கட்டுரைகள்

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 21 (புதல்வன்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகப்பாடல்களில் நேரில் இடம்பெறும்; வயதில் சிறிய பாத்திரம் புதல்வனாவான். அவன் பேசுவதும் கேட்பதும் நாடக வழக்கில் எங்கும் இல்லை. செவிலி, தலைவி,  தலைவன், காதற்பரத்தை, தோழி அனைவரது கூற்றிலும் இன்பமிகு இல்லறத்தின் அடையாளம் ஆகின்ற  பாத்திரமாக அமைகிறான். செவிலி ஏத்தும் புதல்வன் செவிலிகூற்றுப் பத்தின் பாடல்கள் புதல்வனால் தலைவியின் இல்லறம் பெருமை பெறுவது பற்றிப் பேசுகின்றன. கணவனுடனும் தன் மகனுடனும் சேர்ந்து தலைவி துயில்கின்ற நிலையையும்; ...

Read More »

குறளின் கதிர்களாய்…(326)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(326) அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவிவியான் கேடும் நினைக்கப் படும். -திருக்குறள்  – 169 (அழுக்காறாமை) புதுக் கவிதையில்... பொறாமை நிறைந்த நெஞ்சம் கொண்டவனிடம் பெருஞ் செல்வமும், பொறாமை குணமற்ற நல்லவனிடம் வறுமையும் வருவது அரிது.. அவ்வாறு வந்தால், அது எவ்வாறு நேர்ந்ததென்று காரணம் ஆராயப்படும்…! குறும்பாவில்... அழுக்காறுடையோனிடம் அதிக செல்வமும், அதில்லா நல்லவனிடம் வாட்டும் வறுமையுமிருந்தால் அதன் காரணம் ஆராய்ந்தறியத்தக்தாகும்…! மரபுக் கவிதையில்... அடுத்தவர் மீதே அழுக்காறை அகத்தே கொண்ட மனிதனிடம் எடுத்திட அளவிலா செல்வமது எப்படி வந்து ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 18

-மேகலா இராமமூர்த்தி தங்கையின் அவலநிலை கண்ட தமையன் இராவணன், சினத்தால் உதடுகளை அதுக்கினான்; பிலமொத்த அவன் பத்து வாய்களிலிருந்தும் வெம்புகை வெளிப்பட, மீசைகள் பொசுங்கிவிடும்படிப் பெருமூச்சுக் கிளம்ப, “யாருடைய செயல் இது?” என்றான் இடிமுழக்கக் குரலில். மடித்த பில வாய்கள்தொறும்      வந்து புகை முந்த துடித்த தொடர் மீசைகள்      சுறுக்கொள உயிர்ப்ப கடித்த கதிர் வாள் எயிறு      மின் கஞல மேகத்து இடித்த உரும் ஒத்து உரறி     யாவர் செயல் என்றான்.  (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3212) ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 15

தி. இரா. மீனா              அத்தியாயம் பத்தொன்பது ஜனகர் தன் அனுபவ ஞானத்தால் விகற்ப நினைவனைத்தையும் நீக்கி, சுயமஹிமையில் நிலைத்துள்ள தனக்கு அதைத் தவிர வேறெதுவும் எண்ணத்தில் இல்லை  என சுவானுபவம் உரைத்தல் இவ்வத்தியாய மாகும். 1. தத்துவ ஞான அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு மனதிலிருந்து பலவகையான ஆலோசனைகளாகிய முட்களை வெளியே எடுத்தேன். 2. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு அறம், பொருள், இன்பங்களேது? துவைதமேது? அத்வைதமேது? 3. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு இறந்த, நிகழ் எதிர் காலங்களேது? ...

Read More »

உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் – புக்கர் டீ வாஷிங்டன்

-மேகலா இராமமூர்த்தி சிறந்த கல்வியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், நாவன்மை மிக்க சொற்பொழிவாளராகவும், அனைத்திற்கும் மேலாகக் கருப்பின மக்களுக்காக அமெரிக்காவிலுள்ள அலபாமாவில் டஸ்கீகீ  பல்கலைக்கழகத்தை (Tuskegee University, Alabama) நிறுவிய அறிஞராகவும் விளங்குபவர் புக்கர் டீ வாஷிங்டன் (Booker T. Washington) எனும் மாமனிதர். 1856இல், ஆப்பிரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் மகனாக வெர்ஜீனியாவில் பிறந்தார் புக்கர். அக்காலக்கட்டம், ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமைகளாய் அல்லலுற்ற காலக்கட்டமாகும். ஒரு வசதியான வெள்ளையர் குடும்பத்துக்குச் சமையல்வேலைகள் செய்து பிழைத்துவந்தார் புக்கரின் தாயார். புக்கரோடு பிறந்தவர்கள் இருவர். அவ்விருவரோடும் ...

Read More »

ஒருநாள் மனைவி – குறுநாவல் பற்றிய ஒரு திறனாய்வுப் பார்வை

ச.சுப்பிரமணியன் முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் தமிழியல் உலகத்தில் பெருமளவு புழங்கிய தமிழ்ச்சொற்களில் ‘பெண்ணியம்’ என்பதும் ஒன்று. ‘புரட்சி’ என்பதையும் ‘புதுக்கவிதை’ என்பதையும் இதனோடு இணைத்துக்கொள்ளலாம். இந்த மூன்று சொற்களும் ஒரு நூற்றாண்டு கடந்து போய்விட்ட இன்றையக் காலக்கட்டத்தில் நீர்த்துப்போன சுண்ணாம்பாகவே காட்சியளிக்கின்றன என்பதை நடுநிலையாளர் உணர்வர். ஒப்புக்கொள்வர். காரணம், உள்ளத் தூய்மையோடு, மன உறுதியோடு, கொள்கைப் பிடிப்போடு முன்னெடுக்கும் எதுவும் இறுதியில் வெற்றி பெறும். அவ்வாறின்றிப் போலிப் பாராட்டிற்காகவும் வெற்று விளம்பரத்திற்காகவும்  அரசியல் வருவாய்க்காகவும் செய்யப்படுகிறபோது மூலத்தின் நோக்கம் சிதைவுக்கு ஆளாகிறது. தந்தை பெரியாரும் ...

Read More »

பிரியதர்சினி இந்திரா காந்தி

பாஸ்கர் சேஷாத்ரி இந்திரா காந்தியைப் போல ஒரு சர்வாதிகாரத் தலைவரை அன்றைய அளவில் கேள்விப்பட்டிருக்க முடியாது. எழுபதுகளில் துக்ளக் வாசகன் என்ற பெரிய ஈர்ப்பில் இந்திரா காங்கிரஸ் மீது எனக்குப் பெருங்கோபம் இருந்தது. சோவைப் போல பல்லாயிரம் பேர், இந்திராவின் நகைச்சுவைக்கு ஒரு பைசாவை மணிஆர்டர் செய்து அதனை அவர்களின் அலுவலகம் பெற்றுக்கொண்டது, எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. அப்படி அனுப்பியவர்களில் நானும் ஒருவன். அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயப்ரகாஷின் சிறை அடைப்பு, பெர்னாண்டஸ் மீது வழக்கு, சென்சார் அடக்குமுறை (மெட்ராஸ் ஹை கோர்ட் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை தொல்காப்பியம் பார்ப்பான் என்னும் பாத்திரம் கூற்று நிகழ்த்தக்  கூடிய இடங்களை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தொகை இலக்கியங்களில் பார்ப்பான் கூற்று நிகழ்த்தவில்லை. அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான். தொடர்புடைய பின்புலப்பாத்திரங்கள் தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன்,  வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். அனைவரும் பின்புலத்தில் இடம்பெறுகின்றனர்.  சிறுபாத்திரத்தகுதி பெறுபவர்  பார்ப்பனமகனும் ...

Read More »

எட்டுக் கோணல் பண்டிதன் – 14

தி. இரா. மீனா              அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி 71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது? 72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது ? 73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான். 74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற  மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது ...

Read More »

சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

முனைவர் ம. இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாகச் செயல்பட்ட காந்தியவாதி. விமர்சனம் வளர வேண்டும் என்ற எண்ணம் சி.சு.செ மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் “இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது; அதற்கான குணங்கள் வேறு. வாசகப் பெருக்கம் அதற்கு ...

Read More »

நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

தி. விப்ரநாராயணன் (டி. டி. திருமலை அவர்களின் மகன்) ஒரு கட்டடத்தின் வெளியே வெள்ளை வேட்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவும் அணிந்துகொண்டு உயரமான, சிவப்பான, அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர், அலுவலக சாமான்களின் நடுவே அமர்ந்திருந்தார். அந்தத் தெரு வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் அவரை விசாரிக்கிறார்கள். எல்லோருக்கும் சிரித்துக்கொண்டே “அலுவலகத்தைக் காலி செய்யவேண்டுமென்று கட்டடச் சொந்தக்காரர் பல தடவை சொல்லியும் நான் காலி செய்யவில்லை. அதனால்தான் இந்த நிலை” என்று சொன்னார். இப்படி இரண்டு நாட்கள் வெளியிலேயே இருந்தார். பிறகு அவரின் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

-மேகலா இராமமூர்த்தி ”இராமனை எளிய மானுடன் என எண்ணவேண்டா” என்று அகம்பனன் சொன்ன அறிவுரையை அகத்திலே கொள்ளாது புறந்தள்ளினான் கரன். அரக்கர் சேனைக்கும் இராமனுக்கும் போர் மூண்டது. கரனின் படைத்தலைவர்கள் ஆவேசமாகப் போரிட்டு மாண்டனர். அடுத்து முத்தலைக் குரிசிலான திரிசிரனின் படையினர் இராமனை அஞ்சாது எதிர்த்து வெஞ்சமர் புரிந்தனர். அழகிய இறகுகளையுடைய குளவி தன்னிடம் அடைக்கலமாய்ச் சேர்ந்த புழுக்களைத் தன் வடிவமாய்ச் செய்யும் தன்மைபோல அருள்வள்ளலான இராமன், அவ் வஞ்சத்து அரக்கரை வளைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால் அவர்களைத் தேவராக்கினான். அஞ்சிறை ...

Read More »

கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண்,  ஆஸ்திரேலியா விரதம் என்றால் என்ன? பசித்திருப்பது.  தனித்திருப்பது, விழித்திருப்பது. அதே வேளை மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஒரே நோக்கோடு இருப்பது. இரண்டுமே வாழ்வில் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இரண்டுமே பொருந்தும். விரதங்கள் என்று பார்க்கும் பொழுது எங்கள் சமயமானது நாளுக்கான விரதம். வாரத்துக்கான விரதம், மாதத்துக்கான விரதம் என்று வருடம் முழுவதுக்குமே விரதங்கள் பல அமையுமாறு வழி வகுத்து விட்டிருக்கிறது. வருடம் முழுவதும் தெய்வீக சிந்தனையுடன் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை எனலாம். இன்பமும் துன்பமும் கலந்ததுதான் இந்த உலக வாழ்க்கையாகும். நம்முடைய ...

Read More »

உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

சங்கரி சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் முன்னெடுப்பில், UNWINDING and other Contemporary Tamil Short stories என்ற 474 பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்பு 43 சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டதாக 2019 ஜூலை மாதத்தில் எமரால்டு பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப் பெற்றது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன், ச்றிலங்கா ஆகிய 10 நாடுகளிலிருந்து அ. முத்துலிங்கம், இரா. முருகன், மாலன், நாகூர் ரூமி, சித்ரன், சத்யானந்தன், சத்யராஜ்குமார் உள்ளிட்டோரின்  37 படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை  தலைவன் வேண்டும் இடமெங்கும் அவனை அழைத்துச் செல்லும் தேர்ப்பாகன்  அகப்பாடல்களில் நேரில் இடம்  பெறும் பாத்திரம் ஆவான்.  பாகனுக்குக் கூற்று நிகழ்த்தும் தகுதியை அகஇலக்கணம் வழங்கவில்லை ஆயினும்;  அவனிடம் பேசும் பாத்திரங்கள் பலர். பாகன் பேசியதாகப் பிற பாத்திரம் கூறும் ஒரே ஒரு பாடல் உள்ளது. பாகனே வலவன் பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். வேகமாகக் குதிரையைச் செலுத்துவாயாக என்னும் பொருள்பட; “கடுமா கடவுமதி பாக” ...

Read More »