில் தமிழிசை மூவராகப் போற்றப்படும் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை இவர்களை தமிழ் உள்ளளவும் போற்றி நிற்பது தமிழரது தலையாய பணியேயாகும். தமிழிலே பாட்டெழுதி தமிழ் இசையினை வளர்த்த பெருமை இம்மும் மூர்த்திகளுக்கே உருத்தான தாகும், இவர்களுடன் பாபநாசம் சிவனையும் வைத்துப்  பார்க்கும் நோக்கும் இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    “ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று இறைவனையும் இசையினையும் பிரிக்க முடியாது என சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என சம்பந்தரையும் பாராட்டிப் பாடியுள்ளார் சுந்தரர் பெருமான். தமிழ் இசை என்றாலே அது காலத்தால் முந்தியதுதான். இறைவனோடு தொடர்புடையது. வேறு எந்தச் சமயத்தையும் வேறு எந்த மொழி வரலாற்றையும் எடுத்துக்கொண்டால் “இறைவன் அர்ச்சனை பாட்டேயாகும்  ஆதாலால் இம்மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக” என்று பணித்ததாக வரலாறே காணக்கிடையாது. இது தமிழுக்கும் தமிழ் இசைக்குமே உரியதாகும் என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய கருத்தெனலாம்.

    தமிழ் இசை தமிழரின் இசையாகும். தமிழ் இசையின் வரலாறு பரந்தது மட்டுமல்ல மிகவும் விரிந்ததுமாகும். பண்சுமந்த பாடல்களைத் தந்து நிற்பது தமிழ் இசையாகும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் இசையினை கொண்டே பக்தியை வளர்த்தார்காள். நல்ல நெறியினைக் காட்டி நின்றார்கள். தமிழ் இசையால் தமிழர்தம் பண்பாடு கலாசாரம் அன்றும் இன்றும் என்றும் முனெடுத்துச் செல்லப்படும் என்பதில் எள்ளளவு. ஐயம் இல்லை என்றே கருதலாம்.

    திரையிசையில் தமிழிசை 

    பேசாமால் மெளனத்தில் திரையில் வந்த காலத்தில் படங்கள் காட்சிகளாக மட்டுமே களிப்பூட்டின. அதே திரையில் பேசும் நிலைக்கு படங்கள் வளர்ந்ததும் இசை அங்கே சிம்மாசனம் இட்டு நின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஆரம்ப காலப் படங்கள் திரையில் வந்த பொழுது அவைகள் நாடகத்தின் திருந்திய ஒரு வடிவமாகவே வந்தாலும் அதில் நாடகப் பாணியே நிறைந்து காணப்பட்டது. நாடகத்தில் எந்த வகையில் இசை கையாளப்பட்டதோ அதனையே சற்று மெருகூட்டி திரையில் கொண்டுவரும் நிலை தோன்றியது எனலாம். இங்கு தமிழ் இசை தனது இருப்பினை திரையிசையில் பதித்துவிடும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    நாடகத்தில் பாடி நடிப்பவர்களுக்கு முன்னுரிமை மிகுந்து காணப்பட்டது. நல்ல தமிழ் உச்சரிப்பு. நல்ல குரல்வளம். இசைஞானம் யாவும் நாடக நடிகரின் பெருந்தகைமையாகக் கருதப்பட்டது. பேசும்படம் வந்ததும் அதே நாடகமும் அதில் நடித்த நடிகர்களும் உள் வாங்கப் பட்டார்கள். நாடகத்தில் எப்படி தமிழிசையினைப் பாடினார்களோ அதே பாணியிலே பாடும் வாய்ப்பும் அங்கும் காணப்பட்டது. ஆரம்பத்தில் காணப்பட்ட பாங்கு சற்று காலம் செல்ல செல்ல இறுக்கம் குறைந்து புதுப்பாணியில் பரிணமிக்கத் தொடங்கியது எனலாம். ஆனால் தமிழும் இசையும் திரையிசையினை விட்டுவிடவில்லை என்பது கருத்தில் இருத்த வேண்டியதே.

    தமிழ்த் திரையிசையானது தமிழின் சங்கப் பாடலில் மரபில் இருந்தே ஆரம்பிக்கிறது எனலாம். தமிழ் இசையும் தொன்மையானது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அந்த தொன்மையான தமிழ் இசை திரையிசையின் வளர்ச்சிக்கு பலவகைகளில் உதவியிருக்கிறது என்பதை திரைப்படத்துறையினர் மறுத்துவிட மாட்டார்கள். திரையிசையினை தன்வசம் வைத்திருப்பதே தமிழ் பாடல்கள்தானே. தமிழ்ப் பாடல்களின் சந்தமும் ஓசை நயமும் திரைக்கு ஏற்றபடி இசைவடிவாகும் பொழுது ஜனரஞ்சகம் ஆகியே விடுகிறது.

    பக்தி இலக்கிய காலத்திலிருந்தே சந்தங்களை வைத்து எழுதும் முறை தமிழில் தொடங்கி விட்டது எனலாம். சம்பந்தப் பெருமான் சந்தங்களை வைத்து தமிழ் பாடல்கள் பல வற்றை தந்திருக்கிறார். அவரை அடுத்து சந்தக் கவியாக திருப்புகழ் தந்த அருணகிரியார் வருகிறார். கிறீஸ்த்துவுக்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் சந்தம் நிறைந்த திருப்புகள் தமிழுக்குப் பெரும் சொத்தாக வருகிறது எனலாம். இசை ஒழுங்கு தெரியாமல் சந்தங்களை கையாண்டிட முடியாது. இதனால் சந்தங்களுக்கு இசையமைதி முக்கியமானதேயாகும். சந்தத்தை விளங்கி இசையினை உள்வாங்கி நாட்டுப்புற வடிவங்களை மனதிருத்தி கீர்த்தனைகளை உள்வாங்கி தமிழ் இசையில் முக்கியமான ஒரு இடத்தினை சங்கரதாஸ் சுவாமிகள் வகிக்கிறார்கள். நான்காயிரம் பாடல்களுக்கு மேல் அவரால் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் கிடைத்திருக்கிறது. அவரின் ஆளுமையினால் தமிழிசை திரையிசைக்கு உந்துசக்தியை வழங்கி இருக்கிறது என்று இசை அறிஞர்கள் இயம்புகின்றார்கள். அவரைத்தான் இன்று நாம் கேட்கும் திரையிசைப் பாடல் வடிவினது மூலகர்த்தா என்று சொல்லலாம்.

    திரைப்படத்துறைக்கு இசை பெரும் ஆதரமாகவே இருந்துவருகிறது. பாட்டுக்கள் நல்லபடி அமைந்தால் மக்கள் விருப்புடன் பார்ப்பார்கள். பாட்டுக்களுக் கென்றே திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருப் பதையும் காணமுடிகிறது. திரை இசையின் காலகட்டத்தை மூன்று கட்டங்களாக வகுக்கலாம். ஜி.ராமநாதன் தொடக்கம் பாபநாச சிவன் தியாகராஜ பாகவதர் காலம். மெல்லிசைமன்னர் விஸ்நாதன்- கண்ணதாசன் ரி. எம். செளந்தரராஜன் – பி. சுசிலா காலம், இளைராஜா காலம்.

    1937 இல் தியாகராஜ பாகவதர் என்கின்ற இசை அருவி தமிழுக்கு வருகிறது. பின்னர் பாபநாச சிவன் என்னும் ஞான ஒளியும் இணைகிறது. அவர்களுடன் ஜி. ராமநாதன் என்னும் இசைப் பிரவாகவும் சேர்ந்துவிடுகிறது. இந்த இணைப்பை தமிழ்த் திரைப்பட் இசையின் பொற்காலம் என்றே கொள்ளலாம். இங்கு தமிழும் இசையும் திரையிசையினை உயரத்துக்கே எடுத்துச் சென்றது எனலாம். எஸ்.ஜி கிட்டப்பா, கே.பி சுந்தராம் பாள், பி.யு. சின்னப்பா. டி.ஆர். மகாலிங்கம் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலக்சுமி, தண்டபாணி தேசிகர், திருச்சி லோகநாதன், நடிப்பிசைப்புலவர் ராமசாமி, சி.எஸ். ஜெயராமன், இவர்களெல்லாம்  தங்களின் குரல்வளத்தாலும் தமிழ் வளத்தாலும் தமிழ் இசையினை திரையிசையினுக்கு பக்கபலம் ஆக்கினார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. இவர்களின் குரல் வளத்தை சரிவரப் பயன்படுத்தி ஆளுமை மிக்க இசைய மைப்பாளர்கள் திரையிசைக்கு தமிழிசையினால் வலுவூட்டினார்கள் என்பதை திரை யிசை வரலாற்றால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. திரையிசையினை தங்கக் கட்டிலில் ஏற்றியவர் லி. ராமநாதன் என்றால் அது மிகையாகாது. அவரின் இசையமைப்பில் வந்த அருமையான தமிழ் திரையிசைப் பாடல்களையும் இன்றும் யாவரும் விரும்பிக் கேட்டு ரசித்த வண்ணம் இருக்கிறார்கள். அப்படியொரு இசைய மைந்த பாடல் வரமாட்டாதா என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதையும் பார்க்க முடிகிறது. இவரது இசைக்கு தமிழும் அதன் இசையும் அடிப்படை என்பதும் மனங்கொள்ளத்தக்கதே.

    பொன்முடி படத்தில்வரும் “இனி ஏது செய்வேன் என் இன்னமுதே”  “நீலவானும் நிலவும் போல…” சாரங்கதாராவில் வரும் “வசந்தமுல்லை போல வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே” கப்பலோட்டிய தமிழனில் “வெள்ளிப்பனிமலையின் மீதுலவு வோம்”, “காற்று வெளியிடை கண்ணம்மா” வீரபாண்டிய கட்டபொம்மனில் “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே” “நான் பெற்ற செல்வத்தில்” பூவா மணமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே”- இப்பாடல்கள் மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பாடல்கள் திரையிசையால் ராமநாதன் அளித்த தமிழ் இசையின் உச்சந்தொட்ட பாடல்கள் எனலாம்.

    ஜி. ராமநாதன் காலத்திலே சுப்பராயன், சுப்பையாநாயுடு, சுதர்சனன், லிங்கப்பா, பார்த்தசாரதி, வேதா, பொன்ற நல்ல இசையமைப்பளர்களும் இருந்து நல்ல தமிழிசைப் பாடல்களை உள்ளங்களில் பதியும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடப் படவேண்டியதேயாகும்.

    ஜி. ராமநாதனின் பின் – முத்திரை பதிக்கிறார் கே.வி. மகாதேவன். அவரின் கைவண்ணத்தில் தமிழிசை திரையிசையில் பல வர்ண ஜாலங்களைச் செய்ததை யாருமே மறந்துவிட முடியாது. அவர்தந்த பல இசைக்கோலங்கள் தமிழ் இசைக்கும் திரையிசைக்கும் பெருமையினை அளித்தே நிற்கிறது எனலாம்.

    கே. வி யின் பின்னர் மெல்லிசையின் மன்னர்கள் வருகிறார்கள். இரட்டையராக இருந்த பொழுதும் பின்னர் விஸ்வநாதன் பிரிந்த பின்னரும் திரையிசை பெற்ற பயன் மிகவும் காத்திரமானவை என்பதை மறுத்துவிட முடியாது. கண்ணதாசன் என்னும் கவியூற்றும் வாலி என்னும் கற்பனைக் களஞ்சியமும் விஸ்வநாதன் என்னும் இசைமன்னனுடன் இணைந்து திரையிசைக்கு அளித்த இசைப்பொக்கிஷங்கள் தமிழ் இசைக்கு அசைக்க முடியாத சொத்தென்றே சொல்லலாம். இந்தக் கூட்டணியில் பங்கு கொண்ட ரி. எம். செளந்தரராஜன், பி. சுசுலா  சீர்காழி கோவிந்தராஜன், வி.பி ஸ்ரீநிவாஸ் இவர்களை தமிழுலகம் அதாவது தமிழ் இசைஉலகம் என்றுமே மறந்துவிட மாட்டாது. நினைக்க நினைக்க இனிக்கும் வசந்தகாலம் இக்காலம் எனலாம். இக்கால திரையிசை தமிழாய் தமிழ் அமுதமாய் தமிழ் இசையாய் நிரம்பி வழிந்தது எனலாம்.

    எம்.எஸ் வியின் காலத்திலேயே நாட்டுப்புற இசையரசன் என்று அழைக்கும் ஒருவர் வந்துவிடுகிறார். அவர்தான் திரையிசைக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமான இளையராஜா.  இசையரசனான  இவரின் வருகையின் பின்னர் திரையிசை வேறு ஒரு பரிமாணத்துள் பயணிக்கத் தொடங்கியது எனலாம். நமது மண்ணின் பாரம்பரியத்தை, மண்ணின் வாசத்தை, வாழ்வினைக் கூறும் எங்கள் இசையினை முழு நம்பிக்கையுடன் கையாண்டு வெற்றிக் கொடி நாட்டியிருப்பதை யாவருமே ஏற்றுக் கொள்ளுவார்கள். தமிழ் இசையினை நன்கு அறிந்த காரணத்தால் அதனை தக்க முறையில் கையாண்டு திரையிசையில் முத்திரை பதித்திருக்கிறார் இளையராஜா என்னும் பொழுது தமிழ் இசையானது திரையில் தனது இருப்பிடத்தை நிலைநிறுத்தி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா. அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜா என்னும் இசையரசனின் தமிழிசை சாம்ராஜ்ஜியம் இன்னும் தனது இருப்பிடத்தை உறுதியாக்கிக் கொண்டே இருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அம்சம் அல்லவா !

    இளையராஜா இசையமைப்பாளராக மட்டுமே இருந்திடாமல் கருத்துச் செறிந்த பல தமிழ் இசைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். படைத்த பாடல்களை திரையிசை வாயிலாக கொடுத்து அனைவரது நெஞ்சங்களிலும் இடம்பெறும் வண்ணமும் செய்திருக்கிறார். இவரின் இசைக்கு ஏற்ப பக்கபலமாக கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழும் கைகொடுத்திருக்கிறது என்பதும் முக்கிய கருத் தெனலாம். வைரமுத்துவுடன் – புலமைப்பித்தன், நா. காமராஜன், பொன்னடியான், மு. மேத்தா, கங்கை அமரன், பா.விஜய், நா. முத்துக்குமாரன், என்று நல்லதோர் தமிழ்ப் புலமைமிக்க கவிஞர்களும் வந்து இணைகிறார்கள் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    நிறைவு

    மக்கள் மயமாக்கப்படும் யாவுமே பேசப்படும் நிலைக்கு ஆளாக்கப் படுவதுதான் யதார்த்தமானதாகும். திரையும் அதுசார்ந்த திரை இசையும் சமூகத்தில்  இன்றியமையாத ஒன்றாகியே விட்டது என்பதை மறுத்துவிட முடியாது. படித்தவரும் பாமரரும் இசையினை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களும் இசை அறிவே இல்லாதவர்களும் திரையி சையில் கட்டுண்டு இருப்பது என்பது தவிர்க்க முடியாத நிலையாகி விட்டது எனலாம். யாவருக்கும் இன்பம் தரும் நல்ல ஒரு இசையினை திரையிசை தந்து நிற்பதால் அந்த இசையானது மக்களின் இசை என்னும் இடத்தைப் பெற்று விட்டது என்பது கருத்திருத்த வேண்டியதே. விளங்கும் பாடல், விரும்பும் இசை, மனத்தை வசமாக்கும் மாயம் இவையாவும் திரையிசை தருவதனால் மக்களின் மனங்கவர் இசையாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம். பின்னணியில் மேல்நாட்டு இசைக்கருவிகள் இருந்தாலும் திரையிசையின் அடிநாதமாக திரையிசைக்கு பக்கபலமாக அன்றும் தமிழிசை இருந்தது. இன்றும் தமிழிசை இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. எனவே தமிழிசையின் பங்களிப்பு திரையிசைக்கு என்றுமே இருக்கும் தமிழிசையினை விட்டு திரையிசையும் விலகிச் சென்றுவிட முடியாது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    Share
  • திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    திருமூலர் தத்துவம் சிந்தையில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் எங்கள் தமிழ்மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பினை எங்கள் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதாவது பக்தியை இலக்கியமாக்கிய தனித்துவம் எனலாம். ஏனைய மொழிகள் பக்தியைத் தனியாகவே பார்த்தன. ஆனால் எங்கள் தமிழ் மொழி அதனை வாழ்வுடன் இணைத்து இலக்கியமாகக் கண்டது. இதன் காரணமாகப் பக்தியின் வழியில் சென்ற அடியார்களின் மனத்தினின்று உதித்த சிந்தனைகள் அத்தனையும் திருப்பாடல்களாய் தமிழை வளம்படுத்தி வழிகாட்டியாய் அமைகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது எனலாம். அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் வந்து அமைகின்றன.

    பன்னிரு திருமுறைகளைத் தந்தவர்கள் பல இடங்களைச் சேர்ந்தவர்கள். பல அனுபவங்களைப் பெற்றவர்கள். அவர்களின் அனுபங்கள் ஆண்டவனின் பாற்பட்டதாகவும் அதேவேளை உலகியல் நிலைப்பட்டதாகவும் அமைந்தே இருந்தது. ஒன்பதாம் திருமுறைவரை அமைந்த திருப்பாடல்கள் ஒரே வகையினவாய் இருப்பதைக் காணமுடிகிறது. பத்தாம் திருமுறையாக  அமைகின்ற திருமுறை யானது  ஒன்பது திருமுறைகளையும் விட வித்தியாசமானதாக அமைவதனைக் காணக் கூடியதாக இருக்கிறது. தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு என்று திருமுறைகள் வருகின்ற நிலையில் பத்தாவதாய் வருகின்ற திருமுறை “திருமந்திரம்”   என்னும் சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும். சிறப்புப் பெயரினைத் தாங்கி வருகின்ற திருமந்திரத்தைப் பற்றி அறிவது அனைவருக்கும் அவசியம் அல்லவா!

    இந்தத் திருமந்திரம் தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகும். இதனைத் தத்துவ நூல் என்பதா,  சமய நூல் என்பதா, மருத்துவ நூல், என்பதா அறிவியல் நூல் என்பதா அல்லது புதுமைக் கருத்துக்களை உரத்துச் சொல்லும் புரட்சி நூல் என்பதா! இப்படிப் பல நிலையில் பன்முகங் கொண்டதாக இத்திருநூல் அமைந்திருக்கிறது என்றுதான் எண்ணிட வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ்ப் பக்தி உலகில் திருமந்திரம் தனித்து வமான ஒரு நூலாக மிளிர்ந்து நிற்கிறது என்பதை மறுத்துரைத்துவிடல் இயலாது.

    இப்படிப் பல புதுமைகளைக் கொண்ட திருமந்திரத்தைத் தந்தவரின் வரலாறும் கூட புதுமையாகவே காணப்படுகிறது. இவரின் தொடக்கமே எம்பெருமான் உறைகின்ற கயிலாயமாகிறது. அங்கிருந்து ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவரின் வருகை பிறப்பாய் அமைகிறது. வந்தவருக்கு அவர் வந்த உடலே வாய்க்காது விட வேறொரு உடலிற் புகுந்து அந்த உடலுக்கு உரியயவனின் பெயருடன் இம்மண்ணில் நிற்கும் ஒரு புதுமை நிகழ்கிறது. அப்பொழுதுதான் அவருக்குத் தான் தாங்கிய உடலுக்கு உரித்தான வனின் பெயரான மூலன் என்னும் பெயர் வாய்க்கிறது. திருவருட்சக்தி அவரிடம் நிறைந்த காரணத்தால் மூலன் – திருமூலன் ஆகும் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அதுவும் நிரந்தர மாகவில்லை என்பதையும் அவர்பற்றிய கதை எடுத்து இயம்புகிறது.

    திருமந்திரம் எமக்களித்த அந்தத் திருவருளாளரைப் பற்றிய செய்தி பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானால் எடுத்துச் சொல்லப்படுகிறது. திருத்தொண்டர் தொகையினைப் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை “நம்பிரான்” என்று உயர் நிலைப்படுத்தியே அறிமுகம் செய்கிறார் என்பது நோக்கத்தகது. சம்பந்தப் பெருமானை “எம்பிரான்” என்றவர் திருமூலரை “நம்பிரான்” என்று சுட்டுவது மனமிருத்த வேண்டிய கருத்தாகும்.

    திருமூலர் வரலாறு எப்படி இருந்தாலும் அதைப்பற்றி விவாதிப்பது அவசியம் அற்றதாகும். அவரால் அளிக்கப்பட்ட பொக்கிஷமான “திருமந்திரம்” என்பதே கவனித்தில் கொள்ளப்படுதல் வேண்டும். திருமந்திரம் எப்படிப் பாடப்பட்டது யாரால் பணிக்கப்பட்டது என்பதுதான் மிகவும் முக்கியமான செய்தியாகும்.

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

    இறைவன் தன்னைப் படைத்ததற்கான சரியான விடையைத் திருமூலரே தருகிறார். “தமிழ் கொண்டு தன்னைப் பாடவே இறைவன் படைத்தான் பணித்தான்” என்பதுதான் அந்த மறுமொழியாகும். இதுதான் அவரின் பிறப்பின் நோக்கமாகும். இங்கே தமிழ் என்று அழுத்திச் சொல்லப்படுவது கருத்திருத்த வேண்டியதேயாகும். திருமூலர் இறைவன் விருப்பப்படி தமிழில் நன்றாகவே பாடினார். அறம் பாடினார். பொருள் பாடினார். இன்பம் பாடினார். தத்துவம் பாடினார். யோகம் பாடினார். ஆரோக்கியம் பாடினார். ஒழுக்கம் பாடினார். நிலையாமை பாடினார். விஞ்ஞானம் மொழிந்தார். அதேவேளை அரிய மெஞ்ஞா னமும் மொழிந்தார். எதைப் பாடினாலும் இறைவனை அகமிருத்தியே அத்தனையும் தந்துநின்றார் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். சைவசித்தாந்தம், யோக சாத்திரமுறை, விஞ்ஞானமுறை என்று திருமந்திரம் இருந்தாலும் அடிநாதமாய் அமைந்திருந்திருந்தது – பரம்பொருளை உணர் ந்து கொள்ளுதலே என்பதை மறந்துவிடக் கூடாது.

    திருமந்திரம் ஒன்பது தந்திரங்களையும்  மூவாயிரம் பாடல்களையும் கொண்டது. ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடி மூவாயிரம் ஆண்டுகள் இருந்திருக்கிறார் என்பது வரலாறு. இதில் நாம் நுழைந்து விவாதம் செய்ய வேண்டியதில்லை. திருமூலரைச் சித்தர் என்றே அழைப்பது வழக்கம். சித்தர்கள் வாழ்வானது விசித்திரமானது. அறியமுடியா பல அதிசயங்கள் கொண்டது என்பதுதான் பொதுவான ஒரு கருத்து நிலையாகும். அவரின் பிறப்போ அல்லது அவரின் மறைவோ பற்றிய சர்ச்சைகளை விட்டு விட்டு அவரின் சிந்தனைக் கருவூலமான திருமந்திரத்தையும் அதன் மூலம் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைத்திட்ட திறத்தையுமே நாமனைவரும் எம்மகத்தில் அமர்திட வேண்டும். அதுதான் மிகவும் பொருத்த மானதுமாகும்.

    மூவாயிரம் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த வைரங்கள். அவற்றில் அறிவார்ந்த பல கருத்துகள் பொதிந் திருக்கின்றன என்பதை அனைவருமே ஒத்துக் கொள்ளுவார்கள். அறிவார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த திருமூலர் கையாண்ட மொழி நடையினை வியந்துமே பார்க்க வேண்டி இருக்கிறது. இலகுவான சொல்லாக இருக்கும். படிக்கும் பொழுது ஒரு கருத்தை எமக்குள் ஏற்படுத்தும். ஆனால் உள்நுழைந்து பார்க்கும் பொழுதுதான் திருமூலர் தெரிவார். அவர் எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திடக் கையாண்ட சித்தும் தெரிய வரும். அந்த அளவுக்கு ஆழம் நிறைந்திருக்கும். அதேவேளை கவிதை அழகும் செறிந்திருக்கும். அதற்குள் பக்தியும், தத்துவமும், புதைந்தும் இருக்கும். இப்படியான சிறப்பினை வேறெதிலுமே காணமுடியாது. ஆனபடியால்த்தான் அது திருமந்திரம் என்னும் பெயரினைத் தாங்கிடும் பெருமைக்கு ஆளானது எனலாம்.

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை அனைவருமே தேடுகின்றோம். அந்த அருட்சோதியை வேண்டிப் பல இடங்களைத் தேடியும் ஓடுகின்றோம். மனம் அங்கலாய்த்தபடியே இருக்கிறது. அருட்பெருஞ்சோதியை அறிய முடியாமல் இருப்பார்க்கு திருமூலர் புதுமையாய் ஒரு கருத்தைச் சொல்லி புதுப் பாதையையும் காட்டுகின்றார். இது யாருமே சிந்திக்கா சிந்தனையாகும்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந் திருப்பாரே

    சித்தம்  போக்கு சிவன் போக்கு என்று சொல்லுவதை நாமெல்லாம் கேட்டிருக்கின்றோம். இதன் அர்த்தம் சிவபெருமானின் போக்கானது அன்பு நிலையேயாகும். இதனைக் கருத்திருத்தியே திருமூலரும் சிவனை “அன்பாய்” காணுகின்றார். ஆகவேதான் சிவன் வேறல்ல – அன்பு வேறல்ல. இரண்டுமே ஒன்று தான் என்று உரக்கக் கூறுகிறார். ஆண்டவனை அன்பாய்க் காணுவதே மிகவும் உகந்த நிலை என்பதுதான் திருமூலர் எண்ணமாகும். பரம்பொருளை அன்புடன் இணைத்து அப்பரம்பொருளுக்கு அன்புதான் பெயர். அந்த அந்த அன்புதான் சிவன் என்று காட்டும் பாங்கில் யாவரையும் திரும்பிப் பார்த்திட வைக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விளங்காதவருக்கும் விளங்கப் பண்ணிடும் உத்தியாய் இருக்கிறதல்லவா?

    உடம்பினைப்பற்றி அதனுள் இருக்கும் உள்ளத்தினைப் பற்றியெல்லாம் பலரும் பலவாறு பார்த்திருக்கிறார்கள். ஆனால் திருமூலர் பார்வையோ யாவரையும் விட வித்தியாசமானதாய் அமைந்திருக்கிறது. உடம்பு இழுக்கா என்றால் இல்லையே என்கிறார். அதற்குத் தக்க காரணமும் தருகிறார். அங்குகூட பரம்பொருளையே உட்புகுத்தியும் நிற்கிறார்.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
    உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

    உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
    மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
    பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
    கள்ள மனமுடைக் கல்வி இலோரே

    தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
    வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
    தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
    ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே.

    உடம்பினைப் பற்றிய பார்வையும், அதனூடாக வெளிப்பட்ட புதுமையான சிந்தனையும், திருமூலர் உலகினுக்கு உணர்த்திய பெருந் தத்துவமாய் இருக்கிறது அல்லவா! இந்தப் பாடல்களை அறிவால் அணுகுவதைவிட உணர்வால் உள்ளிருத்துவதே உகந்ததாகும்.

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
    யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

    இந்தப் பாடலை நாமனைவரும் தெரிந்தே வைத்திருக்கிறோம். பாடலைப் பாடமாக்குவதோ அல்லது பாடலின் பொருளைக் கூறுவதோ இங்கு முக்கியம் அல்ல. இப்பாடல் ஊடாக திருமூலர் சமூகத்துக்கு எதனை உணர்த்திட விரும்புகிறார் என்பதே மிக மிக முக்கியமானதாகும். பரம்பொருளைப் பூசிப்பதற்கு ஒரு பச்சிலையே போதும் என்கிறார். பரம்பொருளைப் பூசித்தால் மட்டும் போதுமா என்று கேட்டு விட்டு – பசுவுக்குப் புல்லுக்கொடு. உண்ணும் போது யாராவது வந்தால் ஒரு கைப்பிடி உணவு கொடு. இப்படி யெல்லாம் உனக்குச் செய்வது கஷ்டமாக இருந்தால் நல்லதாக ஒரு வார்த்தையினையாவது மற்றவரைப் பார்த்துச் சொல்லிவிடு. என்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதுபோல எமக்கெல்லாம் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளை நாடுவதும், பூசிப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்து வத்தை பசுவுக்கு வாயுறை கொடுப்பதற்கும், உண்ணும்போது ஒரு கைப்பிடி கொடுப்பதற்கும், இன்னுரை மற்றவர்க்கு வழங்குவதற்கும் திருமூலர் கொடுத்து நிற்கிறார் என்பதுதான் அகம் அமர்த்திட வேண்டிய கருத்தாகும். மகேசன் சேவையுடன் சமூகச் சிந்தனையும் மிகவும் அவசியமானதுதான் என்பதையே திருமூலர் எண்ணிச் சொல்லுகிறார் என்பதே கருத்திருத்த வேண்டிய கரு எனலாம். இந்தப் பாடலின் மூலம் நல்ல அறமும் உணர்த்தப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். அறங்களை இலகுவாக்கி அதனையாவது இருக்கும் காலத்தில் செய்யுங்கள் என்று நல்ல குருவாய் நல்லதொரு உபதேசத்தை வழங்கியவர் – மனித வாழ்வினையும், அதன் நிலையாமையினையும் படம்பிடித்துக் காட் டுகிறார். திருமூலரைத் தவிர எவராலுமே இப்படி விளக்கிடவும் முடியாது. உணர்த்திடவும் முடியாது என்பதுதான் உண்மை.

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே    

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
    சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

    வந்தார். நன்றாகவே அதுவும் சுவையாகவே உண்டார். அழகான மனைவியுடன் இன்பமாய் இருந்தார். இட துபக்கம் சிறிது வலிக்கிறது என்றார்.நோவினால் படுத்தார். படுத்தவர் படுத்தே விட்டார். எழவே இல்லை! ஒரு நாடகம் போல காட்டி மனித மரணத்தினை திருமூலர் சமூகத்துக்கு உணர்த்தி நிற்கிறார். இங்கே நிலையாமையும் இருக்கிறது. மருத்துவமும் இருக்கிறது. இடப்பக்கம் நொந்தால் இருதய நோய். அதனால் உயிராபத்து வரும். இதனை எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் திருமூலர் என்னும் சித்தர் பெருமான் சொல்லி இருப்பது எம்மையெல்லாம் அவர் பக்கம் திருப்பிப் பார்த்திட வைத்திடும் நிலைதானே!

    படுத்தவர் எழவேயில்லை. படுத்தவர் பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர். வசதிகள் வாய்ப்புகள் நிறைந்தவர். ஆள் பலம் படைத்தவர். அரசியலில் உயர்நிலையில் இருப்பவர். அனைவரையும் ஆட்டிவைத்தே வாழ்ந்தவர். அவரிப்போ எழமுடியாமல் வீழ்ந்துவிட்டார். ஊரிருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஒலிக்கி அழுதார்கள். சற்று நேரங்கழித்து – அந்தஸ்த்திலிருந்தவரின் பெயரினைச் சொல்லாது எப்பதான் இந்தப் பிணத்தை எடுக்கப் போகிறார்களோ என்று சொல்லி நிற்கின்றார்கள். நிலைமை உடனேயே மாறி விட்டது என்கிறார் திருமூலர். அதுமட்டுமா? ஆடவைத்து நின்றவரின் ஆட்டம் அடங்கிய பின் பிணம் என்னும் பெயருடன் சூரையங் காட்டுக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்து, அங்குள்ள நீர் நிலையில் மூழ்கி எழுந்து – அந்தஸ்த்தில் இருந்தவரையே நினைப்பிலிருந்து அகற்றியே விட்டார்கள். இதுவும் ஒரு படமாக காட்டப்படுகிறது அல்லவா! இதுதான் வாழ்கை! இதுதான் வாழ்கையின் நிதர்சனமான நிலை! 

    உலகிலே இருக்கின்ற அனைவருக்கும் இப்படி ஒரு தத்துவத்தை மிகவும் பக்குவமாய் அதேவேளை உறைக்கும்படியும் உரைத்தவர் திருமூலர் ஒருவரே என்பதுதான் இங்கு மனத்திருத்த வேண்டிய உண்மையாகும். 

    திருமுறைகளை ஆலயங்களில் பாடும் பொழுது திருமந்திரம் அங்கு இடம்பெறுவதைக் காணவே முடிவதில்லை. திருமந்திரம் என்பது ஒரு சாத்திர நூல். அது தோத்திர நூல் அல்ல. அது நிலையாமையினை உணர்த்தும் நூல். தத்துவங்களை உள்ளடக்கிய நூல்.சாதாரண மானவர்களுக் கெல்லாம் விளங்காத நூல். சித்தரின் நூல்.முத்தியினை முன்னிறுத்தும் நூல். விளங்குவது கடினம். என்றெல்லாம் பல கருத்துகள் இருப்பதனால் திருமூலரையோ அல்லது திருமந்திரத்தையோ நாடுவதும் தேடுவதும் குறை வாகவே இருக்கிறது. கோவில்களில் கூட புராணங்கள் பற்றியே விரிவுரைகள் பெரும்பாலும் இடம் பேறும். திருமந்திரம் என்றாலே அது ஒரு மந்தி நூல் என்று எண்ணுவதே வழக்கமாகிவிட்டது. ஆம்… அது மந்திர நூல்தான். நிறை மொழியான பலகருத்துக்கள் அதில் இருப்பதால் அது மந்திர நூல் அதாவது உயர்வான, சிறப்பான, மதிப்பான மந்திர நூல் ஆகையால்த்தான் திரு என்னும் அடை மொழி இணைக்கப்பட்டு “திருமந்திரம்” ஆகி திரும்பிப் பார்த்திட வைத்திருக்கிறது.

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப
    ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
    கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
    பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
    அழிந்தன கண்டும் அறம்அறி யாரே

    Share
  • திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    திரையில் மலர்ந்த தீந்தமிழ் பற்றிய ஒரு பார்வை

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … ஆஸ்திரேலியா 

    இலக்கியமும்.  இலக்கணமும் இங்கிதமாய் கொண்டமொழி எங்கள் இன்தமிழ் மொழி.அந்த மொழி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழைப் பெற்று நிற்கின்ற மொழி.வரலாறு படைத்த மொழி.பேச்சு மொழியா யும் எழுத்து மொழியாயும் ஏற்றமுற்று இருக்கும் மொழி.சங்கம் வளர்த்த  மொழி. சன்மார்க்கம் சொன்ன மொழி.அறத்தை உரைத்த மொழி அன்பைப் பொழிந்த மொழி.என்றுமே இளமையாய் இருக்கும் மொழி. அதுதான் தீந்தமிழ் மொழி. சிறப்பான மொழி. மண்ணில் நல்லவண்ணம் வாழவைக்கும் மொழி.அந்த மொழி பட்டி தொட்டியெங்கும் பரவிட வைப்பதற்கு வாய்த்த ஒரு ஊடகம்தான் வெள்ளித்திரை, வெள்ளி த்திரையில் எங்கள் தமிழ் எழிலுடன் கொஞ்சி உலாவந்த பாங்கினை பார்ப்பது பரவசமாய் அமையும் அல்லவா ? பார்ப்போமா ! நீங்கள் ஆயத்தமா ? வாருங்கள் பார்ப்போம் ! திரையில் மலர்ந்த தீந்தமிழை !

    திரையில் காட்சிகளைப் பார்ப்பதும் , காட்சிக்கு ஏற்ற வசனங்களைக் கேட்பதும் , அந்தக் காட்சிகளுக்கு ஏற்றதான பாடல்களை இசையுடன் கேட்பதும் எல்லோருக்குமே பிடித்தமாய் இருக்குமல்லவா? இந்த விருப் பம்தான் திரைத்துறையை வளரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது எனலாம்.

    நாடகங்களில் வசனம் வந்தது,பாட்டும் வந்தது. ஆரம்பகாலங்களில் வந்த திரைப்படங்கள் நாடகப் பாணி யிலே வந்தன, காரணம் ஆரம்ப நிலை எனலாம். ஆனால் காலம் மாற கருத்துகளும் மாற காட்சிகளும் மாறின.மாறிய மாற்றங்களுக்கெல்லாம் திரையும் இடங் கொடுக்கவேண்டியது அவசியமாய் அமைந்தது.

    1931 ஆம் ஆண்டு அக்டோபர் 31 என்னும் நாள் திரைத்துறையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நாளாகும். அன்றுதான் “ “காளிதாஸ்” என்னும் பெயரில் பேசும் திரைப்படம் வெளி வருகிறது. பேசும் படந்தான் தமிழைத் திரையில் உலவவிட்டது எனலாம். அந்தவகையில் திரையில் தமிழைப் பேசவைத்த பெருமை முதல்வந்த காளிதாசுக்கும் அதன் குழுவினருக்குமே உரித்தான தெனலாம்.

    மேடையில் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளே நாடகங்களாக நடிக்கப்பட்டன. ஆரம்ப காலங் களில் வெளிவந்த திரைப்படங்களும் நாடகப் பாணியில் புராண இதிகாசக் கதைகளையே திரையில் காட்டி நின்றன. அங்கு மேடை நாடகங்களில் கையாளப்பட்ட தமிழே ஆரம்ப திரைத்தமிழாய் மலர்ந்ததது என்பதை மனமிருத்தல் வேண்டும். அது அக்காலப் போக்கு எனலாம். அப்படியான நேரத்தில் வசனங்க ளிலும் பாடல்களிலும் சமஸ்கிருதம் கலந்து தமிழ் திரையில் வந்தது. அதனை அப்போதைய திரைத் தமிழாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் மாற்றம் வராமல் இல்லை. அந்த மாற்றம்தான் நல்ல இலக்கியத் தமிழை, அழகான தமிழை, உணர்ச்சி கொப்பழிக்கும் தமிழை, உயிரோ ட்டமான தமிழை திரையில் கொண்டுவந்த கொடுத்த மாற்றம் எனலாம்.

    இந்தமாற்றத்துக்கு வித்தாக பல வசனகர்த்தாக்களும், பாடல் ஆசிரியர்களும்  வந்தமைந்தார்கள் என்பது தான் முக்கியமாகும். இலக்கியத் தமிழை இளங்கோவனும் சாரியும் திரையில் மலரச் செய்தார்கள். உத்தம புத்தரனில் சாரியின் தமிழ் திரையில் தீந்தமிழாய் மலர்ந்தது. கண்ணகியில் இளங்கோவன் தமிழ் தித்தி த்தது. அடுத்து அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி வந்தது. அண்ணாவின் தமிழ் எதுகை மோனையாய் தீந்தமிழை திரைக்கு எடுத்து வந்தது. அடுக்குமொழி அண்ணாத்துரை என்றுதான் அவர் அழைக்கப்பட்டார். “சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு ! அந்த விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்ப தில்லை!” இந்தவசனத்தை மறந்தவர்களும் இல்லை! மறக்கத் தான் முடியுமா? அவரின் இளவலாய் வந் தார் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் மலர்ந்த கலைஞர் அவர்கள் .கலைஞர் தீட்டிய வசனங்கள் இன்றளவும் பலரின் மனங்களில் சிம்மாசனமிட்டு இருக்கிறது எனலாம். கலைஞரின் வசனங்களை மனப்பாடம் செய்து பலரும் ஒப்புவித்து காட்டிப் பெருமைப்படுவதும் உண்டு. அந்த அளவுக்கு திரையில் தீந்தமிழை மலர்ந்திட வைக்கும் மாயம் கலைஞர் தமிழுக்கு இருந்திருக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

    திரைத்தமிழில் திருப்பமாய் பராசக்தியின் வசனங்கள் அமைந்தன.

    … நானே பாதிக்கப்பட்டேன் “நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் ! சுயநலம் என்பீர்கள் ! என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது ! ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் ! அதைப்போல ,

    …… பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை … என் பாதையில் !

    படமெடுத்து ஆடும் பாம்புகளே நெழிந்திருக்கின்றன ! தென்றலைத் தீண்டியதும் இல்லை … நான் … ஆனால்

    தீயைத்தாண்டியிருக்கிறேன் !

    தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான்

    பிறக்க ஒரு நாடு ….. பிழைக்க ஒரு நாடு ! தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா !

    காணவந்த தங்கையைக் கண்டேன் ! கண்ணற்ற ஓவியமாக ! கைம்பெண்ணாக ! தங்கையின் பெயரோ கல்யாணி ! மங்களகரமான பெயர் ….

    ஆனால் …. கழுத்திலே மாங்கல்யம் இல்லை ! செழித்துவளர்ந்த குடும்பம் !

    சிரழிந்துவிட்டது ! கையிலே பிள்ளை ! கண்களிலே கண்ணீர் !

    ………. யார் குற்றம் ? விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்கும் வீணர்களின் குற்றமா ? இப்படி உணர்ச்சிப்பிளம்பாய் கலைஞரின் தீந்தமிழ் திரையில் வந்து மலர்ந்துபோய் இருந்தது. மறக்க முடியா வசனங்கள் அல்லாவா ?

    இதேபோல் மனோகரா வந்தபொழுதும் கலைஞரின் தீந்தமிழ் திரையினை நிறைத்து நின்றது. கலைஞரின் பூம்புகார் வசனங்களும் திரையில் தமிழைக் கொட்டியது எனலாம். கலைஞர் காலம் திரையில் தமிழ் ஒலித்த காலம் எனலாம்.

    கலைஞரின் மறக்கமுடியா தமிழை மனோகரா கொட்டியது.

    ” கட்டளையா இது ….. ? கரைகாண முடியாத ஆசை… மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து …. கண்ணே ..முத்தே ..தமிழ்ப்பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி .. தந்தால் ஆனகட்டிலிலே…. சந்தனத் தொட்டிலிலெ …வீரனே ..! என் விழி நிறைந்தவனே ..! தீரர் வழிவந்தவனே….. என்றெல்லாம் யாரைச் சீராட்டிப் பாராட்டி னீர்களோ … அவனை அந்த மனோகரனை …சபிநடுவே நிறுத்தி… சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்களது தணியாத ஆசைக்கும் பெயர் கட்டளையா தந்தையே !

    ” கோமளவல்லி … கோமேதகச்சிலை ..கூவும் குயில்… குதிக்கும் மான் … என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்ளிக் கண்களை …கொடிய நாக்கை … என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு .. அதை எதிர்த்தால் உம்மையும்… உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டளத்தையும் பிணமாக்கி விட்டு …” என்று கனல்பறக்கும் தீந்தமிழை கலைஞர் திரையில் கொட்டி நிற்பார். அதனை சிவாஜிகணேசன் உயிராக்கி தமிழ் உள்ளமெலாம் உறைய வைப்பார்.

    யார் கள்வன் ! என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்! நல்லான் வகுத்ததா நீதி ! இந்த வல்லான் வகுத்ததே நீதி! இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை! இது கோவலன் தேவியின் சிலம்பு ! நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு ? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? ( பூம்புகார் )

    கலைஞருடன் கைகோர்த்து கலையுலகில் வலம்வந்தவர் கவியரசர் கண்ணதாசன். நகரத்தாரிடமிருந்து முத்தையாவாக வந்தவர் கண்ணதாசனாய் கவி மன்னனாய் நாடறிய ஏடறிய உயர்ந்தார். அவரின் கைவண்ணத்தில் திரையில் வசனமாயும் பாடல்களாயும் தீந்தமிழ் செழித்து நின்றது 

    “நான் சாதாரண குடியில் பிறந்தவன், பலமில்லாத மாடு, உழ முடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி, இவைகளை நாங்கள் விரும்புவதேயில்லை”.

    “மக்களின் நிலையறியாதவன் நானா?, நீங்களா?. நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கி றவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கின்றவன்.”

    “என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.” “அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.” “தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள்.” “என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.”

    மக்கள் திலகத்தின் நாடோடிமன்னனில் கவியரசரின் தமிழ் அருவியைப் பருகாதார் இருக்கவே முடியாது ! மக்கள் திலகம் வாழ்க்கையில் இவ்வசனங்கள் உரமாய் வரமாய் வந்தமைந்தது எனலாம்.

    மக்கள் திலகத்தின் மதுரை வீரனில் திரையில் கவியரசரின் தீந்தமிழ் பொழிகிறது கேளுங்கள் !

    தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!

    அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?

    ‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்த தும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!

    மன்னிப்பு!

    வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ

    பள்ளிக்கூடமே போகாத ஒருவர் தீந்தமிழை திரையில் கொண்டுவருகிறார். கேட்டுத்தான் பாருங்களேன் !

    கலைவாணி ! கருணாகரி ! கல்விக்கரசி … சொல்லின் செல்வி ! கற்றவர் போற்றும் கலாதேவி ! வித்தை படித்தவர் வணங்கும் வேதவல்லி ! காவிய நாயகர்கள் பாராட்டும் கலை உலகில் நாயகியே ! நற் சான்றோர்க்கு அருள் புரியும் நாமகளே ! வெள்ளைத் தாமைரைப் பூவில் அமர்ந்து வீனை மீட்டிப் பண்பாடி விவேகத்தை வழங்கும் அருள்வடிவே வணக்கம் !

    திருவே ! திருவின் உருவே ! திருவை அளிக்கும் உலகிற்கு திருமகளே ! தினம் துதிக்கும் தொண்டர்க்கு திரவியத்தை அள்ளி வழங்கும் திருவருளே ! தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து…. திக்கெட்டும் செல்வச் சிறப்போடு செழிக்க வைக்கும் திருப்பெரும் வடிவே ! திருப்பாற்கடலில் தோன்றிய திவ்வியப் பொருளே … நின் திருமலரடி தொழுகின்றேன் ..வணக்கம்

    இப்படித் தீந்தமைழை திரையில் காட்டியவர் வேறு யாருமல்ல… நவராத்திரியை, திருவருட்செல்வரை, திருவிளையாடலை, குலமகள் ராதையை எமக்களித்த ஏ,பி. நாகராஜன் அவர்கள்.

    “அங்கம் புழுதிபட அறுவாளில் நெய் பூசி …பங்கப்பட இரண்டு கால் பரப்பி … சங்கதனை கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ … என் கவிதையை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்”

    “சங்கறுப்பது எங்கள் குலம் …சங்கரனார்க்கு கேது குலம் … சங்கை அரிந்துண்டு வாழ்வோம் …அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை ” தீந்தமிழ் சொட்டுகிறதல்லவா திரையில் !திரு விளையாடலில் வரும் இத்தமிழைப் பாடமாக்கிப் பாருங்கள் !

    “உன்னை ஒழிப்பத்ற்கென்றே உலகில் தோன்றியவன் ! வேலோடு வந்திருப்பவன் ! உன்னால் வேதனைப்படும் அமர்களை விடுவிக்கப் போகிறவன் ! வேலன் .. ! வேதற்கிற்கு சீலன் ! பார்வைக்குப் பாலன் ! பகைவர்க்குக் காலன் ! கந்தனென்பார்  கடம்பனென்பார் ! கார்த்திகேயனென்பார் ! சண்முகனென்பார் ! ஆறுமுகனென்பார் ! உன்னையும் வதைத்தபின்.. சூரனையும் வதைத்த சூரனென்பார் ! சொல்லுக்கும் பொருளுக்கும் முத்தமிழுக்கும்… தமிழ் இனிமைக்கும்… ஆயகலை அறுபத்து நான்கிற்கும்.. முன்னைப் பழமைக்கும் .. பின்னைப் புதுமைக்கும் … தலைவன் அவன் ! அவனே வேலவன் ! அவனனுப்பிய தூதுவன் வீரபாகுத் தேவன் ! கேட்கக் கேட்க தமிழ் இன்பம் பெருகுதல்லவா ?

    பாடசாலை நாட்களில் பாடமாக்கி பேச்சுப் போட்டி ஒத்திகைக்கு நாங்கள் ஒப்புவித்த தீந்தமிழ்தான் இது …. இத்தமிழை உணர்ச்சி பொங்கிடப் பேசினால் தமிழ் ஆசிரியர் தலைகால் தெரியாமல் மகிழ்ச்சியில் மிதப்பார். கேட்டுத்தான் பாருங்களேன் .

    “நீல வானிலே செந்நிறப் பிளம்பு ! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன் ! சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது ! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டநிறமான இரத்தநிறப் பொட்டு ! பரமனுக்கு முக்கண் ! அது … தேவையில்லை .. ஒரு வீரனுக்கு.. இந்த வெற்றி வடு ஒன்றே போதும் ! வாளை ஓட்ட அவர்கள் மீது வேலைப் பாய்ச்ச ! இதனால் விளைவது என்ன வெண்ரு கேள் ! வெண் மணல் நிலமெல்லாம் … செக்கர் வானம் போல் .. செம்பவள மலைபோல் . செப்புத் தகடடித்த செப்பநிட்ட தரைபோல் … மாணிக்க கரைகட்டி மடை திறந்த நெருப்பாற்றை இடையில் ஓடவிட்ட அழகுபோல் …எதிரியின் இரத்தம் குபுகுபுவென பொங்கி யெழுந்து .. எங்கும் நிறைந்த பொருளாய் .. நம் ஏற்றமிகு செயலாய் .. களத்தில் நிறையப் போவதுதான் ..!

    “திறை, வரி, வட்டி. வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது வட்டி ? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலையம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்ட வனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழ வர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ! ”  சக்தி கிருஷ்ணசுவாமியின் திரையில் வந்த தீந்தமிழ் எப்படி இருக்கிறது ? ஒரு முறை நீங்களும் பேசித்தான் பாருங்களேன் !

    இடைக்காலத்தில் இடம் பெற்ற ஒரு திரைத்தீந்தமிழ்

    ஆண்களுடைய கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகித்தான் தீர வேண்டும் என விதி இருந்தால் அந்த விதியை ஒழுங்குபடுத்த வேண்டாமா? 1

    மண்புழுக்களாக இருக்கும் பெண்களை பாதிக்கக் கூடிய மனுதர்மம், மனுநீதி, மனு சாஸ்திரம் இவைகளை திருத்தி எழுத வேண்டாமா?

    அன்று தன் தந்தை செய்த அதே தவறை இன்று அவருடைய மகன் செய்கிறான். இது வம்ச பரம்பரை! வாழையடி வாழை! வீண் பழிக்கு ஆளான இந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்குங்கள்! வஞ்சகம் அறியாத அவள் வயிற்றில் வளரும் அந்தப் பூந்தளிரைக் காப்பாற்றி, அதன் தந்தை இதோ இந்த ராஜாதான் என்று நீதி வழங்குங்கள்!  நீதி வழங்குங்கள்!’ ( விதி– ஆரூர்தாஸ் )

    இலக்கிய பாங்கான வசனங்கள், இலட்சியப் பாங்கான வசனங்கள், அரசியல் பூசிய வசனங்கள், ஆன்மீ கம் தழுவிய வசனங்கள் , என்றெல்லாம் வனங்களை தீந்தமிழால் நிறைத்து திரைவாயிலாக வெளிக் கொணர்ந்தவர்கள் என்னும் வகையில் பல ஆளுமைகள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் தீந்தமிழைத் திரையில் வசனமாய் தந்த காலம் சற்று தளர்வினை நாடிவிட்டதுபோல் தெரிகிறது. காரணம் காலத்தின் கோலமது ! இன்று திரையில் தமிழ் வருகிறது ! ஆனால் அது பேச்சுத்தமிழாய் வட்டாரத் தமி ழாய் வலம்வந்து அன்னியத்தையும் அரவணைத்து நிற்கிறது எனலாம்.

    வசனத்தின் வழியில் திரையில் தீந்தமிழ் தவழ்ந்ததுபோல் பாட ல்களின் வாயிலாகவும் திரையில் தமிழ் இசையுடன் கலந்து உள் ளங்களை நிறைத்தது. அது இன்னும் தொடர்கிறது என்று தான். சொல்ல வேண் டும்.

    பாபநாசம் சிவன் தொடக்கம் இக்கால பா.விஜய் வரை தீந்தமிழ் செப்பி நிற்கும் திரையிசைப் பாடல்க ளைத் தந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் பங்களிப்பும் நல்ல தமிழை, இலக்கியத் தமிழை திரையில் இசை யின் மூலம் கொடுத்து யாவர்மனத்திலும் தமிழைப் பதியச் செய்ய வேண்டும் என்பதுதான் என்பதில் எள்ளளவும் ஐய்யம் இல்லை. திரையில் தமிழ் தந்த கவிஞர்களை அறிமுகம் செய்து அவர்களின் பங்களி ப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுவ தென்றால் அதற்கு பல மணி நேரங்கள், பல நாட்கள் எடுக்கும் என்பதால் – அந்தச் சமுத்திரத்தினுள் இருந்து சில முத்துக்களை பொறுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

    மருதகாசியின் தென்றலைத் தொட்டுப் பார்ப்போம் — இன்றும் மனதில் பதிந்து பாடினால் பரவசம் தரும் தீந்தமிழ் அல்லவா ?

    –உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
    அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே

    – சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    – ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை

    – மணப்பாரை மாடு கட்டி

    தஞ்சையின் மைந்தன் தஞ்சை ராமையாதாஸின் தீந்தமிழும் நெஞ்சில் நிற்கிறது

    – பிருந்தாவனமும் நந்தக்குமாரனும்

    – மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ  

    எந்த முத்தை எடுப்பது ? எந்தமுத்தைப் பார்ப்பது என்பதுதான் சிக்கலான நிலை. என்றாலும் முயல்கிறேன்.

    அச்சம் என்பது மடைமையடா ! மயக்கமா கலக்கமா ! எனத் தொடங்கியவர்

    கண்ணதாசன் என்னும் பெரிய சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் மூழ்கினால் வெளியில் வரவே முடியாது. அத்தனை உயர் முத்துக்களும் அங்கேதான். மூழ்கி எடுத்த முத்துக்கள் உங்களுக்கு –

    அந்தாதியாய். ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்‘ எனத் தொடங்கி ‘பலே பாண்டியா‘ படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:‘

    பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்!‘

    மூன்று முடிச்சு‘ படத்தில்

    வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்

    நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

    கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

    மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

    தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்.. என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.

    பல அணிகளைக் கவியரசர் கையாண்டிருப்பார். அவையெல்லாம் முத்துக்கள்.

    உவமை அணி :.’குடும்பத் தலைவன்‘ திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்:

    திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
    ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!…
    அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்!
    ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

    மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:‘

    சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! – நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித் திருப்பாளாம்!…செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்!செம்புச் சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்! – நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந் திருப்பாளாம்!‘

    தற்குறிப்பேற்ற அணி

    ‘தாயைக் காத்த தனயன்‘ படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்..

    ‘மூடித்திறந்த இமையிரண்டும் ‘பார் பார்!‘ என்றன!

    முந்தானை காற்றில் ஆடி ‘வா வா!‘ என்றது!‘

    இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் ‘பார், பார்‘ என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது ‘வா வா‘ என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.ம்நெமும்த்துக்கள்ஞ்சிரண்டின் நினைவலைகள்

    நி முத்துக்கள் குவிகின்றன…….

    “மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
    கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே” என்னும்
    வரிகளும், கம்பர் இயற்றிய
    “நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
    தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்”
    பாடலில் பயின்று வரும் வரிகள் -திரையில்

    (படம்: மாலையிட்ட மங்கை).
    “காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
    பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
    காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
    காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது”

    இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
    “இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
    பொருந்த வளைபறித்துப் போனான்–பெருந்தவளை
    பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
    மாத்தத்தன் வீதியினில் வந்து”. தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.

    கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
    “சின்னவளை முகம் சிவந்தவளை நான்
    சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
    என்னவளைக் காதல் சொன்னவளை
    நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு” என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு இயற்றியுள்ளார். னைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெலாம் கனவலைகள்

    இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல் மிகப் புகழ்பெற்றது:

    “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
    குடிக்கத்தான்  கற்பித் தானா?
    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
    கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
    அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
    நோவத்தான்  ஐயோ! எங்கும்
    பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
    புவியில்தான்  பண்ணி  னானே.”
    இந்தப் பாடலால் கவரப்பட்ட

    கவிஞர் கண்ணதாசன்
    பாவமன்னிப்பு என்ற படத்தில் ” அத்தான், என்னத்தான்,

    அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி” என்ற திரைப்படப் பாடலை இயற்றினார்.

    இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல் எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:

    “யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்”.(குறள்:1094). இப்பாடலின் கருத்தை

    வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்

    “நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
    இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
    காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
    கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
    உன்னைநான் பார்க்கும் போது
    மண்ணை நீ பார்க்கின்றாயே;
    விண்ணை நான் பார்க்கும் போது
    என்னை நீ பார்க்கின்றாயே.” என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப் பட்டிருக்கும்.னவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகளமலர்க்கணைகள் பாkEய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்

    கேள்விகளும் பதிலுமாய் சில முத்துக்கள்

    கண்ணிலே நீர் எதற்கு?
    காலமெல்லாம் அழுவதற்கு

    நெஞ்சிலே நினைவெதெற்கு?
    வஞ்சகரை மறப்பதற்கு

    இன்பமெனும் மொழி எதற்கு?
    செல்வத்தில் மிதப்பதற்கு

    துன்பமெனும் சொல்லெதெற்கு?
    உள்ளமென்ப துள்ளவர்க்கு

    கையிலே வளைவெதெற்கு?
    காதலியை அணைப்பதற்கு

    காலிலே நடையெதெற்கு?
    காதலித்துப் பிரிவதற்கு

    பாசமென்ற சொல்லெதெற்கு?
    பார்த்திருந்து துடிப்பதற்கு

    ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
    அன்றாடம் சாவதற்கு

    பூவிலே தேனெதெற்கு?
    வண்டு வந்து சுவைப்பதற்கு

    வண்டுக்குச் சிறகெதெற்கு?
    உண்ட பின்பு பறப்பதற்குப

    கொடியசைந்ததும் காற்று வந்ததா
    காற்று வந்ததும் கொடி அசைந்ததா
    நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
    மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

    பாடல் வந்ததும் தாளம் வந்ததா
    தாளம் வந்ததும் பாடல் வந்ததா
    பாவம் வந்தது ராகம் வந்ததா
    ராகம் வந்ததும் பாவம் வந்ததா
    கண் திறந்ததும் காட்சி வந்ததா
    காட்சி வந்ததும் கண் திறந்ததா
    பருவம் வந்ததும் ஆசை வந்ததா
    ஆசை வந்ததும் பருவம் வந்ததா

    கவியரசர் திரையிசைத் தீந்தமிழ் தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.காலங்கருதி அந்த ஆழிக்குள் இருந்து மேலெழுகின்றேன்.

    கவியரசர் பாட்டா வாலி பாட்டா என்று அடையாளம் காணா வகையில் கவித்துவத்தை திரையில் தீந்தமிழால் பதித்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அவரின் முத்துக்குவியல்களும் அழவில. தொட்டுப்பார்த்த முத்துக்களைத தந்திருக்கிறேன் …..சkகaகவியரசணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும்தலையணைகள்

    அத்தைமடி மெத்தையடி ,
    ஆடி விளையாடம்மா,
    ஆடும்வரை ஆடிவிட்டு..,
    அல்லிவிழி , மூடம்மா..,
    அத்தைமடி மெத்தையடி……. ,காமுகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்

    மூன்றாம்பிறையில் தொட்டில்கட்டி..,
    முல்லை மல்லிகை மெத்தையிட்டு..,
    தேன்குயில்கூட்டம் பண்பாடும்..,
    மான்குட்டிகேட்டு கண்மூடும்..,
    இந்த , மான்குட்டிகேட்டு , கண்மூடும் ,பு

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான்
    மலர்ந்தேன்
    சுட்டால் பொன்
    சிவக்கும்
    சுடாமல் கண்
    சிவந்தேன்துக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

    பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
    இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
    சுவை அறிந்தேன்

    பால் மனம் பால் இந்த மதிப்பால்
    தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
    சுகம் தெரிந்தேன்

    உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால்
    வந்த மலைப்பால் கவி புனைந்தேன் (2)

    அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் (2)
    சொன்ன வியப்பால் மனம் குளிர்ந்தேன்

    விழி சிவப்பால் வாய் வெளுப்பால் (2)
    இடை இளைப்பால் நிலை புரிந்தேன்

    இந்த தவிப்பால் மன கொதிப்பால் (2)
    கண்ட களைப்பால் நடை தளர்ந்தேன்

    முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் (2)
    மொழி இனிப்பால் என்னை இழந்தேன்

    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
    தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்

    வைரமுத்து – திரையில் கால்பரப்பி இன்றும் தொடர்கிறார். இவரின் தீந்தமிழ் திரையினை வளமூட்டி , உரமூட்டி நிற்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.கவியரசர் வாலிக்குப் பின் திரையினைத் தமிழால் ஆளும் பேராளுமைதான் வைரமுத்து! தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.

    தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக்கேட்டேன்
    நிலவில் நனையும் சோலைக் கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
    நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
    தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
    துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
    பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

    திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், , அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, , பொன் வானம், , சேலைப் பூக்கள், ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை,

    அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும் ‘பாம்புபாம்பு‘ என்பது அடுக்குத் தொடர்; ‘பாம்பு‘ எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். ‘சலசல‘ என்பது இரட்டைக் கிளவி; ‘சல‘ என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு.

    இதனைக் கவிஞர் வைரமுத்து ‘ஜீன்ஸ்‘ படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:‘

    சலசல சலசல இரட்டைக்கிளவிதகதக தகதக இரட்டைக்கிளவிஉண்டல்லோ… தமிழில் உண்டல்லோ?பிரித்து வைத்தல் நியாயம் இல்லைபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஒன்றல்லோ… ரெண்டும் ஒன்றல்லோ?’

    வைரமுத்து திரையில் கொட்டிய தீந்தமிழ் இன்னும் தொடர்கிறது.அத்தமிழைப் பேசுவதாக இருந்தால் அதற்குத் தனியாக ஒரு நிகழ்ச்சியே வேண்டும்.

    திரையில் தீந்தமிழினைத் தந்த ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள்.இன்னும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். நேரம் கருதி , காலம் கருதி பலவற்றை சொல்ல முடியா நிலையில் இருக்கிறேன்.என்றாலும் சொல்லாமல் இருக்கவோ தொடாமால் இருக்கவோ முடியாதிருக்கிறது. ஆசையால் சில …..

    ‘ஐய அணி‘ என்பது அதிசய அணியின் ஒரு வகை. ‘தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!‘ என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா, ஐய அணியில் அமைந்தது.

    ‘மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
    வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? –
    இவள்ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?
    சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?’

    எனக் ‘கிழக்கே போகும் ரயில்‘ படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

    முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும், பொருளும் வருவது முரண் அணி.

    ‘இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்‘

    என ‘ஒருதலை ராகம்‘ படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு; கவிஞரோ ‘இது குழந்தை பாடும் தாலாட்டு‘ என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ, ‘இது இரவு நேர பூபாளம்‘ என்கிறார். இதே போல ‘இது மேற்கில் தோன்றும் உதயம்‘ என்றும், ‘நதியில்லாத ஓடம்‘ என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.

    இன்னும் என் தாகம் அடங்கவில்லை. நிறைவாக கே.டி.சந்தானம் என்னும் ஆளுமையின் தீந்தமிழைக் கேட்டுப்பாருங்கள்.

    வெண்நிலவைக் குடைபிடித்து
    வீசுதென்றல் தேர் ஏறி
    மென் குயில்தான் இசை முழங்க
    மீன் வரைந்த கொடியசைய
    கண்கவரும் பேரழகி
    கனகமணிப் பொற்பாவை
    அன்ன நடை ரதியுடனே
    அழகுமகன் வில்லேந்தி
    கண் முல்லை, தாமரை,மா
    தனி நீலம், அசோகமென
    வண்ணமலர்க் கணை தொடுத்தான்
    வையமெல்லாம் வாழ்கவென்றே!

    அனங்கன் அங்கஜன் அன்பன்
    வசந்தன் மன்மதன் என்றும்
    வணங்கும் என் உயிர் மன்னவா
    மண் உயிர் பிம்பம் வழங்கும்
    உன் புகழ் சொல்லவா

    கதம்பம் செண்பகம் தங்கும்
    கருங்கூந்தல் கவின் பொங்கும்
    கனிந்து ஓங்கும் கயர் கன்னியே
    அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே

    ஆடலும் பாடலும் அன்பின்
    ஊடலும் கூடலும் இன்பம்
    தேடலும் உன் செயல் அல்லவா
    நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

    அழகு தமிழே பழகும் இசையே
    அமுத நிலையே உனது செயலால்
    அந்தரங்கச் சிந்து பாடுவார்
    சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

    மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
    அடைந்துள்ளம் குளிர் தங்கம்
    கலந்தன்பின் நலம் காணுவோம்
    குணம்கொள் பெண் அணங்கே
    உன் மனம் கொண்டே மனம் தந்தேன்
    இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 57

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 57

    -மேகலா இராமமூர்த்தி

    இலக்குவனையும் ஏனைய வானரப் படையினரையும் பிணித்திருந்த இந்திரசித்தனின் நாகக் கணையானது அப்போது போர்க்களத்துக்கு வருகை புரிந்த கலுழனால் (கருடன்) சின்னபின்னம் ஆகிவிட, அவர்கள் அனைவரும் ஆர்த்தெழுந்தனர் முன்னிலும் அதிக வலிமையோடு!

    போர்க்களத்திலிருந்து எழுந்த ஆர்ப்பொலி அரண்மனையில், சீதையின் நினைவால், துயிலாது கிடந்த இராவணனின் செவிகளில் விழவே, அவன் இந்திரசித்தனை அரண்மனையில் சந்தித்து வானரப் படையினர் நாகக் கணையிலிருந்து விடுபட்ட செய்தியை உரைத்து மீண்டும் போர்க்களத்துக்குச் சென்று அவர்கள் அனைவரையும் வீழ்த்துமாறு பணித்தான்; ஏற்கனவே கடும்போர் புரிந்து புண்களோடு வருந்திக்கொண்டிருந்த இந்திரசித்தன் நாளை மீண்டும் போருக்குச் செல்வதாய் உரைக்க, அதனை ஏற்றுக்கொண்டான் இராவணன்.

    அவ்வேளையில் இராவணனின் படைத்தலைவர்களான மாபெரும்பக்கனும் (மகாபார்சுவன்), புகைநிறக்கண்ணனும் (தூம்ராட்சன்), ”தம்மைப் போருக்கு அனுப்புக” என இராவணனிடம் வேண்டினர். அதுகண்ட தூதர்கள், ”இந்திரசித்தனை அடுகளத்தில் தனியேவிட்டு ஓடிப்போன இவர்கள் இப்போது திரும்பி வந்திருக்கின்றனர் போலிருக்கின்றது” என இராவணனிடம் சொல்லவே, அதுகேட்டுக் கடுஞ்சினத்தனாகிய இராவணன் அவர்களைத் தண்டிக்கவேண்டிக் கிங்கரர்களை அழைத்தான். அவ்விருவரின் மூக்கையும் அரிந்திடக் கருவிகளோடு கிங்கரர்கள் வரவே, அதனைத் தடுத்த மாலி எனும் படைத்தலைவன், ”போரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்; அதற்காகக் கோபிப்பதா? நமது நாற்பது வெள்ளம் சேனையையும் இலக்குவனும் வானரப் படையினரும் அழித்தொழித்தனர். எஞ்சியிருப்போர் இந்திரசித்தனும் மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனுமே. எனவே, இவர்களின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது” என்றான் இராவணனிடம்.

    மாலியின் சொற்களால் இராவணனின் சினம் சற்றுத் தணிந்தது. அதுதான் சமயம் என்று மாபெரும்பக்கனும் புகைநிறக்கண்ணனும் இராவணனைப் பார்த்து, ”எமக்குத் தந்தை போன்றவனே! எங்கள் இருவரையும் போருக்கு அனுப்புக! நாங்கள் கொடிய போர்செய்து இறந்தோம் என்ற செய்தியையோ, பகைவர்கள் முடிந்தனர் என்ற செய்தியையோ அன்றிப் போரில் தோற்றுவிட்டோம் எனும் சொல்லைக் கேட்கமாட்டாய் இனி” என்றுரைத்து உயிரைக் கொடுக்க மகிழ்ச்சி கொண்டவர்களாய்ச் சபதம் செய்தனர்.

    விட்டனை எம்மை விடுத்து இனி வெம்போர்
    பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ
    கெட்டனர் என்பது கேளலை என்னா
    ஒட்டினர் ஆவி முடிக்க உவந்தார்
    . (கம்ப: படைத்தலைவர் வதைப் படலம் – 8320)

    இராவணன் அதற்குச் சம்மதிக்கவே, சூரியன் பகைஞன் (சூரியசத்ரு), வேள்வியின் பகைஞன் (யக்ஞசத்ரு), மாலி, பிசாசன், வச்சிர எயிற்றன் எனும் படைத்தலைவர்களோடு மாபெரும்பக்கனும், புகைநிறக்கண்ணனும் இணைந்து பெரும்படையுடன் போர்க்களம் புக்கனர்.

    அரக்கர்படையைக் கண்ட இராமன் அதனைத் தலைமை வகித்து நடாத்திவருவது இந்திரசித்தனா என்று வீடணனிடம் வினவினான். வருபவர்கள் ஒவ்வொருவரையும் இராமனுக்கு அறியத்தந்தான் வீடணன்.

    தொடங்கிற்று போர்! அனுமனோடு பொருது புகைநிறக்கண்ணனும் அங்கதனோடு பொருது மாபெரும்பக்கனும் மாண்டனர்; மாலியின் தோளை இலக்குவன் துணித்து, கையற்றவனோடு பொருதல் தகாது என்று அவனைக் கொல்லாது விடுத்தான்; வேள்வியின் பகைஞனின் மார்பில் அம்பைத் தொடுத்து அவன் கதையை முடித்தான். சூரியன் பகைஞனைச் சூரியன் மகனான சுக்கிரீவன் கொன்றான்; வச்சிர எயிற்றனை அனுமன் விண்ணுலகுக்கு அனுப்பினான். பிசாசனைத் தன் வலிமிகு வாளிக்கு இரையாக்கினான் இலக்குவன்.

    அரக்கர்படையின் அழிவைத் தூதர்கள் அறிவித்தனர் அரக்கர்கோன் இராவணனுக்கு; துயருற்ற அவனைத் தேற்றும் விதமாக மகரக்கண்ணன் எனும் அரக்கன், ”ஐயனே! என் தந்தையை (மகரக்கண்ணனின் தந்தை கரன் – பஞ்சவடியில் சூர்ப்பனகை பொருட்டு இராமனோடு பொருது மாண்டவன் இவன்.) கொன்றவனான இராமனைக் கொல்ல என்னை ஏன் ஏவாமல் விடுத்தாய்? தேவையில்லாமல் மற்றையோரைப் பலி கொடுத்தாய்!

    என்னுடைய தாய் அழுத கண்களை உடையவளாய்க் கடத்தற்கரிய துயர்க்கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள்; பெருமைக்குரிய மங்கலநாணை இன்னும் கழித்திட ஆற்றாளாய், தன் கணவனைக் கொன்ற இராமனின் கரிய தலையென்னும் ஓடாகிய பாத்திரத்தில் அல்லாது தன் கணவனுக்குச் செய்யவேண்டிய கடனைச் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டாள். பருந்துகளுக்கு விருந்தளிக்கும் இனிய வேற்படையை உடையவனே! என் தாயின் வஞ்சினத்தை முடிக்கும் வகையில் இன்று போருக்குச் செல்ல என்னைப் பணித்திடுக!” என்றான்.

    அருந்துயர்க் கடலுளாள் என்அம்மனை அழுத கண்ணள்
    பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்
    கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
    பருந்தினுக்கு இனிய வேலாய் இன்அருள் பணித்தி என்றான்.
    (மகரக்கண்ணன் வதைப் படலம் – 8407)

    கணவனைக் கொன்றவனைப் பழிவாங்கும் வரை மங்கலநாணைக் கழற்றாமலும் மரணச் சடங்குகள் செய்யாமலும் இருப்பதாய் வஞ்சினம் கூறுதல் மறக்குல மகளிர் மரபு. அதனை நிறைவேற்றிக் கொடுப்பது அவர்தம் மைந்தரின் கடன். எனவே, அரச சேவையில் தன் கடமையும் சேர்ந்திருப்பதால் ”இன்னருளோடு என்னைப் போரிடப் பணித்திடு” என இராவணனை இரக்கின்றான் மகரக்கண்ணன்.

    இராவணன் இசையவே வேறுசில வீரநண்பர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு பெருஞ்சேனையோடு இராமனை எதிர்க்கச் சென்றான் மகரக்கண்ணன்.

    கமலக்கண்ணனாம் இராமனொடு பொருதபோது இராமன்விட்ட ஒரு கணை மார்பிலே பாய்ந்து குருதிசோர அதனைப் பொருட்படுத்தாது ஓர் இமைப்போதில் விண்ணில் ஏறிய மகரக்கண்ணன், தான்பெற்ற வரத்தின் பலனாய், அங்கிருந்து இடி காற்று மழை நெருப்பு ஆகியவற்றை மிகுதியாய் உண்டாக்கினான். அவன் உண்டாக்கிய இடியும் கடுங்காற்றும் கல்மழையும் நெருப்பும் போர்க்களத்தைத் தாக்கவே வானரர்கள் கணக்கற்ற எண்ணிக்கையில் மடிந்தனர்.

    ”மகரக்கண்ணனின் இவ் ஆற்றலுக்குக் காரணம் அவன் கற்ற மாயங்களா? பெற்ற வரங்களா?” என வீடணனைக் கேட்டான் இராமன். ”மகரக்கண்ணனின் கடுந்தவத்தை மெச்சி வாயுதேவனும் வருணதேவனும் தந்த வரங்களின் விளைவுகள் இவை” என்றான் வீடணன்.

    இராமன் அவற்றுக்கு மாற்றுக் கணைகள் விடவே, மழையும் காற்றும் நெருப்பும் மறைந்தன; தன் மாயச்செயல் இடையிலேயே அழிந்தமை கண்ட மகரக்கண்ணன் மாயத்தால் வான்வெளியெங்கும் தன் உருவங்களை உருவாக்கி நிரப்பினான். தன் காயத்தை (உடம்பு) மறைக்க அவன் செய்துவரும் மாயங்கள் கண்டு வியந்த இராமன், அவ்வுருவங்களில் ஒன்றில் மட்டும் மார்பிலிருந்து குருதிவழிவது கண்டு இவனே உண்மையான மகரக்கண்ணன் எனத் தெளிந்து அவ்விடம் நோக்கித் தன் அம்பைச் செலுத்தத் தலை அறுபட்டுத் தரையில் வீழ்ந்தான் மகரக்கண்ணன்.

    மகரக்கண்ணனோடு சென்ற மற்றையோரும் போரிலே பட்டனர். இச்செய்தியைத் தூதர்கள் இராவணனிடம் செப்ப, இந்திரசித்தனை மீண்டும் போருக்கு அனுப்பச் சித்தமானான் அவன். தகப்பனின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் போருக்குப் புறப்பட்டான் இந்திரசித்தன். போர்முனை வந்த அவனை இராமனும் இலக்குவனும் முறையே அனுமன் அங்கதன் ஆகியோரின் திண்தோள் மீதமர்ந்து எதிர்த்தனர்.

    அப்போது இலக்குவன் இராமனை நோக்கி, ”அனைவரையும் வாழ்விக்க வல்லவனே! இந்திரனுக்குப் பகைவனாகிய இந்த இந்திரசித்தனின் சிரத்தை என் சரம் விசும்பிடையே அறுத்துத் தள்ளாது போகுமாயின் கொலைத்தொழிலைத் தன் செய்கையாய்க் கொண்ட கூற்றுவனுக்கு நான் விருந்தாகி, இவ்வுலகின் பெருமைமிகு வீரர்களில் கடையானவன் எனும் பழிப்புரைக்கு ஆளாவேன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினமுரைத்தான்,

    இந்திரன்பகை எனும் இவனை என்சரம்
    அந்தரத்து அருந்தலை அறுக்கலாது எனின்
    வெந்தொழிற் செய்கையன் விருந்தும் ஆய்நெடு
    மைந்தரில் கடைஎனப் படுவன் வாழியாய்.
    (கம்ப: பிரமாத்திரப் படலம் – 8481)

    இந்திரசித்தன் இராம இலக்குவரைப் பார்த்து, ”நீங்கள் இருவரும் ஒருங்கே என்னுடன் போர் புரிய வருகிறீர்களா? ஒருவர் ஒருவராய் வருகிறீர்களா?” என வினவ, ”உன்னை முடிப்பதாய் நான் சபதம் செய்திருக்கின்றேன்; ஆகையால் நானே முதலில் வருகின்றேன்” என்றான் இராமனின் இளவல். அதுகேட்ட இந்திரசித்தன், ”உன் அண்ணனுக்குப் பின் பிறந்த உன்னை அவனுக்கு முன் இறந்தவனாக்குவேன்; இல்லையேல் நான் இராவணனுக்கு மகனாய்ப் பிறந்து என்ன பயன்? உம்மிருவரையும் கொன்று உம் குருதியால் என் தம்பிமார்களுக்கும் சிற்றப்பன் கும்பகருணனுக்கும் இறுதிக்கடன் ஆற்றுவேன்!” எனச் சினத்தோடு சாற்றினான்.

    அதனை மறுத்த இலக்குவன், ”உம்மினத்தார் அனைவர்க்கும் ஈமக்கடன் ஆற்றுதற்கே எமை அடைந்துள்ளான் உன் சிற்றப்பன் வீடணன்!” என்றுரைக்க, வெகுண்ட இந்திரசித்தன் கடும்போரைத் தொடங்கினான். மாற்றி மாற்றி இலக்குவனும் இந்திரசித்தனும் சரங்களைத் தொடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே தான் சரங்களை விடுவது முறையன்று என எண்ணிய இராமன் இலக்குவனுக்குப் பின்னே வாளா நின்றிருந்தான்.

    இலக்குவன் இந்திரசித்தனின் வீரக் கங்கணத்தையும் கவசத்தையும் தன் அம்பால் உடைக்க, விண்ணில் சென்று மறைந்தான் இந்திரசித்தன். ”இவனை நான் பிரமாத்திரம் (அயன்படை) எய்து கொல்வேன்” என இலக்குவன் இராமனிடம் கூற, “அறநெறி வழுவாதவனே! நீ பிரமாத்திரம் எய்தால் அஃது இந்திரசித்தனை மட்டுமல்லாது மூவுலகங்களையும் சேர்த்து அழித்துவிடும்! ஆகையால், அதனை எய்யாதே!” என்றான் இராமன்; இலக்குவனும் அச்செயல் தவிர்ந்தான்.

    ஆனால், இராம இலக்குவரின் உரையாடலை மறைந்திருந்து கேட்ட இந்திரசித்தன் அவர்கள் தவிர்த்த அந்தத் தெய்வ அத்திரத்தைத் தான் எய்வது என முடிவுசெய்துகொண்டு, யாருக்கும் தெரியாமல், இலங்கைக்குத் திரும்பினான். அவனைக் காணாததால் இராம இலக்குவரும் ஏனைய வானர வீரர்களும் போர்க்கோலம் களைந்தனர். களைத்திருக்கும் படைவீரர்களுக்கு உணவு கொண்டுவரும்படி வீடணனைப் பணித்துவிட்டுச் சேனைகளைக் காக்கும் பொறுப்பை இலக்குவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் தெய்வப் படைக்கலங்களுக்குப் பூசனை செய்யும்பொருட்டு அங்கிருந்து அகன்றான் இராமன்.

    இலங்கைக்குச் சென்ற இந்திரசித்தன், பிரமாத்திரம் எய்யவிருக்கும் தன் திட்டத்தை இராவணனிடம் தெரிவித்து அதற்கு அனுமதிபெற்றான். அவன் பிரமாத்திரம் எய்வதற்கு முற்பட்ட வேளையில் மாயப்போர் புரிய மகோதரன் எனும் அரக்கனை அனுப்பினான் இலங்கையர்கோன். வானரப் படையும் அரக்கர் படையும் மீண்டும் கைகலந்தன. அரக்கர் படை நடுவில் போரிட்டுக்கொண்டிருந்த வானரர்கள் மகோதரன் செய்த மாயத்தால் ஒருவரை ஒருவர் காணமுடியாது தவித்தனர்.

    அவ்வேளையில் இலக்குவனின் நாணொலி கேட்டு மகிழ்ந்த அனுமன் இலக்குவனை வந்தடைந்தான். அரக்கர்செய்த மாயத்தால் வானர வீரர்கள் ஒருவரை ஒருவர் காணவியலாது இருளில் தவித்துவருவதையும் இலக்குவன் தெய்வப் படைக்கலத்தை ஏவி அவ்விருளை ஒழித்தாலன்றி வானரர்கள் இலக்குவனை அடைய இயலாது என்பதையும் தெரிவித்தான் அவன். அதனையேற்று, இராமனை மனத்தில் தியானித்து, சிவனாரின் பாசுபத அத்திரத்தை அம்பிலே பொருத்தி அரக்கர்மேல் இலக்குவன் ஏவ, அரக்கர்படை அழிந்தது; இருள் ஒழிந்தது; மாயப்போர் புரிந்துகொண்டிருந்த மகோதரனும் அவ்விடத்தினின்று மறைந்தான்.

    அரக்கர் செயல்களைத் தூதர்வாயிலாய் அறிந்த இந்திரசித்தன், தான் பிரமாத்திரம் எய்தற்கு ஏற்ற காலம் இதுவென உணர்ந்து பெரிய ஆலமரமொன்றை அடைந்து பிரமாத்திரத்திற்கு முறையாக வேள்விகள் செய்துவிட்டு அப்படைக்கலத்தோடு வானில் மறைந்திருந்தான்.

    வானரப் படையினரை திசைதிருப்பும் வகையில் அப்போது மகோதரன் இந்திரன்போல் தோற்றங்கொண்டு ஐராவதமெனும் வெள்ளையானையில் ஏறி தேவர்கள் சூழப் போர்க்களத்துக்கு வந்தான். ”இந்திரனும் வானவரும் நம்மோடு போர்புரிய இங்கேவரக் காரணமென்ன?” என்று இலக்குவன் குழப்பத்தோடு அனுமனை வினவ, அச்சூழலைத் தன் வேலைக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொண்ட இந்திரசித்தன், காலத்தால் முன்னவனாகிய பிரமனின் படைக்கலத்தை வானில் மறைந்திருந்தபடி இலக்குவன் உடல்மீது செலுத்தினான்; பொன்மயமான மலையைக் குருவிக்கூட்டங்கள் மொய்ப்பதுபோல் சொல்லற்கரிய ஒளிமிகு அம்புகள் இலக்குவனின் உடலைத் தைத்தன!

    இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்
    முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம்
    பொன்னின் மால்வரைச் குரீஇஇனம் மொய்ப்பது போலப்
    பன்னல்ஆம் தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த.
    (கம்ப: பிரமாத்திரப் படலம் – 8610)

    கோடிக்கணக்கான அம்புகள் ஒரே நேரத்தில் உடலில் பாயவே, அதனைச் சற்றும் எதிர்பாராத இலக்குவன் நாடிதளர்ந்து வலிமிகு யானை துயில்கொண்டதுபோல் தரையில் வீழ்ந்தான்; இலக்குவனைத் தொடர்ந்து அனுமன் அங்கதன் சுக்கிரீவன் என மற்றுள்ள வானரரும் உணர்வொடுங்கி மண்ணில் சாய்ந்தனர்.

    போர்க்களத்துளோரை அழித்துவிட்ட நிறைவில் வெற்றிச் சங்கம் முழங்கியபடி இலங்கையை அடைந்தான் இந்திரசித்தன். செய்தியறிந்த இராவணன் ”இராமன் இறக்கவில்லையா?” என்றான் அவனிடம். ”நான் அத்திரம் எய்தவேளையில் அவன் போர்க்களத்தில் இல்லை; அதனால் உயிர்பிழைத்தான்; இல்லையேல் அவனையும் ஒழித்திருக்கும் அயன்படை” என்று பதிலிறுத்துவிட்டுத் தன்மனை புகுந்தான் இந்திரசித்தன்.

    படைக்கல பூசை முடித்துவிட்டு அடுகளம் புகுந்த இராமன், அங்கிருந்த இருளை விரட்ட அக்கினிதேவனின் அம்பைக் கொளுத்தினான். அவ்வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடவைத்தது. சுக்கிரீவனும் அனுமனும் அங்கதனும் இளவல் இலக்குவனும் உயிரற்றவர்களாய் குருதிவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டவன் இடியால் தாக்குண்ட மராமரம்போல் மண்ணில் சாய்ந்தான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

    Share
  • விடியலா? விரிசலா?

    விடியலா? விரிசலா?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.

    இந்திய மரபுவழி. வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

    அந்தக்கேள்விக்குப் பதிலாக அமைந்திருக்கிறது ரிஷி சுனாக் அவர்களின் தெரிவு.

    42 வயதே நிரம்பியவர் ரிஷி சுனாக். 47 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து வருபவன் நான். மாணவன் எனும் நிலையிலிருந்து இன்று ஒரு பேரக்குழந்தையின் தாத்தா எனும் நிலையை எட்டியிருக்கின்றேன்.

    என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலை மாற்றத்திலும் பல அனுபவங்களுக்கூடாக பயணித்திருக்கிறேன். அப்வனுபங்களில்.இனத்துவேஷமும் அடங்கும் என்பது.உண்மை. ஆனால் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட முன்னேற்றத்துக்கும் இனத்துவேஷம் என்பது முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்பதும் உண்மை.

    பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோர் நான் முன்னேறுவதற்கு உந்துதலாக இருந்தார்களேயன்றி இடையூறாக இருக்கவில்லை.

    அதே மனப்பான்மைதான் இன்றைய ரிஷி சுனாக் அவர்லளையும் பிரதமர் பதவியில் அமர்த்தி பார்த்திருக்கிறது என்பதே உண்மை.

    ரிஷி சுனாக் அவர்களின் அரசியல் கட்சியின் அரசியலோடு நாம் உடன்படுகிறோமோ இல்லையோ பேதங்களைக் கடந்து அவ்வரசியல் கட்சி அவருக்களித்த ஆதரவினைக் கண்டு புலபெயர்ந்த நாம் புளாங்கிதமடைய வேண்டும்.

    இதுவரை நான் கண்ட பல புலம்பெயர் சமூக மக்கள் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து பிரித்தானியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருந்தும் பிரித்தானிய நாட்டு வாழ்க்கையை ஒரு வாடகை வீட்டில் வாழ்வது போன்ற மனப்பான்மையுடன் அணுவது போலவே தென்படுகிறது.

    அது என்ன வாடகை வீட்டு மனப்பான்மை? ஒரு சொந்த வீட்டில் குடியிருப்பவரையும், வாடகை வீட்டில் குடியிருப்பவரையும் எடுத்துக் கொண்டால் இருவரில் யார் தாம் வாழும் வீட்டின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்?

    அதற்கு தம்மை நியாயப்படுத்தும் காரணமாக தாம் அந்நிய நட்டவர் எனும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறிக் கொள்வார்கள்.

    அத்தகையோரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் இன்று நாம் வாழும்  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக ஒரு புலம்பெயர் சந்ததியைச் சார்ந்தவர் வந்திருப்பது அமைந்திருக்கிறது இல்லையா?

    புலம்பெயர்ந்து வந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்வை அமைத்துக் கொண்ட பலருக்கும் தாம் வாழ்க்கையில் எடுத்த இலட்சியத்தை முனைப்புடன் உழைத்தால் அடையலாம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது .

    ஆனால் புலம்பெயர் சமூகத்தினர் தம்மை தாம் வாழும் நாட்டின் அரசியலமைப்பில் இணைக்காமல் தமது சமூகங்களுக்குள் முடங்கிக் கொண்டால் தம்மையும், தமது சமூகத்தின் தேவைகளையும் முன்னிலைப் படுத்த முடியாது.

    ரிஷி சுனாக் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசில் அமரக்கூடிய அரசியல் கட்சியில் இணைந்து தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைப்பதன் மூலம் தாம் சார்ந்த சமூகத்தையும், புலம்பெயர்ந்து வாழ்வோரின் தலைமுறையினரின் திறமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதுவே உண்மை.

    இன்றைய இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் உலக அளவில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு உலகரீதியிலான பின்னனிக் காரணங்கள் இருப்பினும் கடந்த பன்னிரெண்டு வருடங்லளாக அரசக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ரிஷி சுனாக் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியும் காரணம் என்பது மறுக்கப்பட முடியாதது.

    குறிப்பாக பொரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக பிரதமராகிய லிஸ் ட்ரஸ் அம்மையாரும் , அவர் பதவியிலமர்த்திய அவரது முதலாவது நிதியமைச்சரும் அவசரமாகக் கொண்டு வந்த அதிரடிப் பொருளாதாரத் திட்டங்கள் இங்லிலாந்துப் பொருளாதாரச் சந்தையைப் படுகுழியில் தள்ளியது.

    தொடர்ந்து வெறும் 49 நாட்களே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலக நமது ரிஷி சுனாக் பிரதமரானார்.

    புதிய பிரதமர் ரிஷி சுனாக் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பூதாகரமானவை.

    பிரித்தானியப் பொருளாதாரச் சந்தை அரசின் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

    ஒற்றுமை இழந்து பல திக்குகளில் இழுபடும் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் தான் செல்லும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

    வாழ்வாதாரச் செலவினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் சராசரி பிரித்தானியப் பிரஜையின் வாழ்வினைச் சீராக்கும் கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

    இவையனைத்தையும் விட ஒரு ஆசியர் எமது நாட்டின் பிரதமரா? என்று வெகுண்டெழும் ஒரு சாரார் பெரும்பான்மை மக்களின் தொடர் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்.

    இத்தனைக்கும் மேலாக ரிஷி சுனாக் ஒரு அதீத செல்வந்தர் என்றும் அவருக்கெப்படி அல்லலுறும் மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ள முடியும் எனும் தாக்குதல் வேறு.

    ரிஷி சுனாக் பிரதமாரானதும் ஆசியருக்கு பல அனுகூலங்கள் கிடைக்கும் என்று கருதுவது முட்டாள்தனமானது. அவர் தனது பதவியை தம்மைச் சார்ந்தவர்களுக்காக துஷ்பிரயோகம் செய்வார் என்று எதிர்பார்த்து அவரை வீழ்த்துவதற்கு பல இனத்துவேஷிகள் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    ஓபாமா அவர்கள் அமேரிக்காவின் ஐனாதிபதியானதும் அவரது பதவிக்கால முடிவில் அவர் தான் சார்ந்த கறுப்பின சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்? எனும் விமர்சனத்தை மும் வைத்தனர்.

    அத்தகைய எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை . ஒரு நாட்டின் ஐனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ பதவியேற்பவர் தான் சார்ந்த சமூகத்திற்காக மட்ட செயற்பட முடியாது அந்நாட்டின் சகல மக்களிந் பொது நன்மைக்காகவே செயற்பட முடியும்.

    ரிஷி சுனாக்கின் வெற்றி எம் அனைவரதும் வெற்றியாகும். ஏனெனில் அவரது வெற்றியே நாம் வாழும் நாட்டினை கட்டியெழுப்பி எம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும்.

    ஐக்கிய இராச்சியத்தின் இனத்துவேஷிகளுக்கு ரிஷி சுனாக் பிரதமரானது மிகுந்த புகைச்சலை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்கே இவரை வீழ்த்தலாம் என்பதில் மிகுந்த சிரத்தையோடு செயற்படுவார்கள் என்பதும் உண்மை.

    மனித உணர்வுகளின் ஒரு வடிவம் தான் இனத்துவேஷம். ஒரே நிறத்தையுடையவர்களாக இருந்தும் நாடு, மதம் எனும் வேறுபாடு எமக்குள்ளேயோ பேதங்களைத் தருவதில்லையா?

    ரிஷி சுனாக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானது இங்கிலாந்துக்கு விடியலை ஏற்படுத்துமா?

    இல்லை,

    ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பான்மை இனத்தவர்க்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துமா?

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரின் அடுத்த பகுதியாக அம்பிகை மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களைக் காண உள்ளோம்.

    1. இணுவில் கௌரி அம்பாள் பிள்ளைத்தமிழ்

    நாம் முதலில் காணப்போவது ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். கலாபூஷணம், பண்டிதை திருமதி. வைகுந்தம் கணேச பிள்ளை என்பவரே 2016ம் ஆண்டில் இதனை இயற்றியுள்ளார். இதுவே நான் கண்ட பிள்ளைத்தமிழ் நூல்களுள் முதன்முதலாக ஒரு பெண்பாற் புலவரால் இயற்றப்பட்டதாகும். பருவத்திற்கு ஐந்து பாடல்கள் வீதம் கொண்ட இப்பிள்ளைத்தமிழ் நூல் எழுந்த வரலாறு சிலிர்க்க வைப்பது. இவ்வம்மையார் ஏற்கெனவே இணுவில் கௌரி அம்பாள் மீது திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருப்பள்ளி எழுச்சி நூலுக்கு ஒரு பெரியவரிடம் ஆசியுரை வேண்டியபோது அவர் அதனைப் பிள்ளைத்தமிழ் நூலெனக் கருதிவிட்டமையால், அதற்கான ஆசியுரை இவருக்குக் கிடைத்ததாம். ஆகவே இதனை, கௌரி அம்பாளின் ஆணையாகவே கருதி, அன்னைமீது ஒரு பிள்ளைத்தமிழையே இயற்றியுள்ளார் இவ்வம்மையார்.

    இணுவியம்பதியில் கௌரி அம்பாள் தெற்கில் வேப்பமரத்தடியில் குடிகொண்டு வேண்டுவோர்க்கு எல்லா நலன்களையும் அருளி வருகிறாள். இந்த அருமையான நூலிலிருந்து சில நயங்களைக் காண்போமா?

    காக்குங்கடவுளான திருமாலைப் பாடும் வழக்கிற்கு மாறாகப் பரராசசேகர விநாயகரின் காப்புப்பாடலுடன் நூலைத் தொடங்கியுள்ளார். இவையனைத்தும் பலப்பல நயங்களுடன் அமைந்த பாடல்கள்.

    செங்கீரைப் பருவத்துப் பாடலொன்றில்,

    பன்னிருகையுடையான் முருகனின் அன்னையே உமையே
    குன்றக்குற நாயகி வள்ளியும்
    தேவகுஞ்சரியும் வந்து வந்து
    கன்னத்தில் முத்தமிட்டுக்செல்லுகிறார் கண்ணே
     …….. ………… …………
    ……… ஆடுக செங்கீரை

    எனும் வரிகள் புதுவிதமான கற்பனை நயத்திற்குச் சான்றாகும். உமையென்னும் மாமியைக் குழந்தையாக்கி, அவளுடைய மருமகள்கள் வந்து கொஞ்சுவதாகச் செய்த கற்பனை ரசிக்கத்தக்கது.

    மீனாட்சி, அபிராமி, காமாட்சி, என அம்பிகையின் பல அவதாரங்களையும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளார். பல தொன்மங்களும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப ஆங்காங்கு பொருந்திநின்று அழகு செய்கின்றன.

    முத்தப்பருவத்துப் பாடலொன்று: சிவபிரான் தன் காலால் செய்ததொரு செயலுக்கீடாக அம்பிகை காலால் தட்டி மகிஷாசுரனை வதம்செய்த செய்தியையும் சந்த நயத்துடன் போற்றுகிறது.

    எட்டிக்காலால் உதைத்துக் காலனைக்
    காலம் செய்த சிவனார் பாகத்து
    அமர்ந்தவளே அகமகிழ்ந்து முத்தந்தருகவே
    தட்டிக்காலால் மகிஷனை வதம்செய்த தேவி
     ……………………………….
    ……….. முத்தந் தருகவே.

    குமரகுருபரர் மீனாட்சியம்மையை, ‘துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே’ எனப் பாடியது போலவே இதிலும் ‘தெள்ளுதமிழ்ப் புலவோர் நாவிருக்குந் தமிழே வருக’ என்றும், சங்கமிருந்த தாயே என்றும், கன்னித்தமிழே வருக என்றும் பல பாடல்களில் அமைந்துள்ளதைக் கண்டு களிக்கலாம்.

    ‘பெண்குலங்காக்க வருக’ எனச் சிறப்பாக மகளிருக்கான வேண்டுதலை முன்வைப்பதனையும் காணலாம்.

    அம்புலிப்பருவத்தின் பாடலொன்றில், அம்புலிக்கு அச்சுறுத்தலாக ‘தண்டம்’ எனும் உபாயத்திலமைந்த பாடலில்,

    ‘மனிதர் ஏவும் ஏவுகணை தாக்குமுன்னம் அம்புலீ
    அம்பிகையுடன் விளையாடவாவே’ எனவும் பாடியுள்ளார். இது நவீன யுகத்திற்கேற கருத்தாகக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

    மொத்தத்தில் மிக இனிய அருமையான நூலிதாகும்.

                                                               ————————–

    2. தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி பிள்ளைத்தமிழ்

    இது 1999-ல் அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட நூலாகும். இவர் ஒருமுறை இவ்வன்னையின் கோவிலுக்குச் சென்றபோது அவரது நாவில் அன்னை அட்சரமெழுதி, நெற்றியிலே திருநீறும் பூசினாளாம். பின்னரே இவர் அன்னைமீது பல நூல்களை இயற்றினார். இவரே 1974-ல் பருவத்துக்கொரு பாடல்வீதம் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களால் இவ்வன்னைமீதே ஒரு பிள்ளைத்தமிழ் நூலைப் பாடியுள்ளார். இரண்டாவது பாடிய நூல் பருவத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் பெண்பால் பிள்ளைத்தமிழாக அமைந்துள்ளது. இவையனைத்தும் அம்மையின் அருளே எனலாம்.

    இனி, சில பாடல்களின் நயங்களைக் கண்டு மகிழலாம். தமிழ்மொழியின் நயங்களை அன்னைக்கு அலங்கார அணிகளாகச் சூடும் பாடல்கள் பல இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

    சங்கத்தமிழ் உலவும் சந்தன வீதியுடையதாகப் புலவர் துர்க்காபுரத்தைக் குறிப்பிடுகிறார். குழந்தை முருகனைத் தம் மடியில் கிடத்தி, அவனுடைய மழலைமொழிகளைக் கேட்கும் அம்பாளை,

    “சங்கத்தமிழின் முதுதலைவி
    தமியேற் கிரங்காய் தாலேலோ
    சந்தன வீதித் துர்க்கைபுரச்
    சாந்தினி தாலோ தாலேலோ” என்பார் ஒரு தாலப் பாருவப் பாடலில்.

    ‘சைவமுயர் தெல்லிநகர்த் துர்க்காபுரத்திறைவி’ எனவும் சப்பாணிப் பருவப் பாடலில் போற்றுவார்.

    அம்புலிப்பருவத்து அழகான பாடலொன்று: மதி என்பவன் சந்திரன். இது சந்த்ரரூபியாகிய பராசக்தியையும் குறிக்கும் வண்ணம் இசைத்த பாடலொன்று.

    திருஞானசம்பந்தருக்குத் தன் முலைப்பாலையூட்டுவித்துப் பாடவைத்த ஞான மதி இவ்வம்மை! அபிராமி பட்டருக்காகத் தன் தோட்டினை ஆகாயத்தில் வீசியெறிந்து நிலவாக்கிக் காட்டிய மதி இவள். அரிகேசன் என்னும் தவச்சிறுவனுக்குக் காசியிலே அன்னதாதா, பிராணதாதா, ஞானதாதா எனும் பதவி கொடுத்த மதி. தமன் என்பவன் தீபமேற்றித் தவமிருந்து சிவன்-பார்வதியைப் பார்க்கக்கூடிய கண்களைக் கேட்டான். காசி விஸ்வநாதனும் அன்னை விசாலாட்சியும் அவ்வரத்தைக் கொடுத்தனர். இருவரையும்  பார்த்த தமன் ஒருகண் பார்வையை இழந்தான். அழுது புலம்பினான். மதியான இறைவி அக்கண்ணைப் பொற்கண்ணாக்கினாள். அவனே குபேரன் எனும் அளகாபுரிக்கு அதிபன். வியாசமுனிவனுக்கு சுகரைத் தந்த சிவபிரானின் திருமதியாகிய இவளைப் புறக்கணித்து மதி கெட்டலையாதே அம்புலியே! இப்படிப்பட்ட தெல்லிநகர்த் துர்க்கையுடன் வந்து விளையாடுவாய் என விளிக்கும் பாடல்.

    பரவுமுலைப் பால்கொடுத்துப்
    பாடுவித்த ஞானமதி
    பட்டருக்காய்த் தோடெறிந்த
    பழமமிர்த லிங்கமதி
    அரவாக்கி விட்டுணுவை
    ஐங்கரன்சீர் விளக்குமதி
    அரிகேசன் காசியிலே
    அணிவிளங்கச் செய்தமதி
    குருமுகமாய்த் தமனுக்குக்
    குளிர்பொற்கண் கொடுத்தமதி
    குலமுனிவர் வியாசனுக்குக்
    குணச்சுகரைத் தந்தசிவத்
    திருமதியைப் புறக்கணித்து
    செயல்மதிகெட் டலையாதே
    தெல்லிநகர்த் துர்க்கையுடன்
    சேர்ந்தாடாய் அம்புலியே.

    மதி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திய அரிய பாடலிது. இவ்வாறு படித்து, ரசித்து மகிழப் பல பாடல்கள் இந்நூலில் உள்ளன.

        ————————–

    3. நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

    1977-ல் பன்னூல் வித்தகரான கரவை வ. சிவராசசிங்கம் அவர்களால் இப்பிள்ளைத்தமிழ் நூல் இயற்றப்பட்டு யாழ்ப்பாணம் சைவத் தமிழ்க் கழகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

    இக்கோயில் எங்கு அமைந்துள்ளது, அதன் சுவையான வரலாறு என்னவெனக் காண்போம். இலங்கையின் நயினைதீவு நாகபூஷணி அம்பாள் எவரும் தன் தோற்றத்தை அறிய முடியாத சுயம்பு மூர்த்தமாக உள்ளவள். இலங்கையின் பூர்வ குடிகள் இயக்கர், நாகர், வேடர் என்பது வரலாறு. இவருள் நாகர்கள் ஆதித்திராவிடர்களான தமிழர்கள். இவர்களது வழிபாட்டுத்தலமாக விளங்கியது நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலயம். இதன் வேறுபெயர்கள் நாகதீவு, மணிபல்லவம், நாகதீபம், மணித்தீவு எனவெல்லாமாகும். மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘மணிபல்லவம்’தான் நயினாதீவு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. இது அறுபத்துநான்கு சக்திபீடங்களில் ஒன்றாகிய புவனேஸ்வரி பீடம் என்று அறியப்படுகின்றது.

    இந்நூலிலிருந்து சுவையான சில பாடல்களைக் காணலாம்.

    செங்கீரைப்பருவத்தைப் பாடும்போதில் தவழ்ந்தாடி வரும் குழந்தையின் அணிகலன்கள் எவ்வாறு அசைகின்றன, ஒலிக்கின்றன எனக் கவித்துவமாகப் பாடிக் களிப்பர் புலவர் பெருமக்கள். மார்பிலணி ஆரங்கள் அசைந்தாடும் என்பது வழக்கு. ஒரு பாடலில் நயினை வளர் அம்மை மார்பின்மீது ஆணிமுத்தாரம் மட்டுமின்றி அடியார் பாடும் பாமாலையும் அசைந்தாடுகிறதென்கிறார். இது ஒரு புத்தம்புதிய அரிய கற்பனை!

    …………………………………
    ஐயர்திரு மேனியைத் தழுவிக் குழைக்கவென்
    றமைந்தமணி மார்பகத்தே
    ஆணிமுத் தாரமும் அடியார்பா மாலையும்
    அசைந்திசைந் தொலி செய்தாட
    செய்யமல ரடிதனிற் கிண்கிணி சிலம்பிடச்
    செங்கீரை யாடி யருளே
    தெள்ளுதமிழ் நயினைவளர் கிள்ளைமொழி நாகம்மை
    செங்கீரை யாடி யருளே.

    தாலப் பருவத்தின் ஒரு பாடலும் மிகப் புதுமையான இயற்கைக் காட்சியை விளக்கி, அதனை அம்மையப்பரோடு ஒப்பிட்டுப் போற்றுகிறது. கொன்றைமரத்தின்மீது குருக்கத்தி படர்ந்துள்ளதாம். இவற்றை வெண்மையான மலர்களைக்கொண்ட மல்லிகை சூழ்ந்துள்ளது; இதில் கொன்றை சிவபெருமானையும், பசுமை நிறங்கொண்ட குருக்கத்தி சியாமளை என்னும் அம்பிகையையும், நினைவு படுத்துகின்றன. கொன்றையும் குருக்கத்தியும் இணைந்தது அம்மையப்பர் திருவுருவாகும். இது இவ்விருவரும் முத்தாலான விதானமமைந்த (தொங்கும் மாலைகளான மல்லிகை மலர்கள் முத்துவிதானத்துக்கு உவமை) தேரில் பவனிவருவது போலுள்ளதாம். எத்துணை இனிய கற்பனை! முழுப்பாடலையும் காணலாமே!

    கொத்துக் கொத்தாய் மலர்ந்த பொலங்
    கொன்றை மரத்தின் மீதுமிகக்
    குழைத்துச் செழித்து மணிப் பசுமை
    கொண்ட குருக்கத் திச்செடிபோய்த்
    தொத்திப் படர்ந்து கிடக்க நெடுந்
    தூரமணக்கும் மல்லிகை மேல்
    தொங்க லிட்டுச் சூழ்ந்திருக்கும்
    தோற்றம் நோக்கும் அடியவர்க்கு
    முத்து விரித்த விதான முறு
    முழுமா மணித்தே ரூர்ந்துவரு
    முக்கண் மூர்த்தி நின்னொடருள்
    முகிழ்த்த கோலம் அளிக்கின்ற
    சித்ரப் பொழில்சூழ் நயினை வளர்
    செல்வி தாலோ தாலேலோ
    சிவனார் இடம்வாழ் நாகம்மைத்
    தேவி தாலோ தாலேலோ.

    அடுத்து, வருகைப்பருவப்பாடலொன்று மெய்யடியார்களை எவ்வாறு அன்னை பிறவிப்பிணியினின்றும் நீக்குவாள் என விவரிக்கிறது. அடியவரின் கருத்தினுட் புகுந்து ஞான ஒளி கொடுத்து உய்யும் நெறியைக் காட்டி, கருவில் புகாவகையையும் உணர்த்தியருளுகிறாள் நயினை நாகம்மை!

    கருவிற் புகுதா வகையெனது
    கருத்திற் புகுந்துள் ளொளிபெருக்கிக்
    கதிபெற் றுய்யும் நெறிகாட்டும்
    கதிரே வருக ………………. என்பன பாடலின் சில வரிகள்.

    இது போன்ற எண்ணற்ற பாடல்கள். தமிழன்பர்கள் படித்துப் போற்ற வேண்டிய நூலிதுவாம். தொடர்ந்து மேலும் பல நூல்களைக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • நாசாவின் முதற்பெரும் வெற்றி: விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது

    நாசாவின் முதற்பெரும் வெற்றி: விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    NASA Confirms DART Mission Impact Changed Asteroid’s Orbit in Space

    https://www.nasa.gov/press-release/nasa-confirms-dart-mission-impact-changed-asteroid-s-motion-in-space

    நாசாவின் பூகோளப் பாதுகாப்பு அசுர விண்வெளி சாதனை

    2022 செப்டம்பர் 26 இல் நாசா பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும் ஒரு விண் பாறையைக் குறிவைத்து தாக்கி அதன் சுற்றுப் பாதையை மாற்றி உள்ளது. அச்சிறு விண்பாறை மற்றுமோர் பெரும் விண்பாறையைச் சுற்றி வருகிறது. இந்த இரட்டை விண்பாறை அமைப்பைச் சூரிய மண்டலத்தில் பின்பற்றித் தாக்குவது சற்று எளிதாகத் தோன்றினாலும், மெய்யாக இது ஓர் இமாலய முயற்சியே.  சிறிய பாறை பெரிய பாறையை  ஒரு முறை சுற்ற 11:55  மணி நேரம் எடுத்தது. விண்கணை மோதலுக்குப் பிறகு 32 நிமிடம் குறைந்து, 11:23 நேரம் பிடித்தது.

    இந்த வெற்றிகரமான விண்வெளிச் சாதனை பூமிமேல் விண்பாறை விழுந்து பிரளயப் பேரிடர் நிகழும் எதிர்கால பயத்தை நீக்கியுள்ளது.

    https://youtu.be/Zhzn0U2m5wQ

    https://youtu.be/RoAR3I7Fvcg

    https://youtu.be/R3dzwZJUKI8

    https://youtu.be/HyqzK2hC0sA

    Update on DART Mission to Asteroid Dimorphos (NASA   News Conference Oct. 11, 2022)

    Streamed live on Oct 11, 2022 Experts discuss early results of the NASA’s Double Asteroid Redirection Test (DART) mission and its intentional collision with its target asteroid, Dimorphos.


    On Monday, Sept. 26, DART successfully impacted its asteroid target in the world’s first planetary defense technology demonstration. As a part of NASA’s overall planetary defense strategy, DART’s impact with the asteroid Dimorphos will help to determine whether asteroid deflection using a kinetic impactor spacecraft is a viable mitigation technique for protecting the planet from an Earth-bound asteroid or comet, if one were discovered. Johns Hopkins APL manages the DART mission for NASA’s Planetary Defense Coordination Office as a project of the agency’s Planetary Missions Program Office. Neither DART’s target asteroid, Dimorphos, nor its larger asteroid parent, Didymos, poses a hazard to Earth.

    Participants include: • NASA Administrator Bill Nelson • Italian Space Agency President Giorgio Saccoccia DART update panel: • Lori Glaze, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington • Tom Statler, DART program scientist at NASA Headquarters • Nancy Chabot, DART coordination lead at the Johns Hopkins Applied Physics Laboratory (APL) in Laurel, Maryland More on DART: https://nasa.gov/dart

    https://youtu.be/C2O5nBo0wMU

    Nasa‘s asteroid-deflecting DART spacecraft successfully slammed into its target on Monday, 10 months after launch. The test of the world’s first planetary defense system will determine how prepared we are to prevent a doomsday collision with Earth.

    https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    What is DART?

    DART was the first-ever mission dedicated to investigating and demonstrating one method of asteroid deflection by changing an asteroid’s motion in space through kinetic impact.

    விண்பாறை மீது நேரடியாக மோதி வேறு பாதைக்கு நகர்த்தும் நாசாவின் முதல் முயற்சியில் வெற்றி.

    2022 செப்டம்பர் 26 ஆம் தேதி ஏவிய டார்ட் [DART – DOUBLE ASTROID RE-DIRECTING TEST SPACECRAFT] விண்கணை முதன்முதல் பூமியிலிருந்து 7 மில்லியன் மைல் [11 மில்லியன் கி.மீ] தூரத்தில் சூரியனைச் சுற்றிவரும், திமார்போஸ் / திடிமாஸ் [Dimorphos / Didymos] என்னும் இரட்டை விண்பாறைகளில் ஒன்றை மோதி, அவற்றின் பாதையை மாற்றி யுள்ளது. இவற்றில் திடிமாஸ் பெரியது. அதைச் சுற்றிவரும் திமார்போஸ் சிறியது. டார்ட் விண்கணை மோதிய விண்பாறை சிறியது. விண்கணை மோதியால் பாதை எவ்விதம் மாறியுள்ளது, என்று விஞ்ஞானிகள் விண்ணோக்கிகள் மூலம் கணித்து வருகிறார் நாசாவின் இந்த முதல் விண்வெளி முயற்சி எதிர் காலத்தில் பூமியை எதிர்நோக்கி மோத வரும் விண்பாறைகளைத் திசை திருப்பும் பொறியியல் நுணுக்கம் விருத்தி அடையும்.

    டார்ட் விண்கணை 2021 நவம்பர் 24 இல் ஸ்பேஸ் X ஃபால்கன் -9 [SPACEX FALCON -9] ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்பாறையில் மோதிய வேகம் சுமார் மணிக்கு 14,000 மைல். இந்த விண்வெளிச் சாதனை “பூகோளப் பாதுகாப்பு” [Planetary Defense] என்னும் அகில நாட்டு கூட்டுழைப்பில் நிதி செலவழிக்கப் படுகிறது. இந்த இரட்டை விண்பாறை போக்கு முறைகளைக் கண்காணித்து வருபவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பௌதிக வினை ஆய்வுக் [Johns Hopkins Applied physics Laboratory Team] குழுவினர். இந்த விண்வெளித் திட்டத்துக்கு நிதிச் செலவு 308 மில்லியன் டாலர். விண்பாறையின் அகலம் : 525 அடி, டார்ட் விண்கணையின் எடை 570 கி.கிராம்.. அடுத்து 2024 ஆண்டில் ஏவப்படும் விண்சிமிழ் 2026 இல் விண்பாறையுடன் இணைந்து ஆய்வுகள் புரியும். விண்கணை மோதி விண்பாறைகள் பாதைகள் மாற்றம் இப்போது கணிக்கப்படும்.

    ************************************

    1. https://www.dailymail.co.uk/sciencetech/article-11203413/NASAs-asteroid-deflecting-DART-mission-explained.html

    2.https://ca.news.yahoo.com/nasa-dart-mission-live-space-115530230.html

    3.https://jayabarathan.wordpress.com/2019/04/27/hayabusa-2-impactor-on-asteroid/

    Share
  • (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    (Peer Reviewed) மெய்யுரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்

    டாக்டர்.  வே.விக்னேசு
    தமிழ்  உதவிப்பேராசிரியர்,
    பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641014.
    vignesh@psgcas.ac.in
    9597203214.

    தோற்றுவாய் :

    உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடையதாம். தமிழ்மொழிக்கு இலக்கண வரம்புரைக்கும் நூல்களுள்ளும் தலைமைசான்றது தொல்காப்பியமேயாம். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றதிகாரப் பகுப்பொடு தொல்காப்பியரால் இயற்றப்பெற்ற இவ்வரிய நூலின் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட உரையாசிரியர் பலராவர். அவருள்ளும் இற்றைக்கு அச்சிற்பதிப்பிக்கப்பட்ட பழையவுரைகளென இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பெயரறியப்படாத பழையவுரைகாரர் ஒருவர் ஆகிய அறுவருரைகளே கிட்டியுள. அவ்வகையில், உரையெழுதுதல் வழியாக மூலநூலைப் போற்றிக்காத்த இவ்வுரையாசிரியப் பெருமக்களுள் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரைகண்ட தெய்வச்சிலையாரின் உரைப்போக்கையும் உரைமரபுகளையும் இக்கட்டுரை சுருங்க விளக்க முற்படுகின்றது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் :

    தொன்மைத் தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்திற்குக் கிட்டிய பழையவுரைகளுள் இளம்பூரணருரையே பழமையானது; நூல் முழுமைக்கும் கிடைத்துளது. நச்சினார்க்கினியருரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் என்னும் ஐந்தியல்களுக்கு மட்டுமே கிடைத்துளது. எஞ்சிய பொருட் பகுதியாகிய மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் நான்கியல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்துளது. மற்றைய பகுதிகட்குப் பேராசிரியருரை கிடைத்திலது. அன்றியும், நச்சினார்க்கினியருரையும், பேராசிரியருரையும் இயைந்து ஒருவருரையாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் அமைந்துள்ளது. அங்ஙனமே, நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு முன் சுட்டிய அறுவருரைகள் கிடைத்துள.

    தமிழிலக்கிய இலக்கணங்களுள் உரை பலவாக வாய்க்கப்பெற்ற நூல்களுள் தொல்காப்பியமும் ஒன்றாம். தொல்காப்பியரின் உளக்கிடக்கையை உணர்ந்து உலகிற்குணர்த்தச் சான்றோர் பெருமக்கள் பலரும் காலந்தோறும் முயன்றதன் விளைவே தொல்காப்பியத்தின் உரைப்பெருக்கத்திற்குக் காரணமாம். இவ்வகையில், ’தொல்காப்பியமும் சங்க நூல்களும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கல்வியுலகிற் பரவாதிருந்தன’ என்றும், ’கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொல்காப்பிய இயக்கமும் சங்கவிலக்கிய மறுமலர்ச்சியும் தோன்றின’ என்றும் உரைக்கும் வ. சுப. மாணிக்கனார், தொல்காப்பிய இயக்கம் பற்றியும், தொல்காப்பியக் கல்வி பரவியமை பற்றியும் கூறும் கருத்துக்கள் இவண் நோக்கத்தக்கனவாம். அவர் கூறுமாறு:

    ”இவ்வியக்கத்தின் தலைவர் இளம்பூரணர்; உரையாசிரியர் என்ற கீர்த்தியைத் தமக்கே உரிமை கொண்டவர். நேராப் புகழ்மைப் பேராசிரியரும், ஆனாப் பெருமைச் சேனாவரையரும், மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரும், உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியரும், சொல்லுரைகண்ட கல்லாடனாரும் இவ்வியக்கத்தின் படையாளர்கள். இப்பேரியக்கம் மூன்று நான்கு நூற்றாண்டுகள் தொல்காப்பியக் கல்வியைக் கற்றாரிடைப் பரப்பியது” (தொல்காப்பியக்கடல், ப. 264) என்பது அவர் கருத்தாம்.

    இன்னவகையில், தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாசிரியர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்.

    சொல்லதிகாரத்திற்கு வாய்த்த பேறு :

    எழுத்து, சொல், பொருள் என நிற்கும் தொல்காப்பியத்தில் நடுநின்ற சொல்லதிகாரத்திற்கு மட்டும் பழையவுரைகளென மேற்சுட்டிய அறுவருரைகள் உள. அஃதேல், எழுத்து, பொருள் என்பவற்றினும் இடையதிகாரமாம் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரைகள் பல தோன்றியது என்னை? என்ற வினா எழுகின்றது. எழுத்ததிகாரத்தினும், பொருளதிகாரத்தினும் விட இலக்கணங் கற்போர்க்குச் சொல்லதிகாரம் இன்றியமையாதது ஆதலானும், அதற்கு விரிவான விளக்கமும் வேண்டப்பட்டதாலும், ’சொல்’ பற்றிய கருத்து வேற்றுமை மிக்கிருத்தலானும் உரையாசிரியர் பலர் இச்சொல்லதிகாரத்திற்குத் தனித்தனியே உரை வரைந்தனர் எனல் தகும். இப்பேறு சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்.

    தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி இடைக்காலத்துச் சிறப்புற்று விளங்கியமை போன்றே, பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் அவ்வாராய்ச்சித் தொடங்கியது. இவ்வகையில், பின்னங்குடி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் சொல்லதிகாரப் பழையவுரையாசிரியர்களின்  உரைக்குறிப்புக்களையும் தம் ஆய்வு முடிபுகளையும் கொண்ட, ’தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ என்னும் பெயரிய நூலை 1930-இல் வெளியிட்டார். சொல்லதிகார மூலத்தையும் உரைகளையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பதிப்பித்தபொழுது, இளவழகனார், ஞா. தேவநேயப்பாவாணர், ஆ. பூவராகம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி போன்றோரின் குறிப்புரைகளுடனும் விளக்கவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டனர்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரம் மேற்சுட்டிய அறுவருரைகளுடன் உரைவளப் பதிப்பு என்னும் முறையில் பல பதிப்புகள் வெளிவந்துள. ஆபிரகாம் அருளப்பன், வி.ஐ. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து பதிப்பித்தத் ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம், உரைக்கோவை’ (1963) என்னும் நூல் இவ்வகையில் முன்னோடியாகும். இவ்வுரைக்கோவையிலும் கிளவியாக்கம் முதலாக விளிமரபு ஈறாக நான்கு இயல்களைக் கொண்ட முதற்பாகம் மட்டுமே வெளிவந்துளது. தொல்காப்பிய நூல் வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் சொல்லதிகார அறுவருரைகளையும் சேர்த்தும், ஆ. சிவலிங்கனாரின் ஆய்வுரையுடனும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ‘தொல்காப்பியம்-சொல்லதிகாரம் உரைவளமும்’ தி.வே. கோபாலையரின் விளக்கவுரையுடன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தராலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தாராலும் வெளியிடப்பட்ட ’தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்து’ எனும் உரைவளப்பதிப்பும் இவ்வகையில் சுட்டத்தக்கதாம்.

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்தையும் நன்னூல் சொல்லதிகாரத்தையும் ஒப்பிட்டு, பல விளக்கங்களையும், குறிப்புக்களையும் சேர்த்து, ’தொல்காப்பியம்-நன்னூல்- சொல்லதிகாரம்’ (1971) என்ற தலைப்பில் க. வெள்ளைவாரணர் இயற்றிய நூலும் தொல்காப்பியம் முழுமைக்கும் ஆராய்ச்சிக்காண்டிகையுரை வரைந்து ச.பாலசுந்தரனார் வெளியிட்ட ’தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக்காண்டிகையுரை’ நூலும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு அ.கு. ஆதித்தர் தெளிவுரையெழுதி வெளியிட்ட ’தொல்காப்பியம்-சொல்லதிகாரம்-ஆதித்யம்’ (1977) என்ற நூலும் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சியின் தொடர் பணிகளெனச் சுட்டத்தக்கனவாம். இவற்றையடுத்தும் பல எளிய உரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.

    இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைபகன்ற தெய்வச்சிலையாரின் உரைப்போக்கும் உரைமரபுகளும் ஆய்ந்துரைக்கப் பெறுகின்றன.

    மெய்யுரைகண்ட தெய்வச்சிலையார் :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட சான்றோருள் ஒருவர் தெய்வச்சிலையாராவர். இவ்வுரையாசிரியர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தவராவர்.  இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் காலத்திற்குப் பிற்பட்டவரிவர்.  பாண்டிநாட்டில் தோன்றியவர்.

    பதிப்பு வரலாறு :

    தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை முதன்முதலாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்துச் சார்பில், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம்பிள்ளை அவர்களால் அரிதின் முயன்று பதிப்பிக்கப்பட்டு விரிவான பிற்சேர்க்கையுடன் 1929-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது.

    கரந்தைக் கவியரசு அவர்கட்கு முதலில் ஓர் ஏடு கிடைக்க, அவ்வேட்டின் இறுதியில் ’ஆத்திரேய கோத்’ என்னுஞ் சொற்கள் இருந்தன என்பதால் இது ’ஆத்திரேய கோத்திரத்துப் பேராசிரியர்’ உரையென்று பேரறிஞர் சிலர் எழுதியுளது பற்றி, முதலில் இந்நூலுக்குப் பேராசிரியர் உரையெனும் பெயர் தந்திட்டதுடன் அதுகொண்டே நூல் முழுவதும் பதிப்பித்து விட்டார்கள். பின், உ.வே. சாமிநாதையரவர்களிடம் இவ்வுரையேடொன்று இருப்பது அறிந்து அதனை வேண்டிப் பெற்று, அவ்வேட்டில் கண்ட வேறுபாடுகளையெல்லாம் பிற்சேர்க்கையாக இணைத்து, நூலின் பெயரையும் உ.வே. சாமிநாதையரவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டாங்கு ’தெய்வச்சிலையார் உரை’ எனக் கொண்டு பதிப்பித்துள்ளார்கள். இவ்வுரையேடு அச்சிட்ட வரலாற்றினைக் கரந்தைக்கவியரசு அவர்கள் பதிப்புரையின்கண் விரிவாகக் கூறியுள்ளார்கள். அதனைக் கேண்மின்:-

    ”இதன்கண் பல்வகையான பிழைகளும் மலிந்திருத்தல் கூடுமென யான் உணரேனல்லேன்; உணர்ந்தஞ்சேனல்லேன்; அஞ்சி அஞ்சியும் அச்சிட்டது, ஒன்றே ஒன்றைக் கருதியதாகும். அஃதாவது, இதில் என் மனமாரச் செய்த ஆக்கல், அழித்தல், திரித்தல் முதலாய செய்கைகள் இலவாகலின், நாளும் நாளும் பழுது பட்டொழிந்துவரும் இவ்வேட்டின் ஒருநேர் பிரதியாக இது நின்று, பிற்காலத்து அச்சிடும் பெரியார்கட்கு ஒருவாறு உதவி செய்யும் என்று எண்ணியதொன்றேயாகும். ஒரு பெரிய நூலை அச்சிட்டதொரு பிழையினை இது பற்றியேனும் தமிழுலகம் பொறுத்திடுவதாக” (சொல். தெய். பதிப்புரை. ப.10) என்ற அரும் பண்பு நடையால் இந்நூலை அச்சிடுதற்கு அப்பெருமகனார் அஞ்சியதும் அறியலாகின்றது. அன்றியும், அவர் கூறியாங்கே, தெய்வச்சிலையாருரையைப் பிற்காலத்து அச்சிட்ட பெரியவர்கட்கு இப்பதிப்பே ஒருநேர் பிரதியாக நின்றுதவியது என்பதும் ஈங்குக் குறிப்பிடத்தக்கதாம்.

    பின்னர், இவ்வுரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் கு. சுந்தரமூர்த்தி அவர்களின் விளக்கவுரையுடன் 1963-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. பின்னர், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் தெய்வச்சிலையாருரை, நிழற்படப் பதிப்பாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தாரால் 1984-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மறு அச்சு 2010-இல் வெளிவந்துளது.

    உரைநலம் :

    தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வுரை சொல்லழகும் பொருளழகும் திட்ப நுட்பமும் வாய்ந்ததாம். பிறவுரைகளிற் காணப்படாத பல அருஞ் செய்திகள் இவ்வுரையில் காணலாகின்றன.

    கிளவியாக்கத்தின் தொடக்கத்தில் சொல்லதிகாரத்தின் ஒவ்வோர் இயலுக்குமுள்ள இயைபைக் கூறும் முறையாலும், ’தகுதியும் வழக்கும்’ (சொல். 17), ’உருபென மொழியினும்’ (சொல். 24), ’தன்மை சுட்டலும்’ (சொல். 25) என்பனபோன்ற நூற்பாக்களின் உரைகளானும், பத்துவகை எச்சங்களுக்கு இவர் வரைந்துள்ள உரையானும் இவ்வுரையாசிரியர் நுண்ணிய அறிவுடையவர் என்பது புலனாகின்றதாம்.

    எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து பல மேற்கோள்களை இவர் எடுத்துக்காட்டுவதனின்று,  இந்நூல்களில் இவருக்கிருந்த இலக்கியப்புலமை நன்கறியலாகின்றது. சேனாவரையரையொப்ப இவ்வுரையாசிரியரும் வடமொழி இலக்கியங்களிலும் வல்லவரென்பது சொல் 66, 68, 81, 87, 106, 408, 410 ஆகிய நூற்பாக்களுக்கு இவர் வரைந்துள்ள உரைகளான் தெளிவாகின்றது.

    சமயச் சார்பான எடுத்துக்காட்டுகளைத் தருதல் :

    இவ்வுரையாசிரியர், ’மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’ (சொல். 34) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டு வழங்குங்கால், ”வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பசுவும் பாசமும் அனாதி எனவரும் உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க” என்று குறிப்பிடுகின்றார். இதனான் இவரின் சைவசித்தாந்தச் சாத்திர அறிவு புலனாகின்றது.

    அங்ஙனமே, ’பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்’ (சொல். 438) எனவரும் நூற்பாவில் ’மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்’ என்ற பகுதிக்கு எடுத்துக்காட்டாக, ”மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்தானும், எண்ணிய வரகாலி மூன்றும், இரண்டு மரமும், ஓர்யாறும் திண்ணம் அறிய வல்லார்க்குச் சிவகதியதனைப் பெறலாமே” என்ற திருவைந்தெழுத்தைப் பொருண்மையாக உடைய பாடலைக் காட்டி, ”இதனுள் மண்ணைச் சுமந்தவன் – ந, வரதராசன் மகன் – ம, வரகாலிமூன்று – சி, இரண்டு மரம் – வா, ஓர்யாறு – ய எனக் கூற நமச்சிவாய எனப் பொருளாயிற்று” என்று விளக்கியுள்ளார். இஃது, சிவபெருமான்பால் இவர் கொண்ட பற்றினை விளக்குவதாம்.

    உரைப்போக்கு :

    இளம்பூரணர் முதலானோர் உரைப்போக்கினின்றும் தெய்வச்சிலையார் உரைப்போக்கு வேறானதாம். இவருரை அதிகார விளக்கம், இயல்விளக்கம், இயல் இயைபு, கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்னும் அமைப்பினது. இவர் அதிகார விளக்கங் கூறுங்கால் தனியே கூறினாரல்லர்; கிளவியாக்க முதல் நூற்பாவினையடுத்தே கூறுகின்றார். ஒவ்வோரியலிற்கும் உள்ள இயைபினைப் புலப்படுத்துகின்றார். கருத்துரை வழங்குங்கால் இளம்பூரணரைப் போன்று ’இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்’ என வினா எழுப்பிக் கூறாமல், நூற்பா நுதலியதை மட்டும் கூறி ’நுதலிற்று’ என முடிக்கின்றார்.

    கிளவியாக்க முதல் நூற்பாவிற்குக் ’கடாவிடை யுள்ளுறுத்து’ உரைவிரிக்கும் இவர், அந்நூற்பா உரையின் நிறைவில், ”இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகின்றார். அங்ஙனமே, இவர் ஒவ்வோரியலின் நிறைவிலும் உரையினது அளவைக் கிரந்த வகையால் இவ்வளவு என்று கணக்கிட்டு உரைக்கின்றார்.

    மறுப்புநலம் :

    இவ்வுரையாசிரியர் எவர் பெயரையும் எவ்விடத்தும் கூறினாரல்லர். அங்ஙனமே, இவர் பெயரையும் பிறவுரையாளர்கள் குறிப்பிடவில்லை. இவர், தம் கொள்கையைக் கூறிச் செல்லும் இயல்பினரே அன்றிப் பிறர் கொள்கையைக் கூறி அவர்களைப் பெயர் சுட்டி மறுத்துரைக்கும் இயல்பினரல்லர். இவர் பிறரை மறுக்கும் இடங்கள் சொல். நூ. 1,32, 87, 100, 441, 62, 404 என்னும் ஏழிடங்களேயாம். இவற்றுள் முதல் இரு இடங்கள் இளம்பூரணரையும், அடுத்த மூவிடங்கள் இளம்பூரணரைத் தவிர ஏனையுரைகளை மறுத்துரைத்தனவாம். எஞ்சியுள்ள மறுப்புக்கள் இன்றுள்ள சொல்லதிகார உரைகள் எவற்றுக்கும் பொருந்துவனவாய் இல்லை. இங்ஙனமாக, பிறர் கொள்கையை மறுத்த இடங்களில் எவர் பெயரையும் குறிப்பிடாமல் இவர் மறுத்துச் செல்லும் மறுப்புநலம் இவரின் தனிச் சிறப்பாம்.

    நூற்பாக்களின் அமைப்பு :

    இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் கொண்ட நூற்பாக்களின் பாடம், அடிகள், முறைவைப்புக்கும் இவருரைக்கும் பலவிடங்களில் வேறுபாடுகள் காணலாகின்றன. அம்மூவரும் கொண்ட நூற்பா அமைப்பினையும் இவர் மாற்றியுள்ளார். அஃதாவது, நூற்பாக்களை ஒன்றாக்கல், பலவாக்கல், நூற்பாவினை இடம் மாற்றியமைத்தல் என்பனவாம். ஒரு நூற்பாவை இரண்டாக்கியும், சில நூற்பாக்களை இணைத்து ஒரே நூற்பாவாக்கியும் உரை செய்துள்ளார். இங்ஙனம் இணைத்தும் பகுத்தும் உரைகாண்பது மட்டுமன்றி,  சில நூற்பாக்களை இவர் இடமாற்றியும் அமைத்துள்ளார்.

    இவர் செய்த நூற்பா இடப்பெயர்வுகளுள் சிலவற்றைக் கூறுவல் :

    எச்சவியலிலுள்ள ’இறப்பின் நிகழ்வின்’ (எச்ச.31) ’எவ்வயின் வினையும்’ (எச்ச.32), ’அவைதாந், தத்தங்கிளவி’ (எச்ச.33) என்னும் மூன்று நூற்பாக்களும் முற்று வினைச் சொல்லின் இலக்கணம் கூறுபவை. ஆயின், இவற்றைத் தெய்வச்சிலையார் வினையிலக்கணமாதல் ஒப்புமை பற்றி வினையியலிறுதியில் 242, 243, 244 -ஆம் நூற்பாக்களாக வைத்து உரையெழுதியுள்ளார். இங்ஙனம் மாற்றியமைத்ததற்குத் தக்க காரணமும் 241-ஆம் நூற்பா உரையின் இறுதியில் கூறுகின்றார். அவ்வுரையுள், ”வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்றன்று” என்று இவர் உரைத்துள்ளமையும் கருதத்தக்கதாம்.

    இங்ஙனமே, எச்சவியலிலுள்ள ’இசைநிறை’ எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவை 26-ஆம் நூற்பாவாகவும், வேற்றுமை மயங்கியலில் ’அதுவென் வேற்றுமை’ எனத் தொடங்கும் 11-ஆம் நூற்பாவையும், ’ஆறன் மருங்கின்’ எனத் தொடங்கும் 15-ஆம் நூற்பாவையும் இடப்பெயர்வு செய்து ’அச்சக்கிளவிக்’ எனத் தொடங்கும் நூற்பாவினை அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 15,16-ஆம் நூற்பாக்களாக வைத்து உரை செய்துள்ளார் என்பதும் இவண் சுட்டத்தக்கதாம்.

    முடிபுகள் :

               இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின்,

    • தொல்காப்பியத் தொண்டர்கள் எனத்தகும் உரையாசிரியர்கள், ஆசிரியர் தொல்காப்பியனாரின் உளக்குறிப்பை உய்த்துணர்ந்து தெளிய அறிவிக்கும் நுண்ணறிவுடையோர்.
    • தொல்காப்பிய நிலைபேற்றுக்கும், தொல்காப்பியக் கல்வி பரவலுக்கும் உரையாளர்களின் உரைகளும் அன்னோர் மேற்கொண்ட உரைமுறைகளும் பெருங்காரணமாம்
    • தொல்காப்பியத்தின் மூன்றதிகாரங்களுள் சொல்லதிகாரம் ஒன்றே அறுபெறும் உரையாளர்களின் உரைகளைக் கொண்டது; இஃது சொல்லதிகாரத்திற்கே வாய்த்த பேறாகும்
    • அன்றியும், தொல்காப்பியச் சொல்லதிகாரத் தெய்வச்சிலையாருரை ஏனையுரைகளினும் பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
    • இவ்வுரையாசிரியரின் பரந்துபட்ட இலக்கண இலக்கிய ஆராய்ச்சிநலமும் வடமொழிப்புலமையும் பிறவுரைகளிற் காணாதனவாய் இவர் வரைந்த சிறப்புரைகளான் தெள்ளிதிற் புலனாம்.
    • சமயச்சார்பான எடுத்துக்காட்டுக்களை இவர் காட்டியுள்ள பான்மையை நோக்குழி, இவர்தம் சமயப்பற்றும் வேண்டுழியெல்லாம் அதனை வெளிப்படுத்தும் நுண்மையும் நேரிதின் விளங்குகின்றதாம்.
    • பிறவுரைகளைப் பெயர்சுட்டி மறுக்காத அரும்பண்புடைய மறுப்புநலனும் ஆசிரியர் ஓதிய சூத்திரங்களைத் தான் இடப்பெயர்வு செய்தமைக்கு இவர் பகன்றுள்ள ஏதுக்கள்தாமும் பல்வேறு மேலாய்வுகளுக்கு இட்டுச் செல்வனவாம்.

    என்னும் முடிபுகள் இக்கட்டுரையான் பெறலாகின்றன எனக்கூறி நிறைவு செய்வாம்.

    துணை நின்ற நூல்கள் :

    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1973.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (ஞா. தேவநேயப்பாவாணர் மற்றும் ஆ. பூவராகம்பிள்ளை விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1970.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், முதற்பதிப்பு – 1981.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையம், சி. கணேசையர் பதிப்பு, வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை, முதற்பதிப்பு – 1978.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், இராமகோவிந்தசாமிப் பிள்ளை பதிப்பு, சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு – 1997.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. மறுபதிப்பு – 1962.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பின் நிழற்படப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 2010.
    1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையம், (கு. சுந்தரமூர்த்தியவர்கள் விளக்கவுரையுடன்) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1963.
    1. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் விளக்கவுரை 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி. முதற்பதிப்பு – 1930.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – உரைக்கொத்து (தொகுதி-1),  தி.வே. கோபாலையர். (ப.ஆ.) சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்,  முதற் பதிப்பு – 2007.
    1. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் -ஆராய்ச்சிக் காண்டிகையுரை, ச. பாலசுந்தரம். (உ.ஆ.), பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முதற்பதிப்பு – 2012.
    1. மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 1987.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘மெய்யுரை கண்ட தெய்வச்சிலையாரின் உரைமரபுகள்’ என்னும்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. தெய்வச்சிலையாரின் உரைச்சிறப்புப் பற்றிய இவ்வாய்வுக்கட்டுரை முழுமையாக ஆய்வுப் பொருளை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. 
    1. ‘உரைமரபுகள்’ என்பதே கட்டுரையின் மையப் பொருளாயினும் அது தொடர்பாக ஆய்வாளர் எடுத்து மொழிந்திருக்கும் ஏனைய உரையாசிரியர்கள், சொல்லதிகார உரைகள், அவற்றின் வரலாறு, சொல்லதிகார உரைப்பதிப்புகள் முதலியன கட்டுரைக்குக் கூடுதல் அடர்த்தியை அளிக்கின்றன. 
    1. பொருண்மைகளுக்குப் பொருத்தமாகக் கட்டுரையின் துணைத்தலைப்புக்கள் அமைந்திருப்பது ஆய்வுப் பொருளை  தெளிவாக அணுகத் துணைசெய்கிறது..
    1. பழந்தமிழ்த் தேட்டங்களைத் தேடியும் கண்டும் தொகுத்தும் வகுத்தும் பகுத்தும் செய்யும் ஆய்வுகள் அருகிய தற்காலத்தில் இத்தகைய கட்டுரைகள் பெரிதும் போற்றுதற்குரியன. 
    1. கட்டுரையில் குறிப்பிட வேண்டியது பொருண்மைக்கேற்ற மொழி நடை. எளிமை என்ற பெயரில் பொருண்மையை நீர்த்துப் போகச் செய்யும் மொழிநடை தவிர்த்து செப்பமான மொழிநடையைக் கடடுரையாசிரியர் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
    1. ‘தெய்வச் சிலையாரின் உரைமரபுகள்’ என்பதே ஆய்வுப் பொருண்மையாயிருக்க, ‘மெய்யுரை கண்ட தெய்வச் சிலையார்’ என  அடைமொழி அளித்திருப்பது முடிவுக்குப் பின் ஆய்வோ என்னும் மயக்கத்தைத் தருகிறது. 
    1. தொல்காப்பியச் செய்யுளியலுக்கான ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை, கழகம் மற்றும் தமிழ்மண் பதிப்பகத்தில் அண்மையில் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது என்பது சுட்டப்படுகிறது. 
    1. ‘உரைமரபுகள் என்னும் தலைப்புக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நூற்பாவின் உரையைப் பெருமதிப்பு வாய்ந்த சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியர்தம் உரை மரபுகளோடும் உரைப்பகுதியோடும் ஒப்பிட்டு நோக்கியிருந்தால் கட்டுரை இன்னும் சிறந்திருக்கக் கூடும். 
    1. ‘பதிப்பித்தத் தொல்காப்பியம்’ ‘ஒப்பிட்டு பல’ என்னும் இடங்களில் உள்ள ஒற்றுப்பிழைகள் நீக்குதற்குரியன. பெயரெச்செங்களில் வல்லினம் மிகாது.

    தேவை, தெளிவு, சுருக்கம், அடர்த்தி, செம்மை ஆகிய பண்புகளைக் கொண்டு, ஆய்வு நெறிப்படி இந்தக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.


    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 56

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 56

    -மேகலா இராமமூர்த்தி

    “கல்லெடுத்துப் போர்புரியும் நீங்களா வில்லெடுத்துப் போர்புரியும் எம்மை வெல்ல முடியும்?” என்று அனுமனைப் பார்த்து ஏளனமாய்க் கேட்ட இந்திரசித்தனை நோக்கி, “வில்லெடுத்துப் போர்புரியும் வீரர் எம்முளும் உளர்; அதனால் வெற்றுரை விடுத்து, நீ யாரோடு போர்புரிய விரும்புகின்றாய்…என்னுடனா? என் தலைவனாகிய இலக்குவனுடனா? உந்தையின் தலைகளை அறுத்துத் தள்ளுவதற்காகவே வந்துள்ள இராமபிரானுடனா என விளம்புவாய்!” என்றான், பொன்மலையைத் தவிர வேறெதனொடும் ஒப்பிடவியலாத் தோள்களையுடைய, அஞ்சனை மைந்தன்.

    என்னொடே பொருதியோ அது அன்று எனின்
        இலக்குவப் பெயரின் எம்பிரான்
    தன்னொடே பொருதியோ உன் உந்தை தலை
        தள்ள நின்ற தனி வள்ளலாம்
    மன்னொடே பொருதியோ உரைத்தது
        மறுக்கிலோம் என வழங்கினான்
    பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு
        பொருப் படா உயர் புயத்தினான். (கம்ப: நாகபாசப் படலம் – 8076)

    “சிங்கம் போன்றவனான என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவன் எனும் பெயர்கொண்ட அந்த அறிவிலி எங்கிருக்கின்றான்? தன்னுயிரை நான் கொல்வதற்காகவே வைத்திருக்கும் அவனை அவனிருக்கும் இடத்திலேயே போரிட்டுக் கொன்று சினந்தணியவே வந்திருக்கின்றேன்” என்று முழங்கிய இந்திரசித்தன், “என் படைவீரர்களின் துணையின்றியே நான் மட்டுமே தனியனாய் உங்கள் அனைவரையும் இன்று பகலுக்குள்ளாகவே பொருதழித்து எமனுலகு அனுப்புவேன்; யாரை வேண்டுமானாலும் நீங்கள் துணைக்கழைத்துக்கொண்டு  என்னோடு போரிட வாருங்கள்!” என்று அறைகூவல் விடுத்தான்.

    அதுகேட்ட அனுமன் இந்திரசித்தனோடு போரைத் தொடங்கினான். அனுமன் வீசிய குன்று இந்திரசித்தன் மார்பில் பட்டுப் பொடிப்பொடியாய் நொறுங்கிற்று. பதிலுக்கு இந்திரசித்தன் ஓராயிரம் கணைகளை ஒன்றுசேர்த்து அனுமன்மேல் செலுத்தவே அனுமன் தளர்ச்சியுற்றான்.

    அடுத்து நீலன் அங்கதன் என ஒவ்வொருவராய் வந்து இந்திரசித்தனோடு போரிட்டுத் தளரவே, அதனையறிந்து அங்கு விரைந்துவந்த இலக்குவன், நான் இவனோடு போரிடாமல் மற்றைய வானரத் தலைவர்களைப் போரிட வைத்தது பெரும் பிழையாகிவிட்டது என்று வீடணனிடம் வருந்திக்கூறவே, அதனை ஆமோதித்த வீடணன், ”ஆம்! உன்னொருவனால்தான் இந்திரசித்தனை வீழ்த்தமுடியும்; மற்றவரால் இயலாது!” என்றான்.

    தன்னை எதிர்த்துவந்த அரக்கர் படையை மறலிக்கு விருந்தாக்கிய இலக்குவன், அனுமன் தோளில் ஏறிக்கொண்டு தேரில் நின்ற இந்திரசித்தனை எதிர்த்துப் போரிட்டான். அவ்விருவரும் நிகழ்த்திய வெம்போரில் அம்புகள் திக்கை மறைத்தன. இலக்குவன் விட்ட வாளியொன்று இந்திரசித்தனின் கவசத்தை அறுத்து உள்ளே புகுந்ததால் அவன் உடலினின்று குருதி கொட்டியது.

    இலக்குவனின் விரைந்த வில்லாற்றலை வியந்த இந்திரசித்தன், வேறொரு தேரிலேறிப் போரைத் தொடர்ந்தான். நெடுநேரம் போர் நீடித்தது. பகலவன் விடைபெற்றுப் போகவே, அறிவற்றோரின் மனம்போல் காரிருள் சூழ்ந்தது பாரெங்கும்.

    அப்போது வீடணன், ”யானைபோல் பலம்பொருந்திய இலக்குவனே! இன்னும் கால் நாழிகை நேரத்துக்குள் கொன்றாயாகில் இந்திரசித்தன் இறப்பான்; அல்லாக்கால் அரக்கர்கள் மாயங்கள் புரிவதற்கேற்ற இராக்காலம் வந்துவிடும்; வஞ்சனை செய்வதில் வல்லவனான இந்திரசித்தன் மாயைகள் செய்ய ஆகாயம் செல்வானாகில் உனை வெல்வான்” என்றான்.

    நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
    பாகமே காலம்ஆகப் படுத்தியேல் பட்டான் அன்றேல்
    வேகவாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
    ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான். (கம்ப: நாகபாசப் படலம் – 8181)

    அதுகேட்ட இலக்குவன் சித்திர வேலைப்பாடமைந்த இந்திரசித்தனின் தேரை இலக்குவைத்து அம்பெய்து அழித்தான்; அவ்வேளையில் வானர சேனையை நாக பாசத்தால் பிணித்துவிட எண்ணிய இந்திரசித்தன், போர்க்களத்திலுள்ளோர் கண்மூடித் திறப்பதற்குள் தன் வில்லோடு விசும்பில் ஏறினான்.

    மேக மண்டலத்திற்கு அப்பால் சென்ற இராவணனின் புதல்வனான இந்திரசித்தன், தன் தவத்தினாலும், பிரமனிடம் பெற்ற வரத்தினாலும், ஓதிய மந்திரங்களின் பலத்தினாலும் யாருக்கும் புலப்படாவண்ணம் அணுவையொத்த நுண்ணுடம்பை எடுத்துக்கொண்டு, சிறந்த ஒளியுடைய பாம்பின் பெயருடைய ஒப்பற்ற கணையைச் சிந்தித்து அதற்குரிய மந்திரம் சொல்லிக் கையிலெடுத்தான்.

    களத்தில் நின்றிருந்த இந்திரசித்தன் திடீரென்று மாயமாய் மறைந்த காரணத்தை ’விளைவினை அறியும் வென்றி‘ வீடணன்கூடத் தெரிந்துகொள்ளவில்லை. தம்மோடு போர்புரிய அஞ்சி இந்திரசித்தன் களத்தைவிட்டுப் போய்விட்டான் என்றெண்ணி வானரர்களும் இலக்குவனும் சிரித்து ஆரவாரித்துவிட்டு ஓய்வுகொள்ளத் தொடங்கினர்.

    அவ்வேளை பார்த்து, ”அரக்கன் இந்திரசித்தன் கொடிய நாகப் படையைச் செலுத்தினான் விண்ணிலிருந்து; அதை அவன் செலுத்திய அளவில் பத்துத் திசைகளிலும் இருள் நிலைகெட்டு ஓட, காகுத்தனுக்கு (இராமன்) இளைய காளையான இலக்குவனின் வயிரத் திண்தோள் மலைகளை அக்கணை கட்டியது என்று சொல்வார்கள்” என்கிறார் கம்பர். இதனை நேர்க்கூற்றாகச் சொல்லாமல் அயற்கூற்றாக அவர் கூறியமை, இலக்குவனை நாகப்படை கட்டியது என்று நேரடியாய்க் கூற அவருக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகின்றது.

    விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
    எட்டினோடு இரண்டுதிக்கும் இருள்திரிந்து இரியஓடி
    கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை
    வட்டவான் வயிரத் திண்தோள் மலைகளை உளைய வாங்கி. (கம்ப: நாகபாசப் படலம் – 8190)

    தன்னை இறுக்கிக் கட்டியிருப்பது நாகக் கணை என்றும், அஃது இந்திரசித்தனின் மாயச் செயலென்றும் உணராது ஒடுங்கினான் இலக்குவன். இந்திரசித்தனைப் பிடித்துவிட வேண்டுமென எழுந்த அனுமனையும் ஏனைய வானர சேனையையும் சேர்த்துக் கட்டியது அந்நாகக் கணை.

    அனைவரும் மண்ணில் மயங்கிச் சாய்ந்திருக்கும் நிலைகண்ட இந்திரசித்தன் நெடுநேரம் செய்த போராலும் பட்ட புண்களாலும் நைந்த உடலோடு அரண்மனைக்குத் திரும்பினான்.

    இராவணனிடம் போர்க்களத்து நிகழ்வுகளையெல்லாம் விவரித்து ”எந்தையே நீ துன்பம் நீங்குக! யான் இப்போது உடல் வருத்தத்தோடு இருக்கின்றேன்; மேற்செய்ய வேண்டியவற்றை நாளை சொல்கின்றேன்” எனக் கூறிவிட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தான்.

    வானர சேனையும் இலக்குவனும் கட்டுண்டு கிடப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்த வீடணன், ”நான் அவ்விடத்தில் இராவணனுக்குப் பகையானேன்; நான் சேர்ந்தவரைக் காக்கத் தவறியதால் இவ்விடத்துள்ளோர்க்கும் இப்போது வேண்டாதவனானேன்” என்று அரற்றினான்.

    அதுகண்ட வீடணனின் துணைவனான அனலன், ”வருந்தாதே!” என்று அவனைத் தேற்றிவிட்டு இராமனிடம் சென்று நிகழ்ந்தவற்றை உரைத்தான். பெருவருத்தமுற்ற இராமன் போர்க்களம் வந்துசேர்ந்தான். இருள்சூழ்ந்த அவ்விடத்துக்கு அனல் அம்பினால் வெளிச்சமூட்டினான்.

    அங்கே கணையால் கட்டுண்டு கிடக்கும் இலக்குவன் உடல்மீது வீழ்ந்து கண்ணீர்பெருக்கிய இராமன், ”இலக்குவா! இலக்குவா!” எனப் பன்முறை அழைத்தான்; அவன் மூக்கின்மீது கைவைத்து மூச்சிருக்கின்றதா எனப் பார்த்து, ”ஐயா! நீ பிழைப்பாயா?” என்று கேட்டு மெய்சோர்ந்தான்.

    வீரத் தம்பியை இழந்த வருத்தத்தோடு வீடணனை நோக்கிய இராமன், ”இலங்கை வேந்தன் மகனாகிய இந்திரசித்தனோடு இளைய கோவான இலக்குவனுக்குப் பெரும்போர் ஏற்பட்டது என்றுகூறி என்னை நீ விரைவாக அழைக்காமல் போனாய்; அதனால் நாகக் கணை தொடுத்த இந்திரசித்தனின் கைகளையும் தலையையும் கொய்து உயிர்குடிக்க இயலாமல் என்னைக் கெடுத்துவிட்டாய் வீடணா!” என்றான் சினத்தோடு.

    எடுத்தபோர் இலங்கைவேந்தன் மைந்தனோடு இளையகோவுக்கு
    அடுத்தது என்றுஎன்னை வல்லை அழித்திலை அரவின்பாசம்
    தொடுத்தகை தலையினோடும் துணித்து உயிர்குடிக்க என்னைக்
    கெடுத்தனை வீடணா என்றான் கேடுஇலாதான்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8227)

    இந்நிகழ்வில் இராமன் வீடணனைக் குறைகூறுதற்குத் தக்க காரணம் ஏதுமில்லை. நாகக் கணையை இந்திரசித்தன் பயன்படுத்துவான் என்று வீடணன் எதிர்பார்த்திருக்கமாட்டான்; அத்தோடு பேராற்றல் படைத்தவனான இராமனின் இளவல் இலக்குவனை அக்கணை ஏதும் செய்யாது என்றுகூட அவன் எண்ணியிருக்கலாம். அதன்பொருட்டே அவன் இராமனைக் களத்துக்கு அழைக்கவில்லை என்று நாம் கருதினால் அதில் பிழையில்லை.

    பின்பு ஏன் இராமன் வீடணனைத் தேவையில்லாமல் குறைகூற வேண்டும்?

    தம்பிக்கு நேர்ந்த அவலத்தால் மனம் பேதலித்த நிலையில் அவன் பேசிய பேச்சுக்கள் இவை என்றுதான் நாம் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    களத்தில் இலக்குவனின் இணையற்ற போர்த்திறத்தை இராமனுக்கு விளக்கிய வீடணன், “இந்திரசித்தனின் மாயச் செயலால் இத்தீங்கு நிகழ்ந்துவிட்டது; ஆனால், இவர்கள் யாரும் உயிர்துறக்கவில்லை; இந்த நாகக் கணை நீங்கினால் இவர்கள் அனைவரும் எழுந்துவிடுவர்; அறத்தினைப் பாவம் ஒருநாளும் வெல்லாது; கலங்காதே ஐய!” என்றான் நீர்நிறைந்த கண்களோடு.

    ”இந்திரசித்தனுக்கு இந்த நாகக் கணையைக் கொடுத்த தேவன் யார்? இதன் தன்மை என்ன? இதிலிருந்து விடுபடும் வழியென்ன? இவை குறித்து நீ அறிந்தவற்றை எனக்குச் சொல்வாயாக!” என்று அண்ணல் இராமன் வீடணனிடம் வினவ,

    ”ஐய! பிரமனால் படைக்கப்பட்ட இக்கணையை அவனிடமிருந்து சிவன் பெற்றான். இந்திரசித்தனின் தவத்தினை மெச்சிச் சிவன் அவனுக்கு இக்கணையை அளித்தான். வலிமைமிகு இக்கணை ஆயிரம் கண்ணுடையவனான இந்திரனின் திண்தோள்களைப் பிணித்தது. தேவியைத் தேடிச்சென்ற அனுமனை இறுகக் கட்டியதும் இக்கணையே!

    இந் நாகக் கணை தானே விட்டால்தான் விடும்; விண்ணவராலும் மண்ணவராலும் ஏதும் செய்ய இயலாது; உடலழிந்து உயிர்போன பின்புதான் விட்டு நீங்கும்; பிழைக்க வேறு வழியில்லை!” என்றான் வீடணன் வேதனையோடு.

    இலக்குவனையும் அவனைப் பிணித்திருந்த நாகக் கணையையும் உற்றுநோக்கிய இராமன், ”இக்கணையால் இலக்குவன் இறந்துபடின் யானும் உடனே இறப்பேன்” என்று எண்ணியவாறு கலங்கிநின்றான்.

    ”அப்போது இராமன் உற்ற துயரைத் தீர்ப்பதற்காக வானில் கலுழன் (கருடன்) பறந்து வந்தான். இராமனைத் துதித்தபடி சிறகுகளை விரித்து அவன் தாழப் பறந்துவரவும், அவன் நிழல்பட்ட அளவில், பாதகனாகிய இந்திரசித்தன் இலக்குவன்மீதும் வானரப்படை மீதும் செலுத்தியிருந்த நாகக் கணை, மேகங்கள் ஐயங்கொள்ளுதற்கு இடமாக உரிய, கொடையளிப்பதில் வலிமை மிக்க பெரியோனாகிய சடையப்ப வள்ளலுக்குரிய திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த, ஒளிபொருந்திய அந்தணர்களும் செஞ்சொல் புலவர்களும் என்றிவர்களைச் சுற்றமாய்க் கொண்டோரை அடைந்த பசிபோல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது; அவ்வாறு அழிந்து மறைந்த நாகங்களை, மணம்பொருந்திய தாமரை மலரின் தண்டினுள்ளே உள்ள மெல்லிய நூலின் தன்மையை அடைந்துவிட்டது என்று சொல்வதில் என்ன சிறப்புளது?” என்கிறார் கம்பநாடர்.

    வாசம் கலந்த மரைநாள நூலின்
        வகை என்பது என்னை மழை என்று
    ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல்
        சரராமன் வெண்ணெய் அணுகும்
    தேசம் கலந்த மறைவாணர் செஞ்சொல்
        அறிவாளர் என்று இம் முதலோர்
    பாசம் கலந்த பசிபோல் அகன்ற
        பதகன் துரந்த உரகம். (கம்ப: நாகபாசப் படலம் – 8264)

    [சரராமன் – சடையப்ப வள்ளல்; உரகம் – பாம்பு]

    இராமனின் கதை நடுவே தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலின் சிறப்பைப் பாடிய கம்பரின் செய்ந்நன்றி மறவாச் செம்மை நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.

    நாகக் கணை விடுபடவே, உறக்கத்தினின்று நீங்கியவர்போல் வானரப் படையினரும் இலக்குவனும் எழுந்தனர்.

    கலுழனின் கைம்மாறிலாப் பேருதவிக்கு அளவிலா நன்றி பாராட்டினான் இராமன். அவனிடம் விடைகொண்டு அவ்விடம் விட்டகன்றான் கலுழன். அப்போது அனுமன் இராமனைப் பார்த்து, ”ஐயனே! இலக்குவன் இறந்துவிட்டான் என்றெண்ணிச் சீதை வருந்துவாள்; அவளைத் தெளிவிக்கும் பொருட்டும், அரக்கர் படையை மீண்டும் மருட்டும் வகையிலும் நாம் ஆரவார முழக்கமிடுவோம்” என்றான். ”ஆகட்டும்” என்றான் இராமன். உடனே திக்கெட்டும் கேட்கும் வகையில் ஆரவாரித்தனர் வானரர்.

    சீதையின் நினைவால் துயிலின்றிக் கிடந்த இராவணனின் காதில் வானர முழக்கம் கேட்டது. உடனே இந்திரசித்தனின் ஆடகப் பொன்னால் ஆன அரண்மனை நோக்கிச் சென்ற அவன், அங்கே இலக்குவனின் அம்புகள் தைத்து உண்டான புண்களில் குருதிபொங்க வருந்திச் சாய்ந்திருந்த இந்திரசித்தனைக் கண்டான். நாகக் கணையால் கட்டுண்ட வானரப் படையும் இலக்குவனும் விடுபட்டமையை உரைத்தான். ”இவ்வாறு நிகழவும் கூடுமோ?” என வியந்தான் இந்திரசித்தன்.

    அப்போது அங்குவந்த இராவணனின் தூதர்கள், திடீரென்று போர்க்களத்திற்கு வருகை புரிந்த கலுழனால் நாகக் கணைகள் சின்னபின்னங்கள் ஆயின; முன்னினும் அதிக வலிமை பெற்றனர் அப்படையினர் என்றுரைக்கவே, சினங்கொண்ட இராவணன், ”கலுழன் நாணுமாறு அப்படையினரை மீண்டும் அழித்தொழிக்கப் போருக்குப் புறப்படுக!” என்றான் தன் வீரமகன் இந்திரசித்தனிடம்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 55

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 55

    -மேகலா இராமமூர்த்தி

    தன் குலத்தைக் காக்கும்பொருட்டு இராவணனோடு இணைந்து வாழ்வாயாக என்று சீதையிடம் மன்றாடிய மாயாசனகனைக் கண்டு கடுங்கோபம் கொண்ட சீதை, ”பேசத் தகாத வார்த்தைகளை நீ பேசினாய்; இராமனால் காப்பாற்றப்பட்டால் உயிர்வாழ்வாய் அல்லது இறந்தொழிவாயாக!” என்று ஏசினாள்.

    அப்போது சீதையை மேலும் அச்சுறுத்தும் வகையில் மாயாசனகனைத் தான் கொல்லப்போவதாக வாளை உருவினான் இராவணன். அதுகண்டு அஞ்சாத சீதை, ”உன்னால் என்னையும் கொல்லமுடியாது; (மாயாசனகனைச் சுட்டிக்காட்டி) இவனையும் கொல்லமுடியாது; இராமனின் அம்புக்கு நீயோ உன் உறவுகளோ பிழைத்திருக்கப்போவதில்லை” என்றாள் அலட்சியமாக.

    அதுகேட்டு மாயாசனகனைக் கொல்லப் பாய்ந்த இராவணனைத் தடுத்த மகோதரன், ”இவன் உனக்கு இழைத்த தீங்கென்ன? எதற்காக இவனைக் கொல்லவேண்டும்? பகைவனாகிய இராமனை நீ வெற்றிகொண்டால் தானாகச் சீதை உன் வசமாவாள்” என்று கூறி அவ்விடத்திலிருந்து இராவணனை நகர்த்திச் சென்றான்.

    அவ்வேளையில், வானரப் படையின் ஆர்ப்பும் வானவரின் ஆர்ப்பும் இராவணனின் செவிகளில் விழ, ”தம்பி போர்க்களத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானோ? அதனால்தான் இந்த ஆர்ப்பொலியோ?” என்று சிந்தித்தான். போர்க்களத்திலிருந்து விரைந்துவந்த தூதுவர் கும்பகருணன் இறந்த செய்தியை இராவணனுக்குத் தெரிவித்தனர். அதுகேட்ட இராவணன் அதிர்ச்சியடைந்து நிலத்தின்மேல் வீழ்ந்தான். ஈருடலும் ஓருயிருமாய் வாழ்ந்திருந்த தங்கள் சகோதர பாசத்தை எண்ணி,

    ”நீ எனக்கு தம்பி மட்டுந்தானா? தேவர்களாகிய தாமரைக் காட்டைக் கலக்கி அழிக்கும் மதயானை போன்றவனே! நான்முகன் பிரமனின் மகனாகிய புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் வழித் தோன்றலே! ஆடவர்குல திலகனே! இந்திரனின் புகழுக்குக் காரணமான நல்வினைப் பயனைத் துடைத்த என் தம்பியே! நான் உன்னைப் பற்றி இவ்வாறான சொற்களைக் கேட்கும்படி ஆனேனே!” என்று பெருங்குரலெடுத்து அரற்றினான்.

    தம்பியோ வானவராம் தாமரையின் காடு உழக்கும்
    தும்பியோ நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ
    நம்பியோ இந்திரனை நாமப் பொறி துடைத்த
    எம்பியோ யான் உன்னைஇவ் உரையும் கேட்டேனோ.
    (கம்ப: மாயாசனகப் படலம் – 7709)

    ”வலிமைமிகு தோளனே! நீ குளிக்கும்போது உன் பாதங்களைத் தேய்க்க வடக்கிலுள்ள மேருமலையன்றோ கல்லாய்ப் பயன்படும்? அத்தகு பெருவீரனான நீ, சாதாரண மானுடர்களின் அம்புக்கு இரையாகி மாண்டாய் எனும் சொல் என்னை வேதனையில் ஆழ்த்துகின்றதே!” என்றான் துயரத்தோடு.

    கும்பகருணன் இறந்த செய்தியையும், அதுகேட்டு இராவணன் அரற்றிக்கொண்டிருப்பதையும் கண்ட சீதை உவகை கொண்டாள். அப்போது மந்திரிகள் தேற்ற அங்கிருந்து அகன்று சென்றான் இராவணன்.

    சீதையின் அருகில்வந்த திரிசடை, அங்கே மாயாசனகனாக வந்துநின்றவன் மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கன்; உன் தந்தையல்லன் என்ற உண்மையை உணர்த்தச் சீதை நிம்மதியடைந்தாள்.

    அரண்மனைக்குச் சென்ற இராவணன் தன் தம்பிக்குத் துணைநின்று அவனைக் காக்காது களபலி கொடுத்துவிட்டு வந்திருக்கும் தன் அமைச்சர் முதலானோரைப் பார்த்து, ”போரில் வெல்ல இயலுமென்றால் போருக்குச் செல்லுங்கள்! இல்லை எங்களால் போர்க்களத்தில் பகைவனிடம் அடிபட்டுச் சாகத்தான் முடியும் என எண்ணுதிராயின் போருக்கே போகவேண்டாம்; உங்கள் கருத்தைக் கூறுங்கள்!” என்றான் கடுஞ்சினத்தோடு.

    அதுகேட்டு இராவணனின் வீரமகன் அதிகாயன் எழுந்து,

    “உன் தம்பியின் உயிருக்கு இறுதி செய்தவனான இராமனின் தம்பி உயிருக்கு அழிவுசெய்து அவனுக்கு நடுக்கந்தரும் வன்துயரைச் செய்யாமல் போவேனாயின் ஆடவரில் சிறந்தவனான உனக்கு நான் மகனல்லன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினம் உரைத்தான். [இவன் இராவணனுக்கும் அவனுடைய இரண்டாவது மனைவி தான்யமாலிக்கும் பிறந்தவன். அதிகாயன் என்ற சொல்லுக்குப் பேருடல் படைத்தவன் என்ற பொருள்.]

    உம்பிக்கு உயிர்ஈறு செய்தான் ஒருவன்
    தம்பிக்கு உயிர்ஈறு சமைத்து அவனைக்
    கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல்

    நம்பிக்கு ஒருநன் மகனோ இனிநான். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7737)

    ”நன்று சொல்லினை மைந்தா! நீ இலக்குவனின் உயிரை முடித்தால் அதன்பின்பு நான் அந்த இராமனின் உயிரை முடிப்பேன்” என்றுரைத்துப் பெருஞ்சேனையோடு அதிகாயனைப் போர்க்களத்துக்கு அனுப்பினான் இராவணன்.

    களத்தில் சிறிய தந்தை கும்பகருணனின் தலையற்ற உடலைக்கண்டு வருந்திய அதிகாயன், மயிடன் எனும் அரக்கனை அழைத்து ”இலக்குவனிடம் சென்று என்னோடு பொருத வரச்சொல்!” என்று புகன்றான்; அதனை நிறைவேற்ற மயிடன் விரைந்து அங்கிருந்து அகன்றான்.

    இராம இலக்குவர் இருக்குமிடம் சென்ற மயிடன், இலக்குவனிடம் அதிகாயனின் உட்கிடையை உரைக்க, இலக்குவனைத் தழுவிப் போருக்குச் செல் என்று விடைகொடுத்தான் இராமன்.

    ”பெருவீரனான அதிகாயனுடன் இலக்குவனைப் போர்புரியத் தனியே அனுப்பலாகாது; நாமும் துணை செல்வோம்” என்றான் வீடணன். அதுகேட்டு முறுவலித்த முகில்வண்ணன் இராமன், ”எண்ணாயிரங்கோடி இராவணரும், விண்ணோரும் மண்ணோரும், நெருங்குதற்கரிய மும்மூர்த்திகளும் போருக்கு வந்தாலும் அவர்களையும் எதிர்க்கவல்ல ஆற்றல்வாய்ந்த என் தம்பியின் வில்லாற்றைக் கண்ணால் காண்பாய்!” என்றான்.

    எண்ணாயிர கோடி இராவணரும்
    விண்நாடரும் வேறுஉலகத்து எவரும்
    நண்ணா ஒருமூவரும் நண்ணிடினும்
    கண்ணால்இவன் வில்தொழில் காணுதியால். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7803)

    அரக்கர் சேனைக்கும் குரக்குச் சேனைக்கும் பெரும்போர் தொடங்கிற்று. தேரிலிருந்து அதிகாயன் போரிட, இலக்குவனைத் தன் தோளில் தாங்கிக்கொண்டு போரிட உதவினான் அங்கதன். அனுமனும் இலக்குவனோடு இணைந்து போரிட்டு அரக்கர் படையை அழித்தான்; திரிசிரன் (முத்தலையன்) எனும் இராவணனின் மற்றொரு மைந்தனைத் தேய்த்துக் கொன்ற அனுமன், போரிடுவதற்கு மேற்கு வாயில் நோக்கிப் போயினான். அனுமனின் செயல்கண்டு விக்கித்துப் போன அதிகாயன், இலக்குவனோடு போர்புரிய முனைந்தபோது, இலக்குவன் அவனைப் பார்த்து, “எறிதற்குரிய படைக்கலங்கள் வைத்துள்ள உன் சேனைகள் எல்லாம் அழிந்தபின்பு நீ போர் செய்வாயா? நீ மட்டும் தனித்து என்னோடு நெடிய போரினைச் செய்வாயா? உன் விருப்பமென்ன?” என்று வினவினான்.

    மன்னவன் தம்பி மற்றுஅவ் இராவணன் மகனை நோக்கி
    என்உனக்கு இச்சை நின்ற எறிபடைச் சேனை எல்லாம்

    சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
    நல்நெடுஞ் செருச் செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான்.
    (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7913)

    ”உன்னை நான் போருக்கழைத்தது தனியாகப் போரிட்டு வெல்லத்தான்!” என்று அதிகாயன் உரைக்கவும், குறுநகை சிந்திய இராமனின் இளவல் அதிகாயனோடு போரைத் தொடங்கினான். வானும் நிலனும் கடலும் அதிகாயனின் பகழிகளால் நிறைந்தன; இவன் கொலைத் தொழில் கற்றது காலனிடமோ என்றஞ்சும்படி வானர சேனையைக் கொன்று குவித்தான் அவன்.

    இலக்குவனின் அம்புகள் அதிகாயனின் மார்பைத் துளைத்தபோதும் அவற்றுக்குச் சற்றும் சளைக்காதவனாய்த் தன் அம்புகளை மாரிபோல் தொடர்ந்து சொரிந்தான் அதிகாயன்.

    இலக்குவன் அம்புகளைத் தொடர்ந்து எய்தும் அதிகாயன் வீழ்ந்துபடவில்லை; அப்போது இலக்குவன் அருகில் தோன்றிய காற்றரசன் (வாயுதேவன்) நான்முகன் படையாலன்றி (பிரம்மாத்திரம்) இவன் சாகமாட்டான் என்பதை அவனுக்குரைக்க, ”நன்று” என்று உவந்த இலக்குவன், நான்முகன் படையைத் தன் அம்போடு சேர்த்துச் செலுத்த, அஃது அதிகாயனின் தலையைக் கொய்துகொண்டு ஆகாயவழியில் சென்றது. அதன்பின்னர் அங்கதன் தோளினின்று இறங்கினான் இலக்குவன்.

    அப்போது அதிகாயனின் தம்பி நராந்தகன் இலக்குவனோடு போர்புரிய வாளோடு வந்துவிட, இடைபுகுந்த அங்கதன் அவன் கை வாளினாலேயே அவனை வீழ்த்திக் கொன்றான்.

    அதிகாயன் உள்ளிட்ட அரசகுமாரர்கள் இறந்த செய்தியைத் தூதர்கள் வாயிலாய் அறிந்த இராவணன், ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்தான். தன் மகன் இறந்த செய்தியை அறிந்த அதிகாயனின் தாய் தான்யமாலி இராவணனின் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதாள்.

    அவள் அரற்றக் கண்டு மௌனமாய் அமர்ந்திருந்த இராவணனைப் பார்த்து, ”என்ன ஐயா சிந்தித்திருக்கின்றாய்? இறந்துபோன அரக்கர்களையெல்லாம் திரும்பிவருமாறு கூப்பிடமாட்டாயோ? காமத்தைக் கைக்கொண்ட நீ உயிர்பிழைப்பாயோ? இன்னமும் இந்தச் சீதை காரணமாய் இன்னும் வரவிருக்கும் துன்பங்கள் சிலதானோ? (இல்லை பல!) என்று கனன்றுரைத்தாள்.

    இலங்கை மாநகரெங்கும் அழுகுரல் ஒலித்தது. அது முழுமதி நாளில் தோன்றும் கடலோசையை ஒத்திருந்தது. ஊரெங்கும் ஒலித்த அரக்கியரின் அவலக்குரல் கேட்டு, ”இராவணனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ?” என்று ஐயுற்று அவன் அரண்மனை அடைந்தான் இந்திரசித்தன். அங்கே இராவணனைக் கண்டு ஒருவாறு மனந்தேறியவன், ”ஏனிந்த அழுகுரல்? என்னவாயிற்று?” என்று ஐயத்தோடு வினவினான்.

    அதிகாயன் உள்ளிட்ட உன் தம்பியர் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான்” என்று இராவணன் உரைக்கவும், ”போர்க்களத்தில் அவர்களைக் கொன்றது யார்?” என்று கேட்டான் இந்திரசித்தன். ”அதிகாயனை இலக்குவனும் அவன்பின்னால் நின்றிருந்த கும்பநிகும்பரை அனுமனும் கொன்றனர்” என்றான் இராவணன் வேதனையோடு.

    கடுங்கோபத்தோடு தந்தையை நோக்கிய இந்திரசித்தன்,

    ”அரசே! வலிமைமிகு குரங்குப் படையை உடைய மானிடராகிய இராமலக்குவரின் போர்வன்மையை நீ முதல்நாள் போரில் அறிந்திருந்தும் அவர்களோடு போரிட என்ன காரணத்தாலோ என்னை ஏவவில்லை; அதனால் எம்பியரைக் கொன்றவர் அவரில்லை; இவர்களைக் கொலைசெய்யுங்கள் என்று நீயே கொடுத்தாய்; அவர்கள் இறந்துபட்டதால் நம் வலிமை குறைந்துவிட்டது” என்றுரைத்து நீண்டநேரம் அதனையே நினைந்து சினத்தோடு நெருப்புப்போல் பெருமூச்சு விட்டுநின்றான் இந்திரசித்தன்.

    கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
    வன்தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
    என்றானும் எனைச்செல ஏவலை இற்றது என்னா
    நின்றான் நெடிதுஉன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8008)

    ”போனதை நினைத்து வருந்தியும் உன்னைக் குறைசொல்லியும் இனியென்ன பயன்?” என்று இராவணனிடம் கூறிய இந்திரசித்தன், என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவனின் உயிரை அவன் உடலிலிருந்து பிரிக்காமல் இனி இலங்கை திரும்பேன்! அதைச் செய்யாது போவேனேல் உயிர்வாழேன்!

    சாவாமருந்து (அமுதம்) போன்றவனாகிய என் தம்பி அதிகாயனின் அரிய உயிரைக் கவர்ந்த இலக்குவனை எமனுக்கு விருந்தாக்காமல் வானவர் நகைக்குமாறு நான் போர்க்களத்தில் வில்லை ஏந்தி நிலத்தில் நின்றேனேல் நான் இராவணன் மகனல்லன்!” என்று வஞ்சினமுரைத்துப் பல்லாயிரங் கோடிப் படைக்கலங்களோடு பேய்க்கொடி பறக்கும் தேரிலேறி ஆறாச்சினத்தோடு போர்க்களத்துக்குப் புறப்பட்டான்.

    அங்கே போர்க்களத்தைவிட்டு நீங்காமல் நின்றுகொண்டிருந்த இலக்குவன் இந்திரசித்தன் பெரும்படையுடன் வருவதைக் கண்டு, ”யாரிவன்?” என்று வீடணனிடம் வினவினான்.

    அவன், ”ஐய! இவன் தேவர் தலைவனைப் போரில் வென்றவன்; இன்றைய போர் கடுமையானதாய் இருக்கும்; எனவே, நீ தக்க துணைவரோடு போரிடுதல் நன்று” என்றான்.

    அப்போது இலக்குவனுக்குத் துணையாகக் காற்றின் மைந்தன் அனுமன் விரைந்துவர, கூடவே சுக்கிரீவனும் அவன் சேனையும் வந்திணைந்தனர்.  

    கடும்போரில் இருபக்கமும் பெருஞ்சேதம் விளைந்தது. அனுமன் எறிந்த குன்றைத் தன் அம்புகளால் தூளாக்கிய இந்திரசித்தன், அனுமனைப் பார்த்து ”நில்லடா சற்று நில்லடா! உன்னை எண்ணித்தான் நான் போர்க்களத்துக்கு வந்தேன்; நீ வில்லெடுத்துப் போர் செய்யாமல் உனது வலிமையைப் புகழ்ந்து சொல்லிக்கொண்டு இன்னும் உயிரோடிருந்து விளையாடுகின்றாய்; வெல்லும் நோக்கத்தோடு போர்க்களம் வந்த என் வலிமையடக்க இருப்பவை கல்லும் நீண்ட மரங்களுமா? அடா! சொல்வாயாக!” என்று இகழ்ச்சியோடு கூறினான்.

    நில்லடா சிறிது நில்லடா உனை
    நினைந்து வந்தனென் முனைக்கு நான்
    வில்எடாமை நினது ஆண்மை பேசி உயி
    ரோடு நின்று விளையாடினாய்
    கல் அடா நெடு மரங்களோ வரு
    கருத்தினேன் வலி கடக்கவோ
    சொல் அடா என இயம்பினான் இகல்
    அரக்கன் ஐயன் இவை சொல்லினான்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8074)

    அதுகேட்ட அனுமன், ”வலிமையற்ற மெல்லியனே! எங்கள் பக்கத்திலும் வில்லெடுத்துப் போர்செய்வதற்குரிய கொடிய வீரர் சிலர் உளர்; கல்லெடுத்துப் போர்செய்வதற்கு உரியவனான நானும் நிற்கின்றேன்; அவ்வாறு இருத்தலை இன்று அல்லது நாளைக்குள் நீ காணலாம்; ஒளிபொருந்திய படைக்கலங்களைத் தாங்கிய இந்திராதியர் உன்னிடம் தோற்று உயிரைத் தாங்கிக்கொண்டு செல்வார்கள்; ஆனால், போரில் தோற்றுப் புல்லை வாயினால் கவ்வ வந்தவர்கள் அல்லோம் நாங்கள்; வேறுசில போர்வகைகளைத் தொடங்கி உன்னோடு போரிட வந்துள்ளோம்.” என்றான்.   

    வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில
    வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
    கல் எடுக்க உரியானும் நின்றனன்
    அது இன்று நாளையிடை காணலாம்
    எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு
    இடைந்து உயிர் கொடு ஏகுவார்
    புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில
    போர் எடுத்து எதிர் புகுந்துளோம்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8075)

    இப்பாடலில் பயின்றுவந்துள்ள “கல் எடுக்க உரியானும் நின்றனன்” என்ற தொடருக்கு அரக்க இனத்தை அழித்து அவர்களுக்கு வீரக் கல்லெடுப்புச் சடங்கு நடத்தற்குரிய அனுமன் என்ற பொருளும் உரையாசிரியர்களால் சொல்லப்பட்டிருக்கின்றது.

    போரில் தோற்றவர் வாயினால் புல்லைக் கவ்வுதல் அன்றைய மரபு. தற்காலத்தில் தோற்றவனை மண்ணைக் கவ்வினான் என்று கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளையார் மீதான இன்னும் இரண்டு அருமையான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணப்போகிறோம்.

    3. குப்பிளான் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    ஈழநாட்டின் செம்மண் வளமுடைய குப்பிழான்பதி எனும் ஊரானது கலையும் தமிழும் சைவமும் ஒருங்கே வளர்ந்த ஊராகும்.

    ஈழநாட்டிலேயே உள்ள கௌரி அம்மை சமேதரான கேதீஸ்வரப் பெருமானின் திருவாலயத்தினின்றும் கொண்டுவரப்பட்ட  விநாயகர் விக்கிரகங்கள் மூன்றில் ஒன்றைக் குப்பிளான் கற்கரைப் பதியில் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. (சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம், இந்துசாதனம், 17.08.2010)

    ஆற்றல் மிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளரான சைவப்புலவர் திரு. ஏ. அனுஷானந்தன் என்ற புலவனார் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் அருமையான நூலை ஆக்கியுள்ளார். இதிலிருந்து நான்கு பாடல்களே நமக்குக் காணக் கிடைத்துள்ளன. அவற்றின் இனிமையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    எந்த நூலைப் பாடுமுன்பும் நூலாசிரியர், விநாயகரை வேண்டித் தன் நூலைக் காத்தருள வேண்டுவார். பின்பு, காப்புப்பருவத்தில் காக்குங்கடவுளான திருமாலை வேண்டுவது மரபாகும். இது விநாயகப் பெருமானைப் பற்றிய பிள்ளைத்தமிழல்லவா? இந்நூலாசிரியர் தமது முதல் பாடலில் பிள்ளையாரின் தகப்பரான சிவபெருமானை வேண்டுகிறார்;

    மயன், மாந்தாதா, மாதுவஷ்டா, மண்டோதரி (இராவணன் மனைவி) என்பவர்களுடன், நவக்கிரகங்களுள் ஒன்றான கேதுவும் போற்றி வணங்கும் சிவபிரான்; சம்பந்தரும் சுந்தரரும் தமிழால் பாடிப் போற்றப்பட்டவர். சீத நெடுநற் பாலாவிக் கேதீச்சரத் தலத்தோனே! 1520ம் ஆண்டளவில் (ஆயிரத்து ஐநூற்றிருப தாண்டளவில்) அழிக்கப்பட்ட கோவிலின் புதைவினின்று கிடைத்த உனது மைந்தனானவனின் பெருமை விளங்கக் காப்பாயே! என அக்கோவிலின், சரித்திரத்தை உள்ளடக்கிப் பொருள்நயம் மிகப் பாடியுள்ளார். யாரோ வெளிநாட்டவர் அரசாண்டபோது சிதைக்கப்பட்ட கோவிலின் இடத்திருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் இவரென்று இதனால் ஒருவாறு ஊகிக்க இயலுகின்றது.

    மயன் மாந்தாதா மாதுவஷ்டா
    மண்டோதரியென் பாருடனே
    கேதுப் பெயரோன் போற்றிசெயக்
    கேடில் ஞானசம்பந்தர்
     ……………………………………
    ஆயுங்காலை ஆயிரத்து
    ஐநூற் றிருப தாண்டளவில்
    பூனைக் கண்ண ரழிகோயில்
    புதையிலிருந்து வந்தநெடும்
    சேயன் உந்தன் மைந்தன்சீர்
    சிறக்கக் காப்பு அருள்வாயே!
    ஆனை வதனன் அரசடியில்
    ஆடிமகிழக் காப்பாயே!

    அடுத்து அழகான வருகைப்பருவப் பாடலொன்று. காணலாமா?

    கரங்களால் தலையில் குட்டிக்கொண்டு காரிய சித்திக்காக உன்னை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள்; குடுமியை உடைய தேங்காயைக் கல்மேல் வீசியடித்து உடைத்துச் சிதறுகாய் போட்டு நமது துன்பங்களை நீக்க வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள். எங்கள் துயரங்கள் அனைத்தையும் விரட்டி ஓட்டி வாழ்விக்க எலிமேல் வருவாய் எங்கோவே! கஜமுகனை உனது தந்தத்தால் பிளந்து அழித்தவனே! திரிபுரத்தைத் தனது நகைப்பினால் எரித்த சிவபிரானின் புதல்வனே வருக வருகவே!

    கரங்கள் மொட்டித் துயர்தலைமேல்
    கவினப் பிடித்து மெய்யாக
    நிரயம் விழினும் நின்னினைவே
     …………………………..
    கரத்தி லேந்துமுடித் தேங்காய்
    கன்மேலடித் துக்கரையில் துயர்
    ………………………………
    வரத்தி லோங்கு கஜமுகனை
    வலிய கோட்டாற் பிளந்தழித்தாய்
    புரத்தை நகையா லட்டவனின்
    புதல்வா வருக வருகவே.

    பிள்ளையார் வழிபாட்டில் தலைமேல் குட்டிக்கொள்வது, பின் தடைகள் நீங்க, கல்மேல் சிதறுகாய் உடைத்தல் எனும் வழிபாட்டு முறைகளைப் பாடலில் இணைத்துப் பதிவு செய்து வைத்தமை அருமையானது.

                                       ——————————–

    4. கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    அடுத்து நாம் பார்க்கப் போவது கீழ் கரவையிலுள்ள கனகராவளவில் கோவில் கொண்டருளியுள்ள விநாயகப்பெருமான் மீது சிவராசசிங்கம் எனும் அடியார் பாடியுள்ள கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைத்தான்.

    பிள்ளையார் தொடர்பான அருமையான கதைகளைக் கூறுவதுமான பாடல்களைக் கொண்டது இந்நூல்.  செங்கீரைப் பருவத்திலுள்ள ஒரு பாடல் விநாயகர் மாம்பழம் பெற்ற கதையை உரைக்கின்றது!

    கோலமயில்மீது ஊர்ந்துவரும் பரங்குன்ற வேலன் இந்த உலகை வலம்வருமுன்பே தாய்தந்தையரான சிவமும் சக்தியும்தான் அனைத்து உலகமும் என்று உணர்ந்து, அப்படியே வலமும் வந்து அவர் கையினின்றும் மாங்கனி பெற்ற கனகைவாழ்  விநாயகா! செங்கீரை ஆடுகவே! என வேண்டும் பாடல்.

    கோல நீலம யிலினி லூர்பரங்
    குன்றின் வாழுங் குருபரன் விசைகொடு
    ஞாலந் தன்னை வலம்வரு முன்சிவ
    நாதன் தாதையே சர்வமு மெனவரும்
    வால ஞானத் திறத்தி லவர்தமை
    வலம்வந் தேகனி வாங்கிநம் கனகைவாழ்
    நாலு வாய்ப்பர! ஆடுசெங் கீரையே
    ஞான நாயக ஆடுசெங் கீரையே

    பொதுவாகவே பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வந்தத் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள தலங்களின் சிறப்புகளையும் பூசை முறைமைகளையும் விளக்கும் செய்திகளையும் பல பாடல்களிலும் கண்டு மகிழலாம்.

    இந்த மரபினையொட்டி இந்நூலில் புலவர் யாழ்ப்பாணத்து வழிபாட்டு மரபை உட்பொதிந்து இயற்றியுள்ள ஒரு பாடலை நாம் சிற்றில் பருவத்தில் காணலாம்.

    யாழ்ப்பாணத்துக் கோயில்களில் புராண படனம் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. முருகன் கோயில்களில் கந்தபுராணப் படிப்பு சிறப்பாக இடம்பெறும். பௌராணிகர் ஒருவர் செய்யுளைப்பாட, மற்றொருவர் “பொருள் சொல்வது” வழக்கம். இவ்வாறு பொருள் கூறுபவர் சமய, இலக்கிய தத்துவத் துறைகளில் தமக்கிருக்கும் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவார். அடியார்கள் கேட்டு அருள் வெள்ளத்தில் மூழ்குவர். அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும்.

    இப்பாடலில் சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர் அதைச் சிதைக்க முயலும் சிறுவன் விநாயகனை வேண்டுகின்றனர். “சிவன் மகனே! இப் புண்ணியத் திருநாளில் புகழ்வாய்ந்த தில்லைநாத நாவலர், சிலேடைக்கவி ரத்தினம் முதலான சிறப்புவாய்ந்த பௌராணிகர்கள் வள்ளி திருமணம் புராணபடனம் செய்ய இருக்கின்றனர். அதனைக் கேட்க வரும் அடியார்களுக்கு சுவைமிகுந்த உணவை அன்னதானம் செய்யும் பணி எம்முடையதாகும். ஆகவே அது பங்கமாகாதபடி சிறுமிகளாகிய நாங்கள் கையால் கட்டிய (மணல்) சிற்றில்களை அழித்து விடாதே!” என வேண்டுகின்றனராம்.

    பொல்லா வினைகள் தீர்கனகைப்
    புனிதக் கோயில் தனிற்கந்த
    புராண படனமிடம் பெறுமிப்
    புண்ய நாளிற் புகழ்மிக்க
    தில்லை நாத நாவலர்செஞ்
    சிலேடைக் கவிரத் தினமுதலாம்
    சிரேட்ட பௌரா ணிகர்வள்ளி
    திருக்கல் யாணப் படிப்பிற்றம்
    சொல்விற் பனங்காட் டிடவுள்ளார்
    சுவைகூ ரன்னம் அவர்க்களிக்கும்
    தூயகட னுண்டெமக் கிடையில்
    தோன்றி விளையாட் டாக்கருணைச்
    செல்வா கருமம் பங்கமுறும்
    செயலாய்ச் சிற்றில் சிதையேலே
    சிவனார் மூத்த திருக்குமரா
    சிறியேம் சிற்றில் சிதையேலே.

                                                   (சிற்றில் பருவம்)

    அழகும் இனிமையும், ஆன்மீகச் செய்தியும் கொண்டொளிரும் உயர்வான பாடல். நாமும் கனகை பரமானந்த விநாயகரை இருகரங்கூப்பி வணங்கி உலகனைத்தையும் காக்க வேண்டுவோமாக!

    இப்பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்துமே பக்திச்சுவை நிரம்பப்பெற்று, அழகான இனிய தமிழில் பல சுவையான கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    (வளரும்)

    Share
  • மரணித்தும் மறையாத மகாராணி

    மரணித்தும் மறையாத மகாராணி

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

    நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை.

    இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ?

    இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    இருபத்தைந்து வயது நிரம்பிய இளவரசியாக இளம் தாயாராக கணவனுடன் கெனியா நாட்டுக்கு விஜயம் செய்த இரண்டாவது எலிசபெத் அம்மையார் இங்கிலாந்துக்கு மகாராணியாக திரும்பிய போது அந்த இௐளம் தாயாரின் முன்னால் இருந்த பாரிய கடமையை ஏற்று எத்தகைய வகையில் செயலாற்றி முடித்தார் என்பதற்குச் சரித்திரம் சான்றாக அமைகிறது.

    அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களது மூத்த புத்திரியாக லண்டன் Mayfair எனும் இடத்தில் 1926ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் தேதி பிறந்தார் . இளவரசர் பிலிப் என்பவரை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். இன்றைய அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்களோடு சேர்த்து நான்கு குழந்தைகளின் தாயாராவார்.

    73 ஆண்டுகள் எதுவித குழப்பங்களுமற்ற மணவாழ்க்கையில் இணைந்திருந்த மகாராணியாரின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் பிலிப் அவர்கள் கடந்த ஆண்டு தனது 99 வயதில் 100 வயதுக்கு ஒரு மாதம் முன்னதாக தனது பூவுடலை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    70 ஆண்டுகாலம் முடி சூடியிருந்த மகாராணியார் எதுவிதமான சர்ச்சைகளுக்குமுட்படாமல் தனது மரணம் வரை முடிக்குரியவராக இருந்தார் என்பது சரித்திரமே ! இத்தகைய ஒரு வெற்றியான வாழ்க்கையை அவர் அடைவதற்கான அவரது விசேடத் தன்மைகள் என்ன?

    வெற்றியான மகாராணியார் வாழ்க்கை ஏதோ சுமூகமாக ஓடியது என்று சொன்னால் இல்லை என்றே பதில் வரும். அவரைச் சுற்றி அவரது சொந்தங்கள் உறவுகளினால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை அவர் கையாண்ட விதமே அவரது பண்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது.

    அவரது மூத்த மகனாக முடிக்குரிய இளவரசராக இருந்த இன்றைய அரசராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்ல்ஸ் அவர்களது மணமுறிவும் அதைத்தொடர்ந்து அதனுடன் இணைந்து எழுந்த பலவிதமான இளவரசி டயானா சம்பந்தமான சர்ச்சைகளையும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் கையாண்ட விதம் பிரமிக்கத் தக்கது.

    அதையடுத்து அவரது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ அவர்களுடைய மணமுறிவு மட்டுமல்ல , சமீபத்தில் அவர் மீது எழுந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் பாரபட்சமின்றி அரச கெளரவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து விலக்கியதன் மூலமாக ஒரு தாய் எனும் நிலையிலில்லாமல் ஒரு நாட்டின் மகாராணி எனும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகள் அவர் தனது நாட்டுக்கான சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

    இங்கிலாந்து அரச பரம்பரைக்குள் முதலாவதாக வந்த வேற்றின பந்தத்தை ஏற்று அதற்குக் காரணமான அவரது பேரனான இளவரசர் ஹரி அவர்களையும் அனுசரித்து அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பினை மேலோங்கி நிற்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது பேரன் இளவரசர் ஹரியும் , அவரது மனைவியும் தாம் அரச குடும்பத்துடனான உரிமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது மட்டுமல்ல அமேரிக்காவில் இரச குடும்பத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அளித்த நேர்காணல்கள் அளித்ததையும் உள்வாங்கி அதனை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு தன்னுடைய மதிப்பை உலகளாவிய ரீதியில் உயர்த்திக் கொண்டார்.

    இப்படியாக நேற்று 08.09.2022 தனது பூவுடலை நீத்து வானுலகம் எய்திய மகாராணியார் தனது பிரத்தியேக வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை தனது தேச சேவைக்கு எவ்வித பங்கமும் ஏற்படா வகையில் பணியாற்றியதே இவரின் அதியுன்னத பண்பாகக் கணிக்கப்படுகிறது.

    இதுவரை இவர் தனது 70 ஆண்டுகால முடியாட்சியில் 15 இங்கிலாந்துப் பிரதமர்களைக் கண்டு அவர்களைச் சம்பிரதாயபூர்வமாக நியமித்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் எடுத்துப் பார்த்தோமானால் இதுவரை 170 நபர்களைப் பிரதமராகப் பார்த்திருக்கிறார், இவர் மகாராணியாகியது செய்த முதலாவது பிரதமர் நியமனம் நான் பிறந்த மண்ணாகிய அப்போதைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆவார். இவர் செய்த கடைசிப் பிரதமர் நியமனம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களாவார்.

    இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாக மட்டுமல்லாமல் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இவர் ஆற்றி வந்த கடமைகள் எண்ணிலடங்கா. இதுவரை சுமார் 600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கெளரவ தலைவராக பணியாற்றிய இவரது சேவை அளப்பரியது.

    தன்னுடைய தலைமையின் கீழுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பிரஜைகளாகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார்.

    இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் முதல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சார் வின்சென்ட் சார்ச்சில் அவர்கள். இவர் பிறந்தது 1874ம் ஆண்டு. இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் கடைசிப் பிரதமராக இருப்பவர் திருமதி லிஸ் ட்ரஸ். இவர் பிறந்தது 1975ம் ஆண்டு. ஆக மொத்தம் மகாரணியாரின் ஆட்சிக் காலத்தில் இவர் கண்ட பிரதமர்களின் வயது இடைவெளி 100 வருடங்களாகும். இதுவோர் உலக சாதனை என்றால் மிகையில்லை.

    இத்தனை பிரதமர்களையும், இத்தனை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்த மகாராணியாரின் பழகும் தன்மையில் மட்டும் எதுவித மாற்றங்களுமேயில்லை, சமூக, விஞ்ஞான, சமய மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்தும் மகாராணியாரோ மனிதத்துவம் மீதும், இறையின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழக்காமல் இருந்ததே அவரது இந்த நன்மதிப்பின் முக்கிய காரணமாகிறது.

    என்றுமே நாட்டின் அரசியல் மாற்றங்கள் மீதோ அன்றி அரசியல்வாதிகள் மீதோ எதுவிதமான சொந்தக் கருத்துக்களையும் இவர் திணிப்பதேயில்லை எப்போதுமே தனது சொந்தக் கருத்து எதுவாயிருந்தாலும் அரசியலில் நடுநிலைமையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.

    தன்னுடைய அந்திம காலம் வரை தனது நாட்டுக்கான சேவையை செய்து கொண்டேயிருந்தார் என்பதே இவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகிறது. வியாழக்கிழமை 08.09.2022 அன்று மறைந்த மகாராணியார் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதாவது 06.09.2022 அன்று முன்னால் பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது இராஜினாமாவை ஏற்றதோடு புதிய பிரதமர் திருமதி லிஸ் ட்ரஸ் அவர்களை சம்பிரதாயபூர்வமாக பிரமராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றுவரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மகாரணி (The Queen) என்று சொன்னால் அனைவரின் நினைவிலும் மேலோங்கி நிற்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஒருவரே. இது அவர் மகாராணியார் எனும் சொல்லுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மதிப்பு என்றே எடுத்துக் கொள்வோம்.

    மறைந்த மதிப்பிற்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செய்வதோடு அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்கள் தன்னுடைய தாயாரின் பாதையில் ஒரு வெற்றியான அரசராகச் செயல்பட எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். இங்கிலாந்துப் பிரஜைகளில் ஒருவனாக சக பிரஜைகளோடு எனது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 54

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 54

    -மேகலா இராமமூர்த்தி

    மூக்கையும் காதுகளையும் சுக்கிரீவனிடம் இழந்த கும்பகருணன் கடுங்கோபத்தோடு போர்புரியத் தொடங்கினான். தன் கேடகத்தை எடுத்து வீசினான்; அது வானிலுள்ள விண்மீன்களைக் கீழே உதிர்த்தது.

    கும்பகருணனின் போராற்றல் கண்டு அஞ்சிய சாம்பன் இராமனைப் பார்த்து, “இது நமக்கு மிகவும் நெருக்கடியான தருணம்; இப்போது நீ இவனைத் தடுத்துப் போர் புரியாவிட்டால் குரக்குச் சேனையை முற்றாய் அரக்கர் படை ஒடுக்க வழிவகுத்தவனாவாய்; எனவே போரிடுக!” எனத் தூண்டினான்.

    அதுகேட்டுக் கும்பனுக்கு நேரெதிரே வந்த இராமன், தன் அம்பு மழையால் கும்பனின் கையிலிருந்த கேடகம், வாள், கவசம் என அனைத்தையும் அறுத்தெறிந்தான்; இராவணன் அனுப்பிய படை அப்போது கும்பகருணனின் உதவிக்கு வந்தது. அவற்றையும் அழித்தொழித்த இராமன், தனியே நின்ற கும்பகருணனை நோக்கி,

    ”படைக்கலங்களோடு எதிர்க்கவல்ல பெருந்துணையான படைகளை இழந்தாய்; தன்னந்தனியனாய் எதிர்நிற்கின்றாய்; நீதிநெறி தவறாத வீடணனோடு பிறந்தனை ஆதலின் உன் உயிரை உனக்குத் தருவேன்; இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய்விடுகிறாயா? பின்பு மீண்டும் வருகிறாயா? அல்லது போர்செய்து இப்போதே இறந்துபடுகிறாயா? உனக்குப் பொருந்தியதை ஆய்ந்து சொல்லுக!” என்றான்.

    ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை
    எதிர்ஒரு தனி நின்றாய்
    நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்
    நின்உயிர் நினக்கு ஈவென்
    போதியோ பின்றை வருதியோ அன்றுஎனின்
    போர் புரிந்து இப்போதே
    சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி
    சமைவுறத் தெரிந்து அம்மா.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7594)

    தன்னோடு போரிட்டுத் தோற்ற இராவணனுக்கு, ”இன்றுபோய் நாளை வா!” என்று வாய்ப்புக் கொடுத்ததைப் போலவே கும்பகருணனுக்கும் ”போய் வா!” என்று வாய்ப்பளிக்கின்றான் இராமன். முன்னவனுக்கு மதிப்புக்குரிய அரசன் என்ற முறையிலும், பின்னவனுக்கு அறநெறி வழுவா வீடணனின் அண்ணன் என்ற முறையிலும் இவ்வாய்ப்புகள் இராமனால் வழங்கப்படுகின்றன; இராவணன் அதனையேற்று வீரத்தைக் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்; ஆனால், கும்பகருணன் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

    அவன் இராமனைப் பார்த்து, ”அழிவற்றவனே! எங்களால் தேவர்கள் பெருமை இழந்தார்கள்; அவ்வகையான பெருமித நிலைநோக்கி, தீண்டி வருத்தும் அணங்கையொத்த சீதை பிறர் மனைவி அவளைக் கைப்பற்றலாகாது எனத் தடுத்தேன்; அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதுகுறித்துத் தொடர்ந்து பேசும் வாக்கை இழந்தேன்; இப்போதோ உங்களால் என் செவியொடு மூக்கை இழந்தேன்; இத்தகு அவமானத்திற்குப் பிறகும் நான் இலங்கை நகருக்குத் திரும்புவது எங்ஙனம்? ஆதலால் போரிட்டு ஆவி துறந்தாலும் துறப்பேன்; நகருக்குத் திரும்பேன்” என்று மானவீரனாய் முழங்கிய கும்பகருணன், இராமன்மீது ஒரு குன்றைப் பெயர்த்து வீசினான்; இராமன் அதனைத் தன் அம்புகளால் தூளாக்கினான். எனினும், கும்பகருணன் மார்பிலிருந்த சங்கரன் ஈந்த கவசத்தை இராமனால் உடைக்க முடியவில்லை.

    சங்கரன் கவசத்தை அவனது படையாலேயே வெல்லவேண்டும் என்பதை உணர்ந்த இராமன், கும்பகருணனின் சிவ கவசத்தைத் தன்னிடமிருந்த பாசுபதக் கணையால் வீழ்த்தினான்.

    தொடர்போரில் இராமன் கும்பகருணனின் வலக்கையை வாளோடு அறுத்து எறிந்தான்; அறுத்து வீழ்த்தப்பட்ட அக்கையை இடக்கையில் எடுத்துக்கொண்டு அதனால் வானர சேனையை அடித்துக் கொன்றழித்தான் அந்த வீரன்! இன்றே வானர குலம் முற்றாய் எமனுலகு எய்திடுமோ எனும் அச்சத்தில் வானரர்களும் வானவர்களும் கும்பகருணனைப் பார்த்திருக்க, தன் அம்பால் அவனுடைய இடக்கையையும் வெட்டிக் கடலில் வீழ்த்தினான் இராமன்.

    தோள்வளையுடன் கடலில் வீழ்ந்த கும்பகருணனின் கையானது, பாற்கடலில் நடப்பட்டு, வாசுகி எனும் பாம்பு சுற்றிய மந்தரமலைபோல் தோற்றமளித்தது. அப்போதும் கும்பகருணனின் போர்வேகம் குறையவில்லை. அடுத்து இராமன் அவனுடைய வலக் காலை வெட்டி எறிய, அவன் தன் இடக் காலால் நொண்டிக்கொண்டு போரிட்டான். இடக் காலையும் இராகவன் தன் கணையால் துணிக்கவே, கைகளும் கால்களும் இழந்த நிலையிலும் அயராத கும்பகருணன், தீயினால் செய்யப்பட்டதுபோல், சினத்தினால் சிவந்த கண்களை உடையவனாய் தன் சிகையிலிருந்து கிளம்பிய தீயினால் திசைகளெல்லாம் கருக, மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை நாவினால் வானத்தைத் தீண்டுமளவு வளைத்து, பேய்கள் ஆரவாரிக்கும் பெரிய போர்க்களம் எரிந்து விழுமாறு பிலம்போன்ற தன் வாயைத் திறந்து நெடுந்தொலைவு வீசியெறிந்தான். அச்செயல்கண்டு வியந்த இராமனும் தன் மலர்க் கரங்களில் நடுக்கம் கொண்டான்” என்று கும்பகருணனின் மாவீரத்தை விதந்தோதுகின்றார் கம்பர்.

    தீயினால் செய்த கண்ணுடையான் நெடும்
    சிகையினால் திசை தீய
    வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால்
    விசும்புற வளைத்து ஏந்தி
    பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ
    பிலம் திறந்தது போலும்
    வாயினால் செல வீசினன் வள்ளலும்
    மலர்க் கரம் விதிர்ப்புற்றான்.
    (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7621)

    ஆனால், கை கால்களை இழந்துவிட்ட நிலையில் கும்பகருணனால் நெடுநேரம் போரிட இயலவில்லை. அவன் தன்னெதிர் நின்ற இராமனின் வில்லாற்றலை மனத்துள்ளே புகழ்ந்து, ஆயிரம் இராவணர்கள் வந்தாலும் இராமனை எதிர்க்கும் வலிமையற்றவர்களே என்று எண்ணியவனாய், தன்னால் இனி அண்ணனுக்கு உதவ இயலாத நிலையையும், இராவணன் இனி உயிர்பிழைத்து வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பதனையும் உணர்ந்து வருந்தினான்.

    ”அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறள்மொழிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவன் கும்பகருணன் என்பதை அண்ணனுக்காகப் போரிட்டு அனைத்து உடலுறுப்புகளையும் இழந்த நிலையிலும் அண்ணனைக் காக்க இயலவில்லையே என்று அவன் வருந்துவதன் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.

    தன் இறுதி உறுதியாகிவிட்டதை உணர்ந்த கும்பகருணன், இராமனை நோக்கிச் சிலவற்றை வரமாய் வேண்டுகின்றான்…

    ”இராமா! என் தம்பியாகிய வீடணன் நீதிமான்; தான் பிறந்த சாதியால் வந்த சிறுநெறி அறியாதவன்; நற்குணமில்லாத இராவணன் அவனைத் தம்பியென்றும் பாராமல் கொல்ல முயல்வான்; ஆதலால், அவனை நான் மீண்டும் உன்னிடம் அடைக்கலப்படுத்துகின்றேன். நீயோ உன் தம்பியோ அனுமனோ எப்போதும் வீடணனுடன் இருந்து அவனைக் காக்கவேண்டும் என்று உன்னை வேண்டுகின்றேன்.

    மற்றொன்றையும் நீ எனக்குச் செய்யவேண்டும்! முனிவர்களும் தேவர்களும் என் முகத்தை மூக்கில்லா முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; அவர்கள் அவ்வாறு நோக்காமல் உன் அம்பினால் என் கழுத்தை அறுத்து நீக்குவாய்; அறுத்து நீக்கிய பிறகு கழுத்தோடு கூடிய தலையைக் கரிய கடலுக்குள்ளே போக்குவாய்; இவையே நான் உன்னை வேண்டுவது” என்றான்.

    மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும்
    நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என் கழுத்தைப்

    நீக்குவாய் நீக்கியபின் நெடுந் தலையைக் கருங் கடலுள்
    போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான். (கம்ப: கும்பகருணன் வதைப் படலம் – 7628)

    இறந்தபின்பும்கூடத் தன்னை யாரும் எள்ளி நகையாடிடக் கூடாது எனும் கும்பகருணனின் மானவுணர்ச்சி நம்மை மலைக்க வைக்கின்றது.

    கும்பகருணனின் வேண்டுகோளின்படியே அவன் சிரத்தை அறுத்து நடுக்கடலுள் வீழ்த்தினான் இராமன். கும்பனின் குன்றனைய முகம் கருங்கடலுள் சென்று மறைந்தது.

    தன்னலம் என்பது சிறிதுமற்றவனாய், அண்ணன் தம்பி எனும் எதிரெதிர் குணங்கள் கொண்டோரிடமும் ஒத்த பாசத்தை உடையவனாய், செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதன் பொருட்டு, தனக்கு உடன்பாடில்லாத செயலிலும், அண்ணனுக்காகப் போரிட்டு மடியும் மாவீரனாய், உறுப்புகள் குறைவுற்றபின் வாழாத மானவீரனாய் மிளிர்கின்ற கும்பகருணன், கம்பராமாயணத்தின் மிகச் சிறந்த பாத்திரங்களுள் ஒருவன் என்றால் மிகையில்லை.

    உலகக் காப்பியங்களில் கம்பருடைய கும்பனுக்கு ஒப்பாக ஹோமரின் இலியட் (The Iliad) காப்பியத்தில் வரும் ஹெக்டரையும் (Hector), மகாபாரதத்தின் வீட்டுமரையும் (பீஷ்மர்) நாம் கருதலாம். திராய் (Troy) நகரத்தின் இளவரசன் பாரிஸ், கிரேக்க அரசன் மேனலாசின் (Menelaus) மனைவி ஹெலனை (Helen) அழைத்துக்கொண்டு வந்ததால் கிரேக்கர்களுக்கும் துரோயன்களுக்கும் (Trojans) போர் தொடங்குகின்றது. அப்போரில் கிரேக்கப் படைவீரனான அக்கில்லஸ் (Achilles) கையால் தான் இறப்பது உறுதி என்று அறிந்திருந்தும் தன் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போரிட்டு மடிகின்றான் பாரிஸின் அண்ணனான ஹெக்டர்.

    பிதாமகர் வீட்டுமரோ தமக்கு முடிவுவரப் போவது தெரிந்திருந்தும் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகத் துரியோதன் பக்கம்நின்று போர்புரிந்து இறக்கின்றார். கும்பகருணனும் இம்மாவீரர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவன்.

    கம்பரின் இராமாயணம் வான்மீகத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பன்று; தன் தேவைக்கேற்பப் பாத்திரங்களைப் புதுக்கிப் படைத்துள்ளார் கம்பர் என்பதைப் பல இடங்களில் கண்டோம். வான்மீகருக்கு மாறாக எதிர்நிலைப் பாத்திரங்களான (antagonists) வாலி, இராவணன், கும்பகருணன், வீடணன் எனப் பலரையும் தம் காப்பியத்தில் அவர் உயர்த்திக் காட்டியிருப்பதைக் காண்கையில் அரக்கர்பக்கம் கம்பருக்கு இரக்கமும் ஈடுபாடும் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இங்கே போர்க்களத்தில் கும்பகருணன் இறந்துபட, அதனையறியாத இராவணன் அங்கே அரண்மனையில் கழிகாமம் சிறிதும் குறையாதவனாய்ச் சீதையை அடைய வேறு ஏதேனும் வழியிருக்கின்றதா என்று வினவிக் கொண்டிருந்தான் தன் அமைச்சன் மகோதரனை.

    ”அதற்கென்ன? மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கனைச் சீதையின் தந்தை சனகனைப் போல் உருமாற்றி, அந்த மாயச் சனகனைக் கட்டிச் சீதைமுன் நிறுத்தி, இராவணனைச் சேருமாறு அவளிடம் அவனைச் சொல்லச் சொன்னால், தந்தைசொல் கேட்டு, அவளே உன் விருப்பத்துக்கு உடன்படுவாள்” என்று யோசனை கூறினான் மகோதரன். 

    அதுகேட்டு நனிமகிழ்ந்த இராவணன், அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டிவிட்டுச் சீதையை மருட்டும் பொருட்டு அசோகவனத்துக்குப் புறப்பட்டான். அங்கே சீதையின் எதிரில் பொன்னாசனத்தில் அமர்ந்தவன், அவளைத் தன்னாசைக்கு இணங்கும்படிக் கெஞ்சுகின்றான்; அவள் அதனை மறுக்கவே, ”இராமனைக் கொல்வதோடன்றி அயோத்தியிலுள்ளோரையும் மிதிலையிலுள்ள உன் தந்தையையும் பற்றிக்கொண்டுவர படைகளைச் செலுத்தியுள்ளேன்” என்று மிரட்டுகின்றான்.

    அவ்வேளையில் மகோதரன் தன் திட்டப்படி மருத்தன் எனும் அரக்கனை சனகன்போல் உருமாற்றி இராவணன் முன்பு கொண்டுவந்து நிறுத்துகின்றான்; அந்த மாயச் சனகன் இராவணனை வணங்குகின்றான். அதுகண்டு துணுக்குற்ற சீதை, தாய்ப்பறவை நெருப்பில் வீழ்வதுகண்ட குஞ்சுப் பறவைபோல் மனம் குமைந்தாள்.

    ”எந்தையே! என்னைப் பெற்றதால் உனக்கு இந்த நிலை வந்துவிட்டதே? என்னைச் சிறையிலிருந்து மீட்பதற்கு ஒருவரையும் காணேன்; என் பொருட்டுச் சிறைப்பட்டுள்ள உன்னை யார் மீட்கப் போகின்றார்?” என்று அரற்றினாள்.

    அவளின் துயர்கண்ட இராவணன். ”அழகியே! என்னை வருத்தும் இந்தக் காமநோயை நீ நீக்குவாய் ஆயின், மூவுலகையும் ஆளுகின்ற நான் அவை அனைத்தையும் உன் தந்தையாகிய சனகனுக்கு ஈந்துவிட்டு, உன்னைத் தொழுது வாழ்வேன்” என்று மாயா சனகன் முன்னிலையில் சீதையை வேண்ட, அவள் எரிமலைபோல் கனன்று அவனுக்குத் தன் மறுப்பைத் தெரிவிக்கின்றாள். சினங்கொண்ட இராவணன் அவளருகே செல்ல, அவனைத் தடுத்த மகோதரன் ”சனகன் வேண்டினால் சீதை உன் விருப்புக்கு மறுப்பின்றி இணங்குவாள்” என்று யோசனை சொல்கின்றான்.

    கட்டுண்டு தரையில் கிடந்த மாயா சனகனும் இராவணன் விருப்பத்துக்கு இணங்கித் தன் குலத்தைக் காப்பாற்றுமாறு சீதையின் கால்களில் வீழ்ந்து கெஞ்சுகின்றான்.

    முறையற்ற வாழ்விற்குத் தன்னை ஆட்படுத்த விரும்பிய அந்த மாயா சனகனை உண்மையான சனகன் என்றெண்ணிக் கடுங்கோபமுற்ற சீதை, ”நாயைவிடக் கீழ்மைப்பட்டவனே! வில்லேந்திய இராமன் அல்லாமல், என் பக்கத்தில் வந்த வேற்று ஆடவர்கள் விளக்கில் வீழ்ந்த விட்டில்பூச்சிபோல் உயிரிழப்பர் அல்லவா? விலங்குகளுக்கு அரசனாகும் தகுதிகொண்ட ஆண் சிங்கத்தோடு வாழ்ந்த ஒரு பெண் சிங்கம், தூய்மையற்ற இடத்தில் அழுக்கைத் தேடித்தின்னும் நரியோடு கூடிவாழ்வது உண்டோ?” என்று கர்ச்சித்தாள்.

    வரிசிலை ஒருவன் அல்லால் மைந்தர் என்மருங்கு வந்தார்
    எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
    அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்
    நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே.
    (கம்ப: மாயா சனகப் படலம் – 7699)

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share