இலக்கியம்

பவனி

ராமலக்ஷ்மி பளபளக்கும் பட்டுடையும் மினுமினுக்கும் நகைநட்டும் சரிகை இழையோடும் தலைப்பாகையுமாய்.. அலங்கரித்த வெண்புரவிகளில் கம்பீரமாய் பெருமிதமாய் அரசத்தம்பதியர் வீற்றுவர- கண்நூறுதான் கண்டுமகிழ.. ஊர்உலா முடிந்து உடைமாற்றி நகை களைந்து- நின்றார்கள் கூலிக்கு இன்றாவது கிடைக்குமாவென.. கனைக்காத குதிரைக்குக் கால்களாய் இருந்த களைப்பு மிகுதியில் ராஜாவும்.. செழிக்காத கலைக்குச் சேவகியாய்- மெய் வருத்திப் பொய்க் களிப்புடன் பவனிவந்த ராணியும்!

Read More »

முகமூடிகள்

தமிழ்த்தேனீ அழைப்பு மணி ‘ஓபன் த டோர் பிளீஸ்’ என்று இனிமையாக ஒலித்தது, கதவைத் திறந்த ராஜேஷுக்கு ஓர் இனிய அதிர்ச்சி. “வா..வ் வாங்க வாங்க  எதிர்பார்க்கவே இல்லே, உள்ளே வாங்க” என்று அழைத்துக்கொண்டு போய் சோபாவில் உட்காரவைத்து விட்டு, அதிர்ச்சி விலகாமல் ஆச்சரியத்துடன்.. “தாரிணி, யார் வந்திருக்காங்கன்னு வந்து பாரு” என்றான். தாரிணி “இதோ வரேன்” என்றபடி வந்தவள், “மிஸ்டர் பிரேம் நீங்களா! எங்க வீட்டுக்கு எப்பிடி..! மன்னிக்கணும். உங்களை இங்கே பார்த்த அதிர்ச்சியிலே கையும் ஓடலை; காலும் ஓடலை” என்றபடி, ‘பிரிஃட்ஜை’த் ...

Read More »

விசுவாசம்

– ராமலக்ஷ்மி, பெங்களூர். =========================== ராமலக்ஷ்மி பற்றிய சிறு அறிமுகம்: எண்பது & தொன்னூறுகளில் ‘நண்பர் வட்டம்’ இலக்கியப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்து பின்னர் ‘திண்ணை’, ‘கீற்று’, இணைய இதழ்கள், ‘வார்ப்பு’ கவிதை வாராந்திரி, ‘விகடன்’ இணைய தளம், உயிரோசை எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். முத்துச்சரம் (http://tamilamudam.blogspot.com) எனும் வலைப்பதிவினைத் தொடங்கி, 2 ஆண்டுகளாக எழுதி வருகிறார். சமீப காலத்தில் கலைமகள், தினமணி கதிர், வடக்கு வாசல், இலக்கியப்பீடம், அகநாழிகை உள்ளிட்ட இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் தடம் பதித்து வருகின்றன. =========================== ‘ஒரு ...

Read More »

உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு

— ஜெயந்தி சங்கர் காரைக்குடி வீணை இரட்டையர்களுள் ஒருவரான சாம்பசிவ அய்யர் அவர்களின் மகள் வயிற்று பெயர்த்தி, காரைக்குடி திருமதி ஜெயலட்சுமி சுகுமார். சிங்கப்பூரில் ‘வைணிகா மியூஸிக்’ என்ற இசைப் பள்ளியை நிறுவி 12 ஆண்டுகளாக வீணையிசைக்கு முக்கியத்துவமளித்து மிகச் சீரிய முறையில் நடத்தி வரும் இவரின் மாணவிகளுள் ஒருவர் செல்வி அபிராமி. வி.கௌதம். 26 ஜூன் 2010 அன்று மாலையில் ரா·பிள்ஸ் ஹோட்டேல் ஜூப்ளி ஹாலில் நடந்தேறிய அபிராமியின் வீணை அரங்கேற்றத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் வீணை ஈ.காயத்ரி. பைரவி அடதாள வர்ணமான ...

Read More »

உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை

திவாகர் விமானத்து எஞ்சினின்  சத்தம் உள்ளே மிக மெலிதாக  கேட்டாலும், திலீபனுக்கு  ஒருவேளை தாலாட்டு போல இருந்ததோ என்னவோ, அவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்ததை  பக்கத்திலே சாய்ந்துகொண்டு ஒருமுறை பொறாமையாகவே பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டேன்.

Read More »

சில நிமிடங்கள்! சில சந்தோஷங்கள்!

குமரி எஸ். நீலகண்டன் அவனால் நம்ப இயலவில்லை… சூம்பிப் போன அவனது கால்கள்  சிறகுகளாய் வளர்ந்து வானத்தில் பறப்பது போல் உணர்ந்தான். சில நம்ப இயலாத நிகழ்வுகளே நிஜத்தில் நிகழ்ந்து விடுவதில் நம்பிக்கை கொண்டான். அவனது கலைத் திறனுக்கு விலையாக, உலகில் யாருக்கும் கிடைக்காத மிக உயர்ந்த பரிசு தனக்குக் கிடைத்ததாகப் பெருமிதம் கொண்டான்.

Read More »

நதி

முனைவர் ச.சந்திரா, கிருட்டிணன்கோவில் நாகரீகத்திற்கு தாயகமாம் நதி நங்கையே! நீ அருவித்தாய் மேல் சினம் கொண்டாய்! பாறை க‌ட‌ந்தாய்! பாதை மாறினாய்! ம‌ண்ணைத் தேடிவ‌ந்து முத்த‌மிட்டு ம‌ண‌வாள‌னாக்கி மாலையும் சூடினாய்! ம‌ண்ணோடு ஊட‌ல்புரிந்த‌ நீ

Read More »

வெங்காயம் – கார்கில் ஜெய்

நமஸ்காரம். உபய குசலோபரி. மஹாகணம் பொருந்திய தேவரீர் சௌக்யமா ? இங்கே நியு ஜெர்சீயில் எல்லாரும் க்ஷேமம். இந்த லிகிதத்தின் தாத்பர்யம் என்னவென்றால், அதாகப்பட்டது என் பால்ய ஸ்நேகிதன் ஸ்ரீமான் நாமக்கட்டி நரஸிம்ஹ பட்டாத்ரி ஜாகைக்கு, அடியேன் விஜயம் பண்ணியிருந்த சமயத்திலே நடந்த சம்பவத்தை தேவரீரிடம் பரிவர்த்தனை பண்ண வேண்டும் என்பதுதான்.

Read More »

அரங்க பவன் – ஷைலஜா

நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள்.  ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள். “உங்கப்பாக்கு ரிடையர் ஆனதும் புத்தி கெட்டுப் போயிடுத்துடா பரத்! ஊர் சுத்திப் பாக்க வந்த இடத்தில் இவர் ஆசையைப் பாரேன்.  கர்மம், கர்மம்!’’ என்று கண்டிப்பாய் தன் ’டை’ ...

Read More »

சீனப்பெண் கவிகள் வரிசையில் –

(காலம்: 9ஆம் நூற்றாண்டு) தமிழில்: ஜெயந்தி சங்கர் 1. மூங்கில் நிழலில் ஒரு குளம் – ச்சாங் வென்ச்சி யோசிக்கிறான் என் காதலன் குளத்தருகில், கிளைகள் தொங்கும் நீரருகில். மரகத சிற்றலைகளோ வட்ட வரிகளாக தினமும் தினமும் முடிவின்றி.

Read More »