இலக்கியம்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

-மேகலா இராமமூர்த்தி நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான். சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன், ”காவலனே! மானிடக் ...

Read More »

சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

மதுராந்தகன்  (கனவு இலக்கிய வட்டத்திற்காக) திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “அந்நியர்கள்“ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ...

Read More »

நற்றுணையாவது நமச்சிவாயவே

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  ஆஸ்திரேலியா  சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது. பசித்திரு – தனித்திரு – ...

Read More »

படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி பசுமை வயல்கள் காண்போர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்ட, தலைச்சுமையாய் வாழைத் தாறு சுமந்து நடந்துவருகின்றார் பெரியவர் ஒருவர். கவிதைபோல் அமைந்த இந்தக் காட்சியைப் படம்பிடித்திருப்பவர் திரு. சரவணன் தண்டபாணி. இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்! வாழைக் குலையை நாம் ’வாழைத் தார்’ என்றே தவறாகச் சொல்லிப் பழகிவிட்டோம். அதனை ’வாழைத் தாறு’ என்று கூறுவதே சரி. தாறு நாறுவ வாழைகள் தாழையின் சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி நாறு ...

Read More »

பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

ஜோதிர்லதா கிரிஜா ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள். நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே? குடி ...

Read More »

பெண்களின் வித்தக விந்தைகள்

சக்தி சக்திதாசன் என் இனிய அன்பு உள்ளங்களே ! மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு ...

Read More »

பெண்களுக்கும் சமூகநீதி!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  ஆஸ்திரேலியா “பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே. இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்றது என்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த ‘கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமை, பெண்களின் நலன், யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(340)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(340) கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். – திருக்குறள் – 722 (அவை அஞ்சாமை) புதுக் கவிதையில்... கற்றோர் நிறைந்த அவையில் அவர் முன் தாம் கற்றதை அவர் மனத்தில் பதியுமாறு எடுத்துரைக்க வல்லவரே, கல்வி கற்றோருள் நன்கு கற்றவரென மதிக்கப்படுவர்…! குறும்பாவில்... கற்றோர் அவையில் தாம் கற்றவைகளை அவர்கள் மனதுக்கேற்ப சொல்லவல்லாரே கற்றோருள்ளும் மிகக்கற்றவரெனக் கருதப்படுவர்…! மரபுக் கவிதையில்... கற்றோர் பலரும் நிறைந்திருக்கும் கண்ணிய மிக்க அவையதிலே முற்றிலும் அவர்கள் மனம்மகிழ்ந்தே முழுதும் விரும்பிக் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 297

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் சரவணன் தண்டபாணி எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா ...

Read More »

படக்கவிதைப் போட்டி 296இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி புகைப்படக்கலைஞர் திரு. மாரியப்பன் கோவிந்தன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து  தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 296க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியர்! கூடைகளை ஏற்றிக்கொண்டு வேகாத வெயிலில் உடல்நோக வண்டிமிதித்துச் செல்லும் இந்தத் தோழரின் உழைப்பை வந்தனை செய்வோம்; உழைக்காது வீணில் சோம்பியிருப்போரை நிந்தனை செய்வோம்! உழைப்பின் மகத்துவம் சொல்லும் இந்தப் படத்திற்குச் சகத்திலுள்ள கவிஞரெல்லாம் கவியெழுத வாருங்கள்! நற்சிந்தனைகளைத் தாருங்கள்! என்று அன்புபாராட்டி அழைக்கின்றேன். ***** ”சிறுதிவலைகள் பலசேர்ந்து பெருவெள்ளம் ஆவதுபோல் எடைகுறைந்த கூடைகளும் ...

Read More »

செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

-மேகலா இராமமூர்த்தி நம் அன்னைத் தமிழுக்கு தமிழ்நாட்டு அறிஞர்களேயன்றி அயல்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அறிஞர் பலருங்கூட அருந்தொண்டாற்றியிருக்கின்றனர். இராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ், ஜி.யூ.போப் என்று நீளும் இவ்வரிசையில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவெலபில்லும் (Kamil Václav Zvelebil) குறிப்பிடத்தகுந்த ஒருவராவார். அண்மைக் காலம்வரை நம்மிடையே வாழ்ந்துமறைந்த அந்த மொழியியல் அறிஞர், தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பல. அவை குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டில் பிராக் (Prague) மாநகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் ...

Read More »

குறளின் கதிர்களாய்…(339)

செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(339) உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. – திருக்குறள் – 734 (நாடு) புதுக் கவிதையில்... கொடிய பசியும் உடலில் வந்தபின் நீங்கிடா நோய்களும், அழிவைத் தந்திடும் அடுத்தவர் பகையும் இல்லாமல் மக்கள் இனிதே கவலையின்றி இருப்பதுதான் நாடு…! குறும்பாவில்... கொடும்பசி கொல்லும் நோயுடன் கெடுத்திடும் அடுத்த நாட்டுப் பகையிவை இலாதே மக்கள் இனிதிருப்பதே நாடு…! மரபுக் கவிதையில்... வறுமையி லுளோரை வாட்டுகின்ற வலிமை மிக்கக் கொடும்பசியும், பொறுக்க முடியா வலியுடனே போக்கிட வழிய தறியாத ...

Read More »

அப்பா

பாஸ்கர் சேஷாத்ரி கொஞ்சம் கொஞ்சமாக அப்பா போலாகிக்கொண்டு இருக்கிறேன் . அவரைப் போல, வருவோர் போவோரை ஓரக்கண்ணால் பார்க்கிறேன் சம்பந்தமில்லாமல் அவ்வப்போது ம்ம் கொட்டுகிறேன் எட்டாங்கிளாஸ் இங்கிலீஷ் எவனுக்கு வருமென்கிறேன் பேரனிடம் அவன் அப்பனை வளர்த்த கதை சொல்கிறேன் மருமகள் எனினும் தம்பெண் போலுண்டா என்கிறேன். அவரைப்போலக் காபி குடித்து டபராவை வைக்கிறேன் ஒரு காதைக் கூர்ப்பாக்கி, தலை சாய்த்துக் கேட்கிறேன் இட்ட உணவை அவர் போல மிச்சமின்றி வைக்கிறேன் பலமிழிந்த கால்களுடன் அவர் போல நடக்கிறேன் வெற்றிலையும் பாக்கும் வாழ்க்கை என நினைக்கிறேன் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

-மேகலா இராமமூர்த்தி பம்பை எனும் பொய்கையின் அழகு காண்போரைக் கவரவல்லது. அந்தப் பொய்கையில் முகங்காட்டிய மணமலி தாமரையும் வாசமிகு குவளை மலர்களும் இராமனுக்குச் சீதையின் திருமுகமாகவும் கண்களாகவும் காட்சியளித்து, அவளின் பிரிவுத்துயரால் புண்பட்ட அவன் மனத்திற்கு மருந்து தடவியதுபோல் சிறிது ஆறுதலளித்தன. அந்தப் பொய்கையை ஆழ்ந்துநோக்கிய இராமன், ”என் சீதையின் கண்களையும் முகத்தையும் காட்டிய பொய்கையே! அவளின் முழுவடிவத்தையும் காட்டமாட்டாயா? தம்மால் இயன்றதைச் செய்யாமல் உலோபம் செய்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்!” என்றான். வண்ண நறுந் தாமரை மலரும்      வாசக் குவளை நாள்மலரும் புண்ணின் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 296

அன்பிற்கினிய நண்பர்களே! கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புகைப்படக் கலைஞர் மாரியப்பன் கோவிந்தன் எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா ...

Read More »