கட்டுரைகள்

நலம்… நலமறிய ஆவல்…. (147)

-நிர்மலா ராகவன் மதிப்பீடுகள் `எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’ `இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’ ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்! அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி! பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம். ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்? ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை   குறள் 131: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம். குறள் 132: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான். குறள் 133: ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் ...

Read More »

40 குடும்பத்து 105 அடிமைகள் பற்றிய கல்வெட்டு – கொறுக்கை வீரட்டேசுவரர் கோயில்

-சேஷாத்ரி ஸ்ரீதரன் நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொறுக்கை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள வீரட்டேசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்கு சுவர் கல்வெட்டு. இது மூன்றாம் இராசராசனின் 19 ஆவதுஆட்சி ஆண்டில் (கி.பி. 1235) வெட்டிய கல்வெட்டு என்பது எழுதமைதியால் கணிக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் குடும்பம் குடும்பமாக அடிமைகளாக கோவிலுக்கும் தனிஆள்களுக்கும் விற்றுக் கொண்ட செய்தி உள்ளது. இவர்களுக்குள்ள உறவுமுறையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடன்வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் ஓட்டாண்டி (திவால்) ஆகி அடிமைசெய்வாராக ஆனார்களா? அல்லது சாதி நீக்கி ஊராரால் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 13

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 13 – அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அடக்கம் ஒருத்தன அவங்காலத்துக்குப் பொறவு தேவர் உலகத்துல கொண்டு சேக்கும். அடங்காம வாழுதது அவனோட வாழ்க்கைய பொல்லாத இருட்டு போல ஆக்கிவிட்டுரும். குறள் 122: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு அடக்கத்த செல்வமா எண்ணி காக்கணும். அதக் காட்டிலும் பெரிய செல்வம்னு வேறெதுவும் இல்ல. குறள் 123: செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின் ...

Read More »

சேக்கிழார் பா நயம் – 25

 திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  ...

Read More »

கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?

நிர்மலா ராகவன் நலம், நலமறிய ஆவல் – 146 வாழ்க்கைப் பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று படிப்படியாகக் கடந்தபின், `இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என்ற விரக்தி பிறக்கிறது பலருக்கும். அவர்களின் போக்கிற்கு நிச்சயம் வயது மட்டும் காரணமாக இருக்க முடியாது. உடல் முதுமை அடைவதற்கு முன்பே மனம் தளர்ந்துவிட, நடப்பதே ஒரு பெரிய காரியம் என்பதுபோல் இருப்பவர்களைப் பார்த்தால், `நாமும் ஒரு வயதுக்குமேல் அப்படி ஆகிவிடுவோமோ!’ என்ற அச்சம் ஏற்படுகிறது. `அவள் எவ்வளவு தைரியசாலி!’ என்று வெகு சிலரைப் பார்த்து ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

– மீனாட்சி பாலகணேஷ்   குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2                                    (7. அம்புலிப் பருவம்) இத்துணை கூறியும் எதற்கும் அசைந்து கொடாத சந்திரனிடம் சலிப்போடு,”பார் அம்புலியே! இவன், என் குழந்தையாகிய இச்சிறுவன், கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக் கூறுகிறாள் தாய். ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 12

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 12 – நடுவுநிலைமை   குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் சண்டக்காரங்க, அல்லசல் மனுசங்க, சேக்காளிங்க னு பிரிச்சி பாத்து பார பட்சம் பாக்காம நியாயமா இருக்குதது தான் நல்லது செய்யுத நடுவுநிலைமங்குத தகுதி. குறள் 112: செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து நடுவுநிலைமை உள்ளவனோட செல்வத்துக்கு அழிவுங்கது கெடையாது. அது அவனோட அடுத்தடுத்த தல முறைக்கும் நன்மைய செய்யும். . குறள் 113: நன்றே தரினும் நடுவிகந்தாம் ...

Read More »

குழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1

-மீனாட்சி பாலகணேஷ்  (7. அம்புலிப்பருவம்)  “என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து என்மகன் கோவிந்தன் செய்யும் இக்கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக, வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகத் தாய் கூறுவதாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப் பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே ...

Read More »

சேக்கிழார் பா நயம் – 24

-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது   ஒரு மூத்த அந்தணர் வடிவு  கொண்டு சுந்தரர் திருமணம் நடைபெறும் இடத்தில் தோன்றினார்!  அவ்வாறு தோன்றும்  பொழுது, மேலே மிகவுயர்ந்து , கீழே மிகவும் தாழ்ந்து  பிரமனும் திருமாலும் மிக முயன்றும் அடி  முடி  தேடவரிய,  மிகப்பெரிய அனல் உருவத்துடன் வந்த சிவபிரான்,எளிய அந்தக் கோலத்தில் தம்மை ஒடுக்கிக் கொண்டு தோன்றினார். மிகப்பெரிய படைப்புக் கடவுளும், காக்கும் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 11

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 11 – செய் நன்றியறிதல்   குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது நாம எந்த ஒதவியும் செய்யாத போதும் ஒருத்தங்க நமக்கு ஒதவியா இருந்தாங்கன்னா அதுக்கு பதிலா வானத்தையும், பூமியையும் குடுத்தாக் கூட சமமா இருக்காது. குறள் 102: காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது நமக்கு நெருக்கடியா இருக்கும்போது ஒருத்தங்க செஞ்ச ஒதவி சின்னதா இருந்தாலும் நம்மளோட நெருக்கடிய நெனச்சோம்னா அந்த ஒதவி பூமிய விட ...

Read More »

(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்            நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம் யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம். குறள் 92: அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு  ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது. குறள் 93: முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 9

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி  குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான். குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று விருந்தாளி வீட்டுக்கு வெளிய இருக்கும்போது உள்ள ஒக்காந்து தான் மட்டும் தனியா சாப்பிடுதது சாவாம இருக்கதுக்காக சாப்பிடுத அமிழ்தம் னாலும் அது நல்ல பழக்கமில்ல. குறள் 83: ...

Read More »

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 8

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை   குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா.  தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம். குறள் 72: அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு நேசம் இல்லாதவங்க எல்லாப் பொருளும் தனக்கு தான் சொந்தம்னு நெனைப்பாங்க. நேசம் உள்ளவங்களோ பொருள் மட்டுமில்லாம தங்களோட ஒடம்பும் மத்தவங்களுக்குதான் ...

Read More »