கட்டுரைகள்

விநாயகச் சதுர்த்திக்கு உதவும் வியாபாரிகள்

தமிழ்த்தேனீ விநாயகச் சதுர்த்தி என்றாலே என் நினைவுக்கு வருவது, நாம் விநாயகச் சதுர்த்தி கொண்டாட உதவி செய்யும் வியாபாரிகள்தான். ஒரு வியாபாரி களிமண்ணை எடுத்து வந்து கற்கள், வேண்டாத கழிவுகள் போன்றவற்றை நீக்கிச் சுத்தம் செய்து, பிள்ளையார் உருவம் செய்ய  அச்சுகள் தயாரித்து, அந்தக் களிமண்ணால் பிள்ளையார் சிலைகளைச் செய்து, வாங்குபவர்களின் மனநிலையை நன்கு கவனித்து, அவர்களுக்கு விநாயகரின் உருவம் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி பார்த்துப் பார்த்துக் கவனமாகச் செய்து, குந்து மணியால் கண்களை அமைத்து, ஒரு தெய்வீகக் களையை அந்தப் பிள்ளையாருக்கு ...

Read More »

உழைப்பு தானம், உடனடித் தேவை

அ.மகபூப் பாட்சா (மேலாண்மை அறங்காவலர், சோக்கோ அறக்கட்டளை, மதுரை) புட்டுக்கு மண் சுமந்த வரலாறு புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தைப் பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை வெறும் சடங்காக மட்டும் பாவித்து, திருவிளையாடல் காட்சிகளைக் கண்டு ரசித்துவிட்டு அலைகின்றோம். புராண காலத்தில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது மதுரையைக் காப்பாற்ற அன்றைய பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஒருவர் ஆற்றுக் கரையைப் பலப்படுத்தவும், அரிப்பைத் தடுக்கவும் வருமாறு உத்தரவிட்டதாகவும், ...

Read More »

நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும்!

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாங்கள் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது? நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக்கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல்தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன. ரமழான் மாதம் குறித்து அந்நிய மத நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான ...

Read More »

உறியடியும் வழுக்கு மரமும்!

காயத்ரி பாலசுப்ரமணியன் கண்ணன் பிறந்த நாள் கோகுலாஷ்டமி அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல கோயில்களில் உறியடி உற்சவமும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றன. உறியடி உற்சவம், வழுக்கு மரம் இவை இரண்டுமே மனித வாழ்வின் தத்துவத்தை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றன. உறியடி உற்சவத்தில், உயரத்தில், மண் பானையில் பரிசுப் பொருள் கட்டப்பட்டிருக்கும். அதனை அடிக்க ஆசைப்படுபவர்களின் கண்ணும் கட்டப்பட்டிருக்கும். விளையாட்டில் பங்கேற்பவர்களில் பலரும் அங்கும் இங்கும் அலைமோதி, இறுதியில் ஒருவர் மட்டுமே பானையை உடைத்துப் பரிசைப் பெறுவார். பானை என்பது பரம்பொருள். எட்ட ...

Read More »

வேர்களுக்கு ஒரு விழா!

ஷைலஜா ஆசிரியர் தினம் வருவதற்கு முன்பே சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’ என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7 பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு! இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தைச் சாதித்துள்ளார்கள். ஆசிரியர்களைக் கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ...

Read More »

வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்

தமிழ்த்தேனீ காசி என்பது இந்துக்களின் புனித ஸ்தலம். இப்படிப்பட்ட காசியின் புனித வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண கரப்பான் பூச்சி  என்பதே மிகவும் விசேஷமான செய்தி. இந்தக் கரப்பான் பூச்சியைச் சாதாரணக் கரப்பான் பூச்சி என்று நான் சொன்னதே தவறு. காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும் கடந்து, எவராலும் அழிக்க முடியாத அளவுக்கு எதிர்த்து நின்று, இன்று வரை தன் இனத்தை  வெற்றிகரமாகப் பெருக்கிக்கொண்டிருக்கும் சிரஞ்சீவி இந்தக் கரப்பான் பூச்சிகள், மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள் என்பதை நான் பயணித்த பெங்களூர் ...

Read More »

இன்றோ திருவாடிப்பூரம்!

ஷைலஜா இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து, ஆழ்வார் திருமகளா ராய்! உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் இப்படிக் கொண்டாடுகிறார் திருமால் தனது  ஒரு அவதாரத்தின் போது யாரைத் தன் தகப்பனாராக வரிக்கலாம் என யோசித்தாராம். தான் வணங்கும்படியாக உயர்ந்தவர்  யாரென்று கண்டுபிடித்துத் தசரதனைப் பிடித்தாராம். அதுமாதிரி பூமிதேவி அவதரிக்கு முன்பாக யாரைத் தன் தந்தையாக ஏற்கலாம் என யோசித்து  அதற்குச் சகல விதத்திலும் சரியானவர் பெரியாழ்வாரே எனத் ...

Read More »

உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு

— ஜெயந்தி சங்கர் காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பெயர்த்தி, காரைக்குடி திருமதி ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் ‘வைணிகா மியூஸிக்’ என்ற இசைப் பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு முக்கியத்துவமளித்து மிகச் சீரிய முறையில் நடத்தி வரும் இவரின் மாணவிகளுள் ஒருவர் செல்வி அபிராமி. வி.கௌதம். 26 ஜூன் 2010 அன்று மாலையில் ரா·பிள்ஸ் ஹோட்டேல் ஜூப்ளி ஹாலில் நடந்தேறிய அபிராமியின் வீணை அரங்கேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் வீணை ஈ.காயத்ரி. பைரவி அடதாள வர்ணமான ...

Read More »